1. {#1யோபு பதில் கூறுகிறான் } [PS]அப்போது யோபு பதிலாக: [PE][PBR]
2. [QS]“நான் இன்றைக்கு இன்னும் மனங்கசந்து முறையிடுகிறேன். [QE][QS2]ஏனெனில் நான் இன்னும் துன்புற்றுக்கொண்டிருக்கிறேன். [QE]
3. [QS]எங்கே தேவனைப் பார்க்கக் கூடுமென நான் அறிந்திருக்க வேண்டுமென்று விரும்புகிறேன். [QE][QS2]தேவனிடம் போகும் வழியை அறிய விரும்புகிறேன். [QE]
4. [QS]நான் தேவனிடம் என் நியாயத்தை விளக்குவேன். [QE][QS2]நான் களங்கமற்றவனெனக் காட்டும் விவாதங்களால் என் வாய் நிரம்பியிருக்கும். [QE]
5. [QS]என் விவாதங்களுக்கு தேவன் எவ்வாறு பதிலளிப்பார் என்று அறிவேன். [QE][QS2]தேவனுடைய பதில்களைப் புரிந்துகொள்வேன். [QE]
6. [QS]தேவன் எனக்கெதிராக அவரது வல்லமையைப் பயன்படுத்துவாரா? [QE][QS2]இல்லை அவர் எனக்குச் செவிகொடுப்பார்! [QE]
7. [QS]நான் ஒரு நேர்மையான மனிதன். [QE][QS2]என் கதையை நான் கூற, தேவன் அனுமதிப்பார். [QE][QS2]அப்போது என் நீதிபதி என்னை விடுதலையாக்குவார்! [QE][PBR]
8. [QS]“ஆனால் நான் கிழக்கே போனால், அங்கே தேவன் இல்லை. [QE][QS2]நான் மேற்கே போனால், அங்கும் நான் தேவனைக் காணேன். [QE]
9. [QS]தேவன் வடக்கே பணி செய்யும்போது, நான் அவரைப் பார்க்க முடியவில்லை. [QE][QS2]தேவன் தெற்கே திரும்பும்போதும், நான் அவரைக் காணவில்லை. [QE]
10. [QS]ஆனால் தேவன் என்னை அறிவார். [QE][QS2]அவர் என்னைப் பரிசோதித்துக்கொண்டிருக்கிறார், நான் பொன்னைப்போன்று தூயவனெனக் காண்பார். [QE]
11. [QS]தேவன் விரும்புகிறபடியே நான் எப்போதும் வாழ்ந்திருக்கிறேன். [QE][QS2]நான் தேவனைப் பின்பற்றுவதை நிறுத்தியதேயில்லை. [QE]
12. [QS]நான் தேவனுடைய கட்டளைகளுக்கு எப்போதும் கீழ்ப்படிகிறேன். [QE][QS2]என் உணவைக் காட்டிலும் அதிகமாக தேவனுடைய வாயிலிருந்து வரும் வார்த்தைகளை நான் நேசிக்கிறேன். [QE][PBR]
13. [QS]“ஆனால் தேவன் மாறுகிறதில்லை. [QE][QS2]ஒருவனும் தேவனுக்கெதிராக நிற்கமுடியாது. [QE][QS2]தேவன் தான் விரும்புகின்றவற்றையெல்லாம் செய்கிறார். [QE]
14. [QS]தேவன் எனக்கென்று அவர் திட்டமிட்டவற்றைச் செய்வார். [QE][QS2]எனக்காக வேறு பல திட்டங்களையும் அவர் வைத்திருக்கிறார். [QE]
15. [QS]அதனாலே நான் தேவனுக்குப் பயந்திருக்கிறேன். [QE][QS2]இக்காரியங்களை நான் புரிந்துக்கொள்கிறேன். [QE][QS2]ஆகையால் நான் தேவனுக்குப் பயந்திருக்கிறேன். [QE]
16. [QS]தேவன் என் இருதயத்தை இளைக்கச் (சோர்வடைய) செய்கிறார், நான் என் தைரியத்தை இழக்கிறேன். [QE][QS2]சர்வ வல்லமையுள்ள தேவன் என்னை அஞ்சச் செய்கிறார். [QE]
17. [QS]என் முகத்தை மூடும் கருமேகத்தைப் போன்று எனக்கு நேர்ந்த தீயகாரியங்கள் உள்ளன. [QE][QS2]ஆனால் அந்த இருள் என்னை அடக்காது. [QE][PBR]