1. {#1எலிப்பாஸ் பதில் கூறுகிறான் } [PS]அப்போது தேமானின் எலிப்பாஸ் பதிலாக, [PE][PBR]
2. [QS]“தேவனுக்கு நமது உதவி தேவையா? [QE][QS]இல்லை! [QE][QS2]மிகுந்த ஞானவானும் உண்மையாகவே தேவனுக்குப் பயன்படுவதில்லை. [QE]
3. [QS]நீ தக்க நெறியில் வாழ்ந்தது தேவனுக்கு உதவுமா? [QE][QS2]இல்லை! நீ தேவனைப் பின்பற்றுவதால் சர்வ வல்லமையுள்ள தேவனுக்கு ஏதேனும் கிடைக்குமா? இல்லை! [QE]
4. [QS]யோபுவே, ஏன் தேவன் உன்னைத் தண்டித்து, உன்னில் குறை காண்கிறார்? [QE][QS2]நீ அவரை தொழுது கொள்வதாலா? [QE]
5. [QS]இல்லை! நீ மிகுதியாகப் பாவம் செய்திருப்பதால்தான். [QE][QS2]யோபுவே, நீ பாவம் செய்வதை நிறுத்துவதில்லை! [QE]
6. [QS]நீ உன் சகோதரன் ஒருவனுக்குக் கொஞ்சம் பணத்தைக் கடனாகக் கொடுத்து, [QE][QS2]அவன் உனக்குத் திருப்பித் தருவதற்கு அடையாளமாக எதையேனும் கொடுக்க வற்புறுத்தியிருக்கலாம். [QE][QS2]நீ கடனுக்கு ஈடாக ஏதேனும் ஏழை மனிதனின் ஆடைகளை எடுத்திருக்கலாம். [QE][QS2]இல்லையெனில், எக்காரணமுமின்றி அவ்வாறு செய்திருக்கலாம். [QE]
7. [QS]சோர்ந்த, பசித்த ஜனங்களுக்கு நீ தண்ணீரும், உணவும் கொடாது இருந்திருக்கலாம். [QE]
8. [QS]யோபுவே, உனக்கு மிகுதியான விளை நிலங்கள் உண்டு, [QE][QS2]ஜனங்கள் உன்னை மதிக்கிறார்கள். [QE]
9. [QS]விதவைகளுக்கு எதுவும் கொடாது அவர்களை நீ துரத்தியிருக்கலாம். [QE][QS2]யோபுவே, நீ அநாதைகளை ஏமாற்றியிருக்கலாம். [QE]
10. [QS]ஆகவே, உன்னைச் சுற்றிலும் கண்ணிகள் அமைந்துள்ளன, [QE][QS2]திடீர்பயம் உன்னை அஞ்சவைக்கிறது. [QE]
11. [QS]ஆகவே, நீ பார்க்க முடியாதபடி மிகுந்த இருள் சூழ்ந்திருக்கிறது, [QE][QS2]வெள்ளப்பெருக்கு உன்னை மூடுகிறது. [QE][PBR]
12. [QS]“தேவன் பரலேகத்தின் மிக உயர்ந்த இடத்தில் வாழ்கிறார். [QE][QS2]விண்மீன்கள் எத்தனை உயரத்தில் உள்ளன எனப்பாருங்கள். [QE][QS2]மிக உயர்ந்த நட்சத்திரத்தை தேவன் கிழே நோக்கிப்பார்க்கிறார். [QE]
13. [QS]ஆனால் யோபுவே, நீ சொல்லலாம் ‘தேவன் என்ன அறிவார்? [QE][QS2]இருண்ட மேகங்கள் வழியாகப் பார்த்து, தேவன் நம்மை நியாயந்தீர்க்கக் கூடுமா? [QE]
14. [QS]அடர்த்தியான மேகங்கள் அவரை நம்மிடமிருந்து மறைக்கின்றன, [QE][QS2]எனவே, அவர் வானத்தின் விளிம்பைத் தாண்டி நடக்கிறபோது நம்மைப் பார்க்க முடிவதில்லை’ எனக் கூறுவாய். [QE][PBR]
15. [QS]“யோபுவே, பல காலம் முன்பு தீயோர் நடந்த அந்தப் பழைய பாதையில் [QE][QS2]நீ நடந்துக்கொண்டிருக்கிறாய். [QE]
16. [QS]அவர்கள் இறக்கவேண்டிய காலத்திற்கு முன்னரே, அத்தீயோர் அழிக்கப்பட்டார்கள். [QE][QS2]அவர்கள் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டார்கள். [QE]
17. [QS]அவர்கள் தேவனைப் பார்த்து, ‘எங்களைத் தனித்து விட்டுவிடும்! [QE][QS2]சர்வ வல்லமையுள்ள தேவன் எங்களை என்னச் செய்யமுடியும்!’ என்பார்கள். [QE]
18. [QS]நற்காரியங்களால் அவர்கள் வீடுகளை நிரப்பியவர் தேவனே! [QE][QS2]இல்லை, என்னால் தீயோரின் அறிவுரையைப் பின்பற்ற முடியாது. [QE]
19. [QS]அழிவதை நல்லோர் காண்பார்கள். [QE][QS2]அந்த நல்ல ஜனங்கள் மகிழ்ச்சியடைவார்கள். [QE][QS2]களங்கமற்ற ஜனங்கள் தீயோரைக் கண்டு நகைப்பார்கள், [QE]
20. [QS]‘உண்மையாகவே நம் பகைவர்கள் அழிக்கப்பட்டார்கள். [QE][QS2]நெருப்பு அவர்களின் செல்வத்தைத் கொளுத்துகிறது!’ [QE][PBR]
21. [QS]“இப்போது, யோபுவே, உன்னை தேவனுக்குக் கொடுத்து அவரோடு சமாதானம் செய்துக்கொள். [QE][QS2]இதைச் செய், உனக்கு நல்லவை பல வாய்க்கும். [QE]
22. [QS]அவரது போதனையை ஏற்றுக்கொள். [QE][QS2]அவர் சொல்வதைக் கவனமாகக் கேள். [QE]
23. [QS]யோபுவே, சர்வ வல்லமையுள்ள தேவனிடம் திரும்பி வா, உன் பழைய நிலைக்கு அழைத்துச் செல்லப்படுவாய். [QE][QS2]ஆனால், நீ உனது வீட்டிலிருந்து தீமையை அகற்ற வேண்டும். [QE]
24. [QS]உனது பொன்னை நீ தூசியாகக் கருதவேண்டும். [QE][QS2]பள்ளத்தாக்கின் பாறைகளைப் போல, உனது உயர்ந்த பொன்னைக் கருதவேண்டும். [QE]
25. [QS]சர்வ வல்லமையுள்ள தேவனே, உனக்குப் பொன்னாகட்டும். [QE][QS2]அவரே உனக்கு வெள்ளிக் குவியல் ஆகட்டும். [QE]
26. [QS]அப்போது நீ சர்வ வல்லமையுள்ள தேவனில் களிகூருவாய். [QE][QS2]அப்போது நீ தேவனை நோக்கிப் பார்ப்பாய். [QE]
27. [QS]நீ அவரிடம் ஜெபிப்பாய், அவர் உன்னைக் கேட்பார். [QE][QS2]நீ செய்வதாக உறுதியளித்த காரியங்களை, அப்போது நீ செய்யமுடியும். [QE]
28. [QS]நீ ஏதேனும் செய்யத் தீர்மானித்தால், அது வெற்றியடையும், [QE][QS2]உனது எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும். [QE]
29. [QS]பெருமையுள்ளோரை வெட்கமடையச் செய்கிறார். [QE][QS2]ஆனால் தேவன் எளியோருக்கு உதவுகிறார். [QE]
30. [QS]அப்போது நீ தவறு செய்யும் ஜனங்களுக்கு உதவ முடியும். [QE][QS2]நீ தேவனிடம் ஜெபிப்பாய். அவர் அந்த ஜனங்களுக்கு மன்னிப்பார். [QE][QS2]ஏனெனில் நீ அத்தனை பரிசுத்தமாக இருப்பாய்” என்றான். [QE]