1. {#1சோப்பார் பதிலளிக்கிறான் } [PS]அப்போது நாகமாவின் சோப்பார் பதிலாக: [PE][PBR]
2. [QS]“யோபுவே, உன்னிடம் குழப்பமான எண்ணங்கள் மிகுந்துள்ளன. [QE][QS2]எனவே நான் உனக்குப் பதில் கூறவேண்டும். [QE][QS2]நான் நினைத்துக்கொண்டிருப்பதை விரைந்து உனக்குக் கூறவேண்டும். [QE]
3. [QS]நீ உனது பதில்களால் எங்களை அவமானப்படுத்தினாய்! [QE][QS2]ஆனால் நான் ஞானமுள்ளவன் உனக்கு எவ்வாறு பதில் தரவேண்டும் என்பதை நான் அறிவேன். [QE][PBR]
4. [QS](4-5)“தீயவனின் மகிழ்ச்சி நீண்டகாலம் நிலைக்காது என்பதை நீ அறிவாய். [QE][QS2]ஆதாம், பூமியில் வந்த காலம் முதல் அதுவே உண்மையாக உள்ளது. [QE][QS2]தேவனைப்பற்றிக் கவலைப்படாதவனின் மகிழ்ச்சி குறுகிய காலமே நிலைக்கும். [QE]
5.
6. [QS]தீயவனின் பெருமை வானத்தை எட்டலாம். [QE][QS2]அவன் தலை மேகங்களைத் தொடலாம். [QE]
7. [QS]அவன் தன் மலத்தைப்போலவே, என்றென்றும் அழிக்கப்படுவான். [QE][QS2]அவனை அறிந்த ஜனங்கள் ‘அவன் எங்கே?’ என்பார்கள். [QE]
8. [QS]கனவைப்போன்று, அவன் பறந்துப் போவான். [QE][QS2]ஒருவனும் அவனைக் கண்டடைய முடியாது. [QE][QS2]அவன் துரத்தப்பட்டு, ஒரு கெட்ட கனவாய் மறக்கப்படுவான். [QE]
9. [QS]அவனைப் பார்த்த ஜனங்கள் மீண்டும் அவனைக் காணமாட்டார்கள். [QE][QS2]அவன் குடும்பத்தினர் அவனை மீண்டும் பார்ப்பதில்லை. [QE]
10. [QS]அவன் ஏழைகளிடமிருந்து எடுத்ததை அத்தீயவனின் பிள்ளைகள் திரும்பக் கொடுப்பார்கள். [QE][QS2]தீயவனின் சொந்தக் கைகளே அவனது செல்வத்தைத் திருப்பிக் கொடுக்கும். [QE]
11. [QS]அவன் இளைஞனாயிருந்தபோது, அவன் எலும்புகள் பெலனுள்ளவையாக இருந்தன. [QE][QS2]ஆனால், உடம்பின் பிற பகுதிகளைப்போன்று, அவை விரைவில் துகளில் கிடக்கும். [QE][PBR]
12. [QS]“கெட்ட மனிதனின் வாய் தீமையை இனிமையாக ருசிக்கும். [QE][QS2]அவன் அதை முழுவதும் சுவைப்பதற்காக அவனது நாவின் அடியில் வைப்பான். [QE]
13. [QS]கெட்ட மனிதன் தீமையில் களிப்பான். [QE][QS2]அவன் அதை விட்டுவிட விரும்பமாட்டான். [QE][QS2]அது அவனது வாய்க்குள்ளிருக்கும் இனிப்பைப் போலிருக்கும். [QE]
14. [QS]ஆனால் அத்தீமை அவன் வயிற்றில் நஞ்சாகும். [QE][QS2]பாம்பின் விஷத்தைப்போன்று அது அவனுள் கசப்பான விஷமாக மாறும். [QE]
15. [QS]தீயவன் செல்வங்களை விழுங்கியிருக்கிறான். [QE][QS2]ஆனால் அவன் அவற்றை வாந்தியெடுப்பான். [QE][QS2]தீயவன் அவற்றை வாந்தியெடுக்கும்படி தேவன் செய்வார். [QE]
16. [QS]பாம்புகளின் விஷத்தைப்போன்று, தீயவன் பருகும் பானமும் இருக்கும். [QE][QS2]பாம்பின் நாக்கு அவனைக் கொல்லும். [QE]
17. [QS]அப்போது, அத்தீயவன் தேனாலும் பாலாலும் ஓடுகிற நதிகளைக் கண்டு களிக்கமாட்டான். [QE]
18. [QS]தீயவன், அவன் சம்பாதித்த செல்வங்களையெல்லாம் திருப்பித் தரும்படி கட்டாயப்படுத்தப்படுவான். [QE][QS2]தன்னுடைய உழைப்பின் பலனை அவன் அனுபவிக்க அனுமதிக்கப்படமாட்டான். [QE]
19. [QS]அவன் மற்றவர்கள் கட்டியிருந்த வீடுகளை அபகரித்துக்கொண்டான். [QE][PBR]
20. [QS]“தீயவன் ஒருபோதும் திருப்தியடைவதில்லை. [QE][QS2]அவனது செல்வம் அவனைக் காப்பாற்றாது. [QE]
21. [QS]அவன் சாப்பிடுகிறபோது, எதுவும் மீதியாயிருப்பதில்லை. [QE][QS2]அவன் வெற்றி தொடராது. [QE]
22. [QS]தீயவனுக்கு மிகுதியாக இருக்கும்போது அவன் துன்பங்களால் அழுத்தப்படுவான். [QE][QS2]அவனது சிக்கல்கள் அவன்மேல் வந்து அழுத்தும்! [QE]
23. [QS]தீயவன் அவனுக்குத் தேவையானவற்றையெல்லாம் உண்ட பின்பு, [QE][QS2]அவனுக்கெதிராக தேவன் அவரது எரியும் கோபத்தை வீசுவார். [QE][QS2]தீயவன் மேல் தேவன் தண்டனையைப் பொழிவார். [QE]
24. [QS]தீயவன் இரும்பு வாளுக்குத் தப்பி ஓடிவிடலாம், [QE][QS2]ஆனால் ஒரு வெண்கல அம்பு அவனை எய்து வீழ்த்தும். [QE]
25. [QS]அவன் உடம்பின் வழியாக அந்த வெண்கல அம்புச் சென்று முதுகின் வழியாக வெளிவரும். [QE][QS2]அதன் பிரகாசிக்கும் (ஒளிவிடும்) முனை அவனது ஈரலைப் பிளக்கும். [QE][QS2]அவன் பயங்கர பீதி அடைவான். [QE]
26. [QS]அவன் பொக்கிஷங்கள் அழிந்துபோகும். [QE][QS2]எந்த மனிதனும் பற்றவைக்காத ஒரு நெருப்பு அவனை அழிக்கும். [QE][QS2]அவன் வீட்டில் மீந்திருக்கும் ஒவ்வொரு பொருளையும் அந்த நெருப்பு அழிக்கும். [QE]
27. [QS]தீயவன் குற்றவாளி என்று பரலோகம் நிரூபிக்கும் (நிறுவும்) [QE][QS2]பூமி அவனுக்கெதிராக சாட்சிச் சொல்லும். [QE]
28. [QS]தேவனுடைய கோப வெள்ளத்தில் [QE][QS2]அவன் வீட்டிலுள்ளவை எல்லாம் இழுத்துச் செல்லப்படும். [QE]
29. [QS]தீயோருக்கு தேவன் இவற்றைச் செய்யத் திட்டமிடுகிறார். [QE][QS2]அவர்களுக்கு அதையே கொடுக்க தேவன் திட்டமிடுகிறார்” என்றான். [QE]