1. {#1யோபு பதில் கூறுகிறான் } [PS]அப்போது யோபு பதிலாக: [PE][PBR]
2. [QS]“எத்தனை காலம் நீங்கள் என்னைத் துன்புறுத்தி, [QE][QS2]உங்கள் வார்த்தைகளால் என்னை உடைப்பீர்கள்? [QE]
3. [QS]நீங்கள் இப்போது என்னைப் பத்துமுறை இழிவுப்படுத்தியிருக்கிறீர்கள். [QE][QS2]நீங்கள் என்னைத் தாக்கும்போது வெட்கமடையவில்லை. [QE]
4. [QS]நான் பாவம் செய்திருந்தாலும் அது எனது தொல்லையாகும். [QE][QS2]அது உங்களைத் துன்புறுத்தாது. [QE]
5. [QS]என்னைக் காட்டிலும் உங்களைச் சிறந்தவர்களாகக் காட்ட நீங்கள் விரும்புகிறீர்கள். [QE][QS2]என் தொல்லைகள் என் சொந்தத் தவறுகளால் நேர்ந்தவை என்று நீங்கள் கூறுகிறீர்கள். [QE]
6. [QS]ஆனால் தேவனே எனக்குத் தவறிழைத்தார். [QE][QS2]என்னைப் பிடிப்பதற்கு அவர் ஒரு கண்ணியை வைத்தார். [QE]
7. [QS]‘அவர் என்னைத் துன்புறுத்தினார்!’ என நான் கத்துகிறேன். ஆனால் எனக்குப் பதிலேதும் கிடைக்கவில்லை. [QE][QS2]நான் உரக்க உதவிக்காகக் கூப்பிட்டாலும், நியாயத்திற்காக வேண்டும் என் குரலை ஒருவரும் கேட்கவில்லை. [QE]
8. [QS]தேவன் என் வழியை அடைத்ததால் நான் தாண்டிச்செல்ல முடியவில்லை. [QE][QS2]அவர் என் பாதையை இருளால் மறைத்திருக்கிறார். [QE]
9. [QS]தேவன் என் பெருமையை எடுத்துப்போட்டார். [QE][QS2]அவர் என் தலையின் கிரீடத்தை (முடியை) எடுத்தார். [QE]
10. [QS]தேவன் நான் அழியும்வரைக்கும் என்னை எல்லா பக்கங்களிலுமிருந்து தாக்குகிறார். [QE][QS2]வேரோடு வீழ்ந்த மரத்தைப்போன்று அவர் என் நம்பிக்கையை அகற்றினார். [QE]
11. [QS]தேவனுடைய கோபம் எனக்கெதிராக எரிகிறது. [QE][QS2]அவர் என்னைத் தமது பகைவன் என்று அழைக்கிறார். [QE]
12. [QS]தேவன் தமது படையை என்னைத் தாக்குவதற்கு அனுப்புகிறார். [QE][QS2]என்னைத் தாக்குவதற்கு என்னைச் சுற்றிலும் கோபுரங்களை எழுப்புகிறார்கள். [QE][QS2]என் கூடாரத்தைச் சுற்றிலும் அவர்கள் முற்றுகையிட்டிருக்கிறார்கள். [QE][PBR]
13. [QS]“என் சகோதரர்கள் என்னை வெறுக்கும்படி தேவன் செய்தார். [QE][QS2]என் நண்பர்களுக்கு நான் ஒரு அந்நியனானேன். [QE]
14. [QS]என் உறவினர்கள் என்னை விட்டு சென்றார்கள். [QE][QS2]என் நண்பர்கள் என்னை மறந்துப்போனார்கள். [QE]
15. [QS]என்னை ஒரு அந்நியனைப்போலவும் வெளிநாட்டினனைப்போலவும் [QE][QS2]என் வீட்டிற்கு வரும் விருந்தினர்களும் பணிவிடைப் பெண்களும் பார்க்கிறார்கள். [QE]
16. [QS]நான் என் பணியாளைக் கூப்பிடும்போது, அவன் பதில் தருவதில்லை. [QE][QS2]நான் உதவிக்காகக் கெஞ்சும்போதும் என் பணியாள் பதில் தரமாட்டான். [QE]
17. [QS]என் மனைவி என் மூச்சின் வாசனையை வெறுக்கிறாள். [QE][QS2]என் சொந்த சகோதரர்கள் என்னை வெறுக்கிறார்கள். [QE]
18. [QS]சிறு குழந்தைகளும் என்னைக் கேலிச்செய்கிறார்கள். [QE][QS2]நான் அவர்கள் அருகே வரும்போது அவர்கள் கெட்டவற்றைச் சொல்கிறார்கள். [QE]
19. [QS]என் நெருங்கிய நண்பர்கள் என்னை வெறுக்கிறார்கள். [QE][QS2]நான் நேசிக்கும் ஜனங்கள் கூட எனக்கெதிராகத் திரும்பியிருக்கிறார்கள். [QE][PBR]
20. [QS]“நான் மிகவும் மெலிந்துபோனேன். [QE][QS2]என் தோல் எலும்போடு ஒட்டித் தொங்குகிறது. [QE][QS2]எனக்குச் சற்றே உயிர் மீந்திருக்கிறது. [QE][PBR]
21. [QS]“என் நண்பர்களே, எனக்கு இரங்குங்கள்! [QE][QS2]எனக்கு இரங்குங்கள்! [QE][QS2]ஏனெனில் தேவன் எனக்கு எதிராக இருக்கிறார். [QE]
22. [QS]தேவன் செய்வதைப் போன்று நீங்கள் ஏன் என்னைத் தண்டிக்கிறீர்கள்? [QE][QS2]என்னைத் துன்புறுத்துவதால் நீங்கள் தளர்ந்துப் போகவில்லையா? [QE][PBR]
23. [QS]“நான் சொல்வதை யாரேனும் நினைவில் வைத்து ஒரு புத்தகத்தில் எழுதமாட்டீர்களா? [QE][QS2]என விரும்புகிறேன். [QE][QS]என் வார்த்தைகள் ஒரு சுருளில் எழுதப்படாதா? [QE][QS2]என விரும்புகிறேன். [QE]
24. [QS]நான் சொல்பவை என்றென்றும் நிலைக்கும்படி [QE][QS2]ஈயத்தின்மேல் ஒரு இரும்புக் கருவியால் பொறிக்கப்படவோ அல்லது பாறையில் செதுக்கப்படவோ வேண்டுமென விரும்புகிறேன். [QE]
25. [QS]என் மீட்பர் உயிரோடு இருக்கிறார் என்று எனக்குத் தெரியும்! [QE][QS2]முடிவில் அவர் பூமியின்மேல் எழுந்து நின்று என்னைக் காப்பாற்றுவார்! [QE]
26. [QS]நான் என் உடலைவிட்டுச் சென்றாலும் (நான் உயிர் நீத்தாலும்), என் தோல் அழிந்துப்போனாலும், [QE][QS2]பின்பு நான் என் தேவனைக் காண்பேன் என அறிவேன்! [QE]
27. [QS]என் சொந்த கண்களால் நான் தேவனைக் காண்பேன்! [QE][QS2]நானே, வேறெவருமல்ல, தேவனைக் காண்பேன்! [QE][QS2]நான் எத்தனை உணர்ச்சிவசப்பட்டவனாக உணருகிறேன் என்பதை என்னால் உங்களுக்குச் சொல்ல முடியாது. [QE][PBR]
28. [QS]“நீங்கள், ‘நாம் யோபுவைத் துன்புறுத்துவோம். [QE][QS2]அவனைக் குற்றம்சாட்ட ஒரு காரணத்தைக் காண்போம்’ என்று கூறலாம். [QE]
29. [QS]ஆனால் நீங்களே அஞ்சுவீர்கள். [QE][QS2]ஏனெனில், தேவன் குற்றவாளிகளைத் தண்டிக்கிறார். [QE][QS]தேவன் வாளைப் பயன்படுத்தி உங்களைத் தண்டிப்பார். [QE][QS2]அப்போது நியாந்தீர்க்கும் காலம் ஒன்று உண்டு என்பதை நீங்கள் அறிவீர்கள்” என்றான். [QE]