1. {#1பில்தாத் யோபுவுக்குப் பதில் கூறுகிறான் } [PS]சூகியனான பில்தாத் அப்போது பதிலாக: [PE][PBR]
2. [QS]“யோபுவே, நீ எப்போது பேசுவதை நிறுத்துவாய்? [QE][QS2]அமைதியாயிருந்து கேளும். நாங்கள் சிலவற்றைச் சொல்ல விடும் (அனுமதியும்). [QE]
3. [QS]நாங்கள் பசுக்களைப்போல் மூடரென நீ நினைப்பதேன்? [QE]
4. [QS]யோபுவே, உனது கோபம் உன்னையே துன்புறுத்துகிறது. [QE][QS2]உனக்காக ஜனங்கள் பூமியைவிட்டுச் செல்லவேண்டுமா? [QE][QS2]உன்னைத் திருப்திப்படுத்துவதற்காக தேவன் பர்வதங்களை அசைப்பார் என்று நினைக்கிறாயா? [QE][PBR]
5. [QS]“ஆம், தீயவனின் தீபம் அணைந்துப்போகும். [QE][QS2]அவனது நெருப்பு எரிவதை நிறுத்தும். [QE]
6. [QS]வீட்டின் ஒளி இருளாகும். [QE][QS2]அவனருகே ஒளிவிடும் விளக்கு அணைந்துவிடும். [QE]
7. [QS]அவன் அடிகள் வலியதாகவும் விரைவாகவும் இராது. [QE][QS2]ஆனால் அவன் மெதுவாகவும் சோர்வாகவும் நடப்பான். [QE][QS2]அவனது சொந்த தீய திட்டங்களே அவனை விழச்செய்யும். [QE]
8. [QS]அவனது பாதங்கள் அவனைக் கண்ணிக்குள் வழிநடத்தும். [QE][QS2]அவன் கண்ணிக்குள் நடந்து அதிலே அகப்பட்டுக்கொள்வான். [QE]
9. [QS]அவன் குதிகாலை ஒரு கண்ணிப் பிடிக்கும். [QE][QS2]ஒரு கண்ணி அவனை இறுகப் பிடிக்கும். [QE]
10. [QS]தரையிலுள்ள ஒரு கயிறு அவனை அகப்படுத்தும். [QE][QS2]அவன் வழியில் ஒரு கண்ணி அவனுக்காகக் காத்துத்கொண்டிருக்கும். [QE]
11. [QS]சுற்றிலும் பயங்கரம் அவனுக்காக காத்துக்கொண்டிருக்கும். [QE][QS2]அவன் எடுக்கும் ஒவ்வோர் அடியிலும் பயங்கள் அவனைத் தொடரும். [QE]
12. [QS]கெட்ட தொல்லைகள் அவனுக்காகப் பசித்திருக்கும். [QE][QS2]அழிவும், கேடும் அவன் விழும்போது அவனுக்காகத் தயாராக இருக்கும். [QE]
13. [QS]கொடிய நோய் அவனது தோலை அரிக்கும். [QE][QS2]அது அவனது கரங்களையும் கால்களையும் அழுகச் செய்யும். [QE]
14. [QS]தீயவன் அவனது வீட்டின் பாதுகாப்பிலிருந்து அகற்றப்படுவான். [QE][QS2]பயங்கரங்களின் அரசனைச் சந்திக்க அவன் அழைத்துச் செல்லப்படுவான். [QE]
15. [QS]அவன் வீட்டில் ஒன்றும் மிஞ்சியிராது. [QE][QS2]ஏனெனில், அவன் வீடு முழுவதும் எரியும் கந்தகம் நிரம்பியிருக்கும். [QE]
16. [QS]கீழேயுள்ள அவன் வேர்கள் உலர்ந்துப் (காய்ந்து) போகும், [QE][QS2]மேலேயுள்ள அவன் கிளைகள் மடிந்துபோகும். [QE]
17. [QS]பூமியின் ஜனங்கள் அவனை நினைவு கூரமாட்டார்கள். [QE][QS2]ஒருவரும் இனிமேல் அவனை நினைத்துப்பார்க்கமாட்டார்கள். [QE]
18. [QS]ஜனங்கள் அவனை ஒளியிலிருந்து இருளுக்குள் தள்ளிவிடுவார்கள். [QE][QS2]அவர்கள் அவனை இந்த உலகிற்கு வெளியே துரத்திவிடுவார்கள். [QE]
19. [QS]அவனுக்குப் பிள்ளைகளோ, பேரப்பிள்ளைகளோ இருக்காது. [QE][QS2]அவன் குடும்பத்தில் எவரும் உயிரோடு விட்டு வைக்கப்படமாட்டார்கள். [QE]
20. [QS]மேற்கிலுள்ள ஜனங்கள் அத்தீயவனுக்கு நிகழ்ந்ததைக் கேள்விப்படும்போது, அதிர்ச்சியடைவார்கள். [QE][QS2]கிழக்கிலுள்ள ஜனங்கள் பயங்கர பீதியடைந்து வாயடைத்துப் போவார்கள். [QE]
21. [QS]தீயவனின் வீட்டிற்கு அது உண்மையாகவே நடக்கும். [QE][QS2]தேவனைப்பற்றிக் கவலைப்படாதவனுக்கு இப்படியே நிகழும்!” என்றான். [QE]