1. {பில்தாத் யோபுவுக்குப் பதில் கூறுகிறான்} [PS] சூகியனான பில்தாத் அப்போது பதிலாக:
2. “யோபுவே, நீ எப்போது பேசுவதை நிறுத்துவாய்? [QBR2] அமைதியாயிருந்து கேளும். நாங்கள் சிலவற்றைச் சொல்ல விடும் (அனுமதியும்). [QBR]
3. நாங்கள் பசுக்களைப்போல் மூடரென நீ நினைப்பதேன்? [QBR]
4. யோபுவே, உனது கோபம் உன்னையே துன்புறுத்துகிறது. [QBR2] உனக்காக ஜனங்கள் பூமியைவிட்டுச் செல்லவேண்டுமா? [QBR2] உன்னைத் திருப்திப்படுத்துவதற்காக தேவன் பர்வதங்களை அசைப்பார் என்று நினைக்கிறாயா?
5. “ஆம், தீயவனின் தீபம் அணைந்துப்போகும். [QBR2] அவனது நெருப்பு எரிவதை நிறுத்தும். [QBR]
6. வீட்டின் ஒளி இருளாகும். [QBR2] அவனருகே ஒளிவிடும் விளக்கு அணைந்துவிடும். [QBR]
7. அவன் அடிகள் வலியதாகவும் விரைவாகவும் இராது. [QBR2] ஆனால் அவன் மெதுவாகவும் சோர்வாகவும் நடப்பான். [QBR2] அவனது சொந்த தீய திட்டங்களே அவனை விழச்செய்யும். [QBR]
8. அவனது பாதங்கள் அவனைக் கண்ணிக்குள் வழிநடத்தும். [QBR2] அவன் கண்ணிக்குள் நடந்து அதிலே அகப்பட்டுக்கொள்வான். [QBR]
9. அவன் குதிகாலை ஒரு கண்ணிப் பிடிக்கும். [QBR2] ஒரு கண்ணி அவனை இறுகப் பிடிக்கும். [QBR]
10. தரையிலுள்ள ஒரு கயிறு அவனை அகப்படுத்தும். [QBR2] அவன் வழியில் ஒரு கண்ணி அவனுக்காகக் காத்துத்கொண்டிருக்கும். [QBR]
11. சுற்றிலும் பயங்கரம் அவனுக்காக காத்துக்கொண்டிருக்கும். [QBR2] அவன் எடுக்கும் ஒவ்வோர் அடியிலும் பயங்கள் அவனைத் தொடரும். [QBR]
12. கெட்ட தொல்லைகள் அவனுக்காகப் பசித்திருக்கும். [QBR2] அழிவும், கேடும் அவன் விழும்போது அவனுக்காகத் தயாராக இருக்கும். [QBR]
13. கொடிய நோய் அவனது தோலை அரிக்கும். [QBR2] அது அவனது கரங்களையும் கால்களையும் அழுகச் செய்யும். [QBR]
14. தீயவன் அவனது வீட்டின் பாதுகாப்பிலிருந்து அகற்றப்படுவான். [QBR2] பயங்கரங்களின் அரசனைச் சந்திக்க அவன் அழைத்துச் செல்லப்படுவான். [QBR]
15. அவன் வீட்டில் ஒன்றும் மிஞ்சியிராது. [QBR2] ஏனெனில், அவன் வீடு முழுவதும் எரியும் கந்தகம் நிரம்பியிருக்கும். [QBR]
16. கீழேயுள்ள அவன் வேர்கள் உலர்ந்துப் (காய்ந்து) போகும், [QBR2] மேலேயுள்ள அவன் கிளைகள் மடிந்துபோகும். [QBR]
17. பூமியின் ஜனங்கள் அவனை நினைவு கூரமாட்டார்கள். [QBR2] ஒருவரும் இனிமேல் அவனை நினைத்துப்பார்க்கமாட்டார்கள். [QBR]
18. ஜனங்கள் அவனை ஒளியிலிருந்து இருளுக்குள் தள்ளிவிடுவார்கள். [QBR2] அவர்கள் அவனை இந்த உலகிற்கு வெளியே துரத்திவிடுவார்கள். [QBR]
19. அவனுக்குப் பிள்ளைகளோ, பேரப்பிள்ளைகளோ இருக்காது. [QBR2] அவன் குடும்பத்தில் எவரும் உயிரோடு விட்டு வைக்கப்படமாட்டார்கள். [QBR]
20. மேற்கிலுள்ள ஜனங்கள் அத்தீயவனுக்கு நிகழ்ந்ததைக் கேள்விப்படும்போது, அதிர்ச்சியடைவார்கள். [QBR2] கிழக்கிலுள்ள ஜனங்கள் பயங்கர பீதியடைந்து வாயடைத்துப் போவார்கள். [QBR]
21. தீயவனின் வீட்டிற்கு அது உண்மையாகவே நடக்கும். [QBR2] தேவனைப்பற்றிக் கவலைப்படாதவனுக்கு இப்படியே நிகழும்!” என்றான். [PE]