1. [QS]என் ஆவி நொறுங்கிப்போயிற்று [QE][QS2]நான் விட்டு விலகத் தயாராயிருக்கிறேன். [QE][QS]என் வாழ்க்கை முடியும் நிலையிலுள்ளது. [QE][QS2]கல்லறை எனக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது. [QE]
2. [QS]ஜனங்கள் என்னைச் சூழ்ந்து நின்று, என்னைப் பார்த்து நகைக்கிறார்கள். [QE][QS2]அவர்கள் என்னைக் கேலிச்செய்து, அவமானப்படுத்துவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். [QE][PBR]
3. [QS]“தேவனே, நீர் என்னை ஆதரிக்கிறீர் என்பதை எனக்குக் காட்டும். [QE][QS2]வேறெவரும் என்னை ஆதரிக்கமாட்டார்கள். [QE]
4. [QS]நீர் என் நண்பர்களின் மனத்தை மூடி வைத்திருக்கிறீர், [QE][QS2]அவர்கள் என்னை புரிந்துக்கொள்ளார்கள். [QE][QS2]தயவுசெய்து அவர்கள் வெற்றியடையாதபடிச் செய்யும். [QE]
5. [QS]ஜனங்கள் கூறுவதை நீர் அறிவீர்: [QE][QS2]‘ஒருவன் அவனது நண்பர்களுக்கு உதவுவதற்காகத் தன் பிள்ளைகளைக்கூடப் பொருட்படுத்தமாட்டான்’ [QE][QS2]ஆனால் என் நண்பர்களோ எனக்கெதிராகத் திரும் பியிருக்கிறார்கள். [QE]
6. [QS]எல்லோருக்கும் ஒரு கெட்ட சொல்லாக, தேவன் என் பெயரை மாற்றியிருக்கிறார். [QE][QS2]ஜனங்கள் என் முகத்தில் உமிழ்கிறார்கள். [QE]
7. [QS]என் கண்கள் குருடாகும் நிலையில் உள்ளன ஏனெனில், நான் மிகுந்த துக்கமும் வேதனையும் உள்ளவன். [QE][QS2]என் உடம்பு முழுவதும் ஒரு நிழலைப் போல மெலிந்துவிட்டது. [QE]
8. [QS]நல்லோர் இதைப்பற்றிக் கலங்கிப்போயிருக்கிறார்கள். [QE][QS2]தேவனைப்பற்றிக் கவலையுறாத ஜனங்களுக்கு எதிராக, களங்கமற்றோர் கலக்கமடைந்துள்ளனர். [QE]
9. [QS]ஆனால் நல்லோர் நல்ல வழியில் தொடர்ந்து வாழ்கிறார்கள். [QE][QS2]களங்கமற்றோர் இன்னும் வலிமை பெறுவார்கள். [QE][PBR]
10. [QS]“ஆனால் நீங்கள் எல்லோரும் வாருங்கள், இது எனது தவறால் விளைந்ததே எனக் காட்ட முயலுங்கள். [QE][QS2]உங்களில் ஒருவரும் ஞானமுடையவன் அல்லன். [QE]
11. [QS]என் வாழ்க்கை கடந்து போகிறது, என் திட்டங்கள் அழிக்கப்பட்டன. [QE][QS2]என் நம்பிக்கை போயிற்று. [QE]
12. [QS]ஆனால் என் நண்பர்கள் குழம்பிப்போயிருக்கிறார்கள். [QE][QS2]அவர்கள் இரவைப் பகலென்று நினைக்கிறார்கள். [QE][QS2]அவர்கள் இருள் ஒளியை விரட்டி விடுமென நினைக்கிறார்கள். [QE][PBR]
13. [QS]“கல்லறையே என் புது வீடாகும் என நான் எதிர்பார்க்கலாம். [QE][QS2]இருண்ட கல்லறையில் என் படுக்கையை விரிக்கலாம் என நான் எதிர்பார்க்கலாம். [QE]
14. [QS]நான் கல்லறையிடம், ‘நீயே என் தந்தை’ என்றும், [QE][QS2]புழுக்களிடம் ‘என் தாய்’ அல்லது ‘என் சகோதரி’ என்றும் கூறலாம். [QE]
15. [QS]ஆனால் அதுவே என் ஒரே நம்பிக்கையாயிருந்தால், அப்போது எனக்கு நம்பிக்கையே இல்லை! [QE][QS2]அதுவே என் ஒரே நம்பிக்கையாக இருந்தால், அந்த நம்பிக்கை நிறைவுப்பெறுவதை காண்பவர் யார்? [QE]
16. [QS]என் நம்பிக்கை என்னோடு மறையுமோ? [QE][QS2]அது மரணத்தின் இடத்திற்குக் கீழே போகுமா? [QE][QS2]நாம் ஒருமித்துத் துகளில் இறங்குவோமா?” என்றான். [QE]