1. {யோபு எலிப்பாசுக்குப் பதிலளிக்கிறான்} [PS] அப்போது யோபு பதிலாக,
2. “நான் இவற்றையெல்லாம் முன்பே கேட்டிருக்கிறேன். [QBR2] நீங்கள் மூவரும் எனக்குத் தொல்லையை அல்லாமல் ஆறுதலைத் தரவில்லை. [QBR]
3. உங்கள் நீண்ட பேச்சுகளுக்கு முடிவேயில்லை! [QBR2] ஏன் தொடர்ந்து விவாதிக்கிறீர்கள்? [QBR]
4. எனக்கு வந்த தொல்லைகள் உங்களுக்கு ஏற்பட்டால் [QBR2] நீங்கள் சொல்வதையே நானும் சொல்லக் கூடும். [QBR] நானும் ஞானமுள்ள காரியங்களை உங்களுக்குச் சொல்லி, [QBR2] என் தலையை உங்களுக்கு நேர் அசைக்கக்கூடும். [QBR]
5. நான் கூறும் காரணங்களால் உங்களுக்கு உற்சாகமூட்டி [QBR2] உங்களுக்கு நம்பிக்கையளிக்க முடியும்.
6. “ஆனால் நான் கூறுபவை எதுவும் என் வேதனையை அகற்ற முடியாது! [QBR2] ஆயினும் மௌனமாய் இருப்பதிலும் பயன் இல்லை. [QBR]
7. தேவனே, உண்மையாகவே என் பலத்தை எடுத்துப்போட்டீர். [QBR2] என் குடும்பம் முழுவதையும் அழித்தீர். [QBR]
8. நீர் என்னை இணைத்து பலவீனமாக்கினீர். [QBR2] அதனால் நான் குற்றவாளியே என ஜனங்கள் நினைக்கிறார்கள்.
9. “தேவன், என்னைத் தாக்குகிறார், [QBR2] அவர் என் மீது கோபங்கொண்டு, என் உடம்பைக் கிழித்தெறிகிறார். [QBR] தேவன் எனக்கெதிராக அவரது பற்களைக் கடிக்கிறார். [QBR2] என் பகைவனின் கண்கள் என்னை வெறுப்போடு (பகையோடு) பார்க்கின்றன. [QBR]
10. ஜனங்கள் என்னைச் சூழ்ந்து ஒன்றுக் கூடி, என்னை பார்த்து நகைத்து, [QBR2] என் முகத்தில் அறைகிறார்கள். [QBR]
11. தேவன் என்னைத் தீய ஜனங்களிடம் ஒப்படைத்தார். [QBR2] அத்தீயர் என்னைக் காயப்படுத்தும்படிவிட்டார். [QBR]
12. எனக்கு எல்லாம் நல்லபடியாக இருந்தன, ஆனால், பின்பு தேவன் என்னை நசுக்கினார்! [QBR2] ஆம், அவர் என்னைக் கழுத்தில் பிடித்து, என்னைத் துண்டுகளாக நொறுக்கினார்! [QBR] தேவன் என்னை இலக்காகப் பயன்படுத்தினார். [QBR]
13. தேவனுடைய வில்வீரர்கள் என்னைச் சூழ்ந்து நிற்கிறார்கள். [QBR2] அவர் என் சிறுநீரகங்கள்மேல் அம்புகளை எய்கிறார். [QBR] அவர் இரக்கம் காட்டவில்லை. [QBR2] என் ஈரலின் பித்த தண்ணீரைத் தரையில் சிந்தச் செய்கிறார். [QBR]
14. மீண்டும், மீண்டும் தேவன் என்னைத் தாக்குகிறார். [QBR2] யுத்தம் செய்யும் வீரனைப் போல் அவர் என் மேல் பாய்கிறார்.
15. “நான் மிகவும் துயரமுற்றிருக்கிறேன், எனவே துயரத்தைக் காட்டும் இந்த ஆடைகளை அணிந்திருக்கிறேன். [QBR2] நான் இங்குத் துகளிலும் சாம்பலிலும் உட்கார்ந்து, நான் தோற்கடிக்கப்பட்டதாய் உணருகிறேன். [QBR]
16. அழுது என் முகம் சிவந்திருக்கிறது. [QBR2] கருவளையங்கள் என் கண்ணைச் சுற்றிலும் காணப்படுகின்றன. [QBR]
17. நான் யாரிடமும் கொடுமையாக நடந்துக்கொண்டதில்லை, ஆனால் இத்தீய காரியங்கள் எனக்கு நேரிட்டுள்ளன. [QBR2] என் ஜெபங்கள் தூய்மையும் நேர்மையுமானவை.
18. “பூமியே, எனக்குச் செய்யப்பட்ட அநீதிகளை மறைக்காதே. [QBR2] நியாயத்திற்கான என் வேண்டுதல் (நிறுத்த) தடுக்கப்படாமல் இருக்கட்டும். [QBR]
19. இப்போதும் பரலோகத்தில் யாரேனும் இருந்தால், அவர்கள் எனக்காக பேசுவார்கள், [QBR2] மேலிருந்து யாராவது எனக்காக சாட்சி கூறுவார்கள். [QBR]
20. என் கண்கள் தேவனுக்கு முன்னால் கண்ணீரைச் சொரிகையில் [QBR2] என் நண்பர்கள் எனக்கு எதிராகப் பேசுகிறார்கள். [QBR]
21. நண்பனுக்காக வாதாடுகின்ற ஒரு மனிதனைப் போன்று [QBR2] எனக்காக தேவனை வேண்டுகிற ஒருவன் எனக்கு வேண்டும்!
22. “இன்னும் சில ஆண்டுகளில் [QBR2] திரும்பமுடியாத அந்த இடத்திற்கு, (மரணம்) நான் போவேன்.” [PE]