1. {எலிப்பாஸ் யோபுக்குப் பதில் கூறுகிறான்} [PS] அப்போது தேமானைச் சார்ந்த எலிப்பாஸ் யோபுக்குப் பதிலாக,
2. “யோபுவே, நீ உண்மையாகவே ஞான முள்ளவனாக இருந்தால், நீ பிரயோஜனமற்ற வெறும் வார்த்தைகளால் பதில் கூறமாட்டாய். [QBR2] வெப்பக் காற்று நிரம்பியவனாக ஞானவான் இருக்கமாட்டான். [QBR]
3. பொருளற்ற பேச்சுக்களாலும் [QBR2] தகுதியற்ற வார்த்தைகளாலும் ஒரு ஞானவான் விவாதிப்பானென்று நீ நினைக்கிறாயா? [QBR]
4. யோபுவே, நீ கூறும்படி நடந்தால், [QBR2] ஒருவனும் தேவனை மதித்து, அவரிடம் ஜெபிக்கமாட்டான். [QBR]
5. நீ கூறும் காரியங்கள் உனது பாவத்தைத் தெளிவாகக் காட்டுகின்றன. [QBR2] யோபுவே, உனது புத்திசாலித்தனமான சொற்களால் உனது பாவங்களை நீ மறைக்க முயன்றுக்கொண்டிருக்கிறாய். [QBR]
6. நீ செய்வது தவறென நான் உன்னிடம் நிரூபிக்கத் தேவையில்லை. [QBR2] உனது வாயினால் கூறும் சொற்களே உனது தவற்றைச் சுட்டிக்காட்டுகின்றன. [QBR2] உனது சொந்த உதடுகளே உனக்கு எதிராகப் பேசுகின்றன.
7. “யோபுவே, பிறந்தவர்களில் நீதான் முதல் மனிதன் என எண்ணுகிறாயா? [QBR2] மலைகள் தோன்றும் முன்னே நீ பிறந்தாயா? [QBR]
8. நீ தேவனுடைய இரகசிய திட்டங்களுக்குச் செவிசாய்த்தாயா? [QBR2] நீ மட்டுமே ஞானமுள்ளவனென நினைக்கிறாயா? [QBR]
9. யோபுவே, உன்னைக் காட்டிலும் நாங்கள் மிகுதியாக அறிவோம். [QBR2] உனக்குப் புரிகின்றக் காரியங்களை நாங்கள் புரிந்துகொள்கிறோம். [QBR]
10. நரைமயிருள்ளோரும் வயது முதிர்ந்தோரும் எங்களோடு ஒத்திருக்கிறார்கள். [QBR2] ஆம், உனது தந்தையைக் காட்டிலும் வயது முதிர்ந்தோரும் எங்கள் பக்கத்தில் இருக்கிறார்கள். [QBR]
11. தேவன் உனக்கு ஆறுதல் கூற முயற்சிக்கிறார், ஆனால் அது உனக்குப் போதவில்லை. [QBR2] தேவனுடைய செய்தியை நயமாக நாங்கள் உனக்குக் கூறினோம். [QBR]
12. யோபுவே, ஏன் நீ புரிந்துகொள்ளவில்லை? [QBR2] ஏன் நீ உண்மையைக் காண இயலவில்லை? [QBR]
13. நீ கோபமான இந்தச் சொற்களைப் பேசும்போது [QBR2] நீ தேவனுக்கு எதிராக இருக்கிறாய்.
14. “ஒரு மனிதன் உண்மையில் தூயவனாக இருக்க முடியாது. [QBR2] பெண் வயிற்றில் பிறந்த ஒருவன் நியாயமுள்ளவனாக இருக்க முடியாது. [QBR]
15. தேவன் அவரது தூதர்களைக்கூட [*தூதர்களை எழுத்தின் பிராகாரமாக, “பரிசுத்தமான ஒன்று” எனப் பொருள்படும்.] நம்புகிறதில்லை. [QBR2] வானங்களும் அவரது பார்வையில் துய்மையானவை அல்ல. [QBR]
16. மனிதன் இன்னும் கேவலமானவன், [QBR2] மனிதன் அழுக்கானவனும் அழியக்கூடியவனும் ஆவான். [QBR2] தண்ணீரைப்போன்று அவன் கொடுமையைப் பருகுகிறான்.
17. “யோபுவே, எனக்குச் செவிகொடு, நான் உனக்கு விவரிப்பேன். [QBR2] எனக்குத் தெரிந்ததை நான் உனக்குக் கூறுவேன். [QBR]
18. ஞானவான்கள் எனக்குக் கூறியவற்றை நான் உனக்குச் சொல்வேன். [QBR2] ஞானவான்களின் முற்பிதாக்கள் அவர்களுக்கு இவற்றைக் கூறினார்கள். [QBR2] அவர்கள் எந்த இரகசியங்களையும் என்னிடமிருந்து மறைக்கவில்லை. [QBR]
19. அவர்கள் மட்டுமே அவர்களின் நாட்டில் வாழ்ந்தார்கள். [QBR2] கடந்து செல்லும்போது அந்நியர்கள் அங்கு இருக்கவில்லை. [QBR2] எனவே ஒருவரும் அவர்களுக்கு வேடிக்கையான கருத்துக்களைச் சொல்லவில்லை. [QBR]
20. தீயவன் வாழ்க்கை முழுவதும் துன்புறுகிறான். [QBR2] கொடியவன் வரையறுக்கப்பட்ட அவன் ஆயுள் முழுவதும் துன்புறுகிறான். [QBR]
21. ஒவ்வொரு சத்தமும் அவனை அச்சுறுத்துகிறது, [QBR2] அவன் பாதுகாப்பாக இருப்பதாக எண்ணும்போது அவனது பகைவன் அவனைத் தாக்குவான். [QBR]
22. தீயவன் நம்பிக்கையற்றுக் கலங்குகிறான், [QBR2] மரண இருளிலிருந்து தப்புவதற்கு அவனுக்கு எந்த நம்பிக்கையுமில்லை. [QBR2] அவனைக் கொல்லக் காத்துக் கொண்டிருக்கும் வாள் ஒன்று எங்கோ உள்ளது. [QBR]
23. அவன் அங்குமிங்கும் அலைந்துத் திரிகிறான், [QBR2] ஆனால் அவன் உடல் பருந்துகளுக்கு இரையாகும். [QBR2] அவனது மரணம் மிக அருகாமையிலுள்ளது என்பதை அவன் அறிகிறான். [QBR]
24. கவலையும் துன்பமும் அவனை அச்சுறுத்தும். [QBR2] அவனை அழிக்கத் தயாராயிருக்கிற அரசனைப் போன்று அவை அவனைத் தாக்கும். [QBR]
25. ஏனெனில், தீயவன் தேவனுக்குக் கீழ்ப்படியமறுக்கிறான். [QBR2] அவன் தனது கை முட்டியைத் தேவனுக்கு எதிராக உயர்த்தி, சர்வ வல்லமையுள்ள தேவனுக்கு எதிராகச் செயல்படுகின்றான். தோற்கடிக்க முயல்கிறான். [QBR]
26. தீயவன் மிகவும் அடம்பிடிப்பவன். [QBR2] அவன் கெட்டியான, வலிமையான கேடயத்தால் தேவனைத் தாக்க முயல்கிறான். [QBR]
27. அவன் செல்வந்தனும் கொழுத்தவனாகவும் இருப்பான், [QBR]
28. ஆனால் அவன் ஊர் அழிக்கப்படும், அவன் வீடு பாழாகும், [QBR2] அவன் வீடு வெறுமையாகும், [QBR]
29. தீயவன் பலகாலம் செல்வனாக இருக்கமாட்டான். [QBR2] அவன் செல்வம் நிலைக்காது. [QBR2] அவனது பயிர்கள் செழிப்பாக வளராது. [QBR]
30. தீயவன் இருளிலிருந்து தப்பமாட்டான். [QBR2] நோயினால் மடியும் இலைகளையும் [QBR2] காற்றினால் பறக்கடிக்கப்படும் இலைகளையும் கொண்ட மரத்தைப் போலிருப்பான். [QBR]
31. தீயவன் தகுதியற்றவற்றை நம்பி தன்னை மூடனாக்கிக்கொள்ளக் கூடாது. [QBR2] ஏனெனில் அவன் எதையும் அடையமாட்டான். [QBR]
32. அவன் வாழ்க்கை முடியும் முன்பே, தீயவன் வயதாகி வாடிப்போவான். [QBR2] என்றும் பசுமையுற முடியாத, உலர்ந்த கிளையைப் போல அவன் இருப்பான். [QBR]
33. இன்னும் பழுக்காத திராட்சைக் கனிகளை இழக்கின்ற திராட்சைக் கொடியைப்போன்று தீயவன் இருப்பான். [QBR2] மொட்டுக்களை இழக்கும் ஒலிவ மரத்தைப் போன்று அம்மனிதன் இருப்பான். [QBR]
34. ஏனெனில் தேவனற்ற மனிதர்களுக்கு எதுவுமில்லை (ஒன்றுமில்லை). [QBR2] பணத்தை நேசிப்போரின் வீடுகள் நெருப்பால் அழியும். [QBR]
35. தீயனச் செய்து, தொல்லை விளைவிப்பதற்குத் தீயோர் வழிகளைத் திட்டமிடுகிறார்கள். [QBR2] ஜனங்களை ஏமாற்றும் வழிகளை அவர்கள் எப்போதும் திட்டமிடுகிறார்கள்” என்று கூறினான். [PE]