1. [QS]யோபு, “நாமெல்லோரும் மனித ஜீவிகளே. [QE][QS2]நம் வாழ்க்கை குறுகியதும் தொல்லைகள் நிரம்பியதுமாகும். [QE]
2. [QS]மனிதனின் வாழ்க்கை ஒரு மலரைப் போன்றது. [QE][QS2]அவன் விரைவாக வளருகிறான், பின்பு மடிந்துப் போகிறான். [QE][QS]மனிதனின் வாழ்க்கை ஒரு நிழலைப் போன்றது. [QE][QS2]அது குறுகிய காலம் இருந்து, பின்பு மறைந்துப்போகும். [QE]
3. [QS]அது உண்மையே, ஆனால் ஒரு மனிதனாகிய என்னை தேவன் நோக்கிப்பார்ப்பாரா? [QE][QS2]நீர் என்னோடு நியாய சபைக்கு வருவீரா? [QE][QS]அங்கு நாம் இருவரும் நம் விவாதங்களை முன் வைப்போம். [QE][PBR]
4. [QS]“ஆனால் அழுக்குப்படிந்த ஒரு பொருளுக்கும் [QE][QS2]தூய்மையான ஒரு பொருளுக்குமிடையே இருக்கும் ஒற்றுமை என்ன? ஒன்றுமில்லை! [QE]
5. [QS]மனிதனின் வாழ்க்கை ஒரு எல்லை உடையது. [QE][QS2]தேவனே, ஒரு மனிதன் எத்தனைக் காலம் வாழ்கிறான் என்பதை நீர் முடிவு செய்கிறீர். [QE][QS2]ஒரு மனிதனுக்கு அந்த எல்லைகளை நீர் முடிவெடுக்கிறீர், எதுவும் அதை மாற்றமுடியாது. [QE]
6. [QS]எனவே, தேவனே எங்களைக் கவனிப்பதை நிறுத்தும். [QE][QS2]எங்களைத் தனித்துவிடும். [QE][QS2]எங்கள் காலம் முடியும் வரைக்கும் எங்கள் கடின வாழ்க்கையை நாங்கள் வாழவிடும். [QE][PBR]
7. [QS]“ஒரு மரத்திற்கும் நம்பிக்கை உண்டு. [QE][QS2]அது வெட்டப்பட்டால், மீண்டும் வளரக்கூடும். [QE][QS2]அது புது கிளைகளைப் பரப்பியபடி நிற்கும். [QE]
8. [QS]அதன் வேர்கள் பலகாலம் மண்ணிற்குள் வளரும், [QE][QS2]அதன் அடிப்பகுதி புழுதியில் மடியும். [QE]
9. [QS]ஆனால் தண்ணீரினால் அது மீண்டும் வளரும். [QE][QS2]புதுச்செடியைப்போன்று அதில் கிளைகள் தோன்றும். [QE]
10. [QS]ஆனால் மனிதன் மரிக்கும்போது, அவன் அழிந்து போகிறான். [QE][QS2]மனிதன் மரிக்கும்போது, அவன் காணமற்போகிறான். [QE]
11. [QS]நதிகள் வற்றிப்போகும்படியாகவும் கடல் தண்ணீர் முழுவதும் வற்றிப்போகும்படியாக தண்ணீர் இறைத்தாலும் [QE][QS2]மனிதன் மரித்தவனாகவேகிடப்பான். [QE]
12. [QS]ஒருவன் மரிக்கும்போது அவன் படுத்திருக்கிறான், மீண்டும் எழுகிறதில்லை. [QE][QS2]அவர்கள் எழும்முன்னே வானங்கள் எல்லாம் மறைந்துபோகும். [QE][QS2]ஜனங்கள் அந்த உறக்கத்திலிருந்து எழுவதேயில்லை. [QE][PBR]
13. [QS]“நீர் என் கல்லறையில் என்னை ஒளித்து வைப்பீரென விரும்புகிறேன். [QE][QS2]நீர் உமது கோபம் ஆறும்வரை என்னை அங்கு ஒளித்து வைப்பீரென விரும்புகிறேன். [QE][QS2]பின்பு என்னை நினைவுகூரும் காலத்தை நீர் தேர்ந்தெடுக்கலாம். [QE]
14. [QS]ஒருவன் இறந்தால், அவன் மீண்டும் வாழ்வானா? [QE][QS2]நான் விடுதலையாகும்வரை எத்தனை காலமாயினும் காத்திருந்தேயாக வேண்டும்! [QE]
15. [QS]தேவனே, நீர் என்னைக் கூப்பிடுவீர், [QE][QS2]நான் உமக்குப் பதில் தருவேன், [QE][QS]நீர் என்னை சிருஷ்டித்தீர், [QE][QS2]நான் உமக்கு முக்கியமானவன். [QE]
16. [QS]நான் எடுக்கும் ஒவ்வோர் அடியையும் நீர் கண்ணோக்குகிறீர். [QE][QS2]ஆனால், நீர் என் பாவங்களை நினைவுக்கூர்வதில்லை. [QE]
17. [QS]நீர் என் பாவங்களை ஒரு பையில் கட்டி வைப்பீர். [QE][QS2]அதை முத்திரையிடும், அதை வீசியெறிந்துபோடும்! [QE][PBR]
18. [QS]“நொறுங்கிப்போகும். [QE][QS2]பெரும் பாறைகள் தளர்ந்து உடைந்துவிழும். [QE]
19. [QS]கற்களின் மீது பாயும் வெள்ளம் அவற்றைக் குடையும். [QE][QS2]பெருவெள்ளம் நிலத்தின் மேற்பரப்புத்துகளை அடித்துச் (இழுத்து) செல்லும். [QE][QS2]தேவனே, அவ்வாறே ஒருவனின் நம்பிக்கையை நீர் அழிக்கிறீர். [QE]
20. [QS]அவனை முற்றிலும் தோற்கடித்து, பின்பு விலகிப் போகிறீர். [QE][QS2]அவனைத் துயரங்கொள்ளச் செய்து, மரணத்தின் இடத்திற்கு என்றென்றைக்கும் அனுப்புகிறீர். [QE]
21. [QS]அவன் மகன்கள் பெருமையடையும்போது, அவன் அதை அறியான். [QE][QS2]அவன் மகன்கள் தவறுசெய்யும்போது, அவன் அதைக் காணான். [QE]
22. [QS]அம்மனிதன் தனது உடம்பின் வலியை மட்டுமே உணருகிறான், [QE][QS2]அவன் தனக்காக மட்டுமே உரக்க அழுகிறான்” என்றான். [QE]