1. யோபு, “நாமெல்லோரும் மனித ஜீவிகளே. [QBR2] நம் வாழ்க்கை குறுகியதும் தொல்லைகள் நிரம்பியதுமாகும். [QBR]
2. மனிதனின் வாழ்க்கை ஒரு மலரைப் போன்றது. [QBR2] அவன் விரைவாக வளருகிறான், பின்பு மடிந்துப் போகிறான். [QBR] மனிதனின் வாழ்க்கை ஒரு நிழலைப் போன்றது. [QBR2] அது குறுகிய காலம் இருந்து, பின்பு மறைந்துப்போகும். [QBR]
3. அது உண்மையே, ஆனால் ஒரு மனிதனாகிய என்னை தேவன் நோக்கிப்பார்ப்பாரா? [QBR2] நீர் என்னோடு நியாய சபைக்கு வருவீரா? [QBR] அங்கு நாம் இருவரும் நம் விவாதங்களை முன் வைப்போம்.
4. “ஆனால் அழுக்குப்படிந்த ஒரு பொருளுக்கும் [QBR2] தூய்மையான ஒரு பொருளுக்குமிடையே இருக்கும் ஒற்றுமை என்ன? ஒன்றுமில்லை! [QBR]
5. மனிதனின் வாழ்க்கை ஒரு எல்லை உடையது. [QBR2] தேவனே, ஒரு மனிதன் எத்தனைக் காலம் வாழ்கிறான் என்பதை நீர் முடிவு செய்கிறீர். [QBR2] ஒரு மனிதனுக்கு அந்த எல்லைகளை நீர் முடிவெடுக்கிறீர், எதுவும் அதை மாற்றமுடியாது. [QBR]
6. எனவே, தேவனே எங்களைக் கவனிப்பதை நிறுத்தும். [QBR2] எங்களைத் தனித்துவிடும். [QBR2] எங்கள் காலம் முடியும் வரைக்கும் எங்கள் கடின வாழ்க்கையை நாங்கள் வாழவிடும்.
7. “ஒரு மரத்திற்கும் நம்பிக்கை உண்டு. [QBR2] அது வெட்டப்பட்டால், மீண்டும் வளரக்கூடும். [QBR2] அது புது கிளைகளைப் பரப்பியபடி நிற்கும். [QBR]
8. அதன் வேர்கள் பலகாலம் மண்ணிற்குள் வளரும், [QBR2] அதன் அடிப்பகுதி புழுதியில் மடியும். [QBR]
9. ஆனால் தண்ணீரினால் அது மீண்டும் வளரும். [QBR2] புதுச்செடியைப்போன்று அதில் கிளைகள் தோன்றும். [QBR]
10. ஆனால் மனிதன் மரிக்கும்போது, அவன் அழிந்து போகிறான். [QBR2] மனிதன் மரிக்கும்போது, அவன் காணமற்போகிறான். [QBR]
11. நதிகள் வற்றிப்போகும்படியாகவும் கடல் தண்ணீர் முழுவதும் வற்றிப்போகும்படியாக தண்ணீர் இறைத்தாலும் [QBR2] மனிதன் மரித்தவனாகவேகிடப்பான். [QBR]
12. ஒருவன் மரிக்கும்போது அவன் படுத்திருக்கிறான், மீண்டும் எழுகிறதில்லை. [QBR2] அவர்கள் எழும்முன்னே வானங்கள் எல்லாம் மறைந்துபோகும். [QBR2] ஜனங்கள் அந்த உறக்கத்திலிருந்து எழுவதேயில்லை.
13. “நீர் என் கல்லறையில் என்னை ஒளித்து வைப்பீரென விரும்புகிறேன். [QBR2] நீர் உமது கோபம் ஆறும்வரை என்னை அங்கு ஒளித்து வைப்பீரென விரும்புகிறேன். [QBR2] பின்பு என்னை நினைவுகூரும் காலத்தை நீர் தேர்ந்தெடுக்கலாம். [QBR]
14. ஒருவன் இறந்தால், அவன் மீண்டும் வாழ்வானா? [QBR2] நான் விடுதலையாகும்வரை எத்தனை காலமாயினும் காத்திருந்தேயாக வேண்டும்! [QBR]
15. தேவனே, நீர் என்னைக் கூப்பிடுவீர், [QBR2] நான் உமக்குப் பதில் தருவேன், [QBR] நீர் என்னை சிருஷ்டித்தீர், [QBR2] நான் உமக்கு முக்கியமானவன். [QBR]
16. நான் எடுக்கும் ஒவ்வோர் அடியையும் நீர் கண்ணோக்குகிறீர். [QBR2] ஆனால், நீர் என் பாவங்களை நினைவுக்கூர்வதில்லை. [QBR]
17. நீர் என் பாவங்களை ஒரு பையில் கட்டி வைப்பீர். [QBR2] அதை முத்திரையிடும், அதை வீசியெறிந்துபோடும்!
18. “நொறுங்கிப்போகும். [QBR2] பெரும் பாறைகள் தளர்ந்து உடைந்துவிழும். [QBR]
19. கற்களின் மீது பாயும் வெள்ளம் அவற்றைக் குடையும். [QBR2] பெருவெள்ளம் நிலத்தின் மேற்பரப்புத்துகளை அடித்துச் (இழுத்து) செல்லும். [QBR2] தேவனே, அவ்வாறே ஒருவனின் நம்பிக்கையை நீர் அழிக்கிறீர். [QBR]
20. அவனை முற்றிலும் தோற்கடித்து, பின்பு விலகிப் போகிறீர். [QBR2] அவனைத் துயரங்கொள்ளச் செய்து, மரணத்தின் இடத்திற்கு என்றென்றைக்கும் அனுப்புகிறீர். [QBR]
21. அவன் மகன்கள் பெருமையடையும்போது, அவன் அதை அறியான். [QBR2] அவன் மகன்கள் தவறுசெய்யும்போது, அவன் அதைக் காணான். [QBR]
22. அம்மனிதன் தனது உடம்பின் வலியை மட்டுமே உணருகிறான், [QBR2] அவன் தனக்காக மட்டுமே உரக்க அழுகிறான்” என்றான். [PE]