1. [QS]யோபு, “நான் இவற்றையெல்லாம் முன்னரே பார்த்திருக்கிறேன். [QE][QS2]நீங்கள் கூறுகின்றவற்றையெல்லாம் நான் ஏற்கெனவே கேட்டிருக்கிறேன். [QE][QS2]அவற்றையெல்லாம் நான் புரிந்துகொள்கிறேன். [QE]
2. [QS]உங்களுக்கு தெரிந்தவற்றை நான் அறிவேன். [QE][QS2]நானும் உங்களைப் போலவே புத்திசாலி. [QE]
3. [QS]ஆனால் நான் உங்களோடு வாதாட விரும்பவில்லை. [QE][QS2]சர்வ வல்லமையுள்ள தேவனோடு நான் பேச விரும்புகிறேன். [QE][QS2]என் தொல்லைகளைப்பற்றி நான் தேவனோடு வாதாட விரும்புகிறேன். [QE]
4. [QS]ஆனால் நீங்கள் மூவரும் உங்கள் அறியாமையைப் பொய்களால் மறைக்க முயல்கிறீர்கள். [QE][QS2]ஒருவரையும் குணப்படுத்த முடியாத தகுதியற்ற மருத்துவர்களைப்போல் இருக்கிறீர்கள். [QE]
5. [QS]நீங்கள் அமைதியாயிருக்க வேண்டும் என விரும்புகிறேன். [QE][QS2]நீங்கள் செய்யத்தக்க மிகுந்த ஞானமுள்ள காரியம் அதுவேயாகும். [QE][PBR]
6. [QS]“இப்போது என் விவாதத்திற்கும் செவிகொடுங்கள். [QE][QS2]நான் சொல்லவேண்டியவற்றிற்குச் செவிகொடுங்கள். [QE]
7. [QS]நீங்கள் தேவனுக்காகப் பொய் கூறுவீர்களா? [QE][QS2]நீங்கள் கூறும் பொய்களை, நீங்கள் கூறவேண்டுமென்று தேவன் விரும்பியதாக நீங்கள் உண்மையாகவே நம்புகிறீர்களா? [QE]
8. [QS]எனக்கெதிராக தேவனை ஆதரித்துப் பேச முயன்றுகொண்டிருக்கிறீர்களா? [QE][QS2]தேவனுக்காக வழக்குகள் கொண்டுவர முடியுமா? [QE]
9. [QS]உங்களை தேவன் கூர்ந்து ஆராய்ந்தால், நீங்கள் சரியானவர்கள் என காண்பிப்பாரா? [QE][QS2]நீங்கள் ஜனங்களை மூடராக்குவது போல் தேவனை முட்டாளாக்க முடியும் என உண்மையாகவே எண்ணுகிறீர்களா? [QE]
10. [QS]ஒரு மனிதன் முக்கியமானவன் என்பதால் மட்டும் நீதிமன்றத்தில் இரகசியமாக அவன் பக்கம் சாய முடிவுசெய்தால், [QE][QS2]தேவன் உங்களை விசாரணை செய்வார் என்பதை நீங்கள் அறிவீர்கள். [QE]
11. [QS]தேவனுடைய மகத்துவம் (முக்கியத்துவம்) உங்களை அச்சுறுத்துகிறது. [QE][QS2]நீங்கள் அவரைக் கண்டு பயப்படுகிறீர்கள். [QE]
12. [QS]உங்கள் வாக்குவாதங்கள் சாம்பலைப் போல் எந்தப் பயனுமற்றவை. [QE][QS2]உங்கள் பதில்கள் சேற்றுக்குவியல்கள் போலப் பயனற்றவை. [QE][PBR]
13. [QS]“அமைதியாயிருங்கள், என்னைப் பேச விடுங்கள்! [QE][QS2]பிறகு எனக்கு நேரிடும் அனைத்தையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். [QE]
14. [QS]நான் என்னை ஆபத்திற்குட்படுத்தி [QE][QS2]என் உயிரை என் கைகளில் எடுப்பேன். [QE]
15. [QS]தேவன் என்னைக் கொன்றாலும் நான் அவரைத் தொடர்ந்து நம்புவேன். [QE][QS2]அவருக்கு முன்பாக என் பொருட்டு வாதாடுவேன். [QE]
16. [QS]தேவன் என்னை வாழவிட்டால்,அது நான் அவரிடம் துணிந்து பேசியதன் விளைவாகும். [QE][QS2]தீயவன் ஒருவனும் தேவனை முகத்துக்கு முகம் பார்க்கத் துணிவதில்லை. [QE]
17. [QS]நான் சொல்கின்றவற்றிற்குக் கவனமாகச் செவி கொடுங்கள். [QE][QS2]நான் விவரித்துத் கூற அனுமதியுங்கள். [QE]
18. [QS]நான் எனக்காக வாதாட தயாராயிருக்கிறேன். [QE][QS2]எனது வாதங்களைக் கவனமாகச் சொல்வேன். [QE][QS2]நான் குற்றமற்றவன் என்று தீர்க்கப்படுவேனென்று அறிவேன். [QE]
19. [QS]நான் தவறென யாரேனும் நிரூபித்தால் [QE][QS2]உடனே நான் வாய் பேசாதிருப்பேன் (அமைதியாக இருப்பேன்) [QE][PBR]
20. [QS]“தேவனே, எனக்கு இரண்டு காரியங்களைத் தாரும், [QE][QS2]அப்போது உம்மிடமிருந்து ஒளிந்திருக்கமாட்டேன். [QE]
21. [QS]என்னைத் தண்டிப்பதை நிறுத்தும், [QE][QS2]பயங்கரங்களால் என்னை அச்சுறுத்துவதை நிறுத்தும். [QE]
22. [QS]பின்பு என்னைக் கூப்பிடும், நான் பதில் தருவேன். [QE][QS2]அல்லது என்னைப் பேசவிடும், நீர் எனக்குப் பதில் தாரும். [QE]
23. [QS]நான் எத்தனை பாவங்கள் செய்துள்ளேன்? [QE][QS2]நான் என்ன தவறு செய்தேன்? [QE][QS2]என் பாவங்களையும் எனது தவறுகளையும் எனக்குக் காட்டும். [QE]
24. [QS]தேவனே, ஏன் என்னைவிட்டு விலகுகிறீர்? [QE][QS2]ஏன் உமது பகைவனைப்போல் என்னை நடத்துகிறீர்? [QE]
25. [QS]என்னை அச்சுறுத்த முயன்றுக்கொண்டிருக்கிறீரா? [QE][QS2]நான் காற்றில் பறக்கும் ஒரு இலைமட்டுமேயாவேன். [QE][QS2]ஒரு சிறிய காய்ந்த வைக்கோல் துண்டினை நீர் தாக்குகிறீர். [QE]
26. [QS]தேவனே, எனக்கெதிராகக் கசப்பானவற்றைக் கூறுகிறீர். [QE][QS2]நான் இளமையில் செய்த பாவங்களுக்காக என்னை துன்புறச் செய்கிறீரா? [QE]
27. [QS]என் பாதங்களில் நீர் விலங்குகளை இட்டீர். [QE][QS2]நான் எடுக்கும் ஒவ்வோர் அடியையும் நீர் கண்ணோக்குகிறீர். [QE][QS2]எனது ஒவ்வோர் அசைவையும் நீர் கண்ணோக்குகிறீர். [QE]
28. [QS]அரித்துப்போகின்ற மரத்தைப்போலவும், [QE][QS2]அந்த பூச்சிகளால் அரிக்கப்படும் துணியைப் போலவும் நான் சோர்ந்து அழிந்துப்போகிறேன்” என்றான். [QE]