1. {#1யோபு சோப்பாருக்குப் பதிலளிக்கிறான் } [PS]பின்பு யோபு சோப்பாருக்குப் பதிலாக, [PE][PBR]
2. [QS]“நீங்கள் மட்டுமே ஞானவான் என நீங்கள் எண்ணுகின்றீர்கள் என நான் உறுதியாகக் கருதுகிறேன். [QE][QS2]நீங்கள் மரிக்கும்போது ஞானமும் உங்களோடு அழிந்துப்போகும். [QE]
3. [QS]நானும் உன்னைப் போன்றே புத்திசாலி. [QE][QS2]உங்களிலும் நான் தாழ்ந்தவன் அல்ல. [QE][QS]இப்படிப்பட்டவைகளை அறியாதவர்கள் யார்? [QE][PBR]
4. [QS]“என் நண்பர்கள் இப்போது என்னைக் கண்டு நகைக்கிறார்கள். [QE][QS2]அவர்கள், ‘அவன் தேவனிடம் ஜெபித்தான், அவன் பதிலைப் பெற்றான்’ என்று சொல்கிறார்கள். [QE][QS2]உத்தமனாகிய நீதிமான் பரியாசம் பண்ணப்படுகின்றான். [QE]
5. [QS]தொல்லைகளற்றோர் தொல்லையுடையோரைக் கண்டு நகைக்கிறார்கள். [QE][QS2]அவர்கள் வீழும் மனிதனைத் தாக்குகிறார்கள். [QE]
6. [QS]ஆனால் திருடரின் கூடாரங்கள் பாதிக்கப்படவில்லை. [QE][QS2]தேவனை கோபங்கொள்ளச் செய்வோர் சமாதானமாக வாழ்கிறார்கள். [QE][QS2]அவர்களின் சொந்த வலிமையே அவர்களது ஒரே தேவன். [QE][PBR]
7. [QS]“ஆனால் மிருகங்களைக் கேளுங்கள், அவை உங்களுக்குப் போதிக்கும். [QE][QS2]வானத்துப் பறவைகளைக் கேளுங்கள், அவை உங்களுக்குச் சொல்லும். [QE]
8. [QS]அல்லது பூமியிடம் பேசுங்கள், அது உங்களுக்குக் கற்பிக்கும். [QE][QS2]அல்லது கடலின் மீன்கள் தங்கள் ஞானத்தை உங்களுக்குச் சொல்லட்டும். [QE]
9. [QS]கர்த்தருடைய கரம் அவற்றை உண்டாக்கினது என்பதை ஒவ்வொருவரும் அறிகிறோம். [QE]
10. [QS]வாழும் ஒவ்வொரு மிருகமும் மூச்சுவிடும் ஒவ்வொரு மனிதனும் [QE][QS2]தேவனுடைய வல்லமைக்குக் கட்டுப்பட்டவர்கள். [QE]
11. [QS]நாவு உணவைச் சுவைப்பதுப்போல [QE][QS2]காதுகள் கேட்கும் சொற்களை ஆராய்ந்து பார்க்கும். [QE]
12. [QS]முதிர்ந்தோர் ஞானவான்கள், [QE][QS2]புரிந்து கொள்ளும் ஆற்றலையுடையவருக்கு நீண்ட ஆயுள் உண்டு. [QE]
13. [QS]ஞானமும் ஆற்றலும் தேவனுக்குரியவை. [QE][QS2]ஆலோசனையும் புரிந்துகொள்ளுதலும் அவருக்குரியவை. [QE]
14. [QS]தேவன் எதையேனும் கிழித்து அழித்தால் ஜனங்கள் அதை மீண்டும் உருவாக்க முடியாது. [QE][QS2]தேவன் ஒருவனைச் சிறைக்குள் அகப்படுத்தினால் ஜனங்கள் அவனை விடுவிக்க முடியாது. [QE]
15. [QS]தேவன் மழையைப் பெய்யாதிருக்கச் செய்தால், பூமி உலர்ந்துபோகும். [QE][QS2]தேவன் மழையைத் தாராளமாகப் பெய்யச் செய்தால், அது பூமியில் வெள்ளப் பெருக்கெடுக்கும். [QE]
16. [QS]தேவன் வல்லமையுள்ளவரும் வெற்றி பெறுபவருமாவார். [QE][QS2]ஏமாந்தவரும் மற்றும் ஏமாற்றுகின்றவரும் அவருக்கு கீழிருக்கிறீர்கள். [QE]
17. [QS]தேவன் ஆலோசனைக் கூறுவோரின் ஞானத்தை அகற்றுகிறார், [QE][QS2]அவர் தலைவர்களை மூடர்களைப்போல் நடக்கும்படி செய்கிறார். [QE]
18. [QS]அரசர்கள் ஜனங்களைச் சிறைகளில் அடைக்கக்கூடும், [QE][QS2]ஆனால் தேவன் அந்த ஜனங்களை விடுவித்து ஆற்றலுள்ளோராக்குகிறார். [QE]
19. [QS]தேவன் ஆசாரியர் ஆற்றலை அகற்றுகிறார். [QE][QS2]அவர் ஆலயப் பணியாட்களை முக்கிமற்றோராக்குகிறார். [QE]
20. [QS]நம்பிக்கையுள்ள ஆலோசகர்களை அமைதியாயிருக்கும்படி தேவன் செய்கிறார், [QE][QS2]முதிர்ந்தோரின் ஞானத்தை அவர் அகற்றிவிடுகிறார். [QE]
21. [QS]தேவன் தலைவர்களை முக்கியமற்றோராக்குகிறார், [QE][QS2]தலைவர்களின் ஆற்றலை அவர் நீக்கிவிடுகிறார். [QE]
22. [QS]இருண்ட இரகசியங்களையும் கூட தேவன் அறிகிறார், [QE][QS2]மரணம் போன்ற இருளுள்ள இடங்களிலும் அவர் ஒளியைப் பாய்ச்சுகிறார். [QE]
23. [QS]தேவன் தேசங்களைப் பெரிதாகவும் வல்லமை மிக்கதாகவும் செய்கிறார். [QE][QS2]பின்பு அவர் அவற்றை அழிக்கிறார். [QE][QS]அவர் தேசங்களைப் பெரிதாக வளரும்படி செய்கிறார், [QE][QS2]பின்பு அவர் அங்குள்ள ஜனங்களைச் சிதறடிக்கிறார். [QE]
24. [QS]தேவன் தலைவர்களை மூடராக்குகிறார், [QE][QS2]அவர்கள் குறிக்கோளின்றி பாலைவனத்தில் அலையும்படிச் செய்கிறார். [QE]
25. [QS]அத்தலைவர்கள் இருளில் தடுமாறி வழி தேடுகின்றவனைப்போல் இருக்கிறார்கள். [QE][QS2]குடித்து போகும்வழியை அறியாது செல்கிறவனைப்போல் இருக்கிறார்கள்” என்றான். [QE][PBR]