1. {சோப்பார் யோபுவிடம் பேசுகிறான்} [PS] அப்போது நாகமாவின் சோப்பார் யோபுவுக்குப் பதில் கூறினான்.
2. “இவ்வார்த்தைப் பெருக்குக்குப் பதில் தரப்பட வேண்டும்! [QBR2] இத்தனை பேச்சுக்களும் யோபுவுக்கு நீதி வழங்குகின்றனவா? இல்லை? [QBR]
3. யோபுவே, உனக்குச் சொல்ல எங்களிடம் பதில் இல்லை என்று நினைக்கிறாயா? [QBR2] நீ நகைத்து பேசும்போது உன்னை எச்சரிக்க ஒருவருமில்லை என நினைக்கிறாயா? [QBR]
4. யோபுவே, நீ தேவனிடம், ‘என் விவாதங்கள் சரியானவை, [QBR2] நான் தூயவன் என நீர் காணமுடியும்’ என்கிறாய். [QBR]
5. யோபுவே, தேவன் உனக்குப் பதில் சொல்லி, [QBR2] நீ கருதுவது தவறென உனக்குச் சொல்வார் என விரும்புகிறேன். [QBR]
6. தேவன் ஞானத்தின் இரகசியங்களை உனக்குச் சொல்லமுடியும். [QBR2] ஏனெனில் ஞானத்திற்கு இரண்டு பக்கங்கள் உண்டு என்பதை அவர் உனக்குச் சொல்வார். [QBR] தேவன் உன்னைத் தண்டிக்க வேண்டிய அளவிற்கு அவர் தண்டிப்பதில்லை.
7. “யோபுவே, நீ உண்மையாகவே தேவனைப் புரிந்துகொண்டதாக நினைக்கிறாயா? [QBR2] சர்வ வல்லமையுள்ள தேவனுடைய அறிவை நீ புரிந்துகொள்ள முடியுமோ? [QBR]
8. அது பரலோகத்திற்கும் உயர்ந்தது. [QBR2] மரணத்தின் இடத்தைக் காட்டிலும் ஆழமானது. [QBR2] அதுபற்றி நீர் அறியக்கூடுமோ? [QBR]
9. தேவனுடைய அறிவின் அளவு உயர்ந்தது. [QBR2] பூமியைக் காட்டிலும் கடல்களைக் காட்டிலும் பெரியது.
10. “தேவன் உன்னைச் சிறைபிடித்து நியாய சபைக்கு அழைத்துவந்தால், [QBR2] ஒருவனும் அவரைத் தடுக்க முடியாது. [QBR]
11. உண்மையாகவே, யார் தகுதியற்றவரென்று தேவன் அறிகிறார். [QBR2] தேவன் தீமையைப் பார்க்கும்போது அதை நினைவுக்கூர்கிறார். [QBR]
12. ஒரு காட்டுக் கழுதை மனிதனை ஈன்றெடுக்காது. [QBR2] மூடனான மனிதன் ஒருபோதும் ஞானம் பெறமாட்டான். [QBR]
13. ஆனால் யோபுவே, உன் இருதயத்தை தேவனுக்கு நேராக தயார்ப்படுத்த வேண்டும். [QBR2] உன் கரங்களை அவருக்கு நேராக உயர்த்தி அவரைத் தொழுதுகொள்ள வேண்டும். [QBR]
14. உன் வீட்டிலிருக்கும் பாவத்தை நீ அகற்றிப்போட வேண்டும். [QBR2] உன் கூடாரத்தில் தீமை தங்கியிருக்கவிடாதே. [QBR]
15. அப்போது நீ தேவனை வெட்கமின்றிப் பார்க்கக்கூடும். [QBR2] நீ தைரியமாக நின்று, அச்சமில்லாது இருக்க முடியும். [QBR]
16. அப்போது நீ உன் தொல்லைகளை மறக்கக் கூடும். [QBR2] வழிந்தோடும் வெள்ளத்தைப்போல் உன் தொல்லைகள் நீங்கிவிடும். [QBR]
17. நண்பகலில் சூரியனின் பிரகாசத்தைக் காட்டிலும், உன் வாழ்க்கை ஒளிமயமாக இருக்கும். [QBR2] வாழ்க்கையின் இருண்ட நேரங்களும் காலை சூரியனைப் போன்று பிரகாசிக்கும். [QBR]
18. அப்போது நீ பாதுகாவலை உணர்வாய். [QBR2] ஏனெனில், உனக்கு நம்பிக்கை உண்டு. [QBR2] தேவன் உன்னைக் கவனித்து உனக்கு ஓய்வளிப்பார். [QBR]
19. நீ ஓய்வெடுக்கப் படுத்துக்கொள்வாய், யாரும் உனக்குத் தொல்லை தரமாட்டார்கள். [QBR2] பலர் உன்னிடம் உதவி நாடி வருவார்கள். [QBR]
20. தீயோர் உன்னிடம் உதவியை எதிர்பார்ப்பர், அவர்கள் தங்கள் தொல்லைகளிலிருந்து தப்பமுடியாது. [QBR2] அவர்களின் நம்பிக்கை அவர்களை மரணத்திற்கு நேராக மட்டுமே வழிநடத்தும்” என்றான். [PE]