1. {#1சோப்பார் யோபுவிடம் பேசுகிறான் } [PS]அப்போது நாகமாவின் சோப்பார் யோபுவுக்குப் பதில் கூறினான். [PE][PBR]
2. [QS]“இவ்வார்த்தைப் பெருக்குக்குப் பதில் தரப்பட வேண்டும்! [QE][QS2]இத்தனை பேச்சுக்களும் யோபுவுக்கு நீதி வழங்குகின்றனவா? இல்லை? [QE]
3. [QS]யோபுவே, உனக்குச் சொல்ல எங்களிடம் பதில் இல்லை என்று நினைக்கிறாயா? [QE][QS2]நீ நகைத்து பேசும்போது உன்னை எச்சரிக்க ஒருவருமில்லை என நினைக்கிறாயா? [QE]
4. [QS]யோபுவே, நீ தேவனிடம், ‘என் விவாதங்கள் சரியானவை, [QE][QS2]நான் தூயவன் என நீர் காணமுடியும்’ என்கிறாய். [QE]
5. [QS]யோபுவே, தேவன் உனக்குப் பதில் சொல்லி, [QE][QS2]நீ கருதுவது தவறென உனக்குச் சொல்வார் என விரும்புகிறேன். [QE]
6. [QS]தேவன் ஞானத்தின் இரகசியங்களை உனக்குச் சொல்லமுடியும். [QE][QS2]ஏனெனில் ஞானத்திற்கு இரண்டு பக்கங்கள் உண்டு என்பதை அவர் உனக்குச் சொல்வார். [QE][QS]தேவன் உன்னைத் தண்டிக்க வேண்டிய அளவிற்கு அவர் தண்டிப்பதில்லை. [QE][PBR]
7. [QS]“யோபுவே, நீ உண்மையாகவே தேவனைப் புரிந்துகொண்டதாக நினைக்கிறாயா? [QE][QS2]சர்வ வல்லமையுள்ள தேவனுடைய அறிவை நீ புரிந்துகொள்ள முடியுமோ? [QE]
8. [QS]அது பரலோகத்திற்கும் உயர்ந்தது. [QE][QS2]மரணத்தின் இடத்தைக் காட்டிலும் ஆழமானது. [QE][QS2]அதுபற்றி நீர் அறியக்கூடுமோ? [QE]
9. [QS]தேவனுடைய அறிவின் அளவு உயர்ந்தது. [QE][QS2]பூமியைக் காட்டிலும் கடல்களைக் காட்டிலும் பெரியது. [QE][PBR]
10. [QS]“தேவன் உன்னைச் சிறைபிடித்து நியாய சபைக்கு அழைத்துவந்தால், [QE][QS2]ஒருவனும் அவரைத் தடுக்க முடியாது. [QE]
11. [QS]உண்மையாகவே, யார் தகுதியற்றவரென்று தேவன் அறிகிறார். [QE][QS2]தேவன் தீமையைப் பார்க்கும்போது அதை நினைவுக்கூர்கிறார். [QE]
12. [QS]ஒரு காட்டுக் கழுதை மனிதனை ஈன்றெடுக்காது. [QE][QS2]மூடனான மனிதன் ஒருபோதும் ஞானம் பெறமாட்டான். [QE]
13. [QS]ஆனால் யோபுவே, உன் இருதயத்தை தேவனுக்கு நேராக தயார்ப்படுத்த வேண்டும். [QE][QS2]உன் கரங்களை அவருக்கு நேராக உயர்த்தி அவரைத் தொழுதுகொள்ள வேண்டும். [QE]
14. [QS]உன் வீட்டிலிருக்கும் பாவத்தை நீ அகற்றிப்போட வேண்டும். [QE][QS2]உன் கூடாரத்தில் தீமை தங்கியிருக்கவிடாதே. [QE]
15. [QS]அப்போது நீ தேவனை வெட்கமின்றிப் பார்க்கக்கூடும். [QE][QS2]நீ தைரியமாக நின்று, அச்சமில்லாது இருக்க முடியும். [QE]
16. [QS]அப்போது நீ உன் தொல்லைகளை மறக்கக் கூடும். [QE][QS2]வழிந்தோடும் வெள்ளத்தைப்போல் உன் தொல்லைகள் நீங்கிவிடும். [QE]
17. [QS]நண்பகலில் சூரியனின் பிரகாசத்தைக் காட்டிலும், உன் வாழ்க்கை ஒளிமயமாக இருக்கும். [QE][QS2]வாழ்க்கையின் இருண்ட நேரங்களும் காலை சூரியனைப் போன்று பிரகாசிக்கும். [QE]
18. [QS]அப்போது நீ பாதுகாவலை உணர்வாய். [QE][QS2]ஏனெனில், உனக்கு நம்பிக்கை உண்டு. [QE][QS2]தேவன் உன்னைக் கவனித்து உனக்கு ஓய்வளிப்பார். [QE]
19. [QS]நீ ஓய்வெடுக்கப் படுத்துக்கொள்வாய், யாரும் உனக்குத் தொல்லை தரமாட்டார்கள். [QE][QS2]பலர் உன்னிடம் உதவி நாடி வருவார்கள். [QE]
20. [QS]தீயோர் உன்னிடம் உதவியை எதிர்பார்ப்பர், அவர்கள் தங்கள் தொல்லைகளிலிருந்து தப்பமுடியாது. [QE][QS2]அவர்களின் நம்பிக்கை அவர்களை மரணத்திற்கு நேராக மட்டுமே வழிநடத்தும்” என்றான். [QE]