1. {#1பகைவர் எருசலேமை சுற்றிவளைத்தனர் } [QS]பென்யமீன் ஜனங்களே! உங்கள் உயிருக்காக ஓடுங்கள். [QE][QS2]எருசலேம் நகரத்தை விட்டுத் தூர ஓடுங்கள்! [QE][QS]தெக்கோவா நகரில் போர் எக்காளத்தை ஊதுங்கள்! [QE][QS2]பெத்கேரேம் நகரில் எச்சரிக்கை கொடியை ஏற்றுங்கள்! [QE][QS]நீங்கள் இவற்றை செய்யுங்கள். [QE][QS]ஏனென்றால், வடக்கிலிருந்து பேரழிவானது வந்துகொண்டிருக்கிறது. [QE][QS]பயங்கரமான பேரழிவு உங்களுக்கு வந்துகொண்டிருக்கிறது. [QE]
2. [QS]சீயோனின் மகளே, நீ ஒரு அழகான மென்மையான [QE][QS2]பெண் போன்றுள்ளாய். [QE]
3. [QS]மேய்ப்பர்கள் எருசலேமிற்கு வருகிறார்கள், [QE][QS2]அவர்கள் தம் ஆட்டு மந்தையைக் கொண்டுவருகிறார்கள். [QE][QS]எருசலேமைச் சுற்றி தங்கள் கூடாரங்களை அமைத்தனர். [QE][QS2]ஒவ்வொரு மேய்ப்பனும், அவனது சொந்த மந்தையைக் கவனிக்கின்றனர். [QE][PBR]
4. [QS]“எருசலேமிற்கு எதிராகப் போராடத் தயாராகுங்கள். [QE][QS2]எழுந்திருங்கள்! நாம் மதிய நேரத்தில் நகரத்தைத் தாக்குவோம்; [QE][QS]ஆனால் ஏற்கனவே தாமதமாகிவிட்டது. [QE][QS2]மாலை நிழல் நீளமாக வளர்ந்துக்கொண்டிருக்கின்றது. [QE]
5. [QS]எனவே, புறப்படுங்கள்! இரவில் நகரத்தை நாம் தாக்குவோம்! [QE][QS2]எருசலேமைச் சுற்றியிருக்கின்ற உறுதியான சுவர்களை அழிப்போம்.” [QE][PBR]
6. [QS]சர்வ வல்லமையுள்ள கர்த்தர், [QE][QS2]“எருசலேமை சுற்றியுள்ள மரங்களை வெட்டிப்போடுங்கள், அதன் சுவருக்கு எதிராக எடுசுவரை எழுப்புங்கள். [QE][QS]இந்த நகரம் தண்டிக்கப்படவேண்டும்! [QE][QS2]இந்த நகரத்தின் உட்பகுதியில் கொடுமையைத் தவிர வேறு எதுவுமில்லை. [QE]
7. [QS]ஒரு கிணறு தனது தண்ணீரைப் புதிதாக சுரக்கிறது, [QE][QS2]இதுபோலவே எருசலேமும் தனது தீங்கை சுரக்கபண்ணுகிறது, [QE][QS]நகரத்திற்குள் எல்லா நேரத்திலும், கொடுமையும், வன்முறையும் நிகழ்வதை நான் கேள்விப்படுகிறேன். [QE][QS2]எருசலேமிற்குள் எப்பொழுதும் துன்பமும், நோயும் இருப்பதைப் பார்க்கிறேன். [QE]
8. [QS]எருசலேமே! இந்த எச்சரிக்கையை கவனி! [QE][QS2]நீ கவனிக்காவிட்டால், பிறகு நான் உனக்கு எனது முதுகைத் திருப்புவேன், [QE][QS]உனது நாட்டை ஒரு வெறும் வனாந்தரமாக நான் செய்வேன். [QE][QS2]அங்கு எவரும் வாழமுடியாமல் போகும்” என்று கூறுகிறார். [QE][PBR]
9. [QS]சர்வ வல்லமையுள்ள கர்த்தர், [QE][QS]“தங்கள் தேசத்தில் விடப்பட்டிருந்த இஸ்ரவேல் ஜனங்களை ஒன்று சேருங்கள், [QE][QS2]நீங்கள் திராட்சைத் தோட்டத்தில் இறுதியில் [QE][QS]பழுத்த பழங்களை சேகரிப்பதுபோன்று [QE][QS2]அவர்களை ஒன்று சேருங்கள். [QE][QS]ஒரு வேலைக்காரன் ஒவ்வொரு திராட்சைப் பழத்தையும் பறிக்குமுன் [QE][QS2]சோதிப்பதுபோன்று சோதியுங்கள்” என்று கூறுகிறார். [QE]
10. [QS]நான் யாரோடு பேசுவேன்? [QE][QS2]நான் யாரை எச்சரிக்க முடியும்? [QE][QS2]நான் சொல்வதை யார் கேட்பார்கள்? [QE][QS]இஸ்ரவேல் ஜனங்கள் தம் காதுகளை மூடிக்கொண்டார்கள். [QE][QS2]எனவே, எனது எச்சரிக்கைகளை அவர்களால் கேட்கமுடியாது. [QE][QS]ஜனங்கள் கர்த்தருடைய போதனைகளை விரும்புகிறதில்லை, [QE][QS2]அவரது செய்தியை அவர்கள் கேட்க விரும்பவில்லை. [QE]
11. [QS]ஆனால் நான், (எரேமியா) கர்த்தருடைய கோபத்தால் முழுமையாக நிறைந்திருக்கிறேன்! [QE][QS2]நான் அதனைத் தாங்குவதில் சோர்ந்துபோனேன். [QE][QS]“தெருவில் விளையாடிக்கொண்டிருக்கும் பிள்ளைகள் மீது கர்த்தருடைய கோபத்தை ஊற்றுங்கள். [QE][QS2]கூடுகின்ற இளைஞர் மேல் கர்த்தருடைய கோபத்தை ஊற்றுங்கள். [QE][QS]ஒரு ஆணும் அவனது மனைவியும் சேர்த்து கைபற்றப்படுவார்கள். [QE][QS]வயதான ஜனங்கள் அனைவரும் கைபற்றப்படுவார்கள். [QE]
12. [QS]அவர்களின் வீடுகள் மற்றவர்களுக்குக் கொடுக்கப்படும். [QE][QS2]அவர்களின் வயல்களும் மனைவிகளும் மற்றவர்களுக்குக் கொடுக்கப்படும். [QE][QS]நான் என்னுடைய கையை உயர்த்தி யூதாவின் ஜனங்களைத் தண்டிப்பேன்” [QE][PBR] [QS]என்று கர்த்தர் சொல்லுகிறார். [QE][PBR]
13. [QS]“இஸ்ரவேலில் உள்ள அனைத்து ஜனங்களும் மேலும் மேலும் பணத்தை விரும்புகின்றனர். [QE][QS2]முக்கியத்துவம் குறைந்த ஜனங்களிலிருந்து முக்கியத்துவம் மிகுந்த ஜனங்கள்வரை அனைத்து ஜனங்களும், இதுபோலவே இருக்கின்றனர். [QE][QS2]தீர்க்கதரிசிகளிலிருந்து ஆசாரியர்கள்வரை, அனைத்து ஜனங்களும் பொய்களைக் கூறுகின்றனர். [QE]
14. [QS]என்னுடைய ஜனங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். [QE][QS2]தீர்க்கதரிசிகளும், ஆசாரியர்களும், அந்தக் காயங்களுக்குக் கட்டுப் போடவேண்டும். [QE][QS]அவர்கள் சிறிய காயங்களுக்கு, சிகிச்சை செய்வதுபோன்று, அவர்கள் புண்களுக்கு சிகிச்சை செய்கின்றனர். [QE][QS2]‘இது சரியாக இருக்கிறது, எல்லாம் சரியாக இருக்கிறது!’ [QE][QS2]என்று கூறுகிறார்கள். [QE][QS]ஆனால் அது சரியாக இல்லை! [QE]
15. [QS]தீர்க்கதரிசிகளும், ஆசாரியர்களும், தாங்கள் செய்கிற தீயச்செயல்களுக்காக வெட்கப்பட வேண்டும். [QE][QS2]ஆனால், அவர்கள் கொஞ்சமும் வெட்கப்படுவதில்லை [QE][QS]தங்கள் பாவங்களுக்காக வெட்கப்படும் அளவிற்கு அவர்களுக்கு போதிய அறிவில்லை; [QE][QS2]எனவே, அவர்கள் ஒவ்வொருவரும் தண்டிக்கப்படுவார்கள். [QE][QS2]நான் ஜனங்களைத் தண்டிக்கும்போது, அவர்கள் தரையில் வீசியெறியப்படுவார்கள்” என்று கர்த்தர் சொல்லுகிறார். [QE][PBR]
16. [QS]கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்: [QE][QS]“வழிகளில் நின்று கவனி. [QE][QS]பழையசாலை எங்கே என்று கேள். [QE][QS2]நல்ல சாலை எங்கே என்று கேள். [QE][QS2]அந்தச் சாலையில் நட. [QE][QS2]நீ செய்தால், உனக்குள் நீ ஓய்வைக் கண்டுபிடிப்பாய். [QE][QS]ஆனால் நீங்களோ, ‘நாங்கள் நல்ல சாலைகளில் நடக்கமாட்டோம்!’ என்று கூறினீர்கள். [QE]
17. [QS]உங்களை கவனிக்க காவல்காரர்களைத் தேர்ந்தெடுத்தேன். [QE][QS2]நான் அவர்களிடம், ‘போர் எக்காள சத்தத்தை கவனியுங்கள்’ என்று கூறினேன். [QE][QS2]ஆனால் அவர்களோ, ‘நாங்கள் கவனிக்கமாட்டோம்!’ என்று கூறினார்கள். [QE]
18. [QS]எனவே, தேசத்திலுள்ளவர்களே! [QE][QS2]கேளுங்கள் சபையே, [QE]
19. [QS]பூமியின் ஜனங்களே, [QE][QS2]யூதா ஜனங்களுக்கு நான் பேரழிவைக் கொண்டுவருவேன். [QE][QS2]ஏனென்றால், அவர்கள் எல்லா தீயச்செயல்களுக்கும் திட்டமிடுகிறார்கள். [QE][QS2]அவர்கள் என் வார்த்தையை உதாசினப்படுத்தினார்கள். [QE][QS2]அந்த ஜனங்கள் என் சட்டங்களுக்கு அடிபணிய மறுத்தனர்.” [QE][PBR]
20. [QS]கர்த்தர் அவர்களிடம், “ஏன் நீங்கள் சேபா நாட்டிலுள்ள நறுமணப் பொருட்களையும், [QE][QS2]தொலை நாடுகளிலுள்ள சுகந்தப் பட்டைகளையும் எனக்குக் கொண்டு வருகிறீர்கள்? [QE][QS]உங்களது சர்வாங்கத் தகன பலிகள் எனக்கு மகிழ்ச்சியளிப்பதில்லை, [QE][QS2]உங்களது பலிகள் எனக்கு இன்பமாயிராது” என்று கூறினார். [QE][PBR]
21. [QS]எனவே இதுதான் கர்த்தர் கூறுவது: [QE][QS]“யூதாவிலுள்ள ஜனங்களுக்கு நான் சிக்கல்களை கொண்டு வருவேன். [QE][QS2]அவை ஜனங்களை விழச் செய்யும் கற்களைப்போன்று இருக்கும். [QE][QS]தந்தைகளும் மகன்களும் ஒருவர் மேல் ஒருவர் இடறி விழுவார்கள். [QE][QS2]நண்பர்களும் அருகில் உள்ளவர்களும் மரித்துப்போவார்கள்.” [QE][PBR]
22. [QS]கர்த்தர் சொல்லுகிறதாவது: [QE][QS]“ஒரு படையானது வடக்கிலிருந்து வந்துகொண்டிருக்கிறது. [QE][QS2]பூமியிலுள்ள, தொலைதூர இடங்களிலிருந்து ஒரு பெரிய தேசம் வந்துகொண்டிருக்கிறது. [QE]
23. [QS]வீரர்கள் வில்லையும் ஈட்டியையும் கொண்டு வருகின்றனர். [QE][QS2]அவர்கள் கொடுமையானவர்கள். [QE][QS]அவர்களிடம் இரக்கம் இல்லை. [QE][QS2]அவர்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள், [QE][QS]அவர்கள், குதிரைகள் மேல் சவாரி செய்து வரும்போது, [QE][QS2]இரைகின்ற கடலைப்போன்று சத்தம் எழுப்புகிறார்கள். [QE][QS]சண்டை செய்வதற்கு தயாராக அப்படை வந்துக்கொண்டிருக்கிறது. [QE][QS2]சீயோனின் குமாரத்தியே! அந்தப் படை உங்களை தாக்கிட வந்துகொண்டிருக்கிறது.” [QE]
24. [QS]அந்தப் படையைப் பற்றியச் செய்தியைக் கேள்விப்பட்டிருக்கிறோம். [QE][QS2]எங்களின் துன்ப வலையில் மாட்டிக்கொண்டதாக உணர்கிறோம். [QE][QS]பயத்தினால் ஒன்றும் செய்ய முடியாதவர்களாக இருக்கிறோம். [QE][QS2]பிரசவிக்கும் பெண்ணைப்போன்று வேதனையில் இருக்கிறோம். [QE]
25. [QS]வெளியே வயல்களுக்குப் போகாதீர்கள். [QE][QS2]சாலைகளில் போகாதீர்கள், [QE][QS]ஏனென்றால் பகைவர்கள் வாள் வைத்திருக்கின்றனர். [QE][QS2]எல்லா இடங்களிலும் ஆபத்து இருக்கிறது. [QE]
26. [QS]என் சாக்கு ஆடையை அணிந்துக்கொள்ளுங்கள். [QE][QS2]சாம்பலில் புரளுங்கள். [QE][QS]மரித்த ஜனங்களுக்காக உரக்க அழுங்கள். [QE][QS2]ஒரே மகனை இழந்ததைப்போன்று அழுங்கள், [QE][QS]இவற்றையெல்லாம் செய்யுங்கள்; [QE][QS2]ஏனென்றால், நமக்கு எதிரியான, அழிவுக்காரன் மிகவேகமாக வந்துக்கொண்டிருக்கிறான். [QE][PBR]
27. [QS]“எரேமியா! நான், (கர்த்தர்) உன்னை உலோகத்தை [QE][QS2]சோதித்துப்பார்க்கும் வேலையாளாக வைத்தேன், [QE][QS]நீ எனது ஜனங்களை சோதிப்பாய்; [QE][QS2]அவர்கள் எவ்வாறு வாழ்கின்றார்கள் என்று கவனிப்பாய். [QE]
28. [QS]என்னுடைய ஜனங்களே, எனக்கு எதிராக திரும்பியிருக்கின்றனர், [QE][QS2]அவர்கள் மிகவும் கடினமானவர்கள். [QE][QS2]அவர்கள் ஜனங்களைப்பற்றி தவறானவற்றைச் சொல்கிறார்கள், ஜனங்களைப்பற்றி கெட்டவற்றைச் சொல்கிறார்கள். [QE][QS]துருவும் கறையும் கொண்ட அவர்கள் எல்லோரும் தீயவர்கள். [QE][QS2]அவர்கள் வெண்கலத்தைப்போன்றும் இரும்பைப் போன்றும் இருக்கின்றனர். [QE]
29. [QS]அவர்கள் வெள்ளியை சுத்தப்படுத்த முயலும் வேலைக்காரர்களைப் போன்றுள்ளனர். [QE][QS]துருத்திகள் பலமாக ஊதப்படுகின்றன. [QE][QS]நெருப்பு மேலும் சூடாகின்றது. [QE][QS2]ஆனால் நெருப்பிலிருந்து ஈயம்மட்டும் வருகின்றது. [QE][QS]அந்த வெள்ளியை சுத்தப்படுத்துவதில் வேலையாள் தனது காலத்தை வீணாக்கிவிட்டான். [QE][QS]இதுபோலவே, எனது ஜனங்களிடமிருந்து தீயவை விலக்கப்படவில்லை. [QE]
30. [QS]என்னுடைய ஜனங்கள் ‘தள்ளுபடியான வெள்ளி’ என்று அழைக்கப்படுவார்கள், அவர்களுக்கு அந்தப் பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது. [QE][QS2]ஏனென்றால், கர்த்தர் அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை.” [QE]