1. {பாபிலோன் பற்றியச் செய்தி} [PS] பாபிலோனைப் பற்றியும் பாபிலோனிய ஜனங்களைப் பற்றியும் கர்த்தர் பேசிய வார்த்தை இது. கர்த்தர் இந்த வார்த்தையை எரேமியா மூலமாகப் பேசினார்:
2. “அனைத்து தேசங்களுக்கும் இதனை அறிவியுங்கள்! [QBR2] ஒரு கொடியைத் தூக்கிச் செய்தியை அறிவியுங்கள்! [QBR] முழுச் செய்தியையும் பேசுங்கள்: [QBR2] சொல்லுங்கள்: ‘பாபிலோன் தேசம் கைப்பற்றப்படும். [QBR2] அந்நிய தெய்வமாகிய பேல் தெய்வம் அவமானம் அடைவான். [QBR2] பொய்த் தெய்வமாகிய மெரொதாக் தெய்வம் மிகவும் பயப்படுவான். [QBR] பாபிலோனின் விக்கிரகங்கள் அவமானம் அடையும். [QBR2] அவளது தெய்வங்களின் விக்கிரகங்கள் பயங்கரத்தால் நிறைந்திருக்கும்.’ [QBR]
3. வடக்கிலிருந்து ஒரு தேசம் பாபிலோனைத் தாக்கும். [QBR2] அத்தேசம் பாபிலோனைக் காலியான வனாந்தரம் போலாக்கும். [QBR] அங்கே எவரும் வாழமாட்டார்கள். [QBR2] அங்கிருந்து மனிதர்களும் மிருகங்களும் வெளியே ஓடுவார்கள்.” [QBR]
4. கர்த்தர் கூறுகிறார்: “அந்த நேரத்தில், [QBR2] இஸ்ரவேல் ஜனங்களும் யூதாவின் ஜனங்களும் சேர்வார்கள். [QBR] அவர்கள் அழுவார்கள். [QBR] அவர்கள் கூடி அழுவார்கள். [QBR2] அவர்களுடைய தேவனாகிய கர்த்தரைத் தேட அவர்கள் போவார்கள். [QBR]
5. சீயோனுக்கு எப்படி போகவேண்டும் என்று அந்த ஜனங்கள் கேட்பார்கள். [QBR2] அந்தத் திசையில் அவர்கள் போகத் தொடங்குவார்கள். [QBR] ஜனங்கள் சொல்லுவார்கள், ‘வாருங்கள், கர்த்தருடன் நாம் ஒன்று சேர்வோம். [QBR2] நாம் என்றென்றும் நிலைத்திருக்கும்படி ஒரு ஒப்பந்தம் செய்துகொள்வோம். [QBR2] என்றென்றும் மறக்கமுடியாதபடி ஒரு ஒப்பந்தத்தை நாம் செய்வோம்.’
6. “எனது ஜனங்கள் காணமல் போன ஆட்டைப்போன்று இருக்கிறீர்கள். [QBR2] அவற்றின் மேய்ப்பர்கள் (தலைவர்கள்) தவறான வழியில் வழிநடத்துகின்றனர். [QBR] அவர்களின் தலைவர்கள் அவர்களை மலைகளிலும் குன்றுகளிலும் அலைய வைத்தார்கள். [QBR2] அவர்களது ஆறுதலுக்குரிய இடம் எதுவென்று அவர்கள் மறந்தார்கள். [QBR]
7. எவர்கள் என் ஜனங்களைக் கண்டார்களோ அவர்களை காயப்படுத்தினார்கள். [QBR2] அப்பகைவர்கள் ‘நாங்கள் தவறு எதுவும் செய்யவில்லை’ என்று சொன்னார்கள். [QBR] ‘அந்த ஜனங்கள் கர்த்தருக்கு எதிராகப் [QBR2] பாவம் செய்தார்கள். [QBR] கர்த்தர் தாமே அவர்களுடைய உண்மையான இளைப்பாறும் இடம். [QBR2] கர்த்தர் தாமே அவர்களது முற்பிதாக்கள் நம்பின தேவன்.’
8. “பாபிலோனை விட்டு ஓடுங்கள். [QBR2] பாபிலோனிய ஜனங்களின் தேசத்தை விட்டு விலகுங்கள். [QBR2] மந்தையை வழிநடத்திச் செல்லும் வெள்ளாடுகளைப் போன்று இருங்கள். [QBR]
9. நான் வடக்கிலிருந்து பல தேசங்களை ஒன்று சேர்ப்பேன். [QBR] இந்தத் தேசங்களின் குழு பாபிலோனுக்கு எதிராகச் சண்டையிடத் தயாராகும். [QBR] வடக்கிலிருந்து வரும் ஜனங்களால் பாபிலோன் கைப்பற்றப்படும். [QBR] இத்தேசங்கள் பாபிலோன் மேல் பல அம்புகளை எய்யும். [QBR] அந்த அம்புகள் போரிலிருந்து வெறுங்கைகளோடு [QBR2] திரும்பி வராத வீரர்களைப் போன்றிருக்கும். [QBR]
10. பகைவர்கள் கல்தேயர் ஜனங்களின் செல்வமெல்லாவற்றையும் எடுப்பார்கள். [QBR2] அவ்வீரர்கள் அவர்கள் விரும்பும் எல்லாவற்றையும் எடுப்பார்கள்” [QBR] என்று கர்த்தர் சொல்லுகிறார்.
11. “பாபிலோனே, நீ சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைந்தாய். [QBR2] நீ என் நாட்டை எடுத்தாய். [QBR] நீ ஒரு இளம்பசு தானியங்களுக்குள் [QBR2] புகுந்ததுப்போன்று சுற்றிலும் ஆடுகிறாய். [QBR] குதிரைகள் செய்வதுப்போன்று உனது சிரிப்பு [QBR2] சந்தோஷ ஒலியாக உள்ளது. [QBR]
12. ஆனால் உனது தாய் மிகவும் அவமானம் அடைவாள். [QBR2] உன்னைப் பெற்ற பெண் சங்கடம் அடைவாள். [QBR] எல்லா தேசங்களையும்விட பாபிலோன் குறைந்த முக்கியத்துவம் உடையது. [QBR2] அவள் காலியான, வறண்ட வனாந்தரம்போல் ஆவாள். [QBR]
13. கர்த்தர் அவரது கோபத்தைக் காட்டுவார். [QBR2] எனவே அங்கே ஜனங்கள் எவரும் வாழமாட்டார்கள். [QBR2] பாபிலோன் முழுவதும் காலியாகும். [QBR] பாபிலோனைக் கடந்துப்போகும் எவரும் பயப்படுவார்கள். [QBR2] அது எவ்வளவு மோசமாக அழிக்கப்பட்டிருக்கிறதைப் பார்க்கும்போது அவர்கள் தங்கள் தலைகளை அசைப்பார்கள்.
14. “பாபிலோனுக்கு எதிராகப் போரிடத் தயாராகுங்கள். [QBR2] வில்லோடுள்ள வீரர்கள் அனைவரும் பாபிலோன் மேல் அம்பை எய்யுங்கள். [QBR2] உங்கள் அம்புகளில் எதையும் சேமிக்கவேண்டாம். [QBR] பாபிலோன் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்திருக்கிறது. [QBR]
15. பாபிலோனைச் சுற்றியுள்ள வீரர்களே வெற்றிக்குரலை எழுப்புங்கள்! [QBR2] பாபிலோன் முற்றுகையிடப்பட்டிருக்கிறது! [QBR] அவளது சுவர்களும் கோபுரங்களும் கீழே தள்ளப்படும்! [QBR2] கர்த்தர் அவர்களுக்கு உரிய தண்டனையைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார். [QBR] தேசங்களாகிய நீங்கள் பாபிலோனுக்கு [QBR2] பொருத்தமான தண்டனையைக் கொடுக்கவேண்டும். [QBR] மற்ற தேசங்களுக்கு அவள் என்ன செய்தாளோ அவற்றை அவளுக்குச் செய்யுங்கள். [QBR]
16. பாபிலோனில் உள்ள ஜனங்களைத் தங்கள் விதையை விதைக்கவிடாதீர். [QBR2] அவர்களை அறுவடையைச் சேகரிக்கவிடாதீர். [QBR] பாபிலோனின் வீரர்கள் தம் நகரத்திற்கு பல கைதிகளைக் கொண்டு வந்திருக்கின்றனர். [QBR] இப்போது பகைவரது வீரர்கள் வந்திருக்கிறார்கள். [QBR2] எனவே, அந்தக் கைதிகள் திரும்பப்போயிருக்கிறார்கள். [QBR] அக்கைதிகள் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பி ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
17. “நாடு முழுவதும் சிதறி இருக்கிற மந்தையைப்போன்று [QBR2] இஸ்ரவேல் சிதறி இருக்கிறது. [QBR] இஸ்ரவேல் சிங்கங்களால் துரத்தப்படுகின்ற ஆடுபோன்று உள்ளது. [QBR2] அசீரியா அரசன் தாக்குவது முதல் சிங்கம் தாக்குவது போன்றது. [QBR] பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சார் கடைசி சிங்கத்தைப்போன்று தாக்கி [QBR2] அதன் எலும்புகளை நொறுக்குவான். [QBR]
18. எனவே, இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: [QBR] ‘நான் விரைவில் பாபிலோன் அரசனையும் அவனது நாட்டையும் தண்டிப்பேன். [QBR2] நான் அசீரியா அரசனைத் தண்டித்ததுப்போன்று அவனைத் தண்டிப்பேன்.
19. “ ‘நான் இஸ்ரவேலை அவர்களின் சொந்த வயல்களுக்கு மீண்டும் கொண்டுவருவேன். [QBR2] அப்பொழுது அவன் கர்மேல் மலையிலும் பாசான் நாட்டிலும் விளைந்த உணவை உண்ணுவான். [QBR2] அவன் உண்டு நிறைவுப்பெறுவான். [QBR2] எப்பிராயீமின் மலைகளிலும் கீலேயாத்திலும் அவன் உண்ணுவான்.’ ” [QBR]
20. கர்த்தர் கூறுகிறார், “அந்த நேரத்தில், இஸ்ரவேலின் குற்றத்தைக் கண்டுப்பிடிக்க ஜனங்கள் மிகக் கடுமையாக முயலுவார்கள். [QBR2] ஆனால் அங்கே குற்றம் இருக்காது. [QBR] யூதாவின் பாவங்களை கண்டுப்பிடிக்க அவர்கள் முயலுவார்கள். [QBR2] ஆனால் எந்தப் பாவத்தையும் கண்டுப்பிடிக்க முடியவில்லை. [QBR] ஏனென்றால், நான் இஸ்ரவேல் மற்றும் யூதாவிலிருந்து உயிர் பிழைத்தவர்களை காப்பாற்றிக்கொண்டிருக்கிறேன். [QBR] அவர்களது அனைத்துப் பாவங்களையும் நான் மன்னித்துவிடுகிறேன்.”
21. கர்த்தர் கூறுகிறார்: “மெரதாயீம் தேசத்தைத் தாக்கு! [QBR2] பேகோடில் வாழ்கின்ற ஜனங்களைத் தாக்கு! [QBR] அவர்களைத் தாக்கு! [QBR2] அவர்களைக் கொல்! அவர்களை முழுமையாக அழி! [QBR2] நான் உனக்குக் கட்டளையிட்ட அனைத்தையும் செய்.
22. “நாடு முழுவதிலும் யுத்தத்தின் போரொலியைக் கேட்கலாம். [QBR2] அது பேரழிவின் ஓசையாகும். [QBR]
23. பாபிலோன், ‘பூமியின் சம்மட்டி’ [QBR2] என்று அழைக்கப்பட்டது. [QBR] ஆனால் இப்போது ‘சம்மட்டி’ உடைக்கப்படுகிறது. [QBR2] எல்லா தேசங்களையும்விட அதிகமாக அழிக்கப்பட்ட தேசம் பாபிலோன். [QBR]
24. பாபிலோனே, நான் உனக்காகக் கண்ணி வைத்தேன். [QBR2] அதனைத் தெரிந்துக்கொள்வதற்கு முன்னால் நீ மாட்டிக்கொண்டாய். [QBR] நீ கர்த்தருக்கு எதிராகச் சண்டையிட்டாய். [QBR2] எனவே நீ கண்டுப்பிடிக்கப்பட்டு பிடிப்பட்டாய். [QBR]
25. கர்த்தர் தமது பொருட்கள் சேமிக்கும் அறையைத் திறந்திருக்கிறார். [QBR2] கர்த்தர் அவருடைய கோபத்தின் ஆயுதங்களை வெளியே கொண்டு வந்தார். [QBR] சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் அந்த ஆயுதங்களைக் கொண்டுவந்தார். [QBR2] ஏனென்றால், அவர் செய்யவேண்டிய வேலை இருக்கிறது. [QBR2] கல்தேய ஜனங்களின் தேசத்தில் அவர் செய்ய வேண்டிய வேலை இருக்கிறது.
26. “பாபிலோனுக்கு எதிராகத் தொலை தூரத்திலிருந்து வா. [QBR2] அவள் தனது தானியங்களைச் சேகரித்து வைத்திருக்கிற அறைகளை உடைத்துத் திற. [QBR] பாபிலோனை முழுமையாக அழி. [QBR2] எவரையும் உயிரோடுவிடாதே. [QBR] அவர்களது உடல்களைத் தானியக் கதிர்களைக் குவியலாக்குவதுப்போல் குவியலாக்கு. [QBR]
27. பாபிலோனில் உள்ள எல்லா இளங்காளையையும் (இளைஞரையும்) கொல். [QBR2] அவர்கள் வெட்டப்படட்டும். [QBR] அவர்கள் தோற்கடிக்கப்படுவதற்கான நேரம் வந்திருக்கிறது. [QBR] எனவே இது அவர்களுக்கு மிகக் கேடாகும். [QBR2] இது அவர்கள் தண்டிக்கப்படுவதற்குரிய காலம். [QBR]
28. ஜனங்கள் பாபிலோனை விட்டு ஓடிக்கொண்டிருக்கிறார்கள். [QBR2] அவர்கள் தேசத்திலிருந்து தப்பித்துக்கொண்டிருக்கிறார்கள். [QBR2] அந்த ஜனங்கள் சீயோனுக்கு வந்துக்கொண்டிருக்கிறார்கள். [QBR] அந்த ஜனங்கள் ஒவ்வொருவரிடமும் கர்த்தர் செய்தவற்றைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். [QBR2] கர்த்தர் பாபிலோனுக்கு ஏற்ற தண்டனையைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார் என்று ஜனங்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். [QBR2] பாபிலோன் கர்த்தருடைய ஆலயத்தை அழித்தது. [QBR2] எனவே இப்போது கர்த்தர் பாபிலோனை அழித்துக்கொண்டிருக்கிறார்.
29. “அம்புகளை எய்யும் ஆட்களைக் கூப்பிடு. [QBR2] பாபிலோனைத் தாக்கும்படி அவர்களிடம் சொல். [QBR] நகரத்தை முற்றுகையிடும்படி அவர்களிடம் சொல். [QBR2] எவரையும் தப்பிக்கவிடாதே. [QBR] அவள் செய்த தீமைக்கு, திருப்பிக்கொடுங்கள். [QBR2] அவள் மற்ற தேசங்களுக்கு எவற்றைச் செய்தாளோ அவற்றை அவளுக்குச் செய்யுங்கள். [QBR] பாபிலோன் கர்த்தருக்கு மரியாதை செய்யவில்லை. [QBR2] பாபிலோன் இஸ்ரவேலின் பரிசுத்தமானவரிடம் மிகவும் மோசமாக நடந்துக்கொண்டது. [QBR2] எனவே பாபிலோனைத் தண்டித்துவிடு. [QBR]
30. பாபிலோனின் இளைஞர்கள் தெருவில் கொல்லப்படுவார்கள். [QBR2] அந்த நாளில் அவளது வீரர்கள் எல்லாம் கொல்லப்படுவார்கள்” [QBR] என்று கர்த்தர் சொல்லுகிறார்.
31. “பாபிலோனே, நீ மிகவும் வீண்பெருமை உள்ளவள். [QBR2] நான் உனக்கு எதிராக இருக்கிறேன்” எங்கள் சர்வ வல்லமையுள்ள கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார். [QBR] “நான் உங்களுக்கு எதிராக இருக்கிறேன். [QBR2] நீங்கள் தண்டிக்கப்படுவதற்குரிய காலம் வந்திருக்கிறது. [QBR]
32. வீண் பெருமையுள்ள பாபிலோனே நீ இடறி விழுவாய். [QBR2] நீ எழ எவரும் உதவி செய்யமாட்டார்கள். [QBR] நான் அவளது பட்டணங்களில் நெருப்பை வைப்பேன். [QBR2] அவளைச் சுற்றியுள்ள எல்லோரையும் நெருப்பு முழுமையாக எரிக்கும்.”
33. சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: [QBR] “இஸ்ரவேல் ஜனங்களும் யூதா ஜனங்களும் அடிமைகளாக இருக்கிறார்கள். [QBR2] பகைவர் அவர்களைக் கைப்பற்றினார்கள். [QBR2] பகைவர் இஸ்ரவேலைப் போக விடமாட்டார்கள். [QBR]
34. ஆனால் தேவன் அந்த ஜனங்களைத் திரும்பக் கொண்டுவருவார். [QBR2] அவரது நாமம் சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர். [QBR] அவர் அவர்களைப் பலமாகப் பாதுகாப்பார்! அவர்களை அவர் பாதுகாப்பார். [QBR2] அதனால் அவர் அந்த தேசத்தை ஓய்வுக்கொள்ளச் செய்வார். [QBR] ஆனால் அங்கே பாபிலோனில் வாழ்கிற ஜனங்களுக்கு ஓய்வு இராது.”
35. கர்த்தர் கூறுகிறார், [QBR] “வாளே, பாபிலோனில் வாழ்கிற ஜனங்களைக் கொல். [QBR] வாளே, அரசனின் அதிகாரிகளையும் [QBR2] பாபிலோனின் ஞானிகளையும் கொல்” [QBR]
36. வாளே, பாபிலோனின் ஆசாரியர்களையும், கள்ளத் தீர்க்கதரிசிகளையும் கொல். [QBR2] அவர்கள் முட்டாள்களைப்போன்று ஆவார்கள். [QBR] வாளே, பாபிலோனின் வீரர்களைக் கொல். [QBR2] அவர்கள் பயங்கரத்தினால் நிறைந்திருப்பார்கள். [QBR]
37. வாளே, பாபிலோனின் குதிரைகளைக் கொன்றுப்போட்டு பாபிலோனிய இரதங்களை அழித்துப்போடு. [QBR] வாளே, பிற தேசங்களில் இருந்து கூலிக்குக் கொண்டுவரப்பட்ட வீரர்களையும் கொல். [QBR2] அவ்வீரர்கள் பயந்தப் பெண்களைப் போன்றுள்ளார்கள். [QBR] வாளே, பாபிலோனின் பொக்கிஷங்களை அழி. [QBR2] அப்பொக்கிஷங்கள் எடுத்துச்செல்லப்படும். [QBR]
38. வாளே, பாபிலோனின் தண்ணீரைத் தாக்கு. [QBR2] அத்தண்ணீர் வற்றிப்போகும். [QBR] பாபிலோனில் நிறைய நிறைய விக்கிரகங்கள் உள்ளன. [QBR2] பாபிலோன் ஜனங்கள் முட்டாள்கள் என்பதை அந்த விக்கிரகங்கள் காட்டுகிறது. [QBR2] எனவே அந்த ஜனங்களுக்குத் தீமை ஏற்படும். [QBR]
39. “பாபிலோன் மீண்டும் ஜனங்களால் நிறையாது. [QBR] காட்டு நாய்கள், நெருப்புக் கோழிகள், பிற காட்டு மிருகங்கள் அங்கு வாழும். [QBR2] ஆனால் ஒருக்காலம் மீண்டும் மனிதர்கள் அங்கே வாழமாட்டார்கள். [QBR]
40. தேவன் முழுமையாக சோதோம் கொமோரா மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள நகரங்களையும் அழித்தார். [QBR2] இப்பொழுது அந்நகரங்களில் ஜனங்கள் எவரும் வாழவில்லை. [QBR] அதே வழியில் பாபிலோனில் ஜனங்கள் எவரும் வாழவில்லை. [QBR2] அங்கே வாழ ஜனங்கள் எவரும் என்றென்றும் போகமாட்டார்கள்.
41. “பார்! வடக்கிலிருந்து ஜனங்கள் வந்துக்கொண்டிருக்கிறார்கள். [QBR2] அவர்கள் வல்லமையான நாட்டிலிருந்து வருகிறார்கள். [QBR] உலகின் சுற்றிலும் உள்ள பல அரசர்கள் சேர்ந்து வந்துக்கொண்டிருக்கிறார்கள். [QBR]
42. அவர்களது படைகள் வில்லும் ஈட்டிகளும் வைத்திருக்கிறார்கள். [QBR2] வீரர்கள் கொடுமையானவர்கள். [QBR2] அவர்களிடம் இரக்கம் இல்லை. [QBR] வீரர்கள் தங்கள் குதிரைகளின்மேல் சவாரி செய்கிறார்கள். [QBR2] அந்த ஓசை இரைச்சலிடுகிற கடலைப் போன்றுள்ளது. [QBR] அவர்கள் தம் இடங்களில் நிற்கிறார்கள். [QBR] போருக்குத் தயாராக இருக்கிறார்கள். [QBR2] அவர்கள் பாபிலோன் நகரமே, உன்னைத் தாக்கத் தயாராக இருக்கிறார்கள். [QBR]
43. பாபிலோன் அரசன் அப்படைகளைப்பற்றிக் கேள்விபட்டான். [QBR2] அவன் மிகவும் பயம் அடைந்தான். [QBR] அவன் கைகள் நகரமுடியாத அளவிற்குப் பயந்தான். [QBR2] குழந்தைப்பெறுகிற பெண்ணின் வயிறுபோன்று அவனது வயிறு வலித்தது.”
44. கர்த்தர் கூறுகிறார்: [QBR2] “சில நேரங்களில் யோர்தான் நதிக்கரையிலுள்ள அடர்ந்த புதர்களிலிருந்து சிங்கம் வரும். [QBR] ஜனங்கள் தங்கள் மிருகங்களை விட்டிருக்கிற வயல்களில் சிங்கம் நடந்துப்போகும். [QBR2] (அங்குள்ள மிருகங்கள் வெளியே ஓடும்). [QBR] நான் அந்தச் சிங்கத்தைப்போன்று இருப்பேன். [QBR2] நான் பாபிலோனை அதன் தேசத்திலிருந்து விரட்டுவேன். [QBR] இதைச் செய்வதற்கும் நான் யாரைத் தேர்ந்தெடுப்பேன். [QBR2] என்னைப்போல் எவரும் இல்லை. [QBR2] எனக்குச் சவால்விட எவரும் இல்லை. [QBR2] (எனவே நானே இதனைச் செய்வேன்). [QBR] எந்த மேய்ப்பனும் வந்து என்னைத் துரத்திடான். [QBR2] நான் பாபிலோன் ஜனங்களைத் துரத்துவேன்.”
45. பாபிலோனுக்கு என்ன செய்யவேண்டும் [QBR2] என்று கர்த்தர் திட்டமிட்டிருக்கிறார் என்பதை கவனி. [QBR] பாபிலோனிய ஜனங்களுக்கு [QBR2] கர்த்தர் செய்யவேண்டுமென முடிவு செய்திருப்பதை கவனி. [QBR] பகைவர்கள் பாபிலோனின் மந்தையிலிருந்து (ஜனங்கள்) சிறிய குட்டிகளை இழுத்துச் செல்வார்கள். [QBR2] பாபிலோனின் மேய்ச்சல் நிலங்கள் கர்த்தரால் முழுவதுமாக அழிக்கப்படும். [QBR]
46. பாபிலோன் விழும். [QBR2] அந்த வீழ்ச்சி பூமியை அதிரச்செய்யும். [QBR] பாபிலோனின் அழுகையின் சத்தத்தை [QBR2] அனைத்து நாடுகளிலும் உள்ள ஜனங்கள் கேள்விப்படுவார்கள். [PE]