1. {#1பெலிஸ்திய ஜனங்களைப்பற்றியச் செய்தி } [PS]தீர்க்கதரிசியான எரேமியாவிற்கு கர்த்தரிடமிருந்து வந்த வார்த்தை. பெலிஸ்தியர்களைப் பற்றிய செய்தி இது. பார்வோன் காத்சா நகரைத் தாக்குவதற்கு முன்னால் இச்செய்தி வந்தது. [PE][PBR]
2. [QS]கர்த்தர் கூறுகிறார், “வடக்கில் பகை வீரர்களைப் பார். [QE][QS]எல்லாம் ஒன்றுக்கூடிக்கொண்டிருக்கிறார்கள். [QE][QS2]அவர்கள் வேகமான ஆறு கரையை மோதிக்கொண்டு வருவதுபோன்று வருவார்கள். [QE][QS]அவர்கள் நாடு முழுவதையும் வெள்ளம்போன்று மூடுவார்கள். [QE][QS2]அவர்கள் பட்டணங்களையும் அதில் வாழும் ஜனங்களையும் மூடுவார்கள். [QE][QS]அந்நாட்டில் வாழும் ஒவ்வொருவரும் [QE][QS2]உதவிக்காக அழுவார்கள். [QE]
3. [QS]அவர்கள் ஓடுகின்ற குதிரைகளின் ஓசையைக் கேட்பார்கள். [QE][QS2]அவர்கள் இரதங்களின் ஓசையைக் கேட்பார்கள். [QE][QS2]அவர்கள் சக்கரங்களின் இரைச்சலையும் கேட்பார்கள். [QE][QS]தந்தைகளால் பிள்ளைகளைக் காப்பாற்ற முடியாமல் போகும். [QE][QS2]அவர்கள் உதவ முடியாமல் மிகவும் பலவீனமாவார்கள். [QE]
4. [QS]பெலிஸ்தியர்கள் எல்லோரையும் [QE][QS2]அழிக்கின்ற நேரம் வந்திருக்கின்றது. [QE][QS]தீரு மற்றும் சீதோனில் மிச்சமுள்ளவர்களை [QE][QS2]அழிக்கும் காலம் வந்திருக்கிறது. [QE][QS]பெலிஸ்தியர்களை கர்த்தர் மிக விரைவில் அழிப்பார். [QE][QS2]கிரெட்டே தீவிலுள்ள தப்பிப்பிழைத்த ஜனங்களை அவர் அழிப்பார். [QE]
5. [QS]காத்சாவில் உள்ள ஜனங்கள் சோகம் அடைந்து தங்கள் தலைகளை மழித்துக்கொள்வார்கள். [QE][QS]அஸ்கலோனிலிருந்து வந்த ஜனங்கள் மௌனமாக்கப்படுவார்கள். [QE][QS2]பள்ளத்தாக்கிலிருந்து தப்பிப் பிழைத்தவர்களே! நீங்கள் உங்களையே இன்னும் எவ்வளவு காலம் வெட்டுவீர்கள்? [QE][PBR]
6. [QS]“கர்த்தருடைய பட்டயமே! நீ இன்னும் விடவில்லை. [QE][QS2]நீ எவ்வளவுக் காலத்துக்குச் சண்டையிட்டுக்கொண்டே இருப்பாய்? [QE][QS]நீ உனது உறைக்குள்ளே திரும்பிப்போ! [QE][QS2]ஓய்ந்திரு! [QE]
7. [QS]ஆனால் கர்த்தருடைய பட்டயம் எவ்வாறு ஓயும்? [QE][QS2]கர்த்தர் அதற்கு அஸ்கலோன் மற்றும் கடற்கரைகளையும் தாக்கும்படி கட்டளையிட்டார்.” [QE]