1. {#1யூதா உண்மையாக இல்லை } [PS]கர்த்தருடைய வார்த்தை எரேமியாவிற்கு உண்டாகி, அவர்.
2. “எரேமியா, போ. எருசலேம் ஜனங்களிடம் பேசு, அவர்களிடம், [PE][PBR] [QS]“நீ இளைய நாடாக இருந்த காலத்தில் எனக்கு உண்மை உள்ளவளாக இருந்தாய், [QE][QS2]இளைய மணமகளைப் போன்று, என்னைப் பின்பற்றினாய். [QE][QS]வனாந்தரத்தின் வழியாக என்னைப் பின்பற்றினீர்கள்; [QE][QS2]விவசாயத்திற்குப் பயன்படுத்தாத நிலத்தின் வழியாக என்னைப் பின்தொடர்ந்தீர்கள். [QE]
3. [QS]இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தருக்கான பரிசுத்த அன்பளிப்பாக இருந்தனர். [QE][QS2]அவர்கள் கர்த்தரால் சேகரிக்கப்பட்ட முதல்கனியாக இருந்தனர். [QE][QS]அவர்கள் காயப்படுத்த முயலும் எவரும் குற்றவாளியாகத் தீர்க்கப்படுவார்கள். [QE][QS2]அத்தீயவர்களுக்குக் கெட்டவை ஏற்படும் என்று சொல்” என்றார். [QE][QS]இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது. [QE][PBR]
4. [QS]யாக்கோபின் குடும்பமே கர்த்தருடைய வார்த்தையைக் கேள், [QE][QS2]இஸ்ரவேலின் கோத்திரங்களே கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள். [QE][PBR]
5. [QS]கர்த்தர் சொல்லுகிறது இதுதான்: [QE][QS]“நான், உங்கள் முற்பிதாக்களிடம் நீதியுடன் இல்லை என நினைக்கிறீர்களா? [QE][QS2]அதனால்தான் அவர்கள் என்னைவிட்டு விலகிப் போனார்களா? [QE][QS]உங்கள் முற்பிதாக்கள் பயனற்ற விக்கிரகங்களைத் தொழுதுகொண்டனர். [QE][QS2]அவர்கள், தாங்களே உதவாக்கரைகள் ஆனார்கள். [QE]
6. [QS]உங்கள் முற்பிதாக்கள், ‘கர்த்தர் எகிப்திலிருந்து எங்களைக் கொண்டுவந்தார், [QE][QS2]கர்த்தர் எங்களை வனாந்திரத்தில் வழிநடத்தினார். [QE][QS]கர்த்தர் எங்களை வறண்ட பாறை நிலத்தின் வழியாக நடத்தினார். [QE][QS]கர்த்தர் எங்களை இருண்ட ஆபத்தான நாடுகள் வழியாக நடத்தினார், [QE][QS2]ஜனங்கள் எவரும் அங்கு இதற்குமுன்பு வாழவில்லை. [QE][QS2]ஜனங்கள் அவ்வழியாகப் பயணம் செய்ததுமில்லை, [QE][QS]ஆனால் கர்த்தர் எங்களை அந்த தேசத்தின் வழியாக நடத்தி வந்தார்; [QE][QS2]எனவே, இப்போது அவர் எங்கே இருக்கிறார்?’ ” என்று சொல்லவில்லை. [QE][PBR]
7. [QS]கர்த்தர் கூறுகிறார்: “நான் உங்களை நல்ல நாட்டிற்கு கொண்டுவந்தேன், [QE][QS2]பல நன்மைகள் நிறைந்த ஒரு நாட்டிற்கு கொண்டுவந்தேன். [QE][QS]நான் இதனைச் செய்தேன், எனவே நீ அங்கு வளர்ந்த பழங்கள் மற்றும் அறுவடைகளை உண்ணமுடியும், [QE][QS2]ஆனால் நீங்கள் என் நாட்டை ‘அசுத்தம்’ மட்டுமே செய்தீர்கள். [QE][QS]நான் அந்த நல்ல நாட்டை உங்களுக்குக் கொடுத்தேன், [QE][QS2]ஆனால் நீங்கள் அதனை தீய இடமாகச் செய்தீர்கள். [QE][PBR]
8. [QS]“ ‘கர்த்தர் எங்கே?’ [QE][QS2]என்று ஆசாரியர்கள் கேட்கவில்லை, [QE][QS]சட்டத்தை அறிந்தவர்கள் என்னை அறிய விரும்பவில்லை, [QE][QS2]இஸ்ரவேலின் ஜனங்களின் தலைவர்கள் எனக்கெதிராகத் திரும்பினார்கள்; [QE][QS]தீர்க்கதரிசிகள் பாகால் என்னும் பொய்த் தெய்வம் பெயரால் தீர்க்கதரிசனம் சொன்னார்கள். [QE][QS2]அவர்கள் பயனற்ற விக்கிரகங்களைத் தொழுதுகொண்டார்கள்.” [QE][PBR]
9. [QS]எனவே கர்த்தர் சொல்லுகிறதாவது: “இப்பொழுது நான் மீண்டும் உன்னைக் குற்றம்சாட்டுவேன், [QE][QS2]நான் உனது பேரப் பிள்ளைகளையும் குற்றம்சாட்டுவேன் என்று சொல்லுகிறார். [QE]
10. [QS]கடலைக் கடந்து கித்திமின் தீவுகளுக்குப் போ. [QE][QS2]கேதாருக்கு யாராவது ஒருவனை அனுப்பு, [QE][QS]மிகக் கவனமாகப் பார், [QE][QS2]எவராவது இதுபோல செய்திருக்கிறார்களா, என்று பார். [QE]
11. [QS]எந்த நாட்டவர்களாவது எப்போதாவது புதிய தெய்வங்களை தொழுதுகொள்ள [QE][QS2]தங்கள் பழைய தெய்வங்களைத் தொழுதுகொள்வதை நிறுத்தினார்களா? [QE][QS]அவர்களின் தெய்வங்கள், தெய்வங்களே அல்ல! [QE][QS]ஆனால், என் ஜனங்கள், தங்கள் மகிமைமிக்க தேவனை ஆராதிப்பதைவிட்டு, [QE][QS2]எதற்கும் பயனற்ற விக்கிரகங்களைத் தொழுதுகொள்ளத் தொடங்கினார்கள். [QE][PBR]
12. [QS]“வானங்களே, நடந்திருக்கும் இவற்றின் நிமித்தம் [QE][QS2]திகைப்பால் வியப்படைந்து பெரும் பயத்தால் நடுங்குங்கள்!” [QE][QS]இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது. [QE]
13. [QS]“எனது ஜனங்கள் இரு தீயச்செயல்களைச் செய்திருக்கின்றனர்; [QE][QS2]அவர்கள் என்னிடமிருந்து விலகினார்கள், [QE][QS2](நான் உயிருள்ள தண்ணீரின் ஊற்றாக இருக்கிறேன்). [QE][QS2]அவர்கள் தங்களுக்குரிய தண்ணீர்க் குழிகளைத் தோண்டினார்கள். [QE][QS2](அவர்கள் அந்நிய தெய்வங்களிடம் திரும்பினார்கள்). [QE][QS]ஆனால், அவர்களுடைய தண்ணீர்க்குழிகள் உடைந்தன, [QE][QS2]அத்தொட்டிகளில் தண்ணீர் தங்குவதில்லை. [QE][PBR]
14. [QS]“இஸ்ரவேல் ஜனங்கள் அடிமைகளாக மாறினார்களா? [QE][QS2]அடிமையாகப் பிறந்த மனிதனைப்போன்று இருந்தார்களா? [QE][QS2]இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து செல்வத்தை ஏன் ஜனங்கள் எடுத்துக்கொண்டனர்? [QE]
15. [QS]இஸ்ரவேலை நோக்கி இளஞ்சிங்கங்கள் (பகைவர்கள்) கெர்ச்சிக்கின்றன, [QE][QS2]சிங்கங்கள் முழங்குகின்றன, இஸ்ரவேல் தேசத்தை சிங்கங்கள் அழித்திருக்கின்றன, [QE][QS]இஸ்ரவேல் நகரங்கள் எரிந்திருக்கின்றன, [QE][QS2]அவர்களில் எவரும் மீதமில்லை. [QE]
16. [QS]நோப், தகபானேஸ் எனும் நகரங்களின் ஜனங்கள் [QE][QS2]உன் உச்சந்தலையை நொறுக்கினார்கள். [QE]
17. [QS]இந்த தொந்தரவு உனது சொந்தக் குற்றம்! [QE][QS2]உங்கள் தேவனாகிய கர்த்தர் உன்னை நல்வழியில் நடத்தினார்: [QE][QS2]ஆனால், அவரிடமிருந்து நீங்கள் விலகினீர்கள். [QE]
18. [QS]யூத ஜனங்களே, இதை நினையுங்கள்: [QE][QS2]எகிப்துக்குப் போக இது உதவுமா? [QE][QS2]நைல் நதியில் தண்ணீர் குடிக்க இது உதவுமா? இல்லை! [QE][QS2]அசீரியாவிற்குச் செல்ல இது உதவுமா? [QE][QS2]ஐபிராத்து ஆற்று தண்ணீரைக் குடிக்க இது உதவுமா? இல்லை! [QE]
19. [QS]நீங்கள் தீயவற்றைச் செய்தீர்கள், [QE][QS2]அத்தீயவை உங்களுக்குத் தண்டனையைமட்டும் கொண்டு வரும். துன்பம் உங்களுக்கு வரும். [QE][QS]அத்துன்பம் உனக்குப் பாடத்தைக் கற்பிக்கும். [QE][QS2]இதைப்பற்றி சிந்தி! [QE][QS]பிறகு உன் தேவனிடமிருந்து விலகுவது எவ்வளவு கெட்டது என்பதை நீ புரிந்துகொள்வாய்; [QE][QS2]என்னை மதிக்காததும் எனக்குப் பயப்படாததும் தவறு!” [QE][QS]இச்செய்தி எனது ஆண்டவராகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தரிடமிருந்து வந்தது. [QE]
20. [QS]“யூதாவே, நீண்ட காலத்திற்கு முன்பு உன் நுகத்தை எறிந்தாய், [QE][QS2]நீ கயிறுகளை அறுத்து எறிந்தாய், (அதனை உன்னைக் கட்டுப்படுத்த வைத்திருந்தேன்) ‘நான் உனக்கு சேவை செய்ய மாட்டேன்!’ என்று நீ சொன்னாய். [QE][QS]நீ வேசியைப்போன்று [QE][QS2]மலைகளின் மேலும் ஒவ்வொரு பச்சையான மரங்களின் கீழும் அலைந்தாய். [QE]
21. [QS]யூதாவே, நான் உன்னைச் சிறப்பான திராட்சையைப்போன்று நட்டேன். [QE][QS2]நீங்கள் அனைவரும் நல்ல விதைகளைப் போன்றிருந்தீர்கள், [QE][QS]நீங்கள் தீய பழத்தைக்கொடுக்கும் வேறுபட்ட திராட்சையாக எப்படி மாறினீர்கள்? [QE]
22. [QS]நீ உன்னை உவர்மண்ணால் கழுவினாலும், [QE][QS2]நீ மிகுதியான சவுக்காரத்தைப் பயன்படுத்தினாலும் நான் உனது குற்றத்தின் கறையைக் காணமுடியும்” [QE][QS]என்று தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார். [QE]
23. [QS]“யூதாவே, நீ என்னிடம், ‘நான் தீட்டாகவில்லை, [QE][QS2]நான் பாகால் விக்கிரகங்களை தொழுதுகொள்ளவில்லை’ என்று எப்படிக் கூறமுடியும்? [QE][QS]பள்ளத்தாக்குகளில் நீ செய்தவற்றைப்பற்றி எண்ணு, [QE][QS2]நீ இடத்திற்கு இடம் வேகமாக ஓடுகிற பெண் ஒட்டகத்தைப் போன்றவள். [QE]
24. [QS]நீ வனாந்தரத்திலே வாழ்கிற ஒரு கழுதையைப் போன்றவன். [QE][QS2]அது காமத்தின்போது மோப்பம் பிடிக்கக்கூடியது, [QE][QS2]அது ஆசையோடு இருக்கும்போது, அதன் போக்கை மாற்ற யாராலும் திருப்பிக் கொண்டு வரமுடியாது. [QE][QS]காமத்தின்போது ஒவ்வொரு கழுதையும் தான்விரும்பும் பெண் கழுதையை அடையும், [QE][QS2]அதனைக் கண்டுபிடிப்பது எளிது. [QE]
25. [QS]யூதாவே, விக்கிரகங்களின் பின்னால் ஓடுவதைவிடு! [QE][QS2]அந்த தெய்வங்களுக்காகத் தாகமாயிருப்பதை நிறுத்து. [QE][QS]ஆனால் நீ, ‘இதனால் பயனில்லை என்னால் அமைதியாக இருக்கமுடியாது, [QE][QS2]அந்த அந்நிய தெய்வங்களை நான் நேசிக்கிறேன், [QE][QS2]அவற்றை நான் தொழுதுகொள்ள விரும்புகிறேன்’ என்கிறாய். [QE][PBR]
26. [QS]“ஒரு திருடன் பிடிபட்டபோது, [QE][QS2]வெட்கப்படுகிறான், அதைப்போன்று, இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் வெட்கப்படுகிறார்கள். [QE][QS]அரசர்களும் தலைவர்களும் வெட்கப்படுகிறார்கள். [QE][QS2]ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும் வெட்கப்படுகிறார்கள். [QE]
27. [QS]அந்த ஜனங்கள் மரத்துண்டுகளோடு பேசுகிறார்கள்! [QE][QS2]அவர்கள், ‘நீ என் தந்தை’ என்கிறார்கள். [QE][QS]அந்த ஜனங்கள் பாறையோடு பேசுகிறார்கள். [QE][QS2]அந்த ஜனங்கள், ‘நீ எனக்குப் பிறப்பைக் கொடுத்தாய்’ என்றனர். [QE][QS]அவர்கள் அனைவரும் வெட்கப்படுவார்கள். [QE][QS]அந்த ஜனங்கள் என்னைப் பார்க்கமாட்டார்கள். [QE][QS2]அவர்கள் எனக்குத் தம் முதுகைக் காட்டினார்கள். [QE][QS]ஆனால் யூதாவின் ஜனங்கள் துன்பம் அடையும்போது, அவர்கள் என்னிடம் வந்து, [QE][QS2]‘எங்களைக் காப்பாற்றும்!’ என்பார்கள். [QE]
28. [QS]அந்த விக்கிரகங்கள் வந்து உன்னைக் காப்பாற்றட்டும்!நீங்களாகச் செய்த அந்த விக்கிரகங்கள் எங்கே? [QE][QS2]நீங்கள் துன்பப்படும்போது அந்த விக்கிரகங்கள் வந்து உங்களைக் காப்பாற்றுகிறதா என்று பார்க்கலாம்! [QE][QS]யூதாவே, உனது எண்ணற்ற நகரங்களைப் போன்றே நிறைய விக்கிரகங்களைப் பெற்றுள்ளாய்! [QE][PBR]
29. [QS]“ஏன் என்னோடு நீ வாதிடுகிறாய்? [QE][QS2]நீங்கள் அனைவரும் எனக்கு எதிராக உள்ளீர்கள்” [QE][QS]என்று கர்த்தர் சொல்லுகிறார். [QE]
30. [QS]“யூதாவின் ஜனங்களே, நான் உங்களைத் தண்டித்தேன். [QE][QS2]ஆனால் அது உதவவில்லை. [QE][QS]நீங்கள் தண்டிக்கப்பட்டபோது [QE][QS2]என்னிடம் திரும்பி வரவில்லை. [QE][QS]உங்களிடம் வந்த தீர்க்கதரிசிகளை வாளால் கொன்றீர்கள் நீங்கள் ஆபத்தான சிங்கத்தைப் போன்றவர்கள். [QE][QS]நீங்கள் தீர்க்கதரிசிகளைக் கொன்றீர்கள்.” [QE]
31. [QS]இத்தலைமுறையில் உள்ளவர்களே, கர்த்தருடைய செய்தியில் கவனம் செலுத்துங்கள்! [QE][PBR] [QS]“இஸ்ரவேல் ஜனங்களுக்கு நான் வனாந்தரத்தைப்போல் இருந்திருக்கிறேனா? [QE][QS2]நான் அவர்களுக்கு இருண்டதும் பயங்கரமானதுமான நிலமாக இருந்திருக்கிறேனா? [QE][QS]ஏன் என் ஜனங்கள், ‘நாங்கள் எங்கள் வழியில் போக சுதந்தரம் உள்ளவர்கள். [QE][QS2]கர்த்தாவே, நாங்கள் உம்மிடம் வரமாட்டோம்!’ என்றனர். [QE][QS]ஏன் அவற்றை அவர்கள் சொன்னார்கள்? [QE]
32. [QS]ஒரு இளம் பெண்ணால் தன் நகைகளை மறக்க முடியாது. [QE][QS2]ஒரு மணமகள் தனது ஆடைகளை மறக்க முடியாது. [QE][QS]ஆனால் என் ஜனங்கள் பலமுறை என்னை மறந்துவிட்டார்கள், அவைகள் எண்ண முடியாதவை. [QE][PBR]
33. [QS]“யூதாவே, உனக்கு நேசர்களை (பொய்த் தெய்வங்கள்) எவ்வாறு விரட்டிப்பிடிப்பது என்று தெரியும். [QE][QS2]நீங்கள் உண்மையில் தீமை செய்யக் கற்றிருக்கிறீர்கள். [QE]
34. [QS]உங்கள் கைகளில் இரத்தம் இருக்கிறது! [QE][QS2]இது ஏழைகளின் இரத்தம்; அப்பாவிகளின் இரத்தம். [QE][QS]உங்கள் வீட்டை உடைத்தவர்களை நீ பிடிக்கவில்லை! [QE][QS2]எவ்விதக் காரணமும் இல்லாமல் அவர்களைக் கொன்றாய்! [QE]
35. [QS]ஆனால் இன்றும் நீ, ‘நான் அப்பாவி. [QE][QS2]தேவனுக்கு என்மீது கோபமில்லை’ என்று சொல்லுகிறாய். [QE][QS]எனவே நானும் உன்னைப் ‘பொய்யன்’ எனக் குற்றம்சாட்டுவேன். [QE][QS2]ஏனென்றால் நீ, ‘நான் எவ்விதத் தப்பும் செய்யவில்லை’ என்று சொல்லுகிறாய். [QE]
36. [QS]உன் மனதை மாற்றிக்கொள்வது உனக்கு மிக எளிதாகலாம். [QE][QS2]அசீரியா உன்னை அதிருப்திப்படுத்தினான், எனவே அசீரியாவை விட்டு விலகினாய். [QE][QS]உதவிக்காக எகிப்திடம் போனாய். [QE][QS2]ஆனால் எகிப்தும் உன்னை அதிருப்திப்படுத்தும். [QE]
37. [QS]எனவே நீ இறுதியாக எகிப்தையும் விட்டுப் போய்விடுவாய். [QE][QS2]உன் முகத்தை வெட்கத்திற்குள் மறைத்துக்கொள்வாய். [QE][QS]நீ அந்த நாடுகளை நம்பினாய், [QE][QS2]ஆனால் கர்த்தர் அந்நாடுகளை வெறுத்தார், எனவே அவர்களால் உன் வெற்றிக்கு உதவ முடியாது. [QE][PBR]