1. {#1கர்த்தரும், விக்கிரகங்களும் } [PS]இஸ்ரவேல் குடும்பத்தாரே! உங்களைக் குறித்து கர்த்தர் சொன்னதை கவனித்து கேளுங்கள்! [PE][PBR]
2. [QS]“மற்ற நாடுகளில் உள்ள ஜனங்களைப் போன்று வாழாதீர்கள்! [QE][QS2]வானத்தில் தோன்றும் சிறப்பான அடையாளங்களைக் கண்டு பயப்படாதீர்கள்! [QE][QS]அயல் நாடுகளில் உள்ளவர்கள் தாம் வானத்தில் காண்கின்றவற்றைப்பற்றி பயப்படுகிறார்கள். [QE][QS2]ஆனால் அவற்றைப்பற்றி நீங்கள் பயப்பட வேண்டாம்! [QE]
3. [QS]மற்ற ஜனங்களின் பழக்கவழக்கங்கள் பயனற்றவை. [QE][QS]ஏனெனில், அவர்களது விக்கிரகங்கள் காட்டிலுள்ள மரக்கட்டைகளைத் தவிர, வேறில்லை. [QE][QS]அவர்களின் விக்கிரகங்கள் வேலையாளால் உளியால் செதுக்கப்பட்டவை. [QE]
4. [QS]அவர்கள் தமது விக்கிரகங்களைப் பொன்னாலும் வெள்ளியாலும் அழகுபடுத்துகின்றனர். [QE][QS]அவர்கள் ஆணிகளையும், சுத்திகளையும் பயன்படுத்தி, விக்கிரகங்கள் விழாமல் செய்கிறார்கள். [QE][QS2]எனவே, அவை விழுவதில்லை. [QE]
5. [QS]அயல்நாடுகளில் உள்ள விக்கிரகங்கள் வெள்ளரிக்காய் வயலிலே, [QE][QS2]குருவிகளை விரட்டுவதற்காக வைக்கப்பட்ட கொல்லை பொம்மையைப் போன்றுள்ளன. [QE][QS]அவர்களின் விக்கிரகங்களால் பேசமுடியாது. [QE][QS2]அவர்களின் விக்கிரகங்களால் நடக்கமுடியாது. [QE][QS2]ஜனங்கள் அந்த விக்கிரகங்களைத் தூக்கிச் செல்லவேண்டும். [QE][QS]அவற்றுக்கு நீங்கள் பயப்படவேண்டாம். [QE][QS2]அவைகளால் உங்களைக் காயப்படுத்த முடியாது. [QE][QS2]அவை உங்களுக்கு உதவியும் செய்யாது” [QE][PS]என்று கர்த்தர் சொல்லுகிறார். [PE][PBR]
6. [QS]கர்த்தாவே, உம்மைப் போன்று எவரும் இல்லை! [QE][QS2]நீர் பெரியவர்! [QE][QS2]உமது நாமம் மகிமையும் பெருமையும் வல்லமையும் வாய்ந்தது! [QE]
7. [QS]தேவனே! எல்லோரும் உமக்கு மரியாதைச் செலுத்தவேண்டும். [QE][QS]அனைத்து தேசத்தாருக்கும் நீரே அரசன். [QE][QS2]அவர்களின் மரியாதைக்கு நீர் பாத்திரர். [QE][QS]அந்த நாடுகளுக்கிடையில் பல ஞானமுள்ளவர்கள் இருக்கிறார்கள். [QE][QS2]ஆனால், அவர்கள் எவரும் உம்மைப் போன்று ஞானமுள்ளவர்கள் இல்லை. [QE]
8. [QS]வேறு நாடுகளில் உள்ள, அனைத்து ஜனங்களும், அறியாமையும், மூடத்தனமும் கொண்டவர்கள். [QE][QS]அவர்களின் போதனைகள் பயனற்றவை. [QE][QS]அவர்களின் தெய்வங்கள் மரச் சிலைகளே. [QE]
9. [QS]அவர்கள் தர்ஷீசிலிருந்து கொண்டுவந்த வெள்ளியையும் [QE][QS2]ஊப்பாசிலிருந்து கொண்டு வந்த பொன்னையும் வைத்து அந்தச் சிலைகளைச் செய்திருக்கின்றனர். [QE][QS]அந்த விக்கிரகங்கள், தச்சன்களாலும், தட்டான்களாலும் செய்யப்பட்டவை. [QE][QS]அவர்கள் அந்த விக்கிரகங்களுக்கு, இளநீலமும், ஊதா ஆடையும் அணிவிக்கிறார்கள். [QE][QS2]“ஞானமுள்ளவர்கள்” அந்த “தெய்வங்களைச்” செய்கின்றனர். [QE]
10. [QS]ஆனால் கர்த்தர்தான் உண்மையான ஒரே தேவன். [QE][QS2]உண்மையில் ஜீவனுள்ள ஒரே தேவன் அவர்தான்! [QE][QS2]அவர் என்றென்றும் ஆளுகின்ற அரசன்! [QE][QS]தேவன் கோபங்கொண்டால் பூமி அதிர்கிறது, [QE][QS2]தேசங்களிலுள்ள ஜனங்களால் அவரது கோபத்தை தாங்க முடியாது. [QE][PBR]
11. [QS]“அந்த ஜனங்களிடம் இந்தச் செய்தியைக் கூறுங்கள், [QE][QS2]‘அந்தப் பொய்த் தெய்வங்கள் பரலோகத்தையும் பூமியையும் படைக்கவில்லை. [QE][QS2]அந்தப் பொய்த் தெய்வங்கள் அழிக்கப்படுவார்கள். [QE][QS2]வானம் மற்றும் பூமியிலிருந்து மறைவார்கள்’ ” என்று கர்த்தர் சொல்லுகிறார். [QE][PBR]
12. [QS]தேவன் ஒருவரே தமது வல்லமையால் பூமியைச் செய்தார். [QE][QS2]தேவன் தனது ஞானத்தைப் பயன்படுத்தி பூமியை உண்டாக்கினார். [QE][QS]தேவன் தமது ஞானத்தினால் [QE][QS2]பூமியின்மேல் வானத்தை விரியச் செய்தார். [QE]
13. [QS]சத்தமான இடிக்கும் தேவனே காரணமாகிறார். [QE][QS2]வானத்திலிருந்து பெருவெள்ளம் பொழியவும் அவரே காரணமாகிறார். [QE][QS]அவர் பூமியின் அனைத்து இடங்களிலிருந்தும் வானத்திற்கு மேகம் எழும்பும்படி செய்கிறார். [QE][QS2]அவர் மின்னலுடன் மழையை அனுப்புகிறார். [QE][QS2]அவர் தமது பண்டகச் சாலையிலிருந்து காற்றை அனுப்புகிறார். [QE]
14. [QS]ஜனங்கள் மூடர்களாக இருக்கிறார்கள்! [QE][QS2]உலோகச் சிற்பிகள் தாங்கள் செய்த விக்கிரகங்களைக் கொண்டு அவமானத்துக்குள்ளாகின்றனர். [QE][QS]அந்தச் சிலைகள் வெறும் பொய் என்று அவர்கள் அறிவார்கள். [QE][QS2]அந்த விக்கிரகங்களுக்கு உயிர் இல்லை. [QE]
15. [QS]அந்த விக்கிரகங்கள் பயனற்றவை. [QE][QS2]அவை பொய்யானவை. வஞ்சிக்கும்படியாக செய்யப்பட்டவை. [QE][QS]நியாயத்தீர்ப்புக் காலத்தில், [QE][QS2]அவ்விக்கிரகங்கள் அழிக்கப்படும். [QE]
16. [QS]ஆனால் யாக்கோபின் தேவன், அந்த விக்கிரகங்களைப் போன்றவரல்ல. [QE][QS2]தேவன் எல்லாவற்றையும் படைத்தார், தேவன் தமது சொந்த ஜனங்கள் என்று இஸ்ரவேல் ஜனங்களை தேர்ந்தெடுத்தார். [QE][QS]“சர்வ வல்லமையுள்ள கர்த்தர்” என்பது தேவனுடைய நாமம். [QE]
17. {#1அழிவு வந்துகொண்டிருக்கிறது } [QS]உனக்குச் சொந்தமானவற்றையெல்லாம் சேர்த்துக்கொள். [QE][QS]புறப்படத் தயாராகு. யூதாவின் ஜனங்களாகிய நீங்கள் பட்டணத்தில் பிடிபடுவீர்கள். [QE][QS2]இதனை பகைவர்கள் சுற்றி வளைத்துக் கொள்வார்கள். [QE]
18. [QS]“இந்த முறை, யூதாவின் ஜனங்களை நாட்டைவிட்டு வெளியே எறிவேன். [QE][QS2]நான் அவர்களுக்கு வலியும், துன்பமும் கொண்டு வருவேன். [QE][QS2]நான் இதனைச் செய்வதன் மூலம் அவர்கள் பாடம் கற்றுக்கொள்வார்கள்” என்று கர்த்தர் சொல்லுகிறார். [QE][PBR]
19. [QS]ஓ! நான் (எரேமியா) மோசமாகக் காயப்பட்டேன், [QE][QS2]நான் புண்பட்டேன், என்னால் குணமாக முடியவில்லை [QE][QS]எனக்குள் நான் இவ்வாறு சொல்லிக்கொண்டேன். [QE][QS]“இதுதான் என்னுடைய நோய். [QE][QS2]இதன் மூலம் நான் துன்பப்படவேண்டும்.” [QE]
20. [QS]எனது கூடாரம் அழிக்கப்பட்டது. [QE][QS2]கூடாரக் கயிறுகள் எல்லாம் அறுபட்டன. [QE][QS]எனது பிள்ளைகள் என்னை விட்டுவிட்டனர். [QE][QS2]அவர்கள் போய்விட்டார்கள். [QE][QS]எனது கூடாரத்தை அமைப்பதற்கு எவனும் இருக்கவில்லை, [QE][QS2]எனக்கான இருப்பிடத்தை உருவாக்கிட யாரும் இல்லை. [QE]
21. [QS]மேய்ப்பர்கள் (தலைவர்கள்) மூடர்கள், [QE][QS2]அவர்கள் கர்த்தரைத் தேட முயற்சி செய்வதில்லை. [QE][QS]அவர்களுக்கு ஞானம் இல்லை. [QE][QS2]எனவே அவரது மந்தைகள் (ஜனங்கள்) சிதறிக் காணாமல் போகின்றன. [QE]
22. [QS]உரத்த சத்தத்தைக் கேளுங்கள்! [QE][QS2]இந்த உரத்த சத்தம் வடக்கிலிருந்து வருகிறது. [QE][QS]அது யூதாவின் நகரங்களை அழிக்கும். [QE][QS2]யூதா ஒரு வெறுமையான வனாந்தரமாகும், [QE][QS2]அது ஓநாய்களுக்கான வீடாகும். [QE][PBR]
23. [QS]கர்த்தாவே! ஜனங்கள் உண்மையில் தங்களது வாழ்வைக் கட்டுப்படுத்தவோ, [QE][QS2]அல்லது தங்கள் எதிர்காலத்தை திட்டமிடவோ முடியாது, என்பதை நான் அறிவேன். [QE][QS]வாழ்வதற்கான சரியான வழியை ஜனங்கள் உண்மையில் அறிந்துகொள்ளவில்லை. [QE]
24. [QS]கர்த்தாவே! எங்களைத் திருத்தும், [QE][QS2]நீதியாய் இரும். [QE][QS]கோபத்தில் எங்களைத் தண்டிக்காமல்இரும். [QE][QS2]இல்லையேல் நீர் எங்களை அழிக்கக்கூடும். [QE]
25. [QS]நீர் கோபத்தோடு இருந்தால், [QE][QS2]பின் அந்நிய நாடுகளைத் தண்டியும். [QE][QS]அவர்கள் உம்மை அறிவதில்லை, மதிப்பதுமில்லை. [QE][QS2]அந்த ஜனங்கள் உம்மைத் தொழுதுகொள்வதுமில்லை. [QE][QS]அந்த நாடுகள் யாக்கோபின் குடும்பத்தை அழித்தது, [QE][QS2]அவர்கள் இஸ்ரவேலை முழுமையாக அழித்தனர், [QE][QS2]அவர்கள் இஸ்ரவேலரின் தாய் நாட்டையும் அழித்தனர். [QE]