1. {#1கர்த்தர் தம் ஜனங்களை நியாயந்தீர்க்கிறார் } [QS]ஏதோமிலிருந்து வந்துகொண்டிருக்கிற இவன் யார்? [QE][QS2]அவன் போஸ்றாவிலிருந்து வருகிறான். [QE][QS]அவனது ஆடைகள் கட்டிச் சிவப்பாக உள்ளது. [QE][QS2]அவனது ஆடைகள் மகத்துவமாய் உள்ளது. [QE][QS]அவன் பெரும் வல்லமையோடு உயரமாக நடந்துகொண்டிருக்கிறான். [QE][QS2]அவன், “உன்னைக் காக்கும் வல்லமை என்னிடம் உள்ளது. நான் உண்மையைப் பேசுகிறேன்” என்கிறான். [QE][PBR]
2. [QS]“உனது ஆடைகள் ஏன் சிவப்பாக உள்ளன? [QE][QS2]அவை, திராட்சையை ரசமாக்குகிற இடத்தில் நடந்து வந்தவனைப் போன்றுள்ளன.” [QE][PBR]
3. [QS]அவன் பதில் கூறுகிறான், “நான் திராட்சைரச ஆலை வழியாக நடந்தேன். [QE][QS2]எவரும் எனக்கு உதவவில்லை. [QE][QS]நான் கோபமாக இருக்கிறேன். நான் திராட்சைகளுக்குமேல் நடந்தேன். [QE][QS2]அதன் சாறு என் ஆடைகள் மேல் தெளித்தது. எனவே, எனது ஆடைகள் அழுக்காக உள்ளன. [QE]
4. [QS]ஜனங்களைத் தண்டிக்க நான் ஒரு காலத்தைத் தேர்ந்தெடுக்கிறேன். [QE][QS2]இப்போது, எனது ஜனங்களைக் காப்பாற்றவும், பாதுகாக்கவும் உரிய நேரம் வந்துள்ளது. [QE]
5. [QS]நான் சுற்றிலும் பார்த்தேன். ஆனால் எவரும் எனக்கு உதவுவதைக் காணவில்லை. [QE][QS2]எவரும் எனக்கு உதவவில்லை என்று நான் ஆச்சரியப்பட்டேன். [QE][QS]எனவே, என் ஜனங்களைக் காப்பாற்ற [QE][QS2]என் சொந்த வல்லமையைப் பயன்படுத்தினேன், என் கோபம் என்னைத் தாங்கினது. [QE]
6. [QS]நான் கோபமாக இருக்கும்போது, நான் ஜனங்களை மிதித்தேன். [QE][QS2]என் கோபம் அதிகமானபடியால் அவர்களைத் தண்டித்தேன். [QE][QS2]நான் அவர்களது இரத்தத்தைத் தரையில் ஊற்றினேன்.” [QE]
7. {#1கர்த்தர் அவரது ஜனங்களிடம் தயவோடு இருக்கிறார் } [QS]கர்த்தர் தயவாக இருக்கிறார் என்று நினைவுகொள்வேன். [QE][QS2]கர்த்தரைத் துதிக்க நான் நினைவுகொள்வேன். [QE][QS]கர்த்தர் இஸ்ரவேல் குடும்பத்திற்குப் பல நல்லவற்றைக் கொடுத்தார். [QE][QS2]கர்த்தர் எங்களோடு மிகத் தயவோடு இருந்திருக்கிறார். கர்த்தர் எங்களிடம் இரக்கம் காட்டினார். [QE]
8. [QS]கர்த்தர், “இவர்கள் என்னுடைய ஜனங்கள். [QE][QS2]இவர்கள் என்னுடைய மெய்யான பிள்ளைகள்” என்றார். [QE][QS2]எனவே கர்த்தர் அந்த ஜனங்களைக் காப்பாற்றினார். [QE]
9. [QS]ஜனங்களுக்கு நிறைய துன்பங்கள் இருந்தன. [QE][QS2]ஆனால் கர்த்தர் அவர்களுக்கு எதிராக இல்லை. [QE][QS]கர்த்தர் ஜனங்களை நேசித்தார். அவர்களுக்காக வருத்தப்பட்டார். [QE][QS2]எனவே கர்த்தர் அவர்களைக் காப்பாற்றினார். [QE][QS]அவர் தமது சிறப்பான தூதனை அவர்களைக் காப்பாற்ற அனுப்பினார். [QE][QS2]கர்த்தர் என்றென்றும் அவர்களிடம் அக்கறைகொண்டார். [QE][QS2]கர்த்தர் அந்த ஜனங்களுக்காக அக்கறைகொள்வதை நிறுத்த விரும்பவில்லை. [QE]
10. [QS]ஆனால், அந்த ஜனங்கள் கர்த்தருக்கு எதிராகத் திரும்பினார்கள். [QE][QS2]ஜனங்கள் அவரது பரிசுத்த ஆவியை வருந்தும்படி செய்தனர். [QE][QS]எனவே, கர்த்தர் அவர்களின் பகைவரானார். [QE][QS2]கர்த்தர் அவர்களுக்கு எதிராகப் போராடினார். [QE][PBR]
11. [QS]ஆனால், கர்த்தர் நீண்ட காலத்திற்கு முன்பு என்ன நடந்தது என்பதை இப்போதும் நினைவுகொள்கிறார். [QE][QS2]அவர் மோசேயையும் அவரது ஜனங்களையும் நினைவுகொள்கிறார். [QE][QS]கடல்வழியாக ஜனங்களைக் கொண்டுவந்தவர் கர்த்தர் ஒருவரே. [QE][QS2]கர்த்தர் தம் மந்தைகளை (ஜனங்கள்) வழிநடத்த மேய்ப்பர்களைப் (தீர்க்கதரிசிகளை) பயன்படுத்தினார். [QE][QS2]ஆனால் இப்போது, மோசேயில் தன் ஆவியை வைத்தவர் எங்கே இருக்கிறார்? [QE]
12. [QS]கர்த்தர் மோசேயை அவரது வலது கையால் வழி நடத்தினார். [QE][QS2]கர்த்தர் மோசேயை வழிநடத்த அவரது அற்புத வல்லமையைப் பயன்படுத்தினார். [QE][QS]கர்த்தர் தண்ணீரைப் பிரித்தார். [QE][QS2]அதனால் ஜனங்கள் கடல் வழியாக நடக்கமுடிந்தது. [QE][QS2]கர்த்தர் இப்பெருஞ் செயலைக் செய்ததின் மூலமாக தனது நாமத்தை நித்திய புகழுக்குரியதாக்கினார். [QE]
13. [QS]கர்த்தர் ஜனங்களை ஆழமான கடல் வழியாக நடத்தினார். [QE][QS2]ஜனங்கள் கீழே விழாமல் பாலைவனத்தின் வழியாக ஒரு குதிரை செல்வதுபோல் சென்றனர். [QE]
14. [QS]ஒரு பசு வயலில் நடந்து செல்லும்போது அது கீழே விழாது. [QE][QS2]அதேபோன்று ஜனங்கள் கடல் வழியாகப் போகும்போது கீழே விழவில்லை. [QE][QS]கர்த்தருடைய ஆவி ஜனங்களை ஒரு ஓய்விடத்திற்கு அழைத்துச் சென்றது. [QE][QS2]ஜனங்கள் முழுநேரமும் பாதுகாப்பாக இருந்தனர். [QE][QS]கர்த்தாவே, அதுதான் நீர் உமது ஜனங்களை நடத்திய வழி. [QE][QS2]நீர் ஜனங்களை வழிநடத்தினீர். நீர் உமது நாமத்தை அற்புதமாக்கினீர்! [QE]
15. {#1அவரது ஜனங்களுக்கு உதவ தேவனிடம் ஒரு ஜெபம் } [QS]கர்த்தாவே! வானத்திலிருந்து கீழே பாரும்! [QE][QS2]இப்பொழுது, நிகழ்ந்துகொண்டிருப்பவற்றைப் பாரும்! [QE][QS]பரலோகத்திலுள்ள உமது பெருமையும். பரிசுத்தமும் கொண்ட வீட்டிலிருந்து என்னைப் பாரும்! [QE][QS2]என் மீதிருந்த உமது பலமான அன்பு எங்கே? [QE][QS]எனக்கான உமது இரக்கம் எங்கே? [QE][QS2]என்னிடமிருந்து உமது கருணையை ஏன் மறைத்தீர்? [QE]
16. [QS]பாரும். நீர் எமது தந்தை! [QE][QS2]எங்களை ஆபிரகாம் அறியமாட்டார். [QE][QS2]இஸ்ரவேல் (யாக்கோபு) எங்களை அடையாளம் காணவில்லை. [QE][QS]கர்த்தாவே, நீர் எமது தந்தை. [QE][QS2]எங்களை எப்போதும் காப்பாற்றுகிறவர் நீர் ஒருவரே. [QE]
17. [QS]கர்த்தாவே, எங்களை நீர் ஏன் உம்மிடமிருந்து தள்ளுகிறீர். [QE][QS2]உம்மைப் பின்தொடர்வதை நீர் ஏன் கடினமாக்கினீர்? [QE][QS]கர்த்தாவே எங்களிடம் திரும்பி வாரும். [QE][QS2]நாங்கள் உமது ஊழியர்கள். [QE][QS]எங்களிடம் வந்து எங்களைக் காப்பாற்றும். [QE][QS2]எங்கள் குடும்பங்களும் உம்மைச் சார்ந்தது. [QE]
18. [QS]உமது பரிசுத்தமான ஜனங்கள் அவர்களின் நாடுகளில் கொஞ்சம் காலமே வாழ்ந்தார்கள். [QE][QS2]பிறகு எங்கள் பகைவர்கள் உமது பரிசுத்தமான ஆலயத்தை மிதித்தனர். [QE]
19. [QS]சிலர் உம்மைப் பின்பற்றவில்லை. [QE][QS2]அந்த ஜனங்கள் உமது நாமத்தால் அழைக்கப்படவில்லை. [QE][QS2]நாங்களும் அந்த ஜனங்களைப்போல் இருந்தோம். [QE][PBR]