1. {#1தேவன் வந்துகொண்டிருக்கிறார் } [QS]“எருசலேமே! என் வெளிச்சமே! எழு! [QE][QS2]உனது வெளிச்சம் (தேவன்) வந்துகொண்டிருக்கிறது. [QE][QS2]கர்த்தருடைய மகிமை உன் மேல் ஒளிவீசும். [QE]
2. [QS]இப்போது பூமியை இருள் மூடியிருக்கிறது. [QE][QS2]ஜனங்கள் இருளில் உள்ளனர். [QE][QS]ஆனால் கர்த்தர் உன்மேல் ஒளிவீசுகிறார். [QE][QS2]அவரது மகிமை உன்மேல் தோற்றம் தரும். [QE]
3. [QS]தேசங்கள், உனது வெளிச்சத்திடம் (தேவன்) வரும். [QE][QS2]அரசர்கள், உனது பிரகாசமான வெளிச்சத்திடம் வருவார்கள். [QE]
4. [QS]உன்னைச் சுற்றிப் பார்! [QE][QS2]ஜனங்கள் ஒன்றுகூடி உன்னிடம் வந்துகொண்டிருக்கிறார்கள். [QE][QS]அவர்கள் உனது மகன்கள், வெகு தொலைவிலிருந்து வருகிறார்கள். [QE][QS2]உனது மகள்களும் அவர்களோடு வருகிறார்கள். [QE][PBR]
5. [QS]“இது எதிர்காலத்தில் நடைபெறும். [QE][QS2]அப்போது, நீ உனது ஜனங்களைக் காண்பாய். உனது முகம் மகிழ்ச்சியுடன் பிரகாசிக்கும். [QE][QS]முதலில் நீ பயப்படுவாய்! [QE][QS2]ஆனால் பிறகு நீ கிளர்ச்சியடைவாய். [QE][QS]கடல்களைத் தாண்டி வரும் ஜனங்களின் கூட்டம் உன் முன் இருக்கும். [QE][QS2]பலநாட்டு ஜனங்களும் உன்னிடம் வருவார்கள். [QE]
6. [QS]மீதியான் ஏப்பாத் நாடுகளில் உள்ள ஒட்டகக் கூட்டங்கள் உனது நாட்டைக் கடக்கும். [QE][QS2]சேபாவிலிருந்து நீள வரிசையாக ஒட்டகங்கள் வரும். [QE][QS]அவர்கள் பொன்னையும் நறுமணப் பொருட்களையும் கொண்டுவருவார்கள். [QE][QS2]ஜனங்கள் கர்த்தரைத் துதித்துப் பாடுவார்கள். [QE]
7. [QS]கேதாரிலுள்ள அனைத்து ஆடுகளையும் சேகரித்து ஜனங்கள் உன்னிடம் தருவார்கள். [QE][QS2]நெபாயோத்திலிருந்து அவர்கள் ஆட்டுக் கடாக்களைக் கொண்டுவருவார்கள். [QE][QS]எனது பலிபீடத்தில் அந்த மிருகங்களை நீங்கள் பலியிடுவீர்கள். [QE][QS2]நான் அவற்றை ஏற்றுக்கொள்வேன். [QE][QS]எனது அற்புதமான ஆலயத்தை [QE][QS2]மேலும் நான் அழகுபடுத்துவேன். [QE]
8. [QS]ஜனங்களைப் பாருங்கள்! [QE][QS2]மேகங்கள் விரைவாக வானத்தைக் கடப்பதுபோன்று அவர்கள் உன்னிடம் விரைந்து வருகின்றனர். [QE][QS2]புறாக்கள் தம் கூடுகளுக்குப் பறந்து போவதுபோல் போகின்றனர். [QE]
9. [QS]எனக்காகத் தொலைதூர நாடுகள் எல்லாம் காத்திருக்கின்றன. [QE][QS2]பெரிய சரக்குக் கப்பல்களும் பயணத்திற்குத் தயாராக உள்ளன. [QE][QS]அக்கப்பல்கள் தொலை தூர நாடுகளிலிருந்து, உனது பிள்ளைகளைக் கொண்டுவரத் தயாராக உள்ளன. [QE][QS2]அவர்கள் பொன்னையும், வெள்ளியையும் தங்களோடு எடுத்து வந்து [QE][QS]உங்கள் தேவனாகிய கர்த்தரும், இஸ்ரவேலின் பரிசுத்தருமானவரை மகிமைப்படுத்துவார்கள். [QE][QS2]கர்த்தர் உனக்காக அற்புதச் செயல்களைச் செய்கிறார். [QE]
10. [QS]மற்ற நாடுகளில் உள்ள பிள்ளைகள், உனது சுவர்களை மீண்டும் கட்டுவார்கள். [QE][QS2]அவர்களின் அரசர்கள் உனக்குச் சேவைசெய்வார்கள். [QE][PBR] [QS]“நான் கோபமாக இருந்தபோது, நான் உன்னைக் காயப்படுத்தினேன். [QE][QS2]ஆனால் இப்போது, நான் உன்னிடம் தயவாயிருக்க விரும்புகிறேன். [QE][QS2]எனவே உனக்கு நான் ஆறுதல் செய்வேன். [QE]
11. [QS]உனது கதவுகள் எப்போதும் திறந்திருக்கும். [QE][QS2]அவை, இரவு அல்லது பகல் எவ்வேளையிலும் மூடப்படாதவை. [QE][QS2]நாடுகளும் அரசர்களும் தங்கள் செல்வங்களை உனக்குக் கொண்டுவருவார்கள். [QE]
12. [QS]உனக்குச் சேவைசெய்யாத [QE][QS2]எந்த நாடும், இராஜ்யமும் அழிக்கப்படும். [QE]
13. [QS]லீபனோனில் உள்ள மிகச்சிறந்த பொருட்கள் உனக்குக் கொடுக்கப்படும். [QE][QS2]ஜனங்கள் உனக்குத் தேவதாரு, பாய்மரம், புன்னை போன்ற மரங்களைக் கொண்டுவருவார்கள். [QE][QS]இம்மரங்கள் எனது பரிசுத்தமான இடத்தைக் கட்டவும் மேலும் அழகுபடுத்தவும் பயன்படும். [QE][QS2]இந்த இடம் சிங்காசனத்திற்கு முன்பு உள்ள சிறு நாற்காலிபோல் இருக்கும். [QE][QS2]நான் இதற்கு பெருமதிப்பு கொடுப்பேன். [QE]
14. [QS]கடந்த காலத்தில், ஜனங்கள் உன்னைக் காயப்படுத்தினார்கள், [QE][QS2]அந்த ஜனங்கள் இப்பொழுது உன் முன்னால் பணிவார்கள். [QE][QS]கடந்த காலத்தில், ஜனங்கள் உன்னை வெறுத்தனர். [QE][QS2]அந்த ஜனங்கள் உன் காலடியில் பணிவார்கள். [QE][QS]அவர்கள் உன்னை ‘கர்த்தருடைய நகரம்’ [QE][QS2]‘இஸ்ரவேலுடைய பரிசுத்தமானவரின் சீயோன்’ என்றும் அழைப்பார்கள். [QE][PBR]
15. [QS]“நீ மீண்டும் தனியாகக் கைவிடப்படமாட்டாய். [QE][QS2]நீ மீண்டும் வெறுக்கப்படமாட்டாய். [QE][QS]நீ மீண்டும் வெறுமையாக்கப்படமாட்டாய். [QE][QS2]நான் என்றென்றும் உன்னை பெரியவனாக்குவேன். [QE][QS2]நீ என்றென்றும் மகிழ்ச்சியோடு இருப்பாய். [QE]
16. [QS]உனக்குத் தேவையான அனைத்தையும் நாடுகள் தரும். [QE][QS2]இது குழந்தை தன் தாயிடமிருந்து பால் குடிப்பதுபோன்று இருக்கும். [QE][QS]ஆனால் நீ அரசர்களிடமிருந்து செல்வத்தைக் குடிப்பாய். [QE][QS2]பிறகு நீ, அது நான் என்றும் உன்னைக் காப்பாற்றும் கர்த்தர் என்றும் அறிந்துகொள்வாய். [QE][QS2]யாக்கோபின் பெரிய தேவன் உன்னைக் காப்பாற்றுகிறவர், என்பதை நீ அறிந்துகொள்வாய். [QE][PBR]
17. [QS]“இப்போது உன்னிடம் வெண்கலம் உள்ளது. [QE][QS2]நான் உனக்குப் பொன்னைக் கொண்டுவருவேன். [QE][QS]இப்போது, உன்னிடம் இரும்பு உள்ளது. [QE][QS2]நான் உனக்கு வெள்ளியைக் கொண்டுவருவேன். [QE][QS]நான் உனது மரத்தை வெண்கலமாக மாற்றுவேன். [QE][QS2]நான் உனது கற்களை இரும்பாக மாற்றுவேன். [QE][QS]நான் உனது தண்டனைகளைச் சமாதானம் ஆக்குவேன். [QE][QS2]ஜனங்கள் இப்போது, உன்னைப் புண்படுத்துகிறார்கள். ஆனால், ஜனங்கள் உனக்காக நல்லவற்றைச் செய்வார்கள். [QE]
18. [QS]உனது நாட்டில் வன்முறைபற்றிய செய்திகள் இனி இராது. [QE][QS2]உனது நாட்டை ஜனங்கள் மீண்டும் தாக்கி உனக்குள்ளதைப் பறிக்கமாட்டார்கள். [QE][QS]நீ உனது சுவர்களுக்கு ‘இரட்சிப்பு’ என்றும் [QE][QS2]உனது வாசல்களுக்கு ‘துதி’ என்றும் பெரிடுவாய். [QE][PBR]
19. [QS]“பகலில் இனி சூரியன் உனக்கு வெளிச்சத்தைத் தராது. [QE][QS2]இரவில் சந்திரன் இனி உனக்கு வெளிச்சத்தைத் தராது. [QE][QS]ஏனென்றால், என்றென்றும் கர்த்தரே உனக்கு வெளிச்சமாய் இருப்பார். [QE][QS2]உனது தேவனே உனக்கு மகிமையுமாயிருப்பார். [QE]
20. [QS]உனது சூரியன் மீண்டும் அஸ்தமிக்காது. [QE][QS2]உனது சந்திரன் மீண்டும் மறையாது. [QE][QS]ஏனென்றால், கர்த்தரே என்றென்றும் உன் வெளிச்சமாய் இருப்பார்! [QE][QS2]உனது துக்கத்திற்குரிய காலம் முடிந்துவிட்டது. [QE][PBR]
21. [QS]“உனது ஜனங்கள் அனைவரும் நல்லவர்கள் ஆவார்கள். [QE][QS2]அந்த ஜனங்கள் பூமியை என்றென்றும் பெறுவார்கள். [QE][QS]நான் அந்த ஜனங்களைப் படைத்தேன். [QE][QS2]அவர்கள் அற்புதமான செடிகள். நான் அவர்களை எனது கைகளினால் படைத்தேன். [QE]
22. [QS]மிகச் சிறிய குடும்பம்கூட மிகப்பெரிய கோத்திரமாக வளரும். [QE][QS2]சிறிய குடும்பங்கள் வலிமை மிகுந்த நாடாகும். [QE][QS]காலம் சரியாகும் போது நான் சீக்கிரமாய் வருவேன். [QE][QS2]நான் இவற்றையெல்லாம் நடக்கும்படிச் செய்வேன்.” [QE]