1. {இஸ்ரவேலர்கள் தேவனைப் பின்பற்றவில்லை} [PS] நீதிமான்கள் அழிந்துவிட்டனர். [QBR2] எவரும் கவனிக்கவில்லை. [QBR] நல்லவர்கள் ஒன்று கூடியிருக்கின்றனர். [QBR2] ஆனால் ஏனென்று புரிந்துகொள்வதில்லை. கஷ்டங்கள் வருகிறதென்றும், [QBR2] அதிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக அவர்கள் ஒன்று கூடியிருக்கிறார்களென்பதையும் அறிந்துகொள்ளவில்லை. [QBR]
2. ஆனால் சமாதானம் வரும். [QBR2] ஜனங்கள் தம் சொந்தப் படுக்கையில் ஓய்வுகொள்வார்கள். [QBR2] தேவன் விரும்பும் வழியில் அவர்கள் வாழ்வார்கள். [QBR]
3. “சூனியக்காரியின் பிள்ளைகளே, இங்கே வாருங்கள்! [QBR2] உங்கள் தந்தை விபச்சாரம் செய்தான். [QBR2] உங்கள் தாயும் விபச்சாரத்திற்காகத் தன் உடலை விற்றவள். இங்கே வாருங்கள்! [QBR]
4. நீங்கள் கெட்டவர்கள். [QBR2] பொய்யான பிள்ளைகளாகிய நீங்கள் என்னை பரிகாசம் செய்கிறீர்கள். [QBR] நீங்கள் எனக்கு எதிராக வாயைத் திறக்கிறீர்கள். [QBR2] நீங்கள் என்னைப் பார்த்து நாக்கை நீட்டுகிறீர்கள். [QBR]
5. ஒவ்வொரு பச்சையான மரத்தினடியிலும் நீங்கள் பொய்த் தெய்வங்களைத் தொழுதுகொள்ள விரும்புகிறீர்கள். [QBR2] ஒவ்வொரு ஓடை அருகிலும் பிள்ளைகளைக் கொல்கிறீர்கள். [QBR2] அவர்களைப் பாறைகளில் பலி கொடுக்கிறீர்கள். [QBR]
6. ஆறுகளில் உள்ள வழு வழுப்பான கற்களை நீங்கள் தொழுதுகொள்ள விரும்புகிறீர்கள். [QBR2] அவற்றைத் தொழுதுகொள்ள அவற்றின் மீது திராட்சைரசத்தை ஊற்றுகிறீர்கள். [QBR] அவற்றிற்கு நீங்கள் பலி கொடுக்கிறீர்கள். [QBR2] ஆனால், அந்தப் பாறைகளே நீ பெற்றுக்கொள்ளும் எல்லாம் ஆகும். [QBR] இவை என்னை மகிழ்ச்சிப்படுத்தும் என்று நினைக்கிறாயா? [QBR2] இல்லை. இவை என்னை மகிழ்ச்சிப்படுத்தாது. [QBR]
7. ஒவ்வொரு மலையிலும் குன்றுகளிலும் உனது படுக்கையை நீ அமைக்கிறாய். [QBR2] அந்த இடங்களுக்கு நீ ஏறிப்போய் பலிகளைத் தருகிறாய். [QBR]
8. பிறகு நீ அந்தப் படுக்கையைப் பெற்று எனக்கு எதிராக, அந்தத் தெய்வங்களை நேசித்து பாவம் செய்கிறாய். [QBR2] அந்தத் தெய்வங்களை நேசிக்கிறாய். [QBR] அவற்றின் நிர்வாண உடல்களைப் பார்த்து நீ சந்தோஷப்படுகிறாய். [QBR2] நீ என்னோடு இருந்தாய். [QBR] ஆனால் என்னைவிட்டு அவற்றோடு இருக்கிறாய். [QBR2] என்னை நினைவுப்படுத்துகிறவற்றை நீ மறைத்துவிடுகிறாய். [QBR] கதவுகளுக்கும், நிலைகளுக்கும் பின்னால் அவற்றை மறைக்கிறாய். [QBR2] பிறகு, நீ அந்தப் பொய்த் தெய்வங்களிடம் சென்று அவற்றோடு ஒப்பந்தம் செய்துகொள்கிறாய். [QBR]
9. நீ உனது தைலத்தையும், வாசனைப் பொருட்களையும் பயன்படுத்தி மோளேகுக்காக அழகுபடுத்துகிறாய். [QBR2] தொலைதூர நாடுகளுக்கு உனது தூதுவர்களை அனுப்பினாய். [QBR2] உன் செய்கை உன்னை மரண இடமான பாதாளம்வரை கொண்டுபோய்விடும். [QBR]
10. இவற்றைச் செய்ய நீங்கள் கடுமையாக உழைத்திருக்கவேண்டும். [QBR2] ஆனால், நீ எப்பொழுதும் சோர்வடைந்ததில்லை. [QBR] நீ புதிய பலத்தைக் கண்டுகொண்டாய். [QBR2] ஏனென்றால், நீ அவற்றில் மகிழ்ச்சியடைந்தாய். [QBR]
11. என்னை நீ நினைக்கவில்லை. [QBR2] என்னை நீ கண்டுகொள்ளவும் இல்லை. [QBR] எனவே யாரைப் பற்றி நீ கவலைப்பட்டாய்? [QBR2] நீ யாருக்கு அஞ்சிப் பயப்பட்டாய்? [QBR2] நீ ஏன் பொய் சொன்னாய்? [QBR] கவனி! நான் நீண்ட காலமாக அமைதியாக இருக்கிறேன். [QBR2] நீ என்னை மகிமைப்படுத்தவில்லை. [QBR]
12. உனது நல்ல வேலைகளைப்பற்றி நான் சொல்ல முடிந்தது. [QBR2] நீ செய்த மதத் தொடர்பானவற்றையும் சொல்ல முடிந்தது. [QBR2] ஆனால், அவை பயனற்றவை. [QBR]
13. உனக்கு உதவி தேவைப்படும்போது, [QBR2] அந்தப் பொய்த் தெய்வங்களிடம் கதறுகிறாய். அவை உன்னைச் சுற்றியுள்ளன. [QBR2] அவை உனக்கு உதவட்டும். [QBR] ஆனால், நான் உனக்குக் கூறுகிறேன். அவற்றைக் காற்று அடித்துப் போகும். [QBR2] உன்னிடமிருந்து இவற்றையெல்லாம் சிறு காற்று கொண்டுபோகும். [QBR] ஆனால், என்னைச் சார்ந்திருக்கிற ஒருவன் [QBR2] நான் வாக்குப்பண்ணின பூமியைப் பெறுவான். [QBR2] அப்படிப்பட்டவன் எனது பரிசுத்தமான மலையைப் பெறுவான்.”
14. {கர்த்தர் அவரது ஜனங்களைக் காப்பாற்றுவார்} [PS] சாலைகளைச் சுத்தம் செய்க! [QBR] சாலைகளைச் சுத்தம் செய்க! [QBR2] எனது ஜனங்களுக்கு வழி தெளிவாக இருக்கும்படி தடைகளை நீக்குங்கள்!
15. தேவன் உயர்ந்தவர்! [QBR2] உன்னதமானவர், தேவன் என்றென்றும் ஜீவிக்கிறார். [QBR2] தேவனுடைய நாமம் பரிசுத்தமானது. [QBR] தேவன் கூறுகிறார், “நான் உயர்ந்த பரிசுத்தமான இடத்தில் வாழ்கிறேன். [QBR2] ஆனால், அதோடு துக்கமும் பணிவும்கொண்ட ஜனங்களோடும் வாழ்கிறேன். [QBR] நான் உள்ளத்தில் பணிவுள்ள ஜனங்களுக்குப் புதிய வாழ்க்கையைக் கொடுப்பேன். [QBR2] நான் தங்கள் இருதயங்களில் துக்கமுள்ள ஜனங்களுக்குப் புதிய வாழ்க்கையைக் கொடுப்பேன். [QBR]
16. நான் என்றென்றும் தொடர்ந்து போரிடமாட்டேன். [QBR2] நான் எப்பொழுதும் கோபமாய் இருக்கமாட்டேன். [QBR] நான் தொடர்ந்து கோபமாக இருந்தால், [QBR2] எனக்கு முன்பாக மனிதனின் ஆவியும், நான் அவர்களுக்குத் கொடுத்த ஆத்துமாவும் சாகும். [QBR]
17. இந்த ஜனங்கள் கெட்டவற்றைச் செய்தனர். அது எனக்குக் கோபமூட்டியது. [QBR2] எனவே, நான் இஸ்ரவேலைத் தண்டித்தேன். [QBR] நான் அவனிடமிருந்து திரும்பினேன். ஏனென்றால் நான் கோபமாக இருந்தேன். [QBR2] இஸ்ரவேல் என்னைவிட்டு விலகியது. [QBR2] இஸ்ரவேல் முரட்டாட்டம் செய்து, தனக்கு இஷ்டமானதை செய்தது. [QBR]
18. இஸ்ரவேல் எங்கு சென்றாலும் நான் பார்த்தேன். எனவே, நான் அவனைக் குணப்படுத்துவேன். [QBR2] (மன்னிப்பேன்) நான் அவனை நடத்தி அவனுக்கு ஆறுதல் கூறுவேன். [QBR] அவன் சமாதானம் அடையுமாறு வார்த்தைகளைச் சொல்வேன். [QBR2] பிறகு, அவனும் அவனது ஜனங்களும் துக்கத்தை உணரமாட்டார்கள். [QBR]
19. நான் அவர்களுக்குச் ‘சமாதானம்’ எனும் புதிய வார்த்தையைக் கற்றுத் தருவேன். [QBR2] என்னருகிலே உள்ள ஜனங்களுக்குச் சமாதானத்தைத் தருவேன். [QBR] தொலை தூரத்திலுள்ள ஜனங்களுக்கும் சமாதானத்தைத் தருவேன். [QBR2] நான் அந்த ஜனங்களைக் குணப்படுத்துவேன் (மன்னிப்பேன்).” [QBR2] கர்த்தர் தாமே இவற்றைச் சொன்னார்.
20. ஆனால் தீய ஜனங்கள் கொந்தளிப்பான கடலைப் போன்றவர்கள். [QBR2] அவர்களால் அமைதியாகவும் சமாதானமாகவும் இருக்கமுடியாது. [QBR2] அவர்கள் கோபத்தோடு மண்ணைக் கலக்கும் கடலைப்போன்று உள்ளனர். [QBR]
21. “தீய ஜனங்களுக்கு சமாதானம் இல்லை” [QBR2] என்று என் தேவன் கூறுகிறார். [PE]