1. {#1இஸ்ரவேலர்கள் தேவனைப் பின்பற்றவில்லை } [QS]நீதிமான்கள் அழிந்துவிட்டனர். [QE][QS2]எவரும் கவனிக்கவில்லை. [QE][QS]நல்லவர்கள் ஒன்று கூடியிருக்கின்றனர். [QE][QS2]ஆனால் ஏனென்று புரிந்துகொள்வதில்லை. [QE][PBR] [QS]கஷ்டங்கள் வருகிறதென்றும், [QE][QS2]அதிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக அவர்கள் ஒன்று கூடியிருக்கிறார்களென்பதையும் அறிந்துகொள்ளவில்லை. [QE]
2. [QS]ஆனால் சமாதானம் வரும். [QE][QS2]ஜனங்கள் தம் சொந்தப் படுக்கையில் ஓய்வுகொள்வார்கள். [QE][QS2]தேவன் விரும்பும் வழியில் அவர்கள் வாழ்வார்கள். [QE]
3. [QS]“சூனியக்காரியின் பிள்ளைகளே, இங்கே வாருங்கள்! [QE][QS2]உங்கள் தந்தை விபச்சாரம் செய்தான். [QE][QS2]உங்கள் தாயும் விபச்சாரத்திற்காகத் தன் உடலை விற்றவள். இங்கே வாருங்கள்! [QE]
4. [QS]நீங்கள் கெட்டவர்கள். [QE][QS2]பொய்யான பிள்ளைகளாகிய நீங்கள் என்னை பரிகாசம் செய்கிறீர்கள். [QE][QS]நீங்கள் எனக்கு எதிராக வாயைத் திறக்கிறீர்கள். [QE][QS2]நீங்கள் என்னைப் பார்த்து நாக்கை நீட்டுகிறீர்கள். [QE]
5. [QS]ஒவ்வொரு பச்சையான மரத்தினடியிலும் நீங்கள் பொய்த் தெய்வங்களைத் தொழுதுகொள்ள விரும்புகிறீர்கள். [QE][QS2]ஒவ்வொரு ஓடை அருகிலும் பிள்ளைகளைக் கொல்கிறீர்கள். [QE][QS2]அவர்களைப் பாறைகளில் பலி கொடுக்கிறீர்கள். [QE]
6. [QS]ஆறுகளில் உள்ள வழு வழுப்பான கற்களை நீங்கள் தொழுதுகொள்ள விரும்புகிறீர்கள். [QE][QS2]அவற்றைத் தொழுதுகொள்ள அவற்றின் மீது திராட்சைரசத்தை ஊற்றுகிறீர்கள். [QE][QS]அவற்றிற்கு நீங்கள் பலி கொடுக்கிறீர்கள். [QE][QS2]ஆனால், அந்தப் பாறைகளே நீ பெற்றுக்கொள்ளும் எல்லாம் ஆகும். [QE][QS]இவை என்னை மகிழ்ச்சிப்படுத்தும் என்று நினைக்கிறாயா? [QE][QS2]இல்லை. இவை என்னை மகிழ்ச்சிப்படுத்தாது. [QE]
7. [QS]ஒவ்வொரு மலையிலும் குன்றுகளிலும் உனது படுக்கையை நீ அமைக்கிறாய். [QE][QS2]அந்த இடங்களுக்கு நீ ஏறிப்போய் பலிகளைத் தருகிறாய். [QE]
8. [QS]பிறகு நீ அந்தப் படுக்கையைப் பெற்று எனக்கு எதிராக, அந்தத் தெய்வங்களை நேசித்து பாவம் செய்கிறாய். [QE][QS2]அந்தத் தெய்வங்களை நேசிக்கிறாய். [QE][QS]அவற்றின் நிர்வாண உடல்களைப் பார்த்து நீ சந்தோஷப்படுகிறாய். [QE][QS2]நீ என்னோடு இருந்தாய். [QE][QS]ஆனால் என்னைவிட்டு அவற்றோடு இருக்கிறாய். [QE][QS2]என்னை நினைவுப்படுத்துகிறவற்றை நீ மறைத்துவிடுகிறாய். [QE][QS]கதவுகளுக்கும், நிலைகளுக்கும் பின்னால் அவற்றை மறைக்கிறாய். [QE][QS2]பிறகு, நீ அந்தப் பொய்த் தெய்வங்களிடம் சென்று அவற்றோடு ஒப்பந்தம் செய்துகொள்கிறாய். [QE]
9. [QS]நீ உனது தைலத்தையும், வாசனைப் பொருட்களையும் பயன்படுத்தி மோளேகுக்காக அழகுபடுத்துகிறாய். [QE][QS2]தொலைதூர நாடுகளுக்கு உனது தூதுவர்களை அனுப்பினாய். [QE][QS2]உன் செய்கை உன்னை மரண இடமான பாதாளம்வரை கொண்டுபோய்விடும். [QE]
10. [QS]இவற்றைச் செய்ய நீங்கள் கடுமையாக உழைத்திருக்கவேண்டும். [QE][QS2]ஆனால், நீ எப்பொழுதும் சோர்வடைந்ததில்லை. [QE][QS]நீ புதிய பலத்தைக் கண்டுகொண்டாய். [QE][QS2]ஏனென்றால், நீ அவற்றில் மகிழ்ச்சியடைந்தாய். [QE]
11. [QS]என்னை நீ நினைக்கவில்லை. [QE][QS2]என்னை நீ கண்டுகொள்ளவும் இல்லை. [QE][QS]எனவே யாரைப் பற்றி நீ கவலைப்பட்டாய்? [QE][QS2]நீ யாருக்கு அஞ்சிப் பயப்பட்டாய்? [QE][QS2]நீ ஏன் பொய் சொன்னாய்? [QE][QS]கவனி! நான் நீண்ட காலமாக அமைதியாக இருக்கிறேன். [QE][QS2]நீ என்னை மகிமைப்படுத்தவில்லை. [QE]
12. [QS]உனது நல்ல வேலைகளைப்பற்றி நான் சொல்ல முடிந்தது. [QE][QS2]நீ செய்த மதத் தொடர்பானவற்றையும் சொல்ல முடிந்தது. [QE][QS2]ஆனால், அவை பயனற்றவை. [QE]
13. [QS]உனக்கு உதவி தேவைப்படும்போது, [QE][QS2]அந்தப் பொய்த் தெய்வங்களிடம் கதறுகிறாய். அவை உன்னைச் சுற்றியுள்ளன. [QE][QS2]அவை உனக்கு உதவட்டும். [QE][QS]ஆனால், நான் உனக்குக் கூறுகிறேன். அவற்றைக் காற்று அடித்துப் போகும். [QE][QS2]உன்னிடமிருந்து இவற்றையெல்லாம் சிறு காற்று கொண்டுபோகும். [QE][QS]ஆனால், என்னைச் சார்ந்திருக்கிற ஒருவன் [QE][QS2]நான் வாக்குப்பண்ணின பூமியைப் பெறுவான். [QE][QS2]அப்படிப்பட்டவன் எனது பரிசுத்தமான மலையைப் பெறுவான்.” [QE]
14. {#1கர்த்தர் அவரது ஜனங்களைக் காப்பாற்றுவார் } [QS]சாலைகளைச் சுத்தம் செய்க! [QE][QS]சாலைகளைச் சுத்தம் செய்க! [QE][QS2]எனது ஜனங்களுக்கு வழி தெளிவாக இருக்கும்படி தடைகளை நீக்குங்கள்! [QE][PBR]
15. [QS]தேவன் உயர்ந்தவர்! [QE][QS2]உன்னதமானவர், தேவன் என்றென்றும் ஜீவிக்கிறார். [QE][QS2]தேவனுடைய நாமம் பரிசுத்தமானது. [QE][QS]தேவன் கூறுகிறார், “நான் உயர்ந்த பரிசுத்தமான இடத்தில் வாழ்கிறேன். [QE][QS2]ஆனால், அதோடு துக்கமும் பணிவும்கொண்ட ஜனங்களோடும் வாழ்கிறேன். [QE][QS]நான் உள்ளத்தில் பணிவுள்ள ஜனங்களுக்குப் புதிய வாழ்க்கையைக் கொடுப்பேன். [QE][QS2]நான் தங்கள் இருதயங்களில் துக்கமுள்ள ஜனங்களுக்குப் புதிய வாழ்க்கையைக் கொடுப்பேன். [QE]
16. [QS]நான் என்றென்றும் தொடர்ந்து போரிடமாட்டேன். [QE][QS2]நான் எப்பொழுதும் கோபமாய் இருக்கமாட்டேன். [QE][QS]நான் தொடர்ந்து கோபமாக இருந்தால், [QE][QS2]எனக்கு முன்பாக மனிதனின் ஆவியும், நான் அவர்களுக்குத் கொடுத்த ஆத்துமாவும் சாகும். [QE]
17. [QS]இந்த ஜனங்கள் கெட்டவற்றைச் செய்தனர். அது எனக்குக் கோபமூட்டியது. [QE][QS2]எனவே, நான் இஸ்ரவேலைத் தண்டித்தேன். [QE][QS]நான் அவனிடமிருந்து திரும்பினேன். ஏனென்றால் நான் கோபமாக இருந்தேன். [QE][QS2]இஸ்ரவேல் என்னைவிட்டு விலகியது. [QE][QS2]இஸ்ரவேல் முரட்டாட்டம் செய்து, தனக்கு இஷ்டமானதை செய்தது. [QE]
18. [QS]இஸ்ரவேல் எங்கு சென்றாலும் நான் பார்த்தேன். எனவே, நான் அவனைக் குணப்படுத்துவேன். [QE][QS2](மன்னிப்பேன்) நான் அவனை நடத்தி அவனுக்கு ஆறுதல் கூறுவேன். [QE][QS]அவன் சமாதானம் அடையுமாறு வார்த்தைகளைச் சொல்வேன். [QE][QS2]பிறகு, அவனும் அவனது ஜனங்களும் துக்கத்தை உணரமாட்டார்கள். [QE]
19. [QS]நான் அவர்களுக்குச் ‘சமாதானம்’ எனும் புதிய வார்த்தையைக் கற்றுத் தருவேன். [QE][QS2]என்னருகிலே உள்ள ஜனங்களுக்குச் சமாதானத்தைத் தருவேன். [QE][QS]தொலை தூரத்திலுள்ள ஜனங்களுக்கும் சமாதானத்தைத் தருவேன். [QE][QS2]நான் அந்த ஜனங்களைக் குணப்படுத்துவேன் (மன்னிப்பேன்).” [QE][QS2]கர்த்தர் தாமே இவற்றைச் சொன்னார். [QE][PBR]
20. [QS]ஆனால் தீய ஜனங்கள் கொந்தளிப்பான கடலைப் போன்றவர்கள். [QE][QS2]அவர்களால் அமைதியாகவும் சமாதானமாகவும் இருக்கமுடியாது. [QE][QS2]அவர்கள் கோபத்தோடு மண்ணைக் கலக்கும் கடலைப்போன்று உள்ளனர். [QE]
21. [QS]“தீய ஜனங்களுக்கு சமாதானம் இல்லை” [QE][QS2]என்று என் தேவன் கூறுகிறார். [QE]