1. {திருப்தியளிக்கும் உணவை தேவன் கொடுக்கிறார்} [PS] “தாகமாயுள்ள ஜனங்களே! [QBR2] தண்ணீரைக் குடிக்க வாருங்கள்! [QBR] உங்களிடம் பணம் இல்லாவிட்டால் வருந்தவேண்டாம். [QBR2] வாருங்கள் உங்கள் வயிறு நிறையும்வரை குடியுங்கள், உண்ணுங்கள்! [QBR2] பாலுக்கும் திராட்சைரசத்திற்கும் விலையில்லை. [QBR]
2. உண்மையான உணவாக இல்லாதவற்றுக்காக ஏன் நீ உன் பணத்தை வீணடிக்கிறாய்? [QBR2] உன்னை உண்மையாகவே திருப்தி செய்யாத வேலைகளை ஏன் நீ செய்கிறாய்? [QBR] என்னை மிக நெருக்கமாக கவனி! நீ மிக நல்ல உணவை உண்பாய். [QBR2] உன் ஆத்துமாவைத் திருப்திப்படுத்தும் உணவை உண்டு மகிழலாம். [QBR]
3. நான் சொல்லுகிறவற்றை நெருக்கமாகக் கவனி. [QBR2] என்னைக் கவனி. அதனால் உன் ஆத்துமா வாழும். [QBR] என்னிடம் வா. நான் என்றென்றும் தொடரும் ஒரு உடன்படிக்கையை உன்னோடு செய்வேன். [QBR2] நான் தாவீதோடு செய்த உடன்படிக்கையைப் போன்று அது இருக்கும். [QBR2] நான் அவனை நேசிப்பேன், என்றென்றும் அவனுக்கு வேண்டியவனாக இருப்பேன் என்று தாவீதுக்கு வாக்குறுதிச் செய்தேன். [QBR2] நீ அந்த உடன்படிக்கையை நம்பலாம். [QBR]
4. அனைத்து நாடுகளுக்கும் எனது வல்லமையின் சாட்சியாக நான் தாவீதைப் படைத்தேன். [QBR2] பல நாடுகளுக்கு அவன் ஒரு தலைவனாகவும், தளபதியாகவும் வருவான் என்று நான் வாக்களித்தேன்.”
5. உனக்குத் தெரியாத நாடுகள் பல உள்ளன. [QBR2] ஆனால் அந்த நாடுகளை அழைப்பாய். [QBR] அந்த நாடுகள் உன்னை அறியாது. [QBR2] ஆனால் அவை உன்னிடம் ஓடிவரும். [QBR] இது நடக்கும், ஏனென்றால், உனது தேவனாகிய கர்த்தர் இதை விரும்புகிறார். [QBR2] இது நடக்கும், ஏனென்றால், இஸ்ரவேலின் பரிசுத்தர் உன்னை மகிமைப்படுத்துகிறார். [QBR]
6. இது மிக தாமதமாவதற்கு முன்னால் நீ கர்த்தரைத் தேட வேண்டும். [QBR2] அவர் அருகில் இருக்கும்போதே, இப்பொழுது நீ அவரை அழைக்கவேண்டும். [QBR]
7. கெட்டவர்கள் கெட்ட வழியில் செல்வதை நிறுத்தவேண்டும். [QBR2] அவர்கள் தீயவற்றை நினைப்பதை நிறுத்தவேண்டும். [QBR] அவர்கள் மீண்டும் கர்த்தரிடம் வரவேண்டும். [QBR2] பிறகு கர்த்தர் அவர்களுக்கு ஆறுதல் தருவார். [QBR] அந்த ஜனங்கள் கர்த்தரிடம் வருவார்கள் ஏனென்றால், [QBR2] நமது தேவன் அவர்களை மன்னிக்கிறார்.
8. {ஜனங்கள் தேவனைப் புரிந்துகொள்ள முடியாது} [PS] கர்த்தர் கூறுகிறார், “உங்களது சிந்தனைகள் எனது சிந்தனைகளைப் போன்று இல்லை. [QBR2] உனது வழிகள் எனது வழிகளைப் போன்றில்லை. [QBR]
9. வானங்கள் பூமியைவிட உயரமானவை. [QBR2] அதேபோன்று, என் வழிகள் உன் வழிகளைவிட உயர்வானவை. [QBR2] என் சிந்தனைகள் உன் சிந்தனைகளைவிட உயர்வானவை” கர்த்தர் தாமே இவற்றைக் கூறினார்.
10. “வானத்திலிருந்து மழையும் பனியும் பெய்கிறது. [QBR2] அவை தரையைத் தொட்டுத் குளிரச் செய்யும்வரை, திரும்ப வானத்துக்குப் போகாது. [QBR] பிறகு தரையில் தாவரங்கள் முளைத்து வளரும். [QBR2] இத்தாவரங்கள் விவசாயிகளுக்கு விதைகளை உருவாக்கும். [QBR2] ஜனங்கள் இந்தத் தானியங்களைப் பயன்படுத்தி தமக்கு உண்ண அப்பத்தைத் தயார் செய்கிறார்கள். [QBR]
11. இதே வழியில், எனது வார்த்தைகள் என் வாயை விட்டு வரும். [QBR2] அவை எதையும் செய்யாமல் வெறுமனே என்னிடம் திரும்பாது. [QBR] எனது வார்த்தைகள் எதைச் செய்யவேண்டுமென்று நான் அனுப்புகிறேனோ அவற்றைச் செய்யும்! [QBR2] எனது வார்த்தைகள் எதைச் செய்ய நான் அனுப்பினேனோ அதை வெற்றிகரமாகச் செய்யும்!
12. “எனது வார்த்தைகள் [QBR2] மகிழ்ச்சியோடு வெளியே சென்று சமாதானத்தைக் கொண்டுவரும். [QBR] மலைகளும் குன்றுகளும் மகிழ்ச்சியோடு ஆடத்தொடங்கும். [QBR2] வயலிலுள்ள மரங்கள் எல்லாம் தம் கைகளைத் தட்டும். [QBR]
13. முட்செடிப் புதருக்குப் பதிலாக அவ்விடங்களில் பருத்த தேவதாரு மரங்கள் வளரும். [QBR2] களைகள் இருந்த இடத்தில் பசுமையான மரங்கள் வளரும். [QBR] இவை கர்த்தருடைய புகழைப் பரப்பும். [QBR2] கர்த்தர் வல்லமையுடையவர் என்பதற்கு இவை சான்றாகும். இந்தச் சான்றுகள் ஒருபோதும் அழியாது.” [PE]