1. {தேவன் தனது சிறப்புக்குரிய தாசனை அழைக்கிறார்} [PS] தொலை தூர இடங்களில் வாழும் ஜனங்களே, என்னைக் கவனியுங்கள்! [QBR2] பூமியில் வாழும் ஜனங்களே, கவனியுங்கள்! [QBR] நான் பிறப்பதற்கு முன்னரே கர்த்தர் தமக்குப் பணிபுரிய அழைத்தார். [QBR2] நான் என் தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே, கர்த்தர் என் பெயரைச் சொல்லி அழைத்தார். [QBR]
2. நான் அவருக்காகப் பேசும்படி கர்த்தர் என்னைப் பயன்படுத்துகிறார். [QBR] அவர் என்னைக் கூர்மையான வாளைப்போன்று பயன்படுத்துகிறார். [QBR2] அவர் என்னைக் காப்பாற்றுகிறார். தமது கையில் மறைக்கிறார். [QBR] கர்த்தர் என்னைக் கூர்மையான அம்பைப் போன்று பயன்படுத்துகிறார். [QBR2] கர்த்தர் என்னை அம்பு பையில் மறைத்து வைக்கிறார்.
3. கர்த்தர் என்னிடம் சொன்னார், “இஸ்ரவேலே, நீ எனது தாசன். [QBR2] நான் உனக்கு அற்புதங்களைச் செய்வேன்.”
4. நான் சொன்னேன், “நான் வீணாகக் கஷ்டப்பட்டு வேலை செய்கிறேன். [QBR2] நான் முழுவதுமாய் என்னை வெளிப்படுத்துகிறேன். ஆனால் பயனற்றவற்றையே செய்தேன். [QBR] நான் எனது வல்லமை முழுவதையும் பயன்படுத்துகிறேன். [QBR2] ஆனால் உண்மையில் நான் எதையும் செய்யவில்லை. [QBR] எனவே, என்னுடன் எதைச் செய்வது என கர்த்தர் முடிவு செய்ய வேண்டும். [QBR2] தேவன் எனது விருதினை முடிவுசெய்ய வேண்டும். [QBR]
5. என்னைக் கர்த்தர் என் தாயின் கர்ப்பத்தில் உருவாக்கினார். [QBR2] எனவே, நான் அவரது தாசனாக இருக்க முடியும். [QBR2] நான் யாக்கோபையும் இஸ்ரவேலையும் அவரிடம் திரும்ப அழைத்துச் செல்லமுடியும். [QBR] கர்த்தர் என்னைக் கௌரவிப்பார். [QBR2] நான் எனது தேவனிடமிருந்து எனது பலத்தைப் பெறுவேன்,” கர்த்தர் என்னிடம் சொன்னார்,
6. “நீ எனக்கு மிக முக்கியமான தாசன். [QBR2] யாக்கோபின் கோத்திரத்தை உயர்த்தி மீதியான இஸ்ரவேலை மீண்டும் நிலைநிறுத்துவாய். [QBR] ஆனால், இந்த வேலை போதாது உனக்கு வேறு வேலை இருக்கிறது. அது இதைவிட மிகவும் முக்கியமானது. [QBR2] அனைத்து தேசங்களுக்காக நான் ஒரு ஒளியை ஏற்படுத்துவேன். [QBR2] பூமியில் உள்ள அனைத்து ஜனங்களையும் காக்க நீ எனது வழியில் இருப்பாய்.”
7. கர்த்தர், இஸ்ரவேலின் பரிசுத்தர். [QBR2] இஸ்ரவேலைப் பாதுகாக்கிறவர் சொல்கிறார், “எனது தாசன் பணிவானவன். [QBR] அவன் ஆள்வோர்களுக்குச் சேவை செய்கிறான் ஆனால், ஜனங்கள் அவனை வெறுக்கிறார்கள். [QBR2] ஆனால், அரசர்கள் அவனைப் பார்ப்பார்கள். [QBR] அவனைப் பெருமைப்படுத்த எழுந்து நிற்பார்கள். [QBR2] பெருந்தலைவர்கள் அவனுக்குப் பணிவார்கள்” [PS] இது நடைபெறும். ஏனென்றால் கர்த்தர், இஸ்ரவேலின் பரிசுத்தர் இதனை விரும்புகிறார். கர்த்தர் நம்பத்தக்கவர். உன்னைத் தேர்ந்தெடுத்தவர் அவரே.
8. {இரட்சிப்பின் நாள்} [PS] கர்த்தர் கூறுகிறார், “எனது தயவைக் காட்டும் சிறப்பான நேரம் இருக்கிறது. [QBR2] அப்போது, நான் உனது ஜெபங்களுக்குப் பதில் தருவேன். [QBR] நான் உன்னைக் காப்பாற்றும்போது அது சிறப்பான நாளாக இருக்கும். [QBR2] அந்த நேரத்தில் நான் உன்னைக் காப்பாற்றுவேன். [QBR] நான் உன்னைப் பாதுகாப்பேன். [QBR2] எனக்கு ஜனங்களோடு ஒரு உடன்படிக்கை இருந்தது என்பதற்கு நீங்களே சாட்சியாக இருப்பீர்கள். [QBR] இப்போது நாடு அழிக்கப்படுகிறது. [QBR2] ஆனால் தேசத்தை அதற்கு உரியவர்களிடம் நீ திருப்பிக் கொடுப்பாய். [QBR]
9. நீங்கள் சிறைக் கைதிகளிடம் கூறுவீர்கள், [QBR2] ‘சிறையை விட்டு வெளியே வாருங்கள்’ [QBR] இருளில் இருக்கிற ஜனங்களுக்கு நீங்கள் சொல்வீர்கள், [QBR2] ‘இருளை விட்டு வெளியே வாருங்கள்’ [QBR] ஜனங்கள் பயணம் செய்யும்போது சாப்பிடுவார்கள். [QBR2] காலியான குன்றுகளிலும் அவர்கள் உணவு வைத்திருப்பார்கள். [QBR]
10. ஜனங்கள் பசியுடன் இருக்கமாட்டார்கள். அவர்கள் தாகத்தோடு இருக்கமாட்டார்கள். [QBR2] வெப்பமான சூரியனும் காற்றும் அவர்களைப் பாதிக்காது. [QBR] ஏனென்றால் தேவன் ஆறுதல் செய்கிறார்; தேவன் அவர்களை வழிநடத்துகிறார். [QBR2] அவர் அவர்களை நீரூற்றுகளின் அருகில் வழி நடத்திச்செல்வார். [QBR]
11. நான் எனது ஜனங்களுக்காகச் சாலை அமைப்பேன். [QBR2] மலைகள் தரைமட்டமாக்கப்படும். [QBR2] தாழ்வான சாலைகள் உயர்த்தப்படும்.
12. “பாருங்கள்! வெகு தொலைவான இடங்களிலிருந்தும் ஜனங்கள் என்னிடம் வந்து கொண்டிருக்கிறார்கள். [QBR2] வடக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் ஜனங்கள் என்னிடம் வந்து கொண்டிருக்கிறார்கள். [QBR2] எகிப்தின் அஸ்வனிலிருந்து ஜனங்கள் என்னிடம் வந்துக்கொண்டிருக்கிறார்கள்.”
13. வானங்களும் பூமியும் மகிழ்ச்சியோடு இருக்கட்டும். [QBR2] மலைகள் மகிழ்ச்சியோடு சத்தமிடட்டும். [QBR] ஏனென்றால், கர்த்தர் தமது ஜனங்களை ஆறுதல் படுத்துகிறார். [QBR2] கர்த்தர் தமது ஏழை ஜனங்களிடம் நல்லவராக இருக்கிறார்.
14. ஆனால், இப்பொழுது சீயோன் கூறுகிறாள், “கர்த்தர் என்னைக் கைவிட்டுவிட்டார். [QBR2] எனது ஆண்டவர் என்னை மறந்துவிட்டார்.”
15. ஆனால் நான் சொல்கிறேன், “ஒரு பெண்ணால் தன் குழந்தையை மறக்கமுடியுமா? முடியாது! [QBR2] ஒரு பெண்ணால் தன் கர்ப்பத்திலிருந்து வந்த குழந்தையை மறக்கமுடியுமா?இல்லை! ஒரு பெண்ணால் தன் பிள்ளையை மறக்கமுடியாது! [QBR] ஆனால் அவள் மறந்தாலும் [QBR2] நான் (கர்த்தர்) உன்னை மறக்கமுடியாது. [QBR]
16. பார், நான் உனது பெயரை என் உள்ளங்கையில் செதுக்கி இருக்கிறேன். [QBR2] நான் எப்பொழுதும் உன்னைப்பற்றி நினைத்துக்கொண்டிருக்கிறேன்! [QBR]
17. உனது பிள்ளைகள் உன்னிடம் திரும்பி வருவார்கள். [QBR2] ஜனங்கள் உன்னைத் தோற்கடித்தார்கள். ஆனால் அந்த ஜனங்கள் உன்னைத் தனியாகவிடுவார்கள்! [QBR]
18. மேலே பார்! உன்னைச் சுற்றிலும் பார்! [QBR2] உனது பிள்ளைகள் அனைவரும் ஒன்றாகக் கூடி உன்னிடம் வருகிறார்கள்.” [QBR] “என் உயிர்மேல் வாக்குறுதியாக இதனைச் சொல்கிறேன்” என்கிறார் கர்த்தர். [QBR2] உங்கள் பிள்ளைகள் நகைகளைப் போன்றவர்கள். அவர்களைக் கழுத்தைச் சுற்றி அணிந்துகொள். [QBR2] உங்கள் பிள்ளைகளை மணமகள் அணியத்தக்க கழுத்துப் பதக்கம் போன்று அணிந்துகொள்.
19. “இப்பொழுது நீங்கள் தோற்கடிக்கப்படுகிறீர்கள்; அழிக்கப்படுகிறீர்கள், [QBR2] உங்கள் தேசம் பயனற்றது. [QBR] ஆனால் கொஞ்சக் காலத்திற்குப் பிறகு, உன் நாட்டில் ஏராளமான ஜனங்கள் இருப்பார்கள். [QBR2] உங்களை அழித்த ஜனங்கள் வெகுதொலைவில் இருப்பார்கள். [QBR]
20. நீங்கள் இழந்துப்போன பிள்ளைகளுக்காக வருத்தப்பட்டீர்கள். [QBR2] ஆனால் அந்தப் பிள்ளைகள் உங்களிடம், ‘இந்த இடம் மிகவும் சிறிதாய் உள்ளது. [QBR2] நாங்கள் வாழ்வதற்கு ஒரு பெரிய இடத்தைக் கொடு’ என்று சொல்வார்கள். [QBR]
21. பிறகு நீ உனக்குள்ளேயே, [QBR2] ‘இந்தப் பிள்ளைகளையெல்லாம் எனக்கு யார் கொடுத்தது. இது மிகவும் நல்லது. [QBR] நான் தனியாகவும் சோகமாகவும் இருக்கிறேன். [QBR2] நான் தோற்கடிக்கப்பட்டு என் ஜனங்களிடமிருந்து தொலைவில் உள்ளேன். [QBR] எனவே, இந்த பிள்ளைகளை எனக்கு யார் கொடுத்தது? [QBR2] பார், நான் தனியாக விடப்பட்டுள்ளேன். [QBR2] இந்தப் பிள்ளைகள் எல்லோரும் எங்கிருந்து வந்தார்கள்?’ ” என்று சொல்லிக்கொள்வாய்.
22. எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார். [QBR] “பார், நான் நாடுகளுக்கு என் கையை ஆட்டுகிறேன். [QBR2] எல்லா ஜனங்களும் பார்க்கும்படி நான் எனது கொடியை ஏற்றுவேன். [QBR] பிறகு உனது பிள்ளைகளை உன்னிடம் அழைத்து வருவார்கள். [QBR2] அந்த ஜனங்கள் உங்கள் பிள்ளைகளைத் தம் தோள்களில் தூக்கிச் செல்வார்கள். அவர்கள் தம் கைகளில் பிடித்துக்கொள்வார்கள். [QBR]
23. அரசர் உன் பிள்ளைகளுக்கு ஆசிரியர்களாக இருப்பார்கள். [QBR2] அரசகுமாரிகள் அவர்களைக் கவனித்துகொள்வார்கள். [QBR] அந்த அரசர்களும் இளவரசிகளும் உங்களுக்குப் பணிவார்கள். [QBR2] அவர்கள் புழுதி படிந்த உங்கள் கால்களை முத்தமிடுவார்கள். [QBR] பிறகு நான்தான் கர்த்தர் என்று நீங்கள் அறிவீர்கள். [QBR2] என்னை நம்புகிற எவனும் ஏமாற்றப்படமாட்டான் என்பதை நீங்கள் அறிவீர்கள்.”
24. ஒரு பலமான வீரன் போரில் செல்வத்தை அபகரித்தால், அவனிடமிருந்து நீங்கள் அச்செல்வத்தைப் பெறமுடியாது. [QBR2] ஒரு வல்லமையுள்ள வீரன் ஒரு கைதியைக் காத்து நின்றால், அந்தக் கைதி அவனிடமிருந்து தப்பமுடியாது. [QBR]
25. ஆனால் கர்த்தர் கூறுகிறார், “கைதிகள் தப்பித்துக்கொள்வார்கள் எவனோ ஒருவன், பலமான வீரனிடமிருந்து கைதிகளை மீட்டுச் செல்வான். [QBR2] இது எவ்வாறு நடக்கும்? உன்னோடு போராடுபவர்களோடு போராடுவேன் நான் பிள்ளைகளைக் காப்பாற்றுவேன். [QBR]
26. அந்த ஜனங்கள் உன்னைக் காயப்படுத்துகிறார்கள். [QBR2] ஆனால், நான் அவர்கள் தமது சொந்த உடலையே உண்ணும்படி அவர்களை வற்புறுத்துவேன். [QBR2] அவர்களது சொந்த இரத்தமே அவர்கள் குடிக்கும் திராட்சைரசமாகும். [QBR] பிறகு, கர்த்தர் உன்னைப் பாதுகாத்தார் என்பதை எல்லோரும் அறிவார்கள். [QBR2] அனைத்து ஜனங்களும், யாக்கோபின் வல்லமைமிக்கவர் உன்னைக் காப்பாற்றினார் என்பதை அறிவார்கள்.” [PE]