1. {#1தேவன் தனது உலகை ஆளுகிறார் } [QS]கர்த்தர் கூறுகிறார், “யாக்கோபின் குடும்பமே! என்னைக் கவனி! [QE][QS2]உங்களை நீங்கள் ‘இஸ்ரவேல்’ என்று அழைக்கிறீர்கள். [QE][QS]யூதாவின் குடும்பத்தில் இருந்து நீங்கள் வந்திருக்கிறீர்கள். [QE][QS2]வாக்குறுதிகள் கொடுக்க நீங்கள் கர்த்தருடைய நாமத்தைப் பயன்படுத்துகிறீர்கள். [QE][QS]இஸ்ரவேலின் தேவனை நீங்கள் துதிக்கிறீர்கள். [QE][QS2]ஆனால் நீங்கள் இவற்றைச் செய்யும்போது உண்மையாகவும் நேர்மையாகவும் இல்லாமல் இருக்கிறீர்கள்.” [QE][PBR]
2. [QS]“ஆம் பரிசுத்தமான நகரத்தின் பிரஜைகள் அவர்கள். [QE][QS2]அவர்கள் இஸ்ரவேலின் தேவனைச் சார்ந்து இருக்கிறார்கள். [QE][QS]அவரது நாமம் சர்வ வல்லமையுள்ள கர்த்தர். [QE][PBR]
3. [QS]“முன்பே நான் நடக்கப் போவதை உங்களுக்குச் சொன்னேன். [QE][QS2]நான் உங்களுக்கு அவற்றைப் பற்றிச் சொன்னேன். [QE][QS2]பிறகு, திடீரென்று அவை நடக்கும்படிச் செய்தேன். [QE]
4. [QS]நான் அதனைச் செய்தேன். ஏனென்றால், நீங்கள் பிடிவாதமுடையவர்கள் என்பது எனக்குத் தெரியும். [QE][QS2]நான் சொன்ன எதையும் நீங்கள் நம்ப மறுத்தீர்கள். [QE][QS]நீங்கள் மிகவும் பிடிவாதம் உடையவர்கள். [QE][QS2]நீங்கள் வளையாத இரும்பைப் போலவும் உறுதியான வெண்கலம் போலவும் இருக்கிறீர்கள். [QE]
5. [QS]எனவே, நீண்ட காலத்துக்கு முன்பே நான் என்ன நடக்குமென சொன்னேன். [QE][QS2]அவை நடப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்னரே நான் அவற்றைப்பற்றி உங்களுக்குச் சொன்னேன். நான் இதைச் செய்தேன். [QE][QS]எனவே நீ, ‘எங்கள் விக்கிரகங்கள் (தெய்வங்கள்) இந்த நடபடிகளை நடக்க செய்தன’ என்று சொல்ல முடியாது. [QE][QS]நான் இதைச் செய்தேன். [QE][QS2]எனவே நீ, ‘எங்கள் விக்கிரகங்கள், எங்கள் சிலைகளால் இது நிகழ்ந்தது’ ” என்று சொல்லமுடியாது. [QE]
6. {#1தேவன் இஸ்ரவேலைச் சுத்தப்படுத்த தண்டிக்கிறார் } [QS]“என்ன நடந்தது என்று நீங்கள் பார்த்தீர்கள், கேட்டீர்கள். [QE][QS2]எனவே, நீங்கள் இந்தச் செய்தியை பிற ஜனங்களிடம் சொல்லவேண்டும். [QE][QS2]இப்போது, நான் இதுவரை நீங்கள் அறியாத புதிய செய்திகளைச் சொல்லுவேன். [QE]
7. [QS]இவை நீண்டக் காலத்திற்கு முன் நடந்ததல்ல. [QE][QS2]இவை இப்பொழுது நடந்துகொண்டிருக்கிறது. [QE][QS]இதற்கு முன்னால் நீங்கள் இதைப்பற்றி கேள்விப்பட்டிருக்கமாட்டீர்கள். [QE][QS2]எனவே, ‘நாங்கள் ஏற்கெனவே அறிவோம்’ என்று நீங்கள் சொல்லமுடியாது. [QE]
8. [QS]ஆனாலும் வருங்காலத்தில் என்ன நடக்குமென்று இப்பொழுது, நான் சொன்னாலும் நீங்கள் கேட்க மறுப்பீர்கள். [QE][QS]நீங்கள் எதையும் கற்றுக்கொள்ளமாட்டீர்கள். [QE][QS2]நான் சொன்ன எதையும் நீ எப்பொழுதும் கேட்பதில்லை. [QE][QS]நீ எப்பொழுதும் எனக்கு எதிராக இருப்பாய் என்பதை நான் தொடக்க முதலே அறிவேன். [QE][QS2]நீ பிறந்த நாள் முதலாகவே எனக்கு எதிராகக் கலகம் செய்திருக்கிறாய். [QE][PBR]
9. [QS]“ஆனால், நான் பொறுமையாக இருப்பேன். [QE][QS2]நான் இதனை எனக்காகச் செய்வேன். [QE][QS]நான் கோபங்கொண்டு உன்னை அழிக்காததற்காக ஜனங்கள் என்னைப் போற்றுவார்கள். [QE][QS2]காத்திருந்ததற்காக நீ என்னைப் போற்றுவாய். [QE][PBR]
10. [QS]“பார், நான் உன்னைச் சுத்தப்படுத்துவேன். [QE][QS2]ஜனங்கள் வெள்ளியைச் சுத்தப்படுத்த நெருப்பைப் பயன்படுத்துகிறார்கள். [QE][QS2]ஆனால் நான் உனக்குத் துன்பங்களைத் தந்து உன்னைச் சுத்தப்படுத்துவேன். [QE]
11. [QS]எனக்காகவே, எனக்காகவே நான் இதனைச் செய்வேன். [QE][QS2]நான் முக்கியமானவன் அல்ல என்று நீ என்னை நடத்த முடியாது. [QE][QS2]எனது துதியையும், மகிமையையும் பொய்த் தெய்வங்கள் எடுத்துக்கொள்ள விடமாட்டேன். [QE][PBR]
12. [QS]“யாக்கோபே, என்னைக் கவனி! [QE][QS2]இஸ்ரவேலர்களே, நான் எனது ஜனங்களாக உங்களை அழைத்தேன். [QE][QS]எனவே என்னைக் கவனியுங்கள்! [QE][QS2]நானே தொடக்கம், நானே முடிவு! [QE]
13. [QS]நான் பூமியை எனது சொந்தக் கையால் செய்தேன்! [QE][QS2]எனது வலது கை ஆகாயத்தைச் செய்தது! [QE][QS]நான் அவற்றை அழைத்தால் [QE][QS2]என் முன்னால் அவை கூடி வரும். [QE][PBR]
14. [QS]“நீங்கள் அனைவரும் இங்கே வாருங்கள். [QE][QS2]என்னைக் கவனியுங்கள். [QE][QS]இவை நடக்குமென்று எந்தப் பொய்த் தெய்வங்களாவது கூறினார்களா?இல்லை! [QE][QS2]கர்த்தர் தெரிந்துகொண்ட விசேஷ மனிதன் எதை விரும்புகிறானோ அதைப் பாபிலோனுக்கும் கல்தேயருக்கும் செய்வான்.” [QE][PBR]
15. [QS]கர்த்தர் சொல்கிறார், “நான் அவனை அழைப்பேன் என்று சொன்னேன். [QE][QS2]நான் அவனைக் கொண்டுவருவேன். நான் அவனை வெற்றியடையச் செய்வேன். [QE]
16. [QS]இங்கே வா, என்னைக் கவனி! [QE][QS2]பாபிலோன் ஒரு தேசமாக ஆரம்பமாகும்போது நான் அங்கிருந்தேன். [QE][QS]தொடக்கத்திலேயிருந்து நான் தெளிவாகப் பேசினேன். [QE][QS2]எனவே, நான் என்ன சொன்னேன் என்று ஜனங்களால் அறியமுடியும்.” [QE][PBR] [PS]பிறகு ஏசாயா சொன்னான், “இப்பொழுது, எனது கர்த்தராகிய ஆண்டவர் என்னையும் அவரது ஆவியையும் இவற்றை உங்களிடம் சொல்ல அனுப்பியிருக்கிறார்.
17. கர்த்தரும், மீட்பருமாகிய, இஸ்ரவேலின் பரிசுத்தர் சொல்கிறார், [PE][PBR] [QS]“ ‘நானே உனது தேவனாகிய கர்த்தர், பயனுள்ளதைச் செய்ய நான் உனக்குக் கற்பிக்கிறேன். [QE][QS2]நீ போக வேண்டிய பாதையில் உன்னை நான் வழி நடத்துகிறேன். [QE]
18. [QS]நீ எனக்குக் கீழ்ப்படிந்திருந்தால், [QE][QS2]சமாதானம் பாய்ந்து வரும் ஆற்றைப் போன்று உன்னிடம் வந்திருக்கும். [QE][QS]மீண்டும் மீண்டும் நன்மை கடல் [QE][QS2]அலைகள்போன்று, உன்னிடம் வந்திருக்கும், [QE]
19. [QS]நீ எனக்குக் கீழ்ப்படிந்தால், உனக்கு நிறைய பிள்ளைகள் இருந்திருக்கும். [QE][QS2]அவர்கள் மணல் துகள்களைப் போன்று இருந்திருப்பார்கள். [QE][QS]நீ எனக்குக் கீழ்ப்படிந்திருந்தால், நீ அழிக்கப்படாமல் இருந்திருப்பாய். [QE][QS2]என்னோடு நீ தொடர்ந்து இருந்திருப்பாய்.’ [QE][PBR]
20. [QS]“எனது ஜனங்களே, பாபிலோனிலிருந்து புறப்படுங்கள்! [QE][QS2]எனது ஜனங்களே, கல்தேயரை விட்டு ஓடுங்கள்! [QE][QS]ஜனங்களிடம் இந்தச் செய்தியை மகிழ்ச்சியோடு கூறுங்கள்! [QE][QS2]பூமியிலுள்ள தொலை தூர இடங்களிலும் இந்தச் செய்தியைப் பரப்புங்கள். [QE][QS]ஜனங்களிடம் சொல்லுங்கள். [QE][QS2]‘கர்த்தர் அவரது தாசனாகிய யாக்கோபை மீட்டார்!’ [QE]
21. [QS]கர்த்தர் அவரது ஜனங்களை வனாந்திரத்தின் வழியாக நடத்திச் செல்கிறார். [QE][QS2]அவர்களுக்கு எப்பொழுதும் தாகமாய் இராது! ஏனென்றால், அவரது ஜனங்களுக்காக அவர் கன்மலையிலிருந்து தண்ணீரைப் பாயச்செய்வார்! [QE][QS2]அவர் பாறைகளைப் பிளந்தார்! தண்ணீர் வெளியே பாய்ந்தது.” [QE][PBR]
22. [QS]ஆனால் கர்த்தர் கூறுகிறார், [QE][QS2]“கெட்ட ஜனங்களுக்கு சமாதானம் இல்லை!” [QE][PBR]