1. {#1தேவனைப் போற்றும் பாடல் } [PS]அந்த நேரத்தில் யூதாவில் இந்தப் பாடலை ஜனங்கள் பாடுவார்கள்: [PE][PBR] [QS]கர்த்தரே நமக்கு இரட்சிப்பைத் தருகிறார். [QE][QS2]நமக்குப் பலமான நகரம் உள்ளது. [QE][QS2]நமது நகரத்திற்குப் பலமான சுவர்களும், தற்காப்புகளும் உள்ளன. [QE]
2. [QS]கதவுகளைத் திறவுங்கள். நல்ல ஜனங்கள் நுழைவார்கள். [QE][QS2]தேவனுடைய நல்ல போதனைகளுக்கு அந்த ஜனங்கள் கீழ்ப்படிவார்கள். [QE][PBR]
3. [QS]கர்த்தாவே, உம்மை அண்டியுள்ள ஜனங்களுக்கும், [QE][QS2]உம்மை நம்புகிற ஜனங்களுக்கும், நீர் உண்மையான சமாதானத்தைக் கொடுக்கிறீர். [QE][PBR]
4. [QS]எனவே, எப்பொழுதும் கர்த்தரை நம்புங்கள். [QE][QS2]ஏனென்றால், கர்த்தராகிய யேகோவாவில் உங்களுக்கு என்றென்றைக்கும் பாதுகாப்பான இடமுண்டு. [QE]
5. [QS]ஆனால், கர்த்தர் தற்பெருமை கொண்ட நகரத்தை அழிப்பார். [QE][QS2]அங்கே வாழுகின்ற ஜனங்களை அவர் தண்டிப்பார். [QE][QS]கர்த்தர் அந்த உயர்வான நகரத்தை தரையில் போடுவார். [QE][QS2]அது புழுதிக்குள் விழும். [QE]
6. [QS]பிறகு, ஏழ்மையும் பணிவும் உள்ள ஜனங்களின் கால்கள் அதனை மிதித்துச் செல்லும். [QE][PBR]
7. [QS]நல்ல ஜனங்களுக்கு நேர்மையே சிறந்த பாதை. [QE][QS2]நல்ல ஜனங்கள் நேர்மையாகவும், உண்மையாகவும் உள்ள பாதையில் செல்வார்கள். [QE][QS]தேவனே நீர் அந்தப் பாதையை மென்மையாக்கி [QE][QS2]எளிதாக செல்லும்படிச் செய்கிறீர். [QE]
8. [QS]ஆனால் கர்த்தாவே, நாங்கள் உமது நீதியின் பாதைக்காகக் காத்திருக்கிறோம். [QE][QS2]எங்கள் ஆத்துமா, உம்மையும் உமது நாமத்தையும் நினைவு கொள்ள விரும்புகின்றது. [QE]
9. [QS]இரவில் எனது ஆத்துமா உம்மோடு இருக்க விரும்புகிறது. [QE][QS2]என்னுள் இருக்கிற ஆவி ஒவ்வொரு புதிய நாளின் அதிகாலையிலும் உம்மோடு இருக்க விரும்புகிறது. [QE][QS]தேசத்திற்கு உமது நீதியின் பாதை வரும்போது, [QE][QS2]ஜனங்கள் வாழ்வின் சரியான பாதையைக் கற்றுக்கொள்வார்கள். [QE]
10. [QS]தீயவன் நல்லவற்றை செய்ய கற்றுக்கொள்ளமாட்டான். [QE][QS2]அவனிடம் நீர் இரக்கம் மட்டும் காட்டினால், அவன் கெட்டவற்றை மட்டும் செய்வான். [QE][QS]அவன் நல்லவர்களின் உலகில் வாழ்ந்தாலும் கூட, [QE][QS2]கர்த்தருடைய மகத்துவத்தை தீயவன் எப்பொழுதும் கண்டுகொள்ளமாட்டான். [QE]
11. [QS]ஆனால் கர்த்தாவே, நீர் அந்த ஜனங்களைத் தண்டித்தால் அவர்கள் அதனைப் பார்ப்பார்கள். [QE][QS2]கர்த்தாவே, தீயவர்களிடம் உமது ஜனங்கள்மேல் நீர் வைத்திருக்கிற பலமான அன்பைக் காட்டும். [QE][QS]உண்மையாகவே தீய ஜனங்கள் அவமானப்படுவார்கள், [QE][QS2]உமது எதிரிகள் அவர்களது சொந்த நெருப்பிலேயே (தீமை) எரிக்கப்படுவார்கள். [QE]
12. [QS]கர்த்தாவே, நீர் நாங்கள் செய்யமுயன்ற காரியங்களை எங்களுக்காகச் செய்வதில் வெற்றியடைந்திருக்கிறீர். [QE][QS2]ஆதலால், எங்களுக்குச் சமாதானத்தைத் தாரும். [QE]
13. {#1தேவன் அவரது ஜனங்களுக்கு புதிய வாழ்க்கையைக் கொடுப்பார் } [QS]கர்த்தாவே, நீர் எங்களது தேவன், [QE][QS2]ஆனால் கடந்த காலத்தில், நாங்கள் மற்ற தெய்வங்களைப் பின்பற்றினோம். [QE][QS]நாங்கள் மற்ற எஜமானர்களுக்கு உரியவர்களாய் இருந்தோம், [QE][QS2]ஆனால், இப்பொழுது நாங்கள் ஒரே ஒரு நாமத்தை, அதுவும் உமது நாமத்தை மட்டும் நினைவில் வைக்க விரும்புகிறோம். [QE]
14. [QS]அந்தப் பொய்த் தெய்வங்களெல்லாம் உயிரோடு இல்லை. [QE][QS2]அந்த ஆவிகள் மரணத்திலிருந்து எழுவதில்லை. [QE][QS]அவற்றை அழித்துவிட நீர் முடிவு செய்தீர். [QE][QS2]அவற்றை நினைவூட்டுகிற அனைத்தையும் நீர் அழித்துவிட்டீர். [QE]
15. [QS]நீர் நேசித்த நாட்டிற்கு உதவியிருக்கிறீர் [QE][QS2]மற்ற ஜனங்கள் அந்நாட்டை தோற்கடிக்காதபடி நீர் தடுத்தீர். [QE]
16. [QS]கர்த்தாவே, ஜனங்கள் துன்பத்தில் இருக்கும்போது உம்மை நினைப்பார்கள். [QE][QS2]நீர் அவர்களைத் தண்டிக்கும்போது உம்மிடம் அமைதியான பிரார்த்தனைகளை ஜனங்கள் செய்வார்கள். [QE]
17. [QS]கர்த்தாவே, நாங்கள் உம்மோடு இல்லாதபோது, [QE][QS2]நாங்கள் குழந்தையைப் பெற்றெடுத்தப் பெண்ணைப் போல் இருக்கிறோம். [QE][QS2]அவள் பிரசவ வலியுடன் அழுகிறாள். [QE]
18. [QS]அதே வழியில், எங்களுக்கு வலி உள்ளது. [QE][QS2]நாங்கள் குழந்தை பெற்றோம். ஆனால் அது காற்றாகியது. [QE][QS]நாங்கள் உலகத்துக்காக புதிய ஜனங்களை உருவாக்கவில்லை. [QE][QS2]நாங்கள் தேசத்திற்கு இரட்சிப்பைக் கொண்டுவரவில்லை. [QE]
19. [QS][+ ஆனால் கர்த்தர் கூறுகிறார்,] “உம்முடைய ஜனங்கள் மரித்திருக்கிறார்கள். [QE][QS2]ஆனால் அவர்கள் மீண்டும் வாழ்வார்கள். [QE][QS]எங்கள் ஜனங்களின் உடல்களும் [QE][QS2]மரணத்திலிருந்து எழும். [QE][QS]மரித்த ஜனங்கள் மண்ணிலிருந்து எழுந்து மகிழ்வார்கள். [QE][QS]உம்முடைய பனி [QE][QS2]செடிகொடிகளின் மேல் பெய்யும் பனி போல இருக்கும். [QE][QS]புதிய நேரம் வந்துகொண்டிருப்பதை இது காட்டும். ஜனங்கள் இப்போது பூமியில் புதைக்கப்படுகிறார்கள். [QE][QS2]ஆனால் பூமியானது மரித்தவர்களை வெளியே அனுப்பும்.” [QE]
20. {#1தீர்ப்பு: பரிசு அல்லது தண்டனை } [QS]எனது ஜனங்களே! உங்கள் அறைக்குள் போங்கள். [QE][QS2]உங்கள் கதவுகளை மூடுங்கள். [QE][QS]கொஞ்ச காலத்திற்கு உங்கள் அறைகளில் ஒளிந்திருங்கள். [QE][QS2]தேவனுடைய கோபம் முடியும்வரை ஒளிந்திருங்கள். [QE]
21. [QS]கர்த்தர் அவரது இடத்தை விட்டு [QE][QS2]உலக ஜனங்களை அவர்கள் செய்த தீமைக்காக நியாயந்தீர்க்க வருவார். [QE][QS]கொல்லப்பட்ட ஜனங்களின் இரத்தத்தைப் பூமி காட்டும். [QE][QS2]இந்த ஜனங்களை இனி பூமி மூடி வைக்காது. [QE][PBR]