1. {#1தேவனைத் துதிக்கும் பாடல் } [QS]அப்போது நீ கூறுவாய், [QE][QS]“கர்த்தாவே, நான் உம்மைத் துதிக்கிறேன் [QE][QS2]நீர் என் மீது கோபமாக இருந்தீர். [QE][QS]ஆனால் இப்போது கோபமாக இருக்க வேண்டாம்! [QE][QS2]என் மீது உமது அன்பைக் காட்டும்”. [QE]
2. [QS]என்னைத் தேவன் காப்பாற்றுகிறார். [QE][QS2]நான் அவரை நம்புகிறேன். நான் அஞ்சவில்லை. [QE][QS]அவர் என்னைக் காப்பாற்றுகிறார். [QE][QS]கர்த்தராகிய யேகோவா எனது பெலம். [QE][QS2]அவர் என்னைக் காப்பாற்றுகிறார். [QE][QS2]நான் அவரைத் துதிக்கும் பாடல்களைப் பாடுகிறேன். [QE][PBR]
3. [QS]உனது தண்ணீரை இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து பெற்றுக்கொள். [QE][QS2]பிறகு நீ மகிழ்ச்சியாய் இருப்பாய். [QE]
4. [QS]பிறகு நீ கூறுவாய்: [QE][QS2]“கர்த்தரைத் துதியுங்கள்! அவரது நாமத்தைத் தொழுதுகொள்ளுங்கள் [QE][QS]அவர் செய்தவற்றை அனைத்து ஜனங்களிடமும் கூறுங்கள்!” [QE]
5. [QS]கர்த்தரைத் துதிக்கும் பாடல்களைப் பாடுங்கள்! [QE][QS2]ஏனென்றால், அவர் பெரிய செயல்களைச் செய்துள்ளார். [QE][QS]உலகம் முழுவதும் தேவனுடைய செயல்களைக் குறித்த செய்தியைப் பரப்புங்கள். [QE][QS2]எல்லா ஜனங்களும் இதனை அறியும்படி செய்யுங்கள். [QE]
6. [QS]சீயோனின் ஜனங்களே, இந்த காரியங்களைப் பற்றிச் சத்தமிடுங்கள்! [QE][QS2]இஸ்ரவேலின் பரிசுத்தர் பலமிக்க வழியில் உங்களோடு இருக்கிறார். எனவே மகிழ்ச்சியோடு இருங்கள்! [QE][PBR]