1. {#1கர்த்தரிடம் திரும்பி வருவதன் பலன்கள் } [QS]“வா, நாம் கர்த்தரிடம் திரும்பிப் போவோம். [QE][QS2]அவர் நம்மைப் புண்படுத்தினார். [QE][QS2]ஆனால் அவர் நம்மைக் குணப்படுத்துவார். [QE][QS]அவர் நம்மைக் காயப்படுத்தினார். [QE][QS2]ஆனால் அவர் நமக்குக் கட்டுகளைப் போடுவார். [QE]
2. [QS]இரண்டு நாட்களுக்குப் பிறகு நமக்கு அவர் திருப்பவும் உயிரைக் கொண்டுவருவார். [QE][QS2]அவர் மூன்றாவது நாள் நம்மை எழுப்புவார். [QE][QS2]பிறகு நாம் அவரருகில் வாழ முடியும். [QE]
3. [QS]கர்த்தரைப்பற்றி கற்றுக்கொள்வோம். [QE][QS2]கர்த்தரை அறிந்துக்கொள்ள மிகக் கடுமையாக முயல்வோம். [QE][QS]அவர் வந்துக்கொண்டிருக்கிறார் என்பதை நாம் காலைநேரம் வந்துக்கொண்டிருக்கிறது என்பதைப் போன்று அறிகிறோம். [QE][QS2]கர்த்தர் நம்மிடம் பூமியை நனைக்க வரும் மழையைப்போன்று வருவார்.” [QE]
4. {#1ஜனங்கள் விசுவாசமற்றவர்கள் } [QS]“எப்பிராயீமே. நான் உன்னை என்ன செய்வது? [QE][QS2]யூதா, நான் உன்னை என்ன செய்வது? [QE][QS]உனது விசுவாசம் காலை மூடுபனியைப் போன்று உள்ளது. [QE][QS2]உனது விசுவாசத் தன்மை காலையில் மறையும் பனித்துளியைப் போன்று உள்ளது. [QE]
5. [QS]நான் தீர்க்கதரிசிகளைப் பயன்படுத்தி [QE][QS2]ஜனங்களுக்காக சட்டங்களைச் செய்தேன். [QE][QS]எனது கட்டளைகளால் ஜனங்கள் கொல்லப்பட்டார்கள். [QE][QS2]ஆனால் அந்த முடிவுகளிலிருந்து நன்மைகள் வரும். [QE]
6. [QS]ஏனென்றால் நான் பலிகளை அல்ல. [QE][QS2]விசுவாசமுள்ள அன்பையே விரும்புகிறேன். [QE][QS]நான் ஜனங்கள் தகன பலிகளை கொண்டு வருவதையல்ல [QE][QS2]ஜனங்கள் தேவனை அறிந்துகொள்வதையே விரும்புகிறேன். [QE]
7. [QS]ஆனால் ஜனங்கள் ஆதாமைப்போன்று உடன்படிக்கையை உடைத்தார்கள் [QE][QS2]அவர்கள் தமது நாட்டில் எனக்கு விசுவாசம் இல்லாதவர்களாய் இருந்தார்கள். [QE]
8. [QS]கீலேயாத். தீமை செய்கிறவர்களின் நகரமாயிருக்கிறது. [QE][QS2]அங்கு ஜனங்கள் மற்றவர்களைத் தந்திரம் செய்து கொல்லுகிறார்கள். [QE]
9. [QS]வழிப்பறிக்காரர்கள் மறைந்திருந்து மற்றவர்களைத் தாக்கக் காத்திருக்கிறார்கள். [QE][QS2]அதைப் போலவே, சீகேமுக்குப் போகும் சாலையில் அவ்வழியில் செல்லும் [QE][QS]ஜனங்களைத் தாக்க ஆசாரியர்கள் காத்திருக்கின்றார்கள். [QE][QS2]அவர்கள் தீமைகளைச் செய்திருக்கிறார்கள். [QE]
10. [QS]நான் இஸ்ரவேல் நாட்டில் பயங்கரமானவற்றைப் பார்த்திருக்கிறேன். [QE][QS]எப்பிராயீம் தேவனுக்கு விசுவாசம் இல்லாமல் போனான். [QE][QS2]இஸ்ரவேல் பாவத்தால் அழுக்கானது. [QE]
11. [QS]யூதா, உனக்கும் அறுவடைகாலம் இருக்கிறது. [QE][QS2]நான் எனது ஜனங்களைச் சிறைமீட்டு வரும்போது இது நிகழும்” [QE]