1. {#1ஆபகூக்கின் ஜெபம் } [PS]ஆபகூக் தீர்க்கதரிசி சிகாயோனில் செய்த ஜெபம். [PE][PBR]
2. [QS]கர்த்தாவே, நான் உம்மைப்பற்றிய செய்திகளைக் கேட்டிருக்கிறேன். [QE][QS2]கர்த்தாவே, நீர் கடந்த காலத்தில் செய்த வல்லமைமிக்க செயல்களால் ஆச்சரியப்படுகிறேன். [QE][QS]இப்பொழுது நான், நீர் எங்கள் காலத்தில் பெருஞ் செயல்கள் செய்ய வேண்டும் என்று ஜெபிக்கிறேன். [QE][QS2]தயவுசெய்து அச்செயல்கள் எங்கள் காலத்தில் நிகழுமாறு செய்யும். [QE][QS]ஆனால் நீர் கோபங்கொள்ளும்போதும் [QE][QS2]எங்கள் மீது இரக்கம் காட்ட நினைத்துக்கொள்ளும். [QE][PBR]
3. [QS]தேவன் தேமானிலிருந்து வந்துகொண்டிருக்கிறார், [QE][QS2]பரிசுத்தமானவர் பாரான் மலையிலிருந்து வந்துகொண்டிருக்கிறார். [QE][PBR] [QS]கர்த்தருடைய மகிமை பரலோகங்களை நிறைத்துள்ளது. [QE][QS2]அவரது துதி பூமியில் நிறைந்துள்ளது. [QE]
4. [QS]அவரது கையிலிருந்து பிரகாசமான கதிர்கள் வரும். இது பிரகாசமான வெளிச்சம் போன்றது. [QE][QS2]அத்தகைய வல்லமை அவரது கையில் மறைந்துகொண்டிருக்கும். [QE]
5. [QS]அவருக்கு முன்னால் கொள்ளைநோய் போனது. [QE][QS2]அழிப்பவன் அவரைப் பின் தொடர்வான். [QE]
6. [QS]கர்த்தர் நின்று பூமியை அசைத்தார். [QE][QS2]அவர் அனைத்து நாடுகளிலும் உள்ள ஜனங்களைப் பார்த்தார். [QE][QS2]அவர்கள் அச்சத்துடன் நடுங்கினார்கள். [QE][QS]பல ஆண்டுகளாகக் குன்றுகள் பலமாக நின்றுக்கொண்டிருக்கின்றன. [QE][QS2]ஆனால் அக்குன்றுகள் விழுந்து துண்டுகளாகின. [QE][QS]பழைய குன்றுகள் விழுந்துவிட்டது. [QE][QS2]தேவன் எப்பொழுதும் அப்படியே இருந்திருக்கிறார். [QE][PBR]
7. [QS]நான் குஷான் நகரங்கள் துன்பத்தில் இருப்பதைப் பார்த்தேன். [QE][QS2]மீதியான் வீடுகள் அச்சத்தால் நடுங்கின. [QE]
8. [QS]கர்த்தாவே, உமக்கு நதிகள் மீது கோபமா? [QE][QS2]தண்ணீரோடைகள் மீது உமக்குக் கோபமா? [QE][QS]கடல்மீது உமக்குக் கோபமா? [QE][QS2]உம்முடைய குதிரைகள் மீதும், உமது இரதங்கள் மீதும் வெற்றிநோக்கி பவனி சென்றபோது கோபப்பட்டீரா? [QE][PBR]
9. [QS]அதற்குப்பிறகும் நீர் உமது வானவில்லைக் காட்டினீர். [QE][QS2]பூமியில் உள்ள குடும்பத்தினருடன் உமது உடன்படிக்கைக்கு இது சான்றாயிற்று. [QE][PBR] [QS]வறண்ட நிலம் ஆறுகளைப் பிளந்தன. [QE]
[QS2]10. மலைகள் உம்மை பார்த்து அதிர்ந்தன. [QE][QS]தண்ணீர் நிலத்தில் பாய்ந்து வடிந்து போனது. [QE][QS2]கடலில் உள்ள தண்ணீர் தனது பூமியின் மேலிருந்த அதிகாரத்தை இழந்துவிட்டதாக உரத்த சத்தம் எழுப்பியது. [QE]
11. [QS]சூரியனும் சந்திரனும் தங்கள் பிரகாசத்தை இழந்தன. [QE][QS2]அவை உமது மின்னல்களின் பிரகாசத்தைப் பார்த்து வெளிச்சத்தை நிறுத்திக்கொண்டன. [QE][QS2]மின்னலானது காற்று வழியாகப் பாயும் அம்புகளைப்போன்றும், ஈட்டிகளைப் போன்றும் உள்ளன. [QE]
12. [QS]நீர் கோபத்துடன் பூமியின்மேல் நடந்தீர்; [QE][QS2]பல தேசங்களைத் தண்டித்தீர். [QE]
13. [QS]நீர் உமது ஜனங்களைக் காப்பாற்ற வந்தீர். [QE][QS2]நீர் தேர்ந்தெடுத்த அரசனை வெற்றி நோக்கி நடத்த வந்தீர். [QE][QS]ஒவ்வொரு தீமை செய்கிற குடும்பத்திலும் உள்ள தலைவர்களை, [QE][QS2]முக்கியமானவர்களானாலும் [QE][QS2]முக்கியமற்றவர்களானாலும் அவர்களைக் கொன்றீர். [QE][PBR]
14. [QS]நீர் மோசேயின் கைத்தடியைப் பயன்படுத்தி [QE][QS2]பகை வீரர்களைத் தடுத்தீர். [QE][QS]அவ்வீரர்கள் எனக் கெதிராகப் போரிட [QE][QS2]வல்லமைமிக்கப் புயலைப் போல் வந்தார்கள். [QE][QS]ஒரு ஏழையை ரகசியமாகக் கொள்ளையிடுவது போல் [QE][QS2]எங்களை எளிதாக வெல்லமுடியுமென எண்ணினார்கள். [QE]
15. [QS]ஆனால் நீர் உம் குதிரைகளை [QE][QS2]ஆழமான தண்ணீர் வழியாக மண்ணைக் கலங்கும்படி நடக்கச் செய்தீர். [QE]
16. [QS]நான் அந்தக் கதையைக் கேட்டபோது என் உடல் முழுவதும் நடுங்கியது. [QE][QS2]நான் உரக்க பரிகசித்தேன். [QE][QS]நான் என் எலும்புகளின் பலவீனத்தை உணர்ந்தேன். [QE][QS2]நான் அங்கே நின்று நடுங்கிக்கொண்டிருந்தேன். [QE][QS]எனவே நான் பகைவர் வந்து தாக்கும் அந்த அழிவின் நாளுக்காகக் காத்திருப்பேன். [QE]
17. {#1கர்த்தருக்குள் எப்பொழுதும் மகிழ்ச்சியாயிருங்கள் } [QS]அத்திமரங்களில் அத்திப்பழங்கள் வளராமலிருக்கலாம். [QE][QS2]திராட்சைக்கொடிகளில் திராட்சைப் பழங்கள் வளராமலிருக்கலாம். [QE][QS]ஒலிவ மரங்களில் ஒலிவ பழங்கள் வளராமலிருக்கலாம், [QE][QS2]வயல்களில் தானியம் விளையாமலிருக்கலாம், [QE][QS]கிடையில் ஆட்டு மந்தைகள் இல்லாமல் இருக்கலாம், [QE][QS2]தொழுவத்தில் மாடுகள் இல்லாமல் இருக்கலாம். [QE]
18. [QS]ஆனால், கர்த்தருக்குள் நான் இன்னும் மகிழ்ச்சியோடு இருப்பேன். [QE][QS2]எனது இரட்சகரான தேவனில் நான் மகிழ்வேன். [QE][PBR]
19. [QS]எனக்கு அதிகாரியான என் கர்த்தர் எனக்குப் பலத்தை கொடுக்கிறார். [QE][QS2]அவர் என்னை மானைப்போன்று ஓட உதவுகிறார். [QE][QS2]அவர் என்னைக் குன்றுகளில் பாதுகாப்பாக வழிநடத்துகிறார். [QE][PBR] [PS]இது இசையமைப்பாளருக்கு எனது நரம்பு வாத்தியங்களில் வாசிக்க வேண்டியது. [PE]