1. [PS]தேவன் என்னிடம் கூறினார்: “இஸ்ரவேல் தலைவர்களைப் பற்றிய இந்த சோகப் பாடலை நீ பாடவேண்டும். [PE][PBR]
2. [QS]“ ‘உன்னுடைய தாய், அங்கு [QE][QS2]ஆண் சிங்கங்களுடன் படுத்திருக்கும் பெண் சிங்கத்தைப் போலிருக்கிறாள். [QE][QS]அவள், இளம் ஆண் சிங்கங்களுடன் படுக்கச் சென்றாள். [QE][QS2]பல குட்டிகளை பெற்றெடுத்தாள். [QE]
3. [QS]தனது குட்டிகளில் ஒன்று எழும்புகிறது. [QE][QS2]அது பலமான இளஞ்சிங்மாக வளர்ந்திருக்கிறது. [QE][QS]அது தனது உணவைப் பிடிக்கக் கற்றிருக்கிறது. [QE][QS2]அது மனிதனைக் கொன்று தின்றது. [QE][PBR]
4. [QS]“ ‘அது கெர்ச்சிப்பதை ஜனங்கள் கேட்டனர். [QE][QS2]அவர்கள் அதனை வலையில் பிடித்தனர்! [QE][QS]அதன் வாயில் கொக்கிகளைப் போட்டனர்: [QE][QS2]அதனை எகிப்துக்குக் கொண்டு போனார்கள். [QE][PBR]
5. [QS]“ ‘அக்குட்டி தலைவனாகும் என்று தாய்ச்சிங்கம் நம்பிக்கை வைத்திருந்தது. [QE][QS2]ஆனால் இப்போது அது நம்பிக்கையிழந்துவிட்டது. [QE][QS]எனவே அது தனது அடுத்த குட்டியை எடுத்தது. [QE][QS2]சிங்கமாவதற்குரிய பயிற்சியைக் கொடுத்தது. [QE]
6. [QS]அது பெரிய சிங்கத்தோடு வேட்டைக்குப் போனது. [QE][QS2]அது பலமான இளம் சிங்கமாயிற்று. [QE][QS]அது தனது உணவைப் பிடிக்கக் கற்றது. [QE][QS2]அது மனிதனைக் கொன்று தின்றது. [QE]
7. [QS]அது அரண்மனைகளைத் தாக்கியது. [QE][QS]அது நகரங்களை அழித்தது. [QE][QS2]அந்நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் அதன் கெர்ச்சினையைக் கேட்டு பேசப் பயந்தனர். [QE]
8. [QS]பிறகு அதனைச் சுற்றி வாழ்ந்த ஜனங்கள் அதற்கு ஒரு வலை அமைத்தனர். [QE][QS2]அவர்கள் அதனைத் தம் வலையில் பிடித்தனர். [QE]
9. [QS]அவர்கள் கொக்கிகளைப் போட்டு அதனைப் பூட்டினார்கள். [QE][QS]அவர்கள் அதனை வலைக்குள் வைத்தனர். [QE][QS2]எனவே அவர்கள் பாபிலோன் அரசனிடம் கொண்டு போனார்கள். [QE][QS]இப்பொழுது அதன் கெர்ச்சினையை [QE][QS2]இஸ்ரவேல் மலைப் பகுதிகளில் நீங்கள் கேட்க முடியாது, [QE][PBR]
10. [QS]“ ‘உனது தாய் தண்ணீர் கரையில் நடப்பட்ட [QE][QS2]திராட்சைக் கொடியைப் போன்றவள். [QE][QS]அவளுக்கு மிகுதியான தண்ணீர் இருந்தது. [QE][QS2]எனவே அவள் தழைத்த திராட்சைக் கொடியாயிருந்தாள். [QE]
11. [QS]பிறகு அவள் நிறைய கிளைகளோடு வளர்ந்தாள். [QE][QS2]அந்தக் கிளைகள் கைத்தடிகளைப் போன்றிருந்தன. [QE][QS2]அக்கிளைகள் அரசனின் செங்கோலைப் போன்றிருந்தன. [QE][QS]அத்திராட்சைக் கொடி மேலும் மேலும் உயரமாக வளர்ந்தது, [QE][QS2]அது பல கிளைகளைப் பெற்று மேகங்களைத் தொட்டன. [QE]
12. [QS]ஆனால் அக்கொடி வேரோடு பிடுங்கப்பட்டு [QE][QS2]தரையில் வீசியெறியப்பட்டது. [QE][QS]சூடான கிழக்குக் காற்று வந்து பழங்களை காய வைத்தது. [QE][QS2]பலமான கிளைகள் ஒடிந்தன. அவை நெருப்பில் எறியப்பட்டன. [QE][PBR]
13. [QS]“ ‘இப்போது திராட்சைக் கொடி வனாந்தரத்தில் நடப்படுகிறது. [QE][QS2]இது வறண்ட தாகமுள்ள நிலம். [QE]
14. [QS]பெரிய கிளையிலிருந்து நெருப்பு பரவியது. [QE][QS2]அந்நெருப்பு அதன் கிளைகளையும் பழங்களையும் எரித்தது. [QE][QS]எனவே இனிமேல் அதில் கைத்தடி இல்லை. [QE][QS2]அரசனின் செங்கோலும் இல்லை.’ [QE][PBR] [MS]இது மரணத்தைப்பற்றிய சோகப் பாடல். இது மரணத்தைப்பற்றிய துன்பப் பாடலாகப் பாடப்பட்டது.” [ME][PBR]