1. {#1மோசே ஜனங்களை ஆசீர்வதிக்கிறான் } [PS]மோசே மரிப்பதற்கு முன்பு, தேவனுடைய [PE][PS]மனுஷனான அவன் இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கொடுத்த ஆசீர்வாதம் இதுதான்.
2. மோசே சொன்னான்: [PE][PBR] [QS]“சீனாயிலிருந்து கர்த்தர் வந்தார். [QE][QS2]கர்த்தர் சேயீரிலிருந்து அவர்களுக்கு உதயமாகும் ஒளிபோன்று தோன்றினார். [QE][QS2]அவர் பாரான் மலையிலிருந்து ஒளி வீசும் வெளிச்சத்தைப் போன்று இருந்தார். [QE][QS]கர்த்தர் 10,000 பரிசுத்தரோடு வந்தார். [QE][QS2]தேவனின் பலமிக்க படை வீரர்கள் அவரது பக்கத்திலேயே இருந்தார்கள். [QE]
3. [QS]ஆம்! கர்த்தர் அவரது ஜனங்களை நேசிக்கிறார். [QE][QS2]அவரது பரிசுத்தமான ஜனங்கள் அனைவரும் அவரது கைக்குள் இருக்கிறார்கள். [QE][QS]அவர்கள் அவரது காலடியில் இருந்து, அவரது போதனையைக் கற்கிறார்கள்! [QE]
4. [QS]மோசே சட்டத்தை கொடுத்தான். [QE][QS2]அந்தப் போதனைகள் எல்லாம் யாக்கோபின் ஜனங்களுக்குரியது. [QE]
5. [QS]அந்த நேரத்தில், இஸ்ரவேலின் ஜனங்களும் அவர்களது தலைவர்களும், ஒன்று கூடினார்கள். [QE][QS2]கர்த்தர் யெஷுரனுக்கு அரசரானார்! [QE]
6. {#1ரூபனுக்கான ஆசீர்வாதம் } [QS]“ரூபன் வாழட்டும். அவன் சாகவேண்டாம்! [QE][QS2]ஆனால், அவனது குடும்பத்தில் கொஞ்சம் ஜனங்கள் மட்டும் இருக்கட்டும்!” [QE]
7. {#1யூதாவுக்கான ஆசீர்வாதம் } [PS]மோசே யூதாவைப் பற்றி இவற்றைச் சொன்னான்: [PE][PBR] [QS]“கர்த்தாவே, யூதாவிலிருந்து தலைவன் உதவிக்காக அழைக்கும்போது கேளும். [QE][QS2]அவனை அவனது ஜனங்களிடம் கொண்டு வாரும். [QE][QS]அவனைப் பலப்படுத்தும், அவனது பகைவர்களை தோற்கடிக்கும்படி உதவும்.” [QE]
8. {#1லேவிக்கான ஆசீர்வாதம் } [PS]மோசே லேவியைப் பற்றி இவற்றைச் சொன்னான்: [PE][PBR] [QS]“லேவி உமது உண்மையான சீடன். [QE][QS2]அவன் ஊரீம் மற்றும் தும்மீமை வைத்திருக்கிறான். [QE][QS]நீர் மாசாவிலே லேவியின் ஜனங்களைச் சோதித்தீர். [QE][QS]மேரிபாவின் தண்ணீரிடத்திலே அவர்கள் உமது ஜனங்களாக இருக்கிறார்கள் என்பதை நிரூபித்தீர். [QE]
9. [QS]கர்த்தாவே, அவர்கள் சொந்தக் குடும்பத்தை காட்டிலும் உமக்கென்று மிகவும் கவனம் செலுத்தினார்கள். [QE][QS]அவர்களது தந்தை மற்றும் தாயைப் பற்றியும் கவலைப்படவில்லை. [QE][QS]அவர்கள் தமது சகோதரர்களையும் அடையாளம் காணவில்லை. [QE][QS]அவர்கள் தங்கள் சொந்தப் பிள்ளைகள் மேலும் அக்கறை செலுத்தவில்லை. [QE][QS]ஆனால், அவர்கள் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தார்கள். [QE][QS2]அவர்கள் உமது உடன்படிக்கையைக் காத்தார்கள். [QE]
10. [QS]அவர்கள் உமது விதிகளை யாக்கோபிற்குப் போதிப்பார்கள். [QE][QS]அவர்கள் உமது சட்டத்தை இஸ்ரவேலுக்குப் போதிப்பார்கள். [QE][QS]அவர்கள் உமக்கு முன்னால் நறுமண பொருட்களை எரிப்பார்கள். [QE][QS2]அவர்கள் உமது பலிபீடத்தில் தகன பலிகளைச் செலுத்துவார்கள். [QE][PBR]
11. [QS]“கர்த்தாவே, லேவியின் உடமைகளை ஆசீர்வதியும். [QE][QS2]அவன் செய்கின்றவற்றை ஏற்றுக்கொள்ளும். [QE][QS]அவனைத் தாக்குகிறவர்களை அழித்துப்போடும்! [QE][QS2]அவனது பகைவர்களைத் தோற்கடியும் அப்போது அவர்கள் மீண்டும் அவனை தாக்கமாட்டார்கள்.” [QE]
12. {#1பென்யமீனுக்கான ஆசீர்வாதம் } [PS]மோசே பென்யமீனைப் பற்றி இதனைச் சொன்னான்: [PE][PBR] [QS]“கர்த்தர் பென்யமீனை நேசிக்கிறார். [QE][QS2]பென்யமீன் அவர் அருகில் பாதுகாப்பாக வாழ்வான். [QE][QS]கர்த்தர் எல்லா நேரத்திலும் அவனைக் காப்பாற்றுகிறார். [QE][QS2]கர்த்தர் அவனது நாட்டில் வாழ்வார்.” [QE]
13. {#1யோசேப்புக்கான ஆசீர்வாதம் } [PS]மோசே யோசேப்பைப் பற்றி இதனைச் சொன்னான்: [PE][PBR] [QS]“கர்த்தர் யோசேப்பின் நாட்டை ஆசீர்வதிக்கட்டும். [QE][QS2]கர்த்தாவே, வானத்தின் மேலிருந்து மழையையும் பூமிக்குக் கீழிருந்து நீரூற்றுகளையும் அனுப்பும். [QE]
14. [QS]அவர்களுக்குச் சூரியன் நல்ல கனியைக் கொடுக்கட்டும். [QE][QS2]ஒவ்வொரு மாதமும் அதன் நல்ல கனியைக் கொடுக்கட்டும். [QE]
15. [QS]குன்றுகளும், பழைமையான மலைகளும் [QE][QS2]அவற்றின் சிறந்த கனியைத் தயார் செய்யட்டும். [QE]
16. [QS]பூமி தனது சிறந்த பொருட்களை யோசேப்பிற்குத் தரட்டும். [QE][QS]யோசேப்பு தனது சகோதரர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டான். [QE][QS2]எனவே, எரியும் முட்செடிகளில் இருந்து கர்த்தர் தன்னிடமுள்ள சிறந்தவற்றை யோசேப்பிற்குக் கொடுக்கட்டும். [QE]
17. [QS]யோசேப்பு பலமுள்ள காளையைப் போன்றிருக்கிறான். [QE][QS2]அவனது இரு மகன்களும் காளையின் கொம்புகளைப் போன்றுள்ளனர். [QE][QS]அவர்கள் மற்ற ஜனங்களைத் தாக்கிப் [QE][QS2]பூமியின் கடைசிவரை தள்ளுவர்! [QE][QS]ஆமாம், மனாசே ஆயிரக்கணக்கான ஜனங்களையும், [QE][QS2]எப்பிராயீம் பத்தாயிரக்கணக்கான ஜனங்களையும் தள்ளியிருக்கிறார்கள்.” [QE]
18. {#1செபுலோன் மற்றும் இசக்காருக்கான ஆசீர்வாதம் } [PS]மோசே இதனைச் செபுலோனுக்குச் சொன்னான்: [PE][PBR] [QS]“செபுலோன், நீ வெளியே போகும்போது மகிழ்ச்சியாய் இரு. [QE][QS2]இசக்கார், நீ உன் கூடாரங்களாகிய தாபரத்தில் மகிழ்ச்சியாய் இரு. [QE]
19. [QS]அவர்கள் ஜனங்களை தங்கள் மலைக்கு அழைப்பார்கள். [QE][QS2]அவர்கள் அங்கே நல்ல பலிகளை செலுத்துவார்கள். [QE][QS]அவர்கள் கடலிலிருந்து செல்வங்களையும் [QE][QS2]கடற்கரையிலிருந்து பொக்கிஷங்களையும் எடுப்பார்கள்.” [QE]
20. {#1காத்துக்குரிய ஆசீர்வாதம் } [PS]மோசே இதனைச் சொன்னார். [PE][PBR] [QS]“தேவனைப் போற்றுங்கள்.அவர் காத்திற்கு மிகுதியான நாட்டைக் கொடுத்தவர்! [QE][QS2]காத் ஒரு சிங்கத்தைப் போன்றவன். அவன்படுத்துக் காத்திருக்கிறான். பிறகு, அவன் தாக்கி மிருகத்தைத் துண்டுகளாகக் கிழிப்பான். [QE]
21. [QS]அவன் அவனுக்குரிய சிறந்த பகுதியைத் தேர்ந்தெடுக்கிறான். [QE][QS2]அவன் அரசனின் பாகத்தை எடுக்கிறான். [QE][QS]ஜனங்களின் தலைவர்கள் அவனிடம் வருகிறார்கள். [QE][QS2]கர்த்தர் சொன்ன நல்லவற்றை அவன் செய்கிறான். [QE][QS2]இஸ்ரவேல் ஜனங்களுக்குச் சரியானதை அவன் செய்கிறான்.” [QE]
22. {#1தாணுக்குரிய ஆசீர்வாதம் } [PS]மோசே தாணைப்பற்றி இதனைச் சொன்னான்: [PE][PBR] [QS]“தாண் சிங்கத்தின் குட்டியாக இருக்கிறான். [QE][QS2]அது பாசானிலிருந்து வெளியே குதித்தது.” [QE]
23. {#1நப்தலிக்கான ஆசீர்வாதம் } [PS]மோசே நப்தலியைப் பற்றி இதனைச் சொன்னான்: [PE][PBR] [QS]“நப்தலி, ஏராளமான நல்லவற்றைப் பெறுவாய். [QE][QS2]கர்த்தர் உன்னை உண்மையாக ஆசீர்வதிப்பார். [QE][QS2]நீ கலிலேயா ஏரி உள்ள நாட்டைப் பெறுவாய்.” [QE]
24. {#1ஆசேருக்கான ஆசீர்வாதம் } [PS]மோசே ஆசேரைப் பற்றி இதனைச் சொன்னான்: [PE][PBR] [QS]“மகன்கள் அனைவரிலும், ஆசீர்வதிக்கப்பட்டவனாக ஆசேர் இருக்கிறான். [QE][QS2]அவன் தனது சகோதரர்களுக்கு பிரியமானவனாக இருக்கட்டும். அவன் தனது கால்களை எண்ணெயில் கழுவட்டும். [QE]
25. [QS]உனது வாசல்கள் இரும்பாலும் வெண்கலத்தாலும் செய்யப்பட்ட பூட்டுகளைப் பெறட்டும். [QE][QS2]உனது வாழ்நாள் முழுவதும் நீ பலத்தோடு இருப்பாய்.” [QE]
26. {#1மோசே தேவனைப் புகழுகிறான் } [QS]“யெஷுரனுடைய, தேவனைப் போன்றவர் எவருமில்லை! [QE][QS2]தேவன் உனக்கு உதவுவதற்காகத் தமது மகிமையோடு மேகங்களின் மேல் சவாரி செய்து வானங்களின் மேல் வருகிறார். [QE]
27. [QS]தேவன் என்றென்றும் வாழ்கிறார். [QE][QS2]அவர் உனது பாதுகாப்பான இடம். [QE][QS]தேவனின் வல்லமை என்றென்றும் தொடரும்! [QE][QS2]அவர் உன்னைப் பாதுகாத்துக்கொண்டிருக்கிறார். [QE][QS]உனது பகைவர்கள் உன் நாட்டை விட்டு விலகும்படி தேவன் துரத்துவார். [QE][QS]அவர், ‘பகைவரை அழித்துப்போடு’ என்று சொல்லுவார். [QE]
28. [QS]எனவே இஸ்ரவேல் பாதுகாப்பில் வாழும். [QE][QS2]யாக்கோபின் ஊற்று அவர்களுக்கு உரியதாக இருக்கும். [QE][QS]அவர்கள் தானியமும், திராட்சை ரசமும் நிறைந்த நாட்டைப் பெறுவார்கள். [QE][QS2]அந்த நாடு மிகுதியான மழையைப் பெறும். [QE]
29. [QS]இஸ்ரவேலே, நீ ஆசீர்வதிக்கப்பட்டவன். [QE][QS2]வேறு எந்த நாடும் உன்னைப் போன்றில்லை. [QE][QS]கர்த்தர் உன்னைக் காப்பாற்றினார். [QE][QS2]கர்த்தர் உனக்குப் பாதுகாப்பான கேடயத்தைப் போன்றிருக்கிறார்! [QE][QS2]கர்த்தர் பலமுள்ள வாளைப் போன்றும் இருக்கிறார். [QE][QS]உனது பகைவர்கள் உனக்குப் பயப்படுவார்கள். [QE][QS2]நீ அவர்களது பரிசுத்த இடங்களை மிதிப்பாய்!” [QE][PBR]