1. {#1இஸ்ரவேலுக்கான சோகப்பாடல் } [PS]இஸ்ரவேல் ஜனங்களே, இந்தப் பாடலைக் கேளுங்கள். இந்தச் மரணப் பாடல் உங்களைப் பற்றியதுதான். [PE][PBR]
2. [QS]இஸ்ரவேல் கன்னி விழுந்தாள். [QE][QS2]அவள் இனிமேல் எழமாட்டாள். [QE][QS]அவள் தனியாக விடப்பட்டாள். புழுதியில் கிடக்கிறாள். [QE][QS2]அவளைத் தூக்கிவிட எவருமில்லை. [QE][PBR]
3. [PS]எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: [PE][PBR] [QS]“1,000 ஆட்களோடு நகரை விட்டுப்போன அதிகாரிகள், [QE][QS2]100 ஆட்களோடு திரும்பி வருவார்கள், [QE][QS]100 ஆட்களோடு நகரை விட்டுப்போன [QE][QS2]அதிகாரிகள் 10 ஆட்களோடு திரும்பி வருவார்கள்.” [QE]
4. {#1கர்த்தர் இஸ்ரவேலரைத் திரும்பிவர உற்சாகப்படுத்துகிறார் } [QS]கர்த்தர் இதனை இஸ்ரவேல் நாட்டிடம் கூறுகிறார்: [QE][QS]“என்னைத் தேடிவந்து, வாழுங்கள். [QE]
[QS2]5. ஆனால் பெத்தேலைப் பார்க்காதீர்கள். [QE][QS]கில்காலுக்கும் போகாதீர்கள். [QE][QS2]எல்லையைக் கடந்து பெயர்செபாவிற்குப் போகாதீர்கள். [QE][QS]கில்காலிலுள்ள ஜனங்கள் சிறைபிடிக்கப்படுவார்கள். [QE][QS2]பெத்தேல் அழிக்கப்படும். [QE]
6. [QS]கர்த்தரிடம் போய் வாழுங்கள். [QE][QS2]நீங்கள் கர்த்தரிடம் போகாவிட்டால் பிறகு யோசேப்பின் வீட்டில் நெருப்பு பற்றும். [QE][QS2]அந்நெருப்பு யோசேப்பின் வீட்டை அழிக்கும். [QE][QS2]பெத்தேலில் அந்நெருப்பை எவராலும் நிறுத்தமுடியாது. [QE]
7. [QS](7-9)நீங்கள் உதவிக்காகக் கர்த்தரிடம் போக வேண்டும். [QE][QS2]தேவன் நட்சத்திரக் கூட்டங்களைப் படைத்தார். [QE][QS]அவர் இருளைக் காலை ஒளியாக மாற்றுகிறார். [QE][QS2]அவர் பகல் ஒளியை இரவின் இருளாக மாற்றுகிறார். [QE][QS]அவர் கடலிலுள்ள தண்ணீரை அழைத்து, அதனை பூமியில் ஊற்றுகிறார். [QE][QS2]அவரது நாமம் யேகோவா. [QE][QS]அவர் ஒரு பலமான நகரைப் பாதுகாப்பாக [QE][QS2]வைத்து இன்னொரு பலமான நகரை அழிய விடுகிறார்.” [QE]{#1இஸ்ரவேலர்கள் செய்த பாவச்செயல்கள் } [QS]நீங்கள் நன்மையை விஷமாக மாற்றுகிறீர்கள். [QE][QS2]நீங்கள் நீதியைக் கொல்லுகிறீர்கள், கொன்று தரையில் விழவிடுகிறீர்கள். [QE]
8.
9.
10. [QS]தீர்க்கதரிசிகளே. பொது இடங்களுக்குச் சென்று ஜனங்கள் செய்கிற தீமைகளுக்கு எதிராகப் பேசுங்கள். [QE][QS2]அத்தீர்க்கதரிசிகள் நன்மையான எளிய உண்மைகளைப் போதிக்கிறார்கள். ஜனங்கள் அத்தீர்க்கதரிசிகளை வெறுக்கிறார்கள். [QE]
11. [QS]நீங்கள் நியாயமற்ற வரிகளை எளிய ஜனங்களிடம் வசூலிக்கிறீர்கள். [QE][QS2]நீங்கள் கோதுமையைச் சுமைச் சுமையாக அவர்களிடமிருந்து எடுக்கிறீர்கள். [QE][QS]நீங்கள் செதுக்கப்பட்ட கற்களால் அழகான வீடுகளைக் கட்டுகிறீர்கள். [QE][QS2]ஆனால் அவ்வீடுகளில் நீங்கள் வாழமாட்டீர்கள். [QE][QS]நீங்கள் அழகான திராட்சைத் தோட்டங்களைப் பயிர் செய்கிறீர்கள். [QE][QS2]ஆனால் நீங்கள் அவற்றிலிருந்து மதுவைக் குடிக்கமாட்டீர்கள். [QE]
12. [QS]ஏனென்றால் நான் உங்களது அநேகப் பாவங்களை அறிவேன். [QE][QS]நீங்கள் சில தீயச் செயல்களைச் செய்திருக்கிறீர்கள். [QE][QS2]நீங்கள் நேர்மையானவர்களைப் புண்படுத்துகிறீர்கள். [QE][QS2]நீங்கள் தீமை செய்யப் பணம் வாங்குகிறீர்கள். [QE][QS2]நீங்கள் ஏழைகளுக்கு வழக்கு மன்றங்களில் நீதி வழங்குவதில்லை. [QE]
13. [QS]அப்போது ஞானமிக்க ஆசிரியர்கள் அமைதியாக இருப்பார்கள். [QE][QS2]ஏனென்றால் இது கெட்ட நேரம். [QE]
14. [QS]நீங்கள் தேவன் உங்களோடு இருப்பதாகச் சொல்கிறீர்கள். [QE][QS2]எனவே நீங்கள் தீமையையல்ல, நன்மையைச் செய்யவேண்டும். [QE][QS]அப்போது நீங்கள் வாழ்வீர்கள். [QE][QS2]சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் உண்மையில் உங்களோடு இருப்பார். [QE]
15. [QS]தீமையை வெறுத்து, நன்மையை விரும்புங்கள். [QE][QS2]வழக்கு மன்றங்களுக்கு நியாயத்தைக் கொண்டு வாருங்கள். [QE][QS]பிறகு சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் [QE][QS2]யோசேப்பு குடும்பத்தில் மீதியிருப்பவர்களிடம் இரக்கமாயிருப்பார். [QE]
16. {#1பெருந்துக்க காலம் வந்து கொண்டிருக்கிறது } [QS]என் ஆண்டவராகிய சர்வ வல்லமையுள்ள தேவன் கூறுகிறார். [QE][QS]“ஜனங்கள் பொது இடங்களில், அழுதுகொண்டிருப்பார்கள். [QE][QS2]ஜனங்கள் தெருக்களில் அழுதுகொண்டிருப்பார்கள். [QE][QS2]ஜனங்கள் ஒப்பாரி வைப்பவர்களை வாடகைக்கு அமர்த்துவார்கள். [QE]
17. [QS]ஜனங்கள் திராட்சைத் தோட்டங்களில் அழுதுகொண்டிருப்பார்கள். [QE][QS2]ஏனென்றால் நான் அவ்வழியே கடந்துபோய் உன்னைத் தண்டிப்பேன்” என்று கர்த்தர் கூறினார். [QE]
18. [QS]உங்களில் சிலர் [QE][QS2]கர்த்தருடைய நியாயத்தீர்ப்புக்குரிய நாளைப்பார்க்க விரும்புகிறீர்கள். [QE][QS]நீங்கள் அந்நாளை ஏன் பார்க்க விரும்புகிறீர்கள்? [QE][QS2]கர்த்தருடைய அந்தச் சிறப்பு நாள் ஒளியை அல்ல அந்தகாரத்தையே கொண்டு வரும். [QE]
19. [QS]நீங்கள், சிங்கத்திடமிருந்து தப்பி ஓடி வந்த ஒருவன், [QE][QS2]கரடியால் தாக்கப்பட்டது போன்று ஆவீர்கள். [QE][QS]நீங்கள், ஒருவன் பாதுகாப்பிற்காகத் [QE][QS2]தன் வீட்டிற்குள் நுழைந்து சுவற்றில் சர்ய்ந்தபோது. [QE][QS2]பாம்பால் கடிக்கப்பட்டவனைப் போன்று இருப்பீர்கள். [QE]
20. [QS]கர்த்தருடைய சிறப்பு நாள் ஒளியை அல்ல அந்தகாரத்தைக் கொண்டு வரும். [QE][QS2]அந்நாள் மகிழ்ச்சியை கொண்டு வராது ஆனால் துக்கத்தைக் கொண்டு வரும். [QE][QS2]அந்நாள் கொஞ்சமும் ஒளி இல்லாத அந்தகாரமான நாளாயிருக்கும். [QE]
21. {#1இஸ்ரவேலின் தொழுதுகெள்ளுதலை கர்த்தர் ஏற்க மறுக்கிறார் } [QS]“நான் உங்கள் விடுமுறை நாட்களை வெறுக்கிறேன். [QE][QS2]நான் அவற்றை ஏற்கமாட்டேன். [QE][QS2]நான் உங்கள் ஆன்மீகக் கூட்டங்களால் மகிழவில்லை. [QE]
22. [QS]நீங்கள் தகனபலியையும் தானியக் காணிக்கையையும் எனக்குக் கொடுத்தாலும் [QE][QS2]நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். [QE][QS]நீங்கள் தரும் சமாதான பலியில் உள்ள [QE][QS2]கொழுத்த மிருகங்களைப் பார்க்கக்கூடமாட்டேன். [QE]
23. [QS]நீங்கள் இங்கிருந்து உங்கள் இரைச்சலான பாடல்களை அகற்றுங்கள். [QE][QS2]நான் உங்கள் வீணைகளில் வரும் இசையைக் கேட்கமாட்டேன். [QE]
24. [QS]நீங்கள் உங்கள் நாட்டில் நியாயத்தை ஆற்றைப்போன்று ஓடவிடவேண்டும். [QE][QS2]நன்மையானது ஓடையைப் போன்று உங்கள் நாட்டில் வற்றாமல் ஓடட்டும். [QE]
25. [QS]இஸ்ரவேலே, நீங்கள் எனக்கு பலிகளையும் [QE][QS2]காணிக்கைகளையும் வனாந்தரத்தில் 40 ஆண்டுகளாகக் கொடுத்தீர்கள். [QE]
26. [QS]ஆனால் நீங்கள் உங்கள் அரசனான சக்கூத், கைவான் சிலைகளையும் சுமந்தீர்கள். [QE][QS2]நீங்களாக நட்சத்திரத்தை உங்கள் தெய்வமாக்கினீர்கள். [QE]
27. [QS]எனவே நான் உங்களை தமஸ்குவுக்கு அப்பால் [QE][QS2]சிறையாகச் செல்லச் செய்வேன்” [QE][QS]என்று கர்த்தர் சொல்லுகிறார். [QE][QS2]அவரது நாமம் சர்வ வல்லமையுள்ள தேவன். [QE]