1. {#1கர்த்தருடைய துதிகளைப் பாடும் தாவீதின் பாட்டு } [PS]கர்த்தர் தாவீதை சவுல் மற்றும் [PE][PS]பகைவர்களிடமிருந்து பாதுகாத்த போது, தாவீது கர்த்தரைப் புகழ்ந்து பாடிய பாட்டு. [PE][PBR]
2. [QS]கர்த்தர் என் கன்மலை என் கோட்டை என் பாதுகாப்பிடம். [QE]
[QS2]3. அவர் எனது தேவன். [QE][QS2]நான் பாதுகாப்பைத் தேடி ஓடும் கன்மலை. [QE][QS]தேவன் எனது கேடயம். [QE][QS]அவரது ஆற்றல் என்னைக் காக்கிறது. [QE][QS2]மலைகளின் உச்சியில் நான் மறைந்துக் கொள்ள ஏதுவான என் பாதுகாப்பிடம் கர்த்தர் ஆவார். [QE][QS]கொடிய பகைவரிடமிருந்து [QE][QS2]அவர் என்னைக் காக்கிறார். [QE]
4. [QS]அவர்கள் என்னைக் கேலிச் செய்தனர். [QE][QS2]ஆனால் நான் கர்த்தரை உதவிக்கு அழைத்தேன். [QE][QS]என் பகைவரிடமிருந்து நான் பாதுகாக்கப்பட்டேன்! [QE][PBR]
5. [QS]என் பகைவர்கள் என்னைக் கொல்ல முயற்சித்துக்கொண்டிருந்தனர்! [QE][QS]மரணத்தின் அலைகள் என்னைச் சூழ்ந்தன. [QE][QS2]மரணத்தை நோக்கி இழுத்துச் செல்லும் வெள்ளத்தில் நான் அகப்பட்டேன். [QE]
6. [QS]மயானக் கயிறுகள் என்னைச் சுற்றிக் கட்டின. [QE][QS2]மரணத்தின் கண்ணி எனக்கு முன் இருந்தது. [QE]
7. [QS]மாட்டிக்கொண்ட நான் கர்த்தரிடம் உதவிக் கேட்டேன். [QE][QS2]ஆம், எனது தேவனை அழைத்தேன். [QE][QS]தேவன் தமது ஆலயத்தில் இருந்து என் குரலைக் கேட்டார். [QE][QS2]அவர் என் அழுகையைக் கேட்டார். [QE]
8. [QS]பின்பு பூமி அசைந்து நடுங்கியது, பரலோகத்தின் அடித்தளம் ஆடியது. [QE][QS2]ஏனெனில் கர்த்தர் கோபமாயிருந்தார். [QE]
9. [QS]தேவனுடைய நாசியிலிருந்து புகையெழுந்தது. [QE][QS2]எரியும் தழல் அவரின் வாயிலிருந்து வந்தது. [QE][QS2]எரியும் பொறிகள் அவரிடமிருந்து பறந்தன. [QE]
10. [QS]கர்த்தர் ஆகாயத்தைக் கீறி கீழிறங்கி வந்தார்! [QE][QS2]அவர் கட்டியான கறுப்பு மேகத்தில் நின்றார்! [QE]
11. [QS]அவர் பறந்துக்கொண்டிருந்தார் கேருபீன்கள் மீது பறந்து வந்தார். [QE][QS2]காற்றின் மீது பயணம் வந்தார். [QE]
12. [QS]கர்த்தர் கருமேகத்தைத் தன்னைச் சுற்றி ஒரு கூடாரம்போல் அணிந்தார். [QE][QS2]அவர் கட்டியான இடி மேகங்களில் தண்ணீரைச் சேகரித்தார். [QE]
13. [QS]அவரது ஒளி நிலக்கரியைக் கூட எரிய வைக்கும் பிரகாசத்தைக் கொண்டது! [QE]
14. [QS]வானிலிருந்து இடியைப்போல கர்த்தர் முழங்கினார்! [QE][QS2]உன்னதமான தேவன் தனது குரலை எல்லோரும் கேட்கும்படி செய்தார். [QE]
15. [QS]கர்த்தர் தனது அம்புகளை எய்து [QE][QS2]பகைவர்களைப் பயந்தோடச் செய்தார். [QE][QS]கர்த்தர் மின்னலை அனுப்பினார் [QE][QS2]ஜனங்கள் குழம்பிச் சிதறியோடினார்கள். [QE][PBR]
16. [QS]கர்த்தாவே நீர் பலமாகப் பேசினீர். [QE][QS2]பலமுள்ள காற்று உங்கள் வாயிலிருந்து அடித்தது. [QE][QS]தண்ணீர் விலகிற்று. [QE][QS2]எங்களால் கடலின் அடிப்பாகத்தைப் பார்க்கமுடிந்தது. [QE][QS2]பூமியின் அடித்தளத்தையும் எங்களால் பார்க்க முடிந்தது. [QE][PBR]
17. [QS]கர்த்தர் எனக்கும் உதவினார்! [QE][QS2]கர்த்தர் மேலிருந்து கீழே வந்தார். கர்த்தர் என்னை துன்பத்திலிருந்துக் காப்பாற்றினார். [QE]
18. [QS]என் பகைவர்கள் என்னைவிட பலமானவர்கள். [QE][QS2]அவர்கள் என்னை வெறுத்தார்கள். [QE][QS]என் பகைவர்கள் என்னை வெல்லக் கூடியவர்கள்! [QE][QS2]எனவே தேவன் தாமே என்னை பாதுகாத்தார். [QE]
19. [QS]நான் தொல்லையில் இருந்தேன். [QE][QS2]என் பகைவர்கள் என்னை தாக்கினார்கள். ஆனால் எனக்கு உதவிச்செய்ய கர்த்தர் இருந்தார்! [QE]
20. [QS]கர்த்தர் என்மேல் பிரியமாயிருக்கிறார். [QE][QS]எனவே என்னைக் காத்தார். [QE][QS2]பாதுகாப்பான இடத்திற்கு என்னை அழைத்துச் சென்றார். [QE]
21. [QS]கர்த்தர் எனக்கான வெகுமதியை எனக்குத் தருவார். [QE][QS2]ஏனெனில் நான் சரியானவற்றையே செய்தேன். [QE][QS]நான் தவறிழைக்கவில்லை. [QE][QS2]எனவே அவர் எனக்கு நல்லதைச் செய்வார். [QE]
22. [QS]ஏனென்றால் நான் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தேன்! [QE][QS2]எனது தேவனுக்கு எதிரான பாவத்தைச் செய்யவில்லை. [QE]
23. [QS]நான் கர்த்தருடைய தீர்மானங்களை நினைவில் வைத்திருந்தேன் [QE][QS2]அவரது சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்தேன்! [QE]
24. [QS]நான் பரிசுத்தமானவனாகவும் களங்கமற்றவனாகவும் அவர் முன்னிலையில் இருந்தேன். [QE]
25. [QS]எனவே கர்த்தர் எனக்கு வெகுமதியைத் தருவார்! [QE][QS2]ஏனெனில் சரியானதையே நான் செய்தேன்! [QE][QS]நான் தவறு செய்யவில்லை. [QE][QS2]எனவே அவர் எனக்கு நலமானதைச் செய்வார். [QE][PBR]
26. [QS]ஒருவன் உண்மையிலேயே உம்மை விரும்பினால் அவனுக்கு உண்மையான அன்பை நீர் காட்டுவீர். [QE][QS2]ஒருவன் உம்மிடம் உண்மையாக இருந்தால் நீர் அவனிடம் உண்மையாக இருப்பீர். [QE]
27. [QS]கர்த்தாவே, யார் நல்லவராகவும் பரிசுத்தமானவராகவும் இருக்கிறார்களோ, அவர்களுக்கு நீர் நல்லவராகவும், பரிசுத்தமானவராகவும் இருக்கிறீர். [QE][QS2]உம்மிடம் மாறுபாடு உள்ளவர்களுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் நடந்துகொள்வீர். [QE]
28. [QS]கர்த்தாவே, சிறுமைப்பட்ட ஜனங்களுக்கு உதவுகிறீர். [QE][QS2]மேட்டிமையானவர்களை நாணமுற வைக்கிறீர். [QE]
29. [QS]கர்த்தாவே, நீர் என்னுடைய விளக்கு. [QE][QS2]கர்த்தர் என்னைச் சுற்றியுள்ள இருளைப் போக்கி ஒளி தருகிறார்! [QE]
30. [QS]கர்த்தாவே, உம்முடைய உதவியால் நான் வீரர்களுடன் பாயமுடியும். [QE][QS2]தேவனுடைய உதவியால் பகைவர்களின் சுவர்களில் என்னால் ஏறமுடியும். [QE][PBR]
31. [QS]தேவனுடைய ஆற்றல் முழுமையானது. [QE][QS2]கர்த்தருடைய சொல் சோதித்துப்பார்க்கப்பட்டது. [QE][QS2]அவரை நம்புகிறவர்களை அவர் பாதுகாக்கிறார். [QE]
32. [QS]கர்த்தரைத் தவிர வேறு தேவன் கிடையாது. [QE][QS2]நமது தேவனைத் தவிர வேறு கன்மலை இல்லை. [QE]
33. [QS]தேவன் என் அரண். [QE][QS2]அவர் தூயவர்களைச் சரியாக வாழவைக்கிறார். [QE]
34. [QS]தேவன் நான் ஒரு மானைப்போல வேகமாக ஓடும்படி செய்கிறார்! [QE][QS2]உயரமான இடங்களில் நான் நிலையாக நிற்கும்படி செய்கிறார். [QE]
35. [QS]தேவன் என்னைப் போருக்குப் பயிற்சி தருகிறார். [QE][QS2]அதனால் என் கைகள் சக்தி வாய்ந்த அம்புகளைச் செலுத்த முடியும். [QE][PBR]
36. [QS]தேவனே, நீர் என்னைப் பாதுகாத்தீர். [QE][QS2]எனக்கு வெற்றி அளித்தீர். [QE][QS]என் பகைவரை நான் வெல்ல உதவினீர். [QE]
37. [QS]என் கால்களையும் மூட்டுகளையும் பலப்படுத்தினீர். [QE][QS2]எனவே நான் தடுமாறாமல் வேகமாக நடக்க முடியும். [QE]
38. [QS]நான் பகைவர்களை விரட்ட வேண்டும். [QE][QS2]அவர்களை இறுதியில் அழிக்கும்வரை! [QE][QS]அவர்களை முற்றிலும் அழிக்கும்வரை நான் திரும்பி வரமாட்டேன். [QE]
39. [QS]என் பகைவர்களைத் தோற்கடித்தேன். [QE][QS2]அவர்களை வென்றேன்! [QE][QS]அவர்கள் மீண்டும் எழமாட்டார்கள். [QE][QS2]ஆம், என் பகைவர்கள் என் பாதத்தில் விழுந்தார்கள். [QE][PBR]
40. [QS]தேவனே நீர் என்னை போரில் வலிமையுடையவன் ஆக்கினீர். [QE][QS2]என் பகைவர்கள் என் முன்னே வந்து விழும்படி செய்தீர். [QE]
41. [QS]என் பகைவர்களைத் தலைக்குனிய வைப்பதில் நீர் உதவினீர், [QE][QS2]என் பகைவர்களின் கழுத்தை வெட்டும்படியாக அவர்கள் கழுத்தை என் முன் ஒப்புவித்தீர்! [QE]
42. [QS]என் பகைவர்கள் உதவிக்கு ஆள் தேடினார்கள். [QE][QS2]ஆனால் யாரும் அவர்கள் உதவிக்கு வரவில்லை. [QE][QS]அவர்கள் கர்த்தரிடம் கூட கேட்டார்கள். [QE][QS2]ஆனால் அவர் அவர்களுக்குப் பதில் அளிக்கவில்லை. [QE]
43. [QS]என் பகைவர்களைத் துண்டு துண்டாக்கினேன். [QE][QS2]அவர்கள் நிலத்தின் மீது புழுதியானார்கள். [QE][QS]என் பகைவர்களை நான் சிதறடித்தேன். [QE][QS2]அவர்கள் மீது தெருப்புழுதியென நினைத்து நடந்தேன். [QE][PBR]
44. [QS]நீர் எனக்கு எதிராக போரிட்டவரிடமிருந்து என்னைக் காத்தீர். [QE][QS2]நீர் அந்தத் தேசங்களை ஆள்பவனாக என்னை ஆக்கினீர். [QE][QS2]எனக்குத் தெரியாதவர்கள் இப்போது எனக்குப் பணி செய்கிறார்கள்! [QE]
45. [QS]பிற தேசத்தவர் எனக்கு கீழ்ப்படிகின்றார்கள்! [QE][QS2]என்னுடைய கட்டளையைக் கேட்கும்போது விரைந்து பணிவிடை செய்கிறார்கள், அயல் நாட்டவர்கள் எனக்குப் பயப்படுகிறார்கள்! [QE]
46. [QS]அந்த அயல்நாட்டினர் பயத்தால் நடுங்குகிறார்கள். [QE][QS2]பயந்துகொண்டே அவர்களின் மறைவிடங்களிலிருந்து வெளியில் வருகிறார்கள். [QE][PBR]
47. [QS]கர்த்தர் உயிரோடிருக்கிறார். [QE][QS2]எனது கன்மலையான அவரைத் துதிப்பேன்! [QE][QS]தேவன் உயர்ந்தவர்! [QE][QS2]என்னைப் பாதுகாக்கும் ஒரு கன்மலை அவர். [QE]
48. [QS]என் பகைவர்களை எனக்காகத் தண்டிக்கும் தேவன் அவர். [QE][QS2]ஜனங்களை என் ஆட்சியின் கீழ் அவர் வைக்கிறார். [QE]
49. [QS]தேவனே, என் பகைவரிடமிருந்து என்னைக் காத்தீர்! [QE][PBR] [QS]என்னை எதிர்த்தவர்களைத் தோற்றோடச் செய்தீர். [QE][QS2]கொடியவர்களிடமிருந்து என்னைப் பாதுகாத்தீர்! [QE]
50. [QS]கர்த்தாவே, ஆகையால் எல்லா தேசங்களும் அறியும்படி நாம் உம்மைத் துதிப்பேன். [QE][QS2]எனவே உமது பேரில் நான் பாடல்கள் பாடுகிறேன். [QE][PBR]
51. [QS]கர்த்தர், தன் அரசன் போரில் வெல்லும்படி செய்கிறார்! [QE][QS2]கர்த்தர் தன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசனுக்கு உண்மையான அன்பைக் காட்டுகிறார். [QE][QS2]அவர் தாவீதுக்கும் அவன் சந்ததிகளுக்கும் எப்போதும் உண்மையாக இருப்பார்! [QE]