1. {எருசலேமின் பாவமும் மீட்பும்} [PS] [QS][SS] கலகம் செய்ததும் தீட்டுப்பட்டதும்[SE][SS] மக்களை ஒடுக்கியதுமான நகருக்கு[SE][SS] ஐயோ கேடு![SE][QE]
2. [QS][SS] எந்தச் சொல்லுக்கும் அவள்[SE][SS] செவி சாய்ப்பதில்லை;[SE][SS] கண்டிப்புரையை அவள் ஏற்பதுமில்லை;[SE][SS] ஆண்டவர்மேல் அவள்[SE][SS] நம்பிக்கை வைப்பதில்லை;[SE][SS] தன் கடவுளை அண்டி வருவதுமில்லை.[SE][QE]
3. [QS][SS] அந்நகரின் தலைவர்கள்[SE][SS] கர்ச்சனை செய்யும் சிங்கங்கள்;[SE][SS] அதன் நீதிபதிகள்,[SE][SS] மாலையில் கிடைப்பதை[SE][SS] காலைவரை வைத்திராத ஓநாய்கள்.[SE][QE]
4. [QS][SS] அதன் இறைவாக்கினர்[SE][SS] வீண் பெருமை பேசும்[SE][SS] வஞ்சகமிக்க மனிதர்;[SE][SS] அதன் குருக்கள்[SE][SS] புனிதமானதைக் களங்கப்படுத்தித்[SE][SS] திருச்சட்டத்தை உதறித் தள்ளுபவர்கள்.[SE][QE]
5. [QS][SS] அதனுள் இருக்கும் ஆண்டவரோ[SE][SS] நீதியுள்ளவர்;[SE][SS] அவர் கொடுமை செய்யாதவர்;[SE][SS] காலைதோறும் அவர்[SE][SS] தமது தீர்ப்பை வழங்குகின்றார்;[SE][SS] வைகறைதோறும் அது[SE][SS] தவறாமல் வெளிப்படும்;[SE][SS] ஆனால் கொடியவனுக்கு[SE][SS] வெட்கமே இல்லை.[SE][QE]
6. [QS][SS] வேற்றினத்தாரை நான்[SE][SS] வெட்டி வீழ்த்தினேன்;[SE][SS] அவர்களுடைய கோட்டைகளைத்[SE][SS] தகர்த்தெறிந்தேன்;[SE][SS] அவர்களுடைய தெருக்களை[SE][SS] வெறுமையாக்கினேன்;[SE][SS] அவற்றில் நடந்துசெல்பவர்[SE][SS] எவருமில்லை;[SE][SS] யாரும் இராதபடி, எவரும் குடியிராதபடி[SE][SS] அவர்களுடைய நகர்கள்[SE][SS] பாழடைந்து போயின.[SE][QE]
7. [QS][SS] “உறுதியாக எனக்கு நீ அஞ்சி நடப்பாய்;[SE][SS] எனது கண்டிப்புரையை[SE][SS] ஏற்றுக் கொள்வாய்;[SE][SS] நான் வழங்கிய[SE][SS] தண்டனைத் தீர்ப்புகளை எல்லாம்[SE][SS] நீ மறக்கமாட்டாய்” என்று[SE][SS] நான் எண்ணினேன்;[SE][SS] அவர்களோ தங்கள் செயல்களைச்[SE][SS] சீர்கேடாக்க[SE][SS] இன்னும் மிகுதியாய் ஆவல் கொண்டனர்.[SE][QE]
8. [QS][SS] ஆதலால் ஆண்டவர்[SE][SS] இவ்வாறு கூறுகின்றார்:[SE][SS] “நான் குற்றம் சாட்டுவதற்கு[SE][SS] எழுந்திடும் அந்த நாளுக்காகக் காத்திரு;[SE][SS] வேற்றினத்தாரை ஒன்று சேர்த்து,[SE][SS] அரசுகளையும் ஒன்று திரட்டி,[SE][SS] என் கடும்சினத்தையும்[SE][SS] கோபத்தீயின் கொடுமை முழுவதையும்,[SE][SS] அவர்கள் மேல் கொட்டிவிடத்[SE][SS] திட்டமிட்டுள்ளேன்;[SE][SS] ஏனெனில், என் வெஞ்சினத் தீக்கு[SE][SS] உலகெல்லாம் இரையாகும்.[SE][QE]
9. [QS][SS] அக்காலத்தில் நான்[SE][SS] மக்களினங்களுக்குத்[SE][SS] தூய நாவினை அருள்வேன்;[SE][SS] அப்போது அவர்கள் அனைவரும்[SE][SS] ஆண்டவரின் பெயரால்[SE][SS] மன்றாடி ஒருமனப்பட்டு[SE][SS] அவருக்குப் பணிபுரிவார்கள்.[SE][QE]
10. [QS][SS] எத்தியோப்பியாவின் ஆறுகளுக்கும்[SE][SS] அப்பாலிருந்து என்னை மன்றாடுவோர் —[SE][SS] சிதறுண்ட என் மக்கள் —[SE][SS] எனக்குக் காணிக்கை[SE][SS] கொண்டு வருவார்கள்.[SE][QE]
11. [QS][SS] எனக்கு எதிராக எழுந்து[SE][SS] நீ செய்த குற்றங்களை முன்னிட்டு[SE][SS] அந்நாளில் அவமானம் அடையமாட்டாய்;[SE][SS] ஏனெனில், அப்பொழுது[SE][SS] இறுமாப்புடன் அக்களித்திருப்போரை[SE][SS] உன்னிடமிருந்து அகற்றிவிடுவேன்;[SE][SS] இனி ஒருபோதும் எனது திருமலையில்[SE][SS] செருக்கு அடையமாட்டாய்.[SE][QE]
12. [QS][SS] ஏழை எளியோரை உன் நடுவில்[SE][SS] நான் விட்டுவைப்பேன்;[SE][SS] அவர்கள் ஆண்டவரின் பெயரில்[SE][SS] நம்பிக்கை கொள்வார்கள்.[SE][QE]
13. [QS][SS] இஸ்ரயேலில் எஞ்சியோர்[SE][SS] கொடுமை செய்யமாட்டார்கள்;[SE][SS] வஞ்சகப் பேச்சு[SE][SS] அவர்களது வாயில் வராது;[SE][SS] அச்சுறுத்துவார் யாருமின்றி,[SE][SS] அவர்கள் மந்தைபோல் மேய்ந்து[SE][SS] இளைப்பாறுவார்கள்.” [* திவெ 14:5.[QE]. ] [SE][PE][QE]
14. {மகிழ்ச்சிப் பாடல்} [PS] [QS][SS] மகளே சீயோன்! மகிழ்ச்சியால் ஆர்ப்பரி;[SE][SS] இஸ்ரயேலே! ஆரவாரம் செய்;[SE][SS] மகளே எருசலேம்![SE][SS] உன் முழு உள்ளத்தோடு[SE][SS] அகமகிழ்ந்து அக்களி.[SE][QE]
15. [QS][SS] ஆண்டவர் உன் தண்டனைத் தீர்ப்பைத்[SE][SS] தள்ளிவிட்டார்;[SE][SS] உன் பகைவர்களை அப்புறப்படுத்தினார்;[SE][SS] இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர்[SE][SS] உன் நடுவில் இருக்கின்றார்;[SE][SS] நீ இனி எந்தத் தீங்கிற்கும் அஞ்சமாட்டாய்.[SE][QE]
16. [QS][SS] அந்நாளில் எருசலேமை நோக்கி[SE][SS] இவ்வாறு கூறப்படும்:[SE][SS] “சீயோனே, அஞ்சவேண்டாம்;[SE][SS] உன் கைகள் சோர்வடைய வேண்டாம்.[SE][QE]
17. [QS][SS] உன் கடவுளாகிய ஆண்டவர்[SE][SS] உன் நடுவில் இருக்கின்றார்;[SE][SS] அவர் மாவீரர்; மீட்பு அளிப்பவர்;[SE][SS] உன்பொருட்டு அவர் மகிழ்ந்து[SE][SS] களிகூருவார்;[SE][SS] தம் அன்பினால் உனக்குப்[SE][SS] புத்துயிர் அளிப்பார்;[SE][SS] உன்னைக் குறித்து[SE][SS] மகிழ்ந்து ஆடிப்பாடுவார்.[SE][QE]
18. [QS][SS] அது திருவிழாக் காலம்போல் இருக்கும்.[SE][SS] உனது துன்பத்தை அகற்றிவிட்டேன்;[SE][SS] ஆகவே, இனி நீ இழிவடையமாட்டாய்.[SE][QE]
19. [QS][SS] இதோ!, உன்னை ஒடுக்கியவர்களை[SE][SS] அந்நாளில் நான் தண்டிப்பேன்;[SE][SS] கால் ஊனமுற்றவர்களைக்[SE][SS] காப்பாற்றுவேன்;[SE][SS] ஒதுக்கப்பட்டவர்களை ஒன்று சேர்ப்பேன்;[SE][SS] அவமானமுற்ற அவர்களை[SE][SS] உலகெங்கும் பெயரும் புகழும்[SE][SS] பெறச்செய்வேன்.[SE][QE]
20. [QS][SS] அக்காலத்தில் உங்களை[SE][SS] ஒன்றாய்க் கூட்டிச்சேர்த்து[SE][SS] உங்கள் தாய்நாட்டுக்கு[SE][SS] அழைத்து வருவேன்;[SE][SS] ஆம், உங்கள் கண்முன்பாகவே[SE][SS] உங்களை முன்னைய[SE][SS] நன்னிலைக்கு உயர்த்தி,[SE][SS] உலகின் எல்லா மக்களிடையேயும்[SE][SS] நீங்கள் பெயரும் புகழும்[SE][SS] பெறுமாறு செய்வேன்”[SE][SS] என்கிறார் ஆண்டவர்.[SE][PE]