தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
செப்பனியா
1. {மனந்திரும்ப அழைப்பு} [PS] [QS][SS] பண்புகெட்ட இனமே![SE][SS] பகுத்தறிவோடு நடந்துகொள்.[SE][QE]
2. [QS][SS] பதரைப்போல் நீங்கள்[SE][SS] தூற்றப்படுமுன்னே,[SE][SS] ஆண்டவரது கடும் சினம்[SE][SS] உங்கள் மேல் விழுமுன்னே,[SE][SS] ஆண்டவரது சினத்தின் நாள்[SE][SS] உங்கள்மேல் விழுமுன்னே,[SE][QE]
3. [QS][SS] நாட்டிலிருக்கும் எளியோரே![SE][SS] ஆண்டவரின் கட்டளையைக்[SE][SS] கடைப்பிடிப்போரே![SE][SS] அனைவரும் ஆண்டவரைத் தேடுங்கள்;[SE][SS] நேர்மையை நாடுங்கள்;[SE][SS] மனத்தாழ்மையைத் தேடுங்கள்;[SE][SS] ஆண்டவரது சினத்தின் நாளில்[SE][SS] ஒரு வேளை உங்களுக்குப்[SE][SS] புகலிடம் கிடைக்கும்.[SE][PE][QE]
4. {வேற்றினத்தாரின் அழிவு} [PS] [QS][SS] காசா குடியற்றுப்போகும்;[SE][SS] அஸ்கலோன் பாழடைந்துபோகும்;[SE][SS] அஸ்தோது நண்பகலில்[SE][SS] விரட்டியடிக்கப்படும்;[SE][SS] எக்ரோன் வேரோடு[SE][SS] பிடுங்கியெறியப்படும்.[SE][QE]
5. [QS][SS] கடற்கரையில் வாழும்[SE][SS] இனத்தாராகிய கெரேத்தியரே![SE][SS] உங்களுக்கு ஐயோ கேடு![SE][SS] ஆண்டவரின் வாக்கு[SE][SS] உங்களுக்கு எதிராய் உள்ளது;[SE][SS] பெலிஸ்தியரின் நாடே! கானானே![SE][SS] எவனும் குடியிராதபடி[SE][SS] நான் உன்னை அழித்து விடுவேன். [* எசா 14:29-31; எரே 47:1-7; எசே 25:15-17; யோவே 3:4-8; ஆமோ 1:6-8; செக் 9:5-7 ] [SE][QE]
6. [QS][SS] இவ்வாறு அந்தக் கடற்கரை நாடு[SE][SS] இடையரின் குடில்களுக்கும்[SE][SS] ஆடுகளின் பட்டிகளுக்குமே[SE][SS] ஏற்றதாகும். [* எசா 14:29-31; எரே 47:1-7; எசே 25:15-17; யோவே 3:4-8; ஆமோ 1:6-8; செக் 9:5-7 ] [SE][QE]
7. [QS][SS] அந்தக் கடற்கரை[SE][SS] யூதாவின் குடும்பத்தவருள்[SE][SS] எஞ்சியிருப்போர்க்கு உடைமையாகும்;[SE][SS] அங்கே அவர்கள்[SE][SS] தங்கள் ஆடுகளை மேய்த்து,[SE][SS] மாலையில் அஸ்கலோன் வீடுகளில்[SE][SS] படுத்திருப்பார்கள்;[SE][SS] ஏனெனில்[SE][SS] அவர்களுடைய கடவுளாகிய ஆண்டவர்[SE][SS] அவர்கள்மீது அக்கறை கொண்டு,[SE][SS] முன்னைய நன்னிலைக்கு[SE][SS] அவர்களை உயர்த்துவார். [* எசா 14:29-31; எரே 47:1-7; எசே 25:15-17; யோவே 3:4-8; ஆமோ 1:6-8; செக் 9:5-7 ] [SE][QE]
8. [QS][SS] மோவாபின் பழிப்புரைகளையும்[SE][SS] அம்மோனியரின் வசைமொழிகளையும்[SE][SS] நான் கேட்டேன்;[SE][SS] அவர்கள் என் மக்களை இழித்துரைத்து,[SE][SS] அவர்களின் நாட்டு[SE][SS] எல்லைகளைக் குறித்து[SE][SS] வீம்பு பேசியதையும் நான் கேட்டேன். [* எசா 14:29-31; எரே 47:1-7; எசே 25:15-17; யோவே 3:4-8; ஆமோ 1:6-8; செக் 9:5-7 ] [SE][QE]
9. [QS][SS] ஆதலால், படைகளின் ஆண்டவரும்,[SE][SS] இஸ்ரயேலின் வாழும் கடவுளுமாகிய[SE][SS] நான் ஆணையிட்டுக் கூறுகின்றேன்;[SE][SS] மோவாபு சோதோமைப்போல் ஆகும்;[SE][SS] அம்மோனியர்[SE][SS] கொமோராவைப்போல் ஆவர்;[SE][SS] இது உறுதி.[SE][SS] இந்நாடுகள்[SE][SS] காஞ்சொறி படரும் காடாகவும்,[SE][SS] உப்புப் பள்ளம் நிறைந்த[SE][SS] பாழ்நிலமாகவும் என்றும் இருக்கும்.[SE][SS] என் மக்களில் எஞ்சியோர்[SE][SS] அவர்களைக் கொள்ளையடிப்பர்;[SE][SS] என் மக்களுள் தப்பியோர்[SE][SS] அவர்களை அடிமைகளாக்கிக் கொள்வர். [* எசா 15:1-16:14; 25:10-12; எரே 48:1-49; எசே21:28-32; 25:1-11; ஆமோ1:13-15 ] [SE][QE]
10. [QS][SS] அவர்களுடைய இறுமாப்புக்குக்[SE][SS] கிடைக்கும் பயன் இதுவே;[SE][SS] ஏனெனில், படைகளின் ஆண்டவருடைய[SE][SS] மக்களுக்கு எதிராக[SE][SS] அவர்கள் பழித்துரைத்தார்கள்;[SE][SS] வீம்பு பேசினார்கள். [* எசா 15:1-16:14; 25:10-12; எரே 48:1-49; எசே21:28-32; 25:1-11; ஆமோ1:13-15; தொநூ 19:24 ] [SE][QE]
11. [QS][SS] ஆண்டவர் அவர்களை[SE][SS] அச்சமுறச் செய்வார்;[SE][SS] நாட்டின் தெய்வங்களை எல்லாம்[SE][SS] ஆற்றல் குன்றிப்போகச் செய்வார்.[SE][SS] வேற்றினத்தார் அனைவரும்[SE][SS] அவரவர்தம் தீவுகளில்[SE][SS] இருந்து கொண்டு[SE][SS] அவரையே வணங்குவர். [* எசா 15:1-16:14; 25:10-12; எரே 48:1-49; எசே21:28-32; 25:1-11; ஆமோ1:13-15 ] [SE][QE]
12. [QS][SS] எத்தியோப்பியரே![SE][SS] நீங்களும் எனது வாளால்[SE][SS] வெட்டி வீழ்த்தப்படுவீர்கள். [* எசா 15:1-16:14; 25:10-12; எரே 48:1-49; எசே21:28-32; 25:1-11; ஆமோ1:13-15 ] [SE][QE]
13. [QS][SS] வடதிசைக்கு எதிராகத்[SE][SS] தம் கையை ஓங்கி,[SE][SS] ஆண்டவர் அசீரியாவை அழித்திடுவார்;[SE][SS] நினிவே நகரைப் பாழடையச் செய்து,[SE][SS] வறண்ட பாலைநிலமாக்குவார். [* எசா 18:1-7 ] [SE][QE]
14. [QS][SS] அங்கே மந்தைகளும்[SE][SS] எல்லாவகை விலங்குகளும்[SE][SS] படுத்துக் கிடக்கும்;[SE][SS] தூண்களின் உச்சியில்[SE][SS] கூகையும் சாக்குருவியும்[SE][SS] தங்கியிருக்கும்;[SE][SS] பலகணியில் அமர்ந்தவாறு[SE][SS] ஆந்தை அலறும்;[SE][SS] நிலைக்கதவின்மேல் இருந்தவாறு[SE][SS] காகம் கரையும்;[SE][SS] கேதுரு மர வேலைப்பாடுகள்[SE][SS] அழிக்கப்படும். [* எசா 10:5-34; 14:24-27; நாகூ 1:1-3:19.[QE] ] [SE][QE]
15. [QS][SS] “நான் ஒப்புயர்வு அற்றவன்” என்று[SE][SS] கவலையின்றிக் களிப்புற்றிருந்த[SE][SS] நகர் இதுதானோ?[SE][SS] இப்பொழுது அது[SE][SS] காட்டு விலங்குகளின் குகையாகி[SE][SS] எவ்வளவு பாழாய்ப் போயிற்று![SE][SS] அதைக் கடந்துபோகும் ஒவ்வொருவனும்[SE][SS] சீழ்க்கையடித்துக் கையசைக்கிறான். [* எசா 10:5-34; 14:24-27; நாகூ 1:1-3:19.[QE] ] [SE][PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 3 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 2 / 3
1 2 3
செப்பனியா 2
மனந்திரும்ப அழைப்பு 1 பண்புகெட்ட இனமே! பகுத்தறிவோடு நடந்துகொள். 2 பதரைப்போல் நீங்கள் தூற்றப்படுமுன்னே, ஆண்டவரது கடும் சினம் உங்கள் மேல் விழுமுன்னே, ஆண்டவரது சினத்தின் நாள் உங்கள்மேல் விழுமுன்னே, 3 நாட்டிலிருக்கும் எளியோரே! ஆண்டவரின் கட்டளையைக் கடைப்பிடிப்போரே! அனைவரும் ஆண்டவரைத் தேடுங்கள்; நேர்மையை நாடுங்கள்; மனத்தாழ்மையைத் தேடுங்கள்; ஆண்டவரது சினத்தின் நாளில் ஒரு வேளை உங்களுக்குப் புகலிடம் கிடைக்கும். வேற்றினத்தாரின் அழிவு 4 காசா குடியற்றுப்போகும்; அஸ்கலோன் பாழடைந்துபோகும்; அஸ்தோது நண்பகலில் விரட்டியடிக்கப்படும்; எக்ரோன் வேரோடு பிடுங்கியெறியப்படும். 5 கடற்கரையில் வாழும் இனத்தாராகிய கெரேத்தியரே! உங்களுக்கு ஐயோ கேடு! ஆண்டவரின் வாக்கு உங்களுக்கு எதிராய் உள்ளது; பெலிஸ்தியரின் நாடே! கானானே! எவனும் குடியிராதபடி நான் உன்னை அழித்து விடுவேன். * எசா 14:29-31; எரே 47:1-7; எசே 25:15-17; யோவே 3:4-8; ஆமோ 1:6-8; செக் 9:5-7 6 இவ்வாறு அந்தக் கடற்கரை நாடு இடையரின் குடில்களுக்கும் ஆடுகளின் பட்டிகளுக்குமே ஏற்றதாகும். * எசா 14:29-31; எரே 47:1-7; எசே 25:15-17; யோவே 3:4-8; ஆமோ 1:6-8; செக் 9:5-7 7 அந்தக் கடற்கரை யூதாவின் குடும்பத்தவருள் எஞ்சியிருப்போர்க்கு உடைமையாகும்; அங்கே அவர்கள் தங்கள் ஆடுகளை மேய்த்து, மாலையில் அஸ்கலோன் வீடுகளில் படுத்திருப்பார்கள்; ஏனெனில் அவர்களுடைய கடவுளாகிய ஆண்டவர் அவர்கள்மீது அக்கறை கொண்டு, முன்னைய நன்னிலைக்கு அவர்களை உயர்த்துவார். * எசா 14:29-31; எரே 47:1-7; எசே 25:15-17; யோவே 3:4-8; ஆமோ 1:6-8; செக் 9:5-7 8 மோவாபின் பழிப்புரைகளையும் அம்மோனியரின் வசைமொழிகளையும் நான் கேட்டேன்; அவர்கள் என் மக்களை இழித்துரைத்து, அவர்களின் நாட்டு எல்லைகளைக் குறித்து வீம்பு பேசியதையும் நான் கேட்டேன். * எசா 14:29-31; எரே 47:1-7; எசே 25:15-17; யோவே 3:4-8; ஆமோ 1:6-8; செக் 9:5-7 9 ஆதலால், படைகளின் ஆண்டவரும், இஸ்ரயேலின் வாழும் கடவுளுமாகிய நான் ஆணையிட்டுக் கூறுகின்றேன்; மோவாபு சோதோமைப்போல் ஆகும்; அம்மோனியர் கொமோராவைப்போல் ஆவர்; இது உறுதி. இந்நாடுகள் காஞ்சொறி படரும் காடாகவும், உப்புப் பள்ளம் நிறைந்த பாழ்நிலமாகவும் என்றும் இருக்கும். என் மக்களில் எஞ்சியோர் அவர்களைக் கொள்ளையடிப்பர்; என் மக்களுள் தப்பியோர் அவர்களை அடிமைகளாக்கிக் கொள்வர். * எசா 15:1-16:14; 25:10-12; எரே 48:1-49; எசே21:28-32; 25:1-11; ஆமோ1:13-15 10 அவர்களுடைய இறுமாப்புக்குக் கிடைக்கும் பயன் இதுவே; ஏனெனில், படைகளின் ஆண்டவருடைய மக்களுக்கு எதிராக அவர்கள் பழித்துரைத்தார்கள்; வீம்பு பேசினார்கள். * எசா 15:1-16:14; 25:10-12; எரே 48:1-49; எசே21:28-32; 25:1-11; ஆமோ1:13-15; தொநூ 19:24 11 ஆண்டவர் அவர்களை அச்சமுறச் செய்வார்; நாட்டின் தெய்வங்களை எல்லாம் ஆற்றல் குன்றிப்போகச் செய்வார். வேற்றினத்தார் அனைவரும் அவரவர்தம் தீவுகளில் இருந்து கொண்டு அவரையே வணங்குவர். * எசா 15:1-16:14; 25:10-12; எரே 48:1-49; எசே21:28-32; 25:1-11; ஆமோ1:13-15 12 எத்தியோப்பியரே! நீங்களும் எனது வாளால் வெட்டி வீழ்த்தப்படுவீர்கள். * எசா 15:1-16:14; 25:10-12; எரே 48:1-49; எசே21:28-32; 25:1-11; ஆமோ1:13-15 13 வடதிசைக்கு எதிராகத் தம் கையை ஓங்கி, ஆண்டவர் அசீரியாவை அழித்திடுவார்; நினிவே நகரைப் பாழடையச் செய்து, வறண்ட பாலைநிலமாக்குவார். * எசா 18:1-7 14 அங்கே மந்தைகளும் எல்லாவகை விலங்குகளும் படுத்துக் கிடக்கும்; தூண்களின் உச்சியில் கூகையும் சாக்குருவியும் தங்கியிருக்கும்; பலகணியில் அமர்ந்தவாறு ஆந்தை அலறும்; நிலைக்கதவின்மேல் இருந்தவாறு காகம் கரையும்; கேதுரு மர வேலைப்பாடுகள் அழிக்கப்படும். [* எசா 10:5-34; 14:24-27; நாகூ 1:1-3:19. ] 15 “நான் ஒப்புயர்வு அற்றவன்” என்று கவலையின்றிக் களிப்புற்றிருந்த நகர் இதுதானோ? இப்பொழுது அது காட்டு விலங்குகளின் குகையாகி எவ்வளவு பாழாய்ப் போயிற்று! அதைக் கடந்துபோகும் ஒவ்வொருவனும் சீழ்க்கையடித்துக் கையசைக்கிறான். [* எசா 10:5-34; 14:24-27; நாகூ 1:1-3:19. ]
மொத்தம் 3 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 2 / 3
1 2 3
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References