தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
செப்பனியா
1. [PS] ஆமோனின் மகன் யோசியா யூதாவின் அரசனாய் இருந்தபொழுது செப்பனியாவுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது. இவர் எசேக்கியாவின் கொள்ளுப் பேரனும் அமரியாவின் பேரனும் கெதலியாவின் மகனுமான கூசியின் மைந்தர் ஆவார். [* 2 அர 22:1-23:30; 2 குறி 34:1-35:27.[QE]. ] [PE]
2. {ஆண்டவர் தீர்ப்பு வழங்கும் நாள்} [PS] “மண்ணுலகில் எதுவும் இராதவாறு
3. [QS][SS] அனைத்தையும் அழித்துவிடுவேன்,”[SE][SS] என்கிறார் ஆண்டவர்.[SE][SS] “மனிதரையும் விலங்குகளையும்[SE][SS] அழிப்பேன்;[SE][SS] வானத்துப் பறவைகளையும்[SE][SS] கடல் மீன்களையும் ஒழிப்பேன்;[SE][SS] கொடியவர்களை[SE][SS] இடறிவிழச் செய்வேன்;[SE][SS] மனிதஇனம்[SE][SS] மண்ணுலகில் இல்லாதவாறு[SE][SS] அற்றுப் போகச் செய்வேன்,”[SE][SS] என்கிறார் ஆண்டவர்.[SE][QE]
4. [QS][SS] யூதாவுக்கும் எருசலேமில் வாழும்[SE][SS] அனைவர்க்கும் எதிராக[SE][SS] நான் கையை ஓங்குவேன்.[SE][SS] பாகால் வழிபாட்டில்[SE][SS] எஞ்சியிருப்பதையும்[SE][SS] அந்தச் சிலை வழிபாட்டு[SE][SS] அர்ச்சகர்களின் பெயரையும்[SE][SS] அழித்து விடுவேன்.[SE][QE]
5. [QS][SS] வீட்டின் மேல்தளத்திலிருந்து[SE][SS] வான் படைகளை வணங்குவோரையும்,[SE][SS] ஆண்டவரை வணங்கி[SE][SS] அவர் பெயராலும்[SE][SS] மில்க்கோம் தெய்வத்தின் பெயராலும்[SE][SS] ஆணையிடுவோரையும்[SE][SS] ஒழித்து விடுவேன்.[SE][QE]
6. [QS][SS] ஆண்டவரைவிட்டு விலகிச் செல்வோரையும்[SE][SS] ஆண்டவரைத் தேடாது,[SE][SS] அவரை அறிய முயலாது இருப்போரையும்[SE][SS] அழித்துவிடுவேன்.[SE][QE]
7. [QS][SS] தலைவராகிய ஆண்டவர் திருமுன்[SE][SS] மௌனமாயிருங்கள்;[SE][SS] ஏனெனில் ஆண்டவரின் நாள்[SE][SS] அண்மையில் உள்ளது;[SE][SS] பலி ஒன்றை[SE][SS] ஆண்டவர் ஏற்பாடு செய்துள்ளார்;[SE][SS] தாம் அழைத்தவர்களை[SE][SS] அவர் புனிதப்படுத்தியுள்ளார்[SE][QE]
8. [QS][SS] ஆண்டவரது பலியின் நாளில்[SE][SS] தலைவர்களையும்[SE][SS] அரசனுடைய புதல்வர்களையும்[SE][SS] வெளிநாட்டு ஆடை அணிந்துள்ள[SE][SS] அனைவரையும் தண்டிப்பேன்.[SE][QE]
9. [QS][SS] வாயிற்படியை மிதிக்காமல்[SE][SS] தாண்டி வந்து,[SE][SS] தங்கள் தலைவனின் வீட்டை[SE][SS] வன்செயலாலும் வஞ்சனையாலும்[SE][SS] நிரப்புகிறவர்களை[SE][SS] அந்நாளில் தண்டிப்பேன்.[SE][QE]
10. [QS][SS] ஆண்டவர் கூறுகின்றார்:[SE][SS] “அந்நாளில் எருசலேமின்[SE][SS] மீன் வாயிலிருந்து கூக்குரலும்,[SE][SS] புதிய நகர்ப் பகுதியிலிருந்து புலம்பலும்,[SE][SS] குன்றுகளிலிருந்து[SE][SS] இடிந்துவிழும் பேரொலியும் கேட்கும்.[SE][QE]
11. [QS][SS] நகரின் கீழ்ப்பகுதியில் குடியிருப்போரே![SE][SS] கதறி அழுங்கள்;[SE][SS] ஏனெனில், வணிகர் அனைவர்க்கும்[SE][SS] அழிவு வருகின்றது;[SE][SS] பணம் படைத்தவர் அனைவரும்[SE][SS] வெட்டி வீழ்த்தப்படுகின்றனர்;[SE][QE]
12. [QS][SS] அக்காலத்தில்,[SE][SS] நான் கையில் விளக்கேந்திக் கொண்டு[SE][SS] எருசலேமைச் சோதித்துப் பார்ப்பேன்;[SE][SS] ‘ஆண்டவர் நன்மையும் செய்யார்;[SE][SS] தீமையும் செய்யார்’ என்று[SE][SS] தங்கள் உள்ளங்களில்[SE][SS] சொல்லிக் கொண்டு[SE][SS] பஞ்சணையில் சாய்ந்து[SE][SS] கொழுத்திருப்போரைத் தண்டிப்பேன்.[SE][QE]
13. [QS][SS] அவர்களுடைய உடைமைகள்[SE][SS] கொள்ளையடிக்கப்படும்;[SE][SS] வீடுகள் பாழாக்கப்படும்;[SE][SS] அவர்கள் வீடுகள்[SE][SS] கட்டிக்கொள்வார்கள்;[SE][SS] ஆனால் அவற்றில்[SE][SS] குடியிருக்கப்போவதில்லை;[SE][SS] திராட்சைத் தோட்டங்களைப்[SE][SS] பயிர் செய்தாலும்,[SE][SS] அவற்றின் இரசத்தைக்[SE][SS] குடிக்கப் போவதில்லை.”[SE][QE]
14. [QS][SS] ஆண்டவரின் மாபெரும் நாள்[SE][SS] அண்மையில் உள்ளது;[SE][SS] அது விரைந்து[SE][SS] நெருங்கிக் கொண்டிருக்கிறது;[SE][SS] ஆண்டவரது நாளின் பேரொலி[SE][SS] கசப்பை உண்டாக்கும்;[SE][SS] மாவீரனையும் கலங்கி[SE][SS] அலறும்படி செய்யும்.[SE][QE]
15. [QS][SS] அந்த நாள் கடும் சினத்தின் நாள்;[SE][SS] துன்பமும் துயரமும் நிறைந்த நாள்;[SE][SS] பேரழிவும் பேரிழப்பும்[SE][SS] கொண்டு வரும் நாள்;[SE][SS] இருட்டும் காரிருளும் கவிந்த நாள்;[SE][QE]
16. [QS][SS] அரண்சூழ் நகர்களுக்கும்[SE][SS] உயரமான கொத்தளங்களுக்கும் எதிராக[SE][SS] எக்காளமும் போர் முழக்கமும்[SE][SS] கேட்கும் நாள்.[SE][QE]
17. [QS][SS] மானிடர்மேல் துன்பம் வரச்செய்வேன்;[SE][SS] பார்வையற்றோர்போல்[SE][SS] அவர்கள் தடுமாறுவர்;[SE][SS] ஏனெனில் ஆண்டவருக்கு எதிராகப்[SE][SS] பாவம் செய்தனர்;[SE][SS] அவர்களது இரத்தம்[SE][SS] புழுதி போல் கொட்டப்படும்;[SE][SS] சதைப்பிண்டம்[SE][SS] சாணம்போல் எறியப்படும்.[SE][QE]
18. [QS][SS] ஆண்டவரது சினத்தின் நாளில்,[SE][SS] அவர்களது வெள்ளியும் பொன்னும்[SE][SS] அவர்களைக் காப்பாற்றா.[SE][SS] உலகம் முழுவதும்[SE][SS] அவரது வெஞ்சினத் தீக்கு இரையாகும்.[SE][SS] உலகில் வாழும் அனைவரையும்[SE][SS] அவர் நொடிப்பொழுதில்[SE][SS] முற்றிலும் அழித்துவிடுவார்.[SE][PE]
மொத்தம் 3 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 1 / 3
1 2 3
1 ஆமோனின் மகன் யோசியா யூதாவின் அரசனாய் இருந்தபொழுது செப்பனியாவுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது. இவர் எசேக்கியாவின் கொள்ளுப் பேரனும் அமரியாவின் பேரனும் கெதலியாவின் மகனுமான கூசியின் மைந்தர் ஆவார். [* 2 அர 22:1-23:30; 2 குறி 34:1-35:27.. ] ஆண்டவர் தீர்ப்பு வழங்கும் நாள் 2 “மண்ணுலகில் எதுவும் இராதவாறு 3 அனைத்தையும் அழித்துவிடுவேன்,” என்கிறார் ஆண்டவர். “மனிதரையும் விலங்குகளையும் அழிப்பேன்; வானத்துப் பறவைகளையும் கடல் மீன்களையும் ஒழிப்பேன்; கொடியவர்களை இடறிவிழச் செய்வேன்; மனிதஇனம் மண்ணுலகில் இல்லாதவாறு அற்றுப் போகச் செய்வேன்,” என்கிறார் ஆண்டவர். 4 யூதாவுக்கும் எருசலேமில் வாழும் அனைவர்க்கும் எதிராக நான் கையை ஓங்குவேன். பாகால் வழிபாட்டில் எஞ்சியிருப்பதையும் அந்தச் சிலை வழிபாட்டு அர்ச்சகர்களின் பெயரையும் அழித்து விடுவேன். 5 வீட்டின் மேல்தளத்திலிருந்து வான் படைகளை வணங்குவோரையும், ஆண்டவரை வணங்கி அவர் பெயராலும் மில்க்கோம் தெய்வத்தின் பெயராலும் ஆணையிடுவோரையும் ஒழித்து விடுவேன். 6 ஆண்டவரைவிட்டு விலகிச் செல்வோரையும் ஆண்டவரைத் தேடாது, அவரை அறிய முயலாது இருப்போரையும் அழித்துவிடுவேன். 7 தலைவராகிய ஆண்டவர் திருமுன் மௌனமாயிருங்கள்; ஏனெனில் ஆண்டவரின் நாள் அண்மையில் உள்ளது; பலி ஒன்றை ஆண்டவர் ஏற்பாடு செய்துள்ளார்; தாம் அழைத்தவர்களை அவர் புனிதப்படுத்தியுள்ளார் 8 ஆண்டவரது பலியின் நாளில் தலைவர்களையும் அரசனுடைய புதல்வர்களையும் வெளிநாட்டு ஆடை அணிந்துள்ள அனைவரையும் தண்டிப்பேன். 9 வாயிற்படியை மிதிக்காமல் தாண்டி வந்து, தங்கள் தலைவனின் வீட்டை வன்செயலாலும் வஞ்சனையாலும் நிரப்புகிறவர்களை அந்நாளில் தண்டிப்பேன். 10 ஆண்டவர் கூறுகின்றார்: “அந்நாளில் எருசலேமின் மீன் வாயிலிருந்து கூக்குரலும், புதிய நகர்ப் பகுதியிலிருந்து புலம்பலும், குன்றுகளிலிருந்து இடிந்துவிழும் பேரொலியும் கேட்கும். 11 நகரின் கீழ்ப்பகுதியில் குடியிருப்போரே! கதறி அழுங்கள்; ஏனெனில், வணிகர் அனைவர்க்கும் அழிவு வருகின்றது; பணம் படைத்தவர் அனைவரும் வெட்டி வீழ்த்தப்படுகின்றனர்; 12 அக்காலத்தில், நான் கையில் விளக்கேந்திக் கொண்டு எருசலேமைச் சோதித்துப் பார்ப்பேன்; ‘ஆண்டவர் நன்மையும் செய்யார்; தீமையும் செய்யார்’ என்று தங்கள் உள்ளங்களில் சொல்லிக் கொண்டு பஞ்சணையில் சாய்ந்து கொழுத்திருப்போரைத் தண்டிப்பேன். 13 அவர்களுடைய உடைமைகள் கொள்ளையடிக்கப்படும்; வீடுகள் பாழாக்கப்படும்; அவர்கள் வீடுகள் கட்டிக்கொள்வார்கள்; ஆனால் அவற்றில் குடியிருக்கப்போவதில்லை; திராட்சைத் தோட்டங்களைப் பயிர் செய்தாலும், அவற்றின் இரசத்தைக் குடிக்கப் போவதில்லை.” 14 ஆண்டவரின் மாபெரும் நாள் அண்மையில் உள்ளது; அது விரைந்து நெருங்கிக் கொண்டிருக்கிறது; ஆண்டவரது நாளின் பேரொலி கசப்பை உண்டாக்கும்; மாவீரனையும் கலங்கி அலறும்படி செய்யும். 15 அந்த நாள் கடும் சினத்தின் நாள்; துன்பமும் துயரமும் நிறைந்த நாள்; பேரழிவும் பேரிழப்பும் கொண்டு வரும் நாள்; இருட்டும் காரிருளும் கவிந்த நாள்; 16 அரண்சூழ் நகர்களுக்கும் உயரமான கொத்தளங்களுக்கும் எதிராக எக்காளமும் போர் முழக்கமும் கேட்கும் நாள். 17 மானிடர்மேல் துன்பம் வரச்செய்வேன்; பார்வையற்றோர்போல் அவர்கள் தடுமாறுவர்; ஏனெனில் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்தனர்; அவர்களது இரத்தம் புழுதி போல் கொட்டப்படும்; சதைப்பிண்டம் சாணம்போல் எறியப்படும். 18 ஆண்டவரது சினத்தின் நாளில், அவர்களது வெள்ளியும் பொன்னும் அவர்களைக் காப்பாற்றா. உலகம் முழுவதும் அவரது வெஞ்சினத் தீக்கு இரையாகும். உலகில் வாழும் அனைவரையும் அவர் நொடிப்பொழுதில் முற்றிலும் அழித்துவிடுவார்.
மொத்தம் 3 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 1 / 3
1 2 3
×

Alert

×

Tamil Letters Keypad References