1. {விடுதலைக்கான ஆண்டவரின் வாக்குறுதி} [PS] [QS][SS] இளவேனில் காலத்தில் மழைக்காக[SE][SS] ஆண்டவரிடம் மன்றாடுங்கள்;[SE][SS] ஆண்டவரே[SE][SS] மின்னல்களை உண்டாக்குபவர்;[SE][SS] மனிதர்க்கு அவரே மழையைத் தருபவர்;[SE][SS] வயல்வெளிகளில் பயிரினங்களை[SE][SS] முளைப்பிப்பவரும் அவரே; [* எசா 17:1-3; எரே 49:23-27; ஆமோ 1:3-5. ; எசா 23:1-18; எசே 26:1-28:26; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; மத் 11:21-22; லூக் 10:13-14. ] [SE][QE]
2. [QS][SS] குலதெய்வங்கள்[SE][SS] வீணானதையே கூறுகின்றன;[SE][SS] குறிசொல்வோர்[SE][SS] பொய்க்காட்சி காண்கின்றனர்;[SE][SS] அவர்கள் போலிக் கனவுகளை[SE][SS] எடுத்துரைக்கின்றனர்;[SE][SS] வெறுமையான ஆறுதல் மொழிகளைச்[SE][SS] சொல்கின்றனர்;[SE][SS] ஆதலால், மக்கள் ஆடுகளைப்போல்[SE][SS] சிதறுண்டு அலைந்தனர்;[SE][SS] ஆயரில்லாததால் துன்புறுகின்றனர். [* எசா 23:1-18; எசே 26:1-28:26; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; மத் 11:21-22; லூக் 10:13-14. ] [SE][QE]
3. [QS][SS] ஆயர்களுக்கு எதிராக[SE][SS] என் கோபம் பற்றியெரிகின்றது;[SE][SS] தலைவர்களை நான்[SE][SS] தண்டிக்கப் போகின்றேன்;[SE][SS] ஏனெனில், படைகளின் ஆண்டவர்[SE][SS] தம் மந்தையாகிய யூதா குடும்பத்தாரைக்[SE][SS] கண்காணிக்கிறார்;[SE][SS] அவர்களை, வலிமைமிகு[SE][SS] போர்க் குதிரைகளைப்போல் ஆக்குவார். [* எசா 23:1-18; எசே 26:1-28:26; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; மத் 11:21-22; லூக் 10:13-14. ] [SE][QE]
4. [QS][SS] அவர்களிடமிருந்தே[SE][SS] மூலைக் கல் தோன்றும்;[SE][SS] கூடார முளையும், போர்வில்லும்,[SE][SS] ஆட்சியாளர் அனைவரும் ஒருங்கே[SE][SS] அவர்களிடமிருந்துதான் தோன்றுவர். [* எசா 23:1-18; எசே 26:1-28:26; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; மத் 11:21-22; லூக் 10:13-14. ] [SE][QE]
5. [QS][SS] அவர்கள், ஆற்றல்மிக்க[SE][SS] போர்வீரர்களைப்போல்,[SE][SS] பகைவரைச் சேற்றில் தள்ளி[SE][SS] மிதிப்பார்கள். [* எசா 14:29-31; எரே 47:1-7; எசே 35:15-17; யோவே 3:4-8; ஆமோ 1:6-8; செப் 2:4-7. ] [SE][QE]
6. [QS][SS] “யூதா குடும்பத்தை[SE][SS] ஆற்றல் மிக்கதாய் ஆக்குவேன்;[SE][SS] யோசேப்பு குடும்பத்தை மீட்டருள்வேன்;[SE][SS] அவர்கள்மீது[SE][SS] இரக்கம் கொண்டுள்ளதால்[SE][SS] அவர்களை நான்[SE][SS] திரும்பி வரச்செய்வேன்;[SE][SS] அவர்கள் என்னால்[SE][SS] தள்ளிவிடப்படாதவர்களைப் போல்[SE][SS] இருப்பார்கள்;[SE][SS] ஏனெனில், நானே அவர்களுடைய[SE][SS] கடவுளாகிய ஆண்டவர்;[SE][SS] நான் அவர்களின் மன்றாட்டுக்கு[SE][SS] மறுமொழி அளிப்பேன். [* எசா 14:29-31; எரே 47:1-7; எசே 35:15-17; யோவே 3:4-8; ஆமோ 1:6-8; செப் 2:4-7. ] [SE][QE]
7. [QS][SS] எப்ராயிம் மக்கள்[SE][SS] ஆற்றல்மிக்க வீரரைப்போலாவார்கள்;[SE][SS] திராட்சை மது அருந்தியவரின்[SE][SS] உள்ளத்தைப்போல்[SE][SS] அவர்கள் உள்ளம் களிப்படையும்;[SE][SS] அவர்கள் பிள்ளைகளும்[SE][SS] அதைக் கண்டு மகிழ்ச்சியுறுவார்கள்;[SE][SS] ஆண்டவரில் அவர்கள் இதயம்[SE][SS] மகிழ்ந்து களிப்புறும். [* எசா 14:29-31; எரே 47:1-7; எசே 35:15-17; யோவே 3:4-8; ஆமோ 1:6-8; செப் 2:4-7. ] [SE][QE]
8. [QS][SS] சீழ்க்கை ஒலி எழுப்பி[SE][SS] நான் அவர்களைச்[SE][SS] சேர்த்துக் கொள்வேன்;[SE][SS] ஏனெனில் நானே அவர்களை[SE][SS] மீட்டருள்வேன்;[SE][SS] முன்போலவே அவர்கள்[SE][SS] பல்கிப் பெருகுவார்கள்.[SE][QE]
9. [QS][SS] மக்களினங்களிடையே[SE][SS] நான் அவர்களைச் சிதறடித்தாலும்,[SE][SS] தொலை நாடுகளில்[SE][SS] என்னை அவர்கள்[SE][SS] நினைத்துக் கொள்வார்கள்;[SE][SS] தங்கள் மக்களோடு வாழ்ந்து[SE][SS] திரும்பி வருவார்கள். [* மத் 21:5; யோவா 12:15. ] [SE][QE]
10. [QS][SS] நான் அவர்களை எகிப்து நாட்டினின்று[SE][SS] திரும்பிவரச் செய்வேன்;[SE][SS] அசீரியாவிலிருந்து அவர்களைக்[SE][SS] கூட்டிக்கொண்டு வருவேன்;[SE][SS] கிலயாது, லெபனோன் நாடுகளுக்கு[SE][SS] அவர்களைக் கொண்டு வருவேன்;[SE][SS] இடம் இல்லாமல் போகுமட்டும்[SE][SS] வந்து சேருவார்கள். [* திபா 72:8. ; ‘செய்வேன்… விடுவேன்’ என்பது எபிரேய பாடம்.[QE]. ] [SE][QE]
11. [QS][SS] எகிப்தியக் கடலை அவர்கள்[SE][SS] கடந்து செல்வார்கள்;[SE][SS] கடல் அலைகள்[SE][SS] அடித்து நொறுக்கப்படும்;[SE][SS] பேராற்றின் ஆழங்களெல்லாம்[SE][SS] வறண்டுபோகும்;[SE][SS] அசீரியாவின் ஆணவம் அடக்கப்படும்;[SE][SS] எகிப்து நாட்டின் செங்கோல்[SE][SS] அகற்றப்படும். [* விப 24:8. ] [SE][QE]
12. [QS][SS] ஆண்டவருக்குள் அவர்களை[SE][SS] ஆற்றல் மிக்கவர்கள் ஆக்குவேன்;[SE][SS] ஆண்டவரின் பெயரில்[SE][SS] அவர்கள் பெருமைகொள்வார்கள்,”[SE][SS] என்கிறார் ஆண்டவர்.[SE][PE][QE]