தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
உன்னதப்பாட்டு
1. {பாடல் 24: தலைவி கூற்று} [PS] [QS][SS] நீர் என் உடன்பிறப்பாக[SE][SS] இருக்கக் கூடாதா![SE][SS] என் அன்னையிடம் பால் குடித்தவராய்[SE][SS] இருக்கலாகாதா![SE][SS] தெருவில் கண்டாலும்[SE][SS] நான் உம்மை முத்தமிடுவேனே![SE][SS] அப்போது எவருமே[SE][SS] என்னை இகழமாட்டார்.[SE][QE]
2. [QS][SS] உம்மை என் தாய் வீட்டுக்குக்[SE][SS] கூட்டி வருவேன்;[SE][SS] எனக்குக் கற்றுத் தந்தவளின்[SE][SS] மனைக்குள் கொணர்ந்திடுவேன்;[SE][SS] மணமூட்டிய திராட்சை இரசத்தை[SE][SS] உமக்குக் குடிக்கக் கொடுப்பேன்;[SE][SS] என் மாதுளம் பழச்சாற்றைப்[SE][SS] பருகத் தருவேன். [* 1 அர 4:32.[QE] ] [SE][QE]
3. [QS][SS] இடக்கையால் அவர்[SE][SS] என் தலையைத் தாங்கிக் கொள்வார்;[SE][SS] வலக்கையால் அவர்[SE][SS] என்னைத் தழுவிக் கொள்வார்.[SE][QE]
4. [QS][SS] எருசலேம் மங்கையரே,[SE][SS] ஆணையிட்டுக் கேட்கின்றேன்;[SE][SS] காதலை ஏன் தட்டி எழுப்புகின்றீர்?[SE][SS] தானே விரும்பும்வரை[SE][SS] அதை ஏன் தட்டி எழுப்புகின்றீர்?[SE][PE] [QS][SS] “யார் இவள்![SE][SS] பாலைவெளியினின்று[SE][SS] எழுந்து வருபவள்;[SE][SS] தன் காதலர்மேல் சாய்ந்து கொண்டு[SE][SS] வருபவள் யார் இவள்?”[SE][QE][QE]
5. {பாடல் 25: தலைவி கூற்று} [PS] [QS][SS] கிச்சிலி மரத்தடியில்[SE][SS] நான் உம்மை எழுப்பினேன்;[SE][SS] அங்கேதான் உம்தாய்[SE][SS] பேறுகால வேதனையுற்றாள்.[SE][SS] அங்கேதான் உம்மைப் பெற்றவள்[SE][SS] பேறுகால வேதனையுற்றாள்.[SE][QE]
6. [QS][SS] உம் நெஞ்சத்தில் இலச்சினைபோல்[SE][SS] என்னைப் பொறித்திடுக;[SE][SS] இலச்சினைப்போல்[SE][SS] உம் கையில் பதித்திடுக;[SE][SS] ஆம், அன்பு சாவைப்போல்[SE][SS] வலிமைமிக்கது;[SE][SS] அன்பு வெறி[SE][SS] பாதாளம்போல் பொறாதது;[SE][SS] அதன் பொறி,[SE][SS] எரிக்கும் நெருப்புப் பொறி;[SE][SS] அதன் கொழுந்து[SE][SS] பொசுக்கும் தீக்கொழுந்து.[SE][QE]
7. [QS][SS] பெருங்கடலும்[SE][SS] அன்பை அணைக்க முடியாது;[SE][SS] வெள்ளப்பெருக்கும்[SE][SS] அதை மூழ்கடிக்க இயலாது;[SE][SS] அன்புக்காக ஒருவன்[SE][SS] தன் வீட்டுச் செல்வங்களை எல்லாம்[SE][SS] வாரியிறைக்கலாம்;[SE][SS] ஆயினும், அவன்[SE][SS] ஏளனம் செய்யப்படுவது உறுதி.[SE][PE][QE]
8. {பாடல் 26: தமையர்-தலைவி உரையாடல்} [PS] [QS][SS] நம்முடைய தங்கை சிறியவள்;[SE][SS] அவளுக்கு முலைகள்[SE][SS] முகிழ்க்கவில்லை;[SE][SS] அவளைப் பெண்பேச வரும்நாளில்[SE][SS] நம் தங்கைக்காக என் செய்வோம்?[SE][QE]
9. [QS][SS] அவள் ஒரு மதிலானால்[SE][SS] அதன்மேல்[SE][SS] வெள்ளியரண்[SE][SS] கட்டிடுவோம்;[SE][SS] அவள் ஒரு கதவானால்[SE][SS] அதனை கேதுருப் பலகையால்[SE][SS] மூடிடுவோம்.[SE][QE]
10. [QS][SS] நான் மதில்தான்;[SE][SS] என் முலைகள்[SE][SS] அதன் கோபுரங்கள் போல்வன;[SE][SS] அவர்தம் பார்வையில்[SE][SS] நான் நல்வாழ்வு தருபவள் ஆவேன்.[SE][PE][QE]
11. {பாடல் 27: தலைவன் கூற்று} [PS] [QS][SS] பாகால்-ஆமோன் என்னுமிடத்தில்[SE][SS] சாலமோனுக்கு இருந்தது[SE][SS] ஒரு திராட்சைத் தோட்டம்,[SE][SS] திராட்சைத் தோட்டத்தை[SE][SS] அவர் காவலரிடம் ஒப்படைத்தார்;[SE][SS] அதன் கனிகளுக்காக எவரும்[SE][SS] ஆயிரம் வெள்ளிக் காசுகூடத் தருவார்.[SE][QE]
12. [QS][SS] எனக்குரிய திராட்சைத் தோட்டம்[SE][SS] என்முன்னே உளது;[SE][SS] சாலமோனே,[SE][SS] அந்த ஆயிரம் வெள்ளிக்காசு[SE][SS] உம்மிடமே இருக்கட்டும்;[SE][SS] இருநூறு காசும்[SE][SS] பழங்களைக் காப்போர்க்கே சேரட்டும்.[SE][PE][QE]
13. {பாடல் 28: தலைவன்-தலைவி உரையாடல்} [PS] [QS][SS] “தோட்டங்களில் வாழ்பவளே![SE][SS] தோழர் கூர்ந்து கேட்கின்றனர்;[SE][SS] உன் குரலை[SE][SS] யான் கேட்கலாகாதோ!”[SE][QE]
14. [QS][SS] “என் காதலரே![SE][SS] விரைந்து ஓடிடுக;[SE][SS] கலைமான் அல்லது[SE][SS] மரைமான் குட்டிபோல[SE][SS] நறுமணம் நிறைந்த மலைகளுக்கு[SE][SS] விரைந்திடுக!”[SE][PE][QE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 8 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 8 / 8
1 2 3 4 5 6 7 8
உன்னதப்பாட்டு 8:1
பாடல் 24: தலைவி கூற்று 1 நீர் என் உடன்பிறப்பாக இருக்கக் கூடாதா! என் அன்னையிடம் பால் குடித்தவராய் இருக்கலாகாதா! தெருவில் கண்டாலும் நான் உம்மை முத்தமிடுவேனே! அப்போது எவருமே என்னை இகழமாட்டார். 2 உம்மை என் தாய் வீட்டுக்குக் கூட்டி வருவேன்; எனக்குக் கற்றுத் தந்தவளின் மனைக்குள் கொணர்ந்திடுவேன்; மணமூட்டிய திராட்சை இரசத்தை உமக்குக் குடிக்கக் கொடுப்பேன்; என் மாதுளம் பழச்சாற்றைப் பருகத் தருவேன். [* 1 அர 4:32. ] 3 இடக்கையால் அவர் என் தலையைத் தாங்கிக் கொள்வார்; வலக்கையால் அவர் என்னைத் தழுவிக் கொள்வார். 4 எருசலேம் மங்கையரே, ஆணையிட்டுக் கேட்கின்றேன்; காதலை ஏன் தட்டி எழுப்புகின்றீர்? தானே விரும்பும்வரை அதை ஏன் தட்டி எழுப்புகின்றீர்? “யார் இவள்! பாலைவெளியினின்று எழுந்து வருபவள்; தன் காதலர்மேல் சாய்ந்து கொண்டு வருபவள் யார் இவள்?” பாடல் 25: தலைவி கூற்று 5 கிச்சிலி மரத்தடியில் நான் உம்மை எழுப்பினேன்; அங்கேதான் உம்தாய் பேறுகால வேதனையுற்றாள். அங்கேதான் உம்மைப் பெற்றவள் பேறுகால வேதனையுற்றாள். 6 உம் நெஞ்சத்தில் இலச்சினைபோல் என்னைப் பொறித்திடுக; இலச்சினைப்போல் உம் கையில் பதித்திடுக; ஆம், அன்பு சாவைப்போல் வலிமைமிக்கது; அன்பு வெறி பாதாளம்போல் பொறாதது; அதன் பொறி, எரிக்கும் நெருப்புப் பொறி; அதன் கொழுந்து பொசுக்கும் தீக்கொழுந்து. 7 பெருங்கடலும் அன்பை அணைக்க முடியாது; வெள்ளப்பெருக்கும் அதை மூழ்கடிக்க இயலாது; அன்புக்காக ஒருவன் தன் வீட்டுச் செல்வங்களை எல்லாம் வாரியிறைக்கலாம்; ஆயினும், அவன் ஏளனம் செய்யப்படுவது உறுதி. பாடல் 26: தமையர்-தலைவி உரையாடல் 8 நம்முடைய தங்கை சிறியவள்; அவளுக்கு முலைகள் முகிழ்க்கவில்லை; அவளைப் பெண்பேச வரும்நாளில் நம் தங்கைக்காக என் செய்வோம்? 9 அவள் ஒரு மதிலானால் அதன்மேல் வெள்ளியரண் கட்டிடுவோம்; அவள் ஒரு கதவானால் அதனை கேதுருப் பலகையால் மூடிடுவோம். 10 நான் மதில்தான்; என் முலைகள் அதன் கோபுரங்கள் போல்வன; அவர்தம் பார்வையில் நான் நல்வாழ்வு தருபவள் ஆவேன். பாடல் 27: தலைவன் கூற்று 11 பாகால்-ஆமோன் என்னுமிடத்தில் சாலமோனுக்கு இருந்தது ஒரு திராட்சைத் தோட்டம், திராட்சைத் தோட்டத்தை அவர் காவலரிடம் ஒப்படைத்தார்; அதன் கனிகளுக்காக எவரும் ஆயிரம் வெள்ளிக் காசுகூடத் தருவார். 12 எனக்குரிய திராட்சைத் தோட்டம் என்முன்னே உளது; சாலமோனே, அந்த ஆயிரம் வெள்ளிக்காசு உம்மிடமே இருக்கட்டும்; இருநூறு காசும் பழங்களைக் காப்போர்க்கே சேரட்டும். பாடல் 28: தலைவன்-தலைவி உரையாடல் 13 “தோட்டங்களில் வாழ்பவளே! தோழர் கூர்ந்து கேட்கின்றனர்; உன் குரலை யான் கேட்கலாகாதோ!” 14 “என் காதலரே! விரைந்து ஓடிடுக; கலைமான் அல்லது மரைமான் குட்டிபோல நறுமணம் நிறைந்த மலைகளுக்கு விரைந்திடுக!”
மொத்தம் 8 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 8 / 8
1 2 3 4 5 6 7 8
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References