தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
உன்னதப்பாட்டு
1. [PS] [QS][SS] என் தோட்டத்திற்கு நான்[SE][SS] வந்துள்ளேன்;[SE][SS] என் தங்காய், மணமகளே,[SE][SS] என் வெள்ளைப்போளத்தையும்[SE][SS] நறுமணப் பொருளையும்[SE][SS] சேகரிக்கின்றேன்;[SE][SS] என் தேனையும் தேனடைகளையும்[SE][SS] உண்கின்றேன்;[SE][SS] என் திராட்சை இரசத்தையும்[SE][SS] பாலையும் பருகுகின்றேன்;[SE][SS] தோழர்களே, உண்ணுங்கள்;[SE][SS] அன்பர்களே, போதையேறப் பருகுங்கள். [* 1 அர 4:32.[QE]. ] [SE][PE][QE]
2. {பாடல் 17: தலைவி கூற்று} [PS] [QS][SS] நான் உறங்கினேன்;[SE][SS] என் நெஞ்சமோ விழித்திருந்தது;[SE][SS] இதோ, என் காதலர்[SE][SS] கதவைத் தட்டுகின்றார்;[SE][SS] “கதவைத் திற, என் தங்காய்,[SE][SS] என் அன்பே, என் வெண்புறாவே,[SE][SS] நிறை அழகே,[SE][SS] என் தலை பனியால் நனைந்துள்ளது;[SE][SS] என் தலைமயிர்ச் சுருள்[SE][SS] இரவுத் தூறலால் ஈரமானது.[SE][QE]
3. [QS][SS] “என் ஆடையைக் களைந்து விட்டேன்;[SE][SS] மீண்டும் அதனை நான்[SE][SS] உடுத்த வேண்டுமோ?[SE][SS] என் கால்களைக் கழுவியுள்ளேன்;[SE][SS] மீண்டும் அவற்றை அழுக்குப்படுத்தவோ?”[SE][QE]
4. [QS][SS] என் காதலர் கதவுத் துளை வழியாகக்[SE][SS] கையைவிட்டார்;[SE][SS] என் நெஞ்சம் அவருக்காகத் துள்ளிற்று.[SE][QE]
5. [QS][SS] எழுந்தேன் நான்,[SE][SS] காதலர்க்குக் கதவு திறக்க;[SE][SS] என் கையில்[SE][SS] வெள்ளைப்போளம் வடிந்தது;[SE][SS] என் விரல்களில்[SE][SS] வெள்ளைப்போளம் சிந்திற்று;[SE][SS] தாழ்ப்பாள் பிடிகளில் சிதறிற்று.[SE][QE]
6. [QS][SS] கதவைத் திறந்தேன் நான்[SE][SS] என் காதலர்க்கு;[SE][SS] அந்தோ! என் காதலர் காணவில்லை,[SE][SS] போய்விட்டார்; என் நெஞ்சம்[SE][SS] அவர் குரலைத் தொடர்ந்து போனது;[SE][SS] அவரைத் தேடினேன்;[SE][SS] அவரைக் கண்டேன் அல்லேன்;[SE][SS] அவரை அழைத்தேன்; பதிலே இல்லை![SE][QE]
7. [QS][SS] ஆனால் என்னைக் கண்டனர்[SE][SS] சாமக் காவலர்;[SE][SS] அவர்கள் என்னை அடித்தனர்;[SE][SS] காயப்படுதினர்;[SE][SS] என் மேலாடையைப்[SE][SS] பறித்துக் கொண்டனர்;[SE][SS] கோட்டைச் சுவரின்[SE][SS] காவலர்கள் அவர்கள்![SE][QE]
8. [QS][SS] எருசலேம் மங்கையரே,[SE][SS] ஆணையிட்டுச் சொல்கிறேன்;[SE][SS] என் காதலரைக் காண்பீர்களாயின்[SE][SS] அவரிடம் என்ன சொல்வீர்கள்?[SE][SS] “காதல் நோயுற்றேன் நான்”[SE][SS] எனச் சொல்லுங்கள்.[SE][QE]
9. [QS][SS] “பெண்களுக்குள் பேரழகியே,[SE][SS] மற்றக் காதலரினும் உன் காதலர்[SE][SS] எவ்வகையில் சிறந்தவர்?[SE][SS] இவ்வாறு எங்களிடம்[SE][SS] ஆணையிட்டுக் கூறுகின்றாயே;[SE][SS] மற்றக் காதலரினும் உன்காதலர்[SE][SS] எவ்வகையில் சிறந்தவர்?”[SE][QE]
10. [QS][SS] “என் காதலர் ஒளிமிகு சிவந்த மேனியர்;[SE][SS] பல்லாயிரம் பேர்களிலும்[SE][SS] தனித்துத் தோன்றுவார்![SE][QE]
11. [QS][SS] அவரது தலை பசும்பொன்;[SE][SS] தலை முடி சுருள் சுருளாய் உள்ளது;[SE][SS] காகம்போல் கருமை மிக்கது.[SE][QE]
12. [QS][SS] அவர் கண்கள்[SE][SS] வெண்புறாக்கள் போன்றவை;[SE][SS] பாலில் குளித்து,[SE][SS] நீரோடைகளின் அருகில்[SE][SS] கரையோரங்களில் தங்கும்[SE][SS] வெண்புறாக்கள் அவை.[SE][QE]
13. [QS][SS] அவர் கன்னங்கள் நறுமண[SE][SS] நாற்றங்கால்கள் போல்வன;[SE][SS] நறுமணம் ஆங்கே கமழ்கின்றது;[SE][SS] அவருடைய இதழ்கள் லீலிமலர்கள்;[SE][SS] அவற்றினின்று வெள்ளைப்போளம்[SE][SS] சொட்டுச்சொட்டாய் வடிகின்றது.[SE][QE]
14. [QS][SS] அவருடைய கைகள்[SE][SS] உருண்ட பொன் தண்டுகள்; அவற்றில்[SE][SS] மாணிக்கக் கற்கள் பதிந்துள்ளன;[SE][SS] அவரது வயிறு[SE][SS] யானைத் தந்தத்தின் வேலைப்பாடு;[SE][SS] அதில் நீலமணிகள்[SE][SS] பொதியப் பெற்றுள்ளன.[SE][QE]
15. [QS][SS] அவருடைய கால்கள்[SE][SS] பளிங்குத் தூண்கள்;[SE][SS] தங்கத் தளத்திலே[SE][SS] அவை பொருந்தியுள்ளன;[SE][SS] அவரது தோற்றம்[SE][SS] லெபனோனுக்கு இணையானது;[SE][SS] கேதுரு மரங்கள்போல் தலைசிறந்தது.[SE][QE]
16. [QS][SS] அவரது வாய் இணையற்ற இனிமை;[SE][SS] அவர் முழுமையும் பேருவகையே;[SE][SS] எருசலேம் மங்கைய[SE][SS] இவரே என் நண்பர்.”[SE][PE][QE]
மொத்தம் 8 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 5 / 8
1 2 3 4 5 6 7 8
1 என் தோட்டத்திற்கு நான் வந்துள்ளேன்; என் தங்காய், மணமகளே, என் வெள்ளைப்போளத்தையும் நறுமணப் பொருளையும் சேகரிக்கின்றேன்; என் தேனையும் தேனடைகளையும் உண்கின்றேன்; என் திராட்சை இரசத்தையும் பாலையும் பருகுகின்றேன்; தோழர்களே, உண்ணுங்கள்; அன்பர்களே, போதையேறப் பருகுங்கள். [* 1 அர 4:32.. ] பாடல் 17: தலைவி கூற்று 2 நான் உறங்கினேன்; என் நெஞ்சமோ விழித்திருந்தது; இதோ, என் காதலர் கதவைத் தட்டுகின்றார்; “கதவைத் திற, என் தங்காய், என் அன்பே, என் வெண்புறாவே, நிறை அழகே, என் தலை பனியால் நனைந்துள்ளது; என் தலைமயிர்ச் சுருள் இரவுத் தூறலால் ஈரமானது. 3 “என் ஆடையைக் களைந்து விட்டேன்; மீண்டும் அதனை நான் உடுத்த வேண்டுமோ? என் கால்களைக் கழுவியுள்ளேன்; மீண்டும் அவற்றை அழுக்குப்படுத்தவோ?” 4 என் காதலர் கதவுத் துளை வழியாகக் கையைவிட்டார்; என் நெஞ்சம் அவருக்காகத் துள்ளிற்று. 5 எழுந்தேன் நான், காதலர்க்குக் கதவு திறக்க; என் கையில் வெள்ளைப்போளம் வடிந்தது; என் விரல்களில் வெள்ளைப்போளம் சிந்திற்று; தாழ்ப்பாள் பிடிகளில் சிதறிற்று. 6 கதவைத் திறந்தேன் நான் என் காதலர்க்கு; அந்தோ! என் காதலர் காணவில்லை, போய்விட்டார்; என் நெஞ்சம் அவர் குரலைத் தொடர்ந்து போனது; அவரைத் தேடினேன்; அவரைக் கண்டேன் அல்லேன்; அவரை அழைத்தேன்; பதிலே இல்லை! 7 ஆனால் என்னைக் கண்டனர் சாமக் காவலர்; அவர்கள் என்னை அடித்தனர்; காயப்படுதினர்; என் மேலாடையைப் பறித்துக் கொண்டனர்; கோட்டைச் சுவரின் காவலர்கள் அவர்கள்! 8 எருசலேம் மங்கையரே, ஆணையிட்டுச் சொல்கிறேன்; என் காதலரைக் காண்பீர்களாயின் அவரிடம் என்ன சொல்வீர்கள்? “காதல் நோயுற்றேன் நான்” எனச் சொல்லுங்கள். 9 “பெண்களுக்குள் பேரழகியே, மற்றக் காதலரினும் உன் காதலர் எவ்வகையில் சிறந்தவர்? இவ்வாறு எங்களிடம் ஆணையிட்டுக் கூறுகின்றாயே; மற்றக் காதலரினும் உன்காதலர் எவ்வகையில் சிறந்தவர்?” 10 “என் காதலர் ஒளிமிகு சிவந்த மேனியர்; பல்லாயிரம் பேர்களிலும் தனித்துத் தோன்றுவார்! 11 அவரது தலை பசும்பொன்; தலை முடி சுருள் சுருளாய் உள்ளது; காகம்போல் கருமை மிக்கது. 12 அவர் கண்கள் வெண்புறாக்கள் போன்றவை; பாலில் குளித்து, நீரோடைகளின் அருகில் கரையோரங்களில் தங்கும் வெண்புறாக்கள் அவை. 13 அவர் கன்னங்கள் நறுமண நாற்றங்கால்கள் போல்வன; நறுமணம் ஆங்கே கமழ்கின்றது; அவருடைய இதழ்கள் லீலிமலர்கள்; அவற்றினின்று வெள்ளைப்போளம் சொட்டுச்சொட்டாய் வடிகின்றது. 14 அவருடைய கைகள் உருண்ட பொன் தண்டுகள்; அவற்றில் மாணிக்கக் கற்கள் பதிந்துள்ளன; அவரது வயிறு யானைத் தந்தத்தின் வேலைப்பாடு; அதில் நீலமணிகள் பொதியப் பெற்றுள்ளன. 15 அவருடைய கால்கள் பளிங்குத் தூண்கள்; தங்கத் தளத்திலே அவை பொருந்தியுள்ளன; அவரது தோற்றம் லெபனோனுக்கு இணையானது; கேதுரு மரங்கள்போல் தலைசிறந்தது. 16 அவரது வாய் இணையற்ற இனிமை; அவர் முழுமையும் பேருவகையே; எருசலேம் மங்கைய இவரே என் நண்பர்.”
மொத்தம் 8 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 5 / 8
1 2 3 4 5 6 7 8
×

Alert

×

Tamil Letters Keypad References