1. {பாடல் 12: தலைவி கூற்று} [PS] [QS][SS] இரவு நேரம் படுக்கையில் இருந்தேன்;[SE][SS] என் உயிர்க்குயிரான அன்பரைத்[SE][SS] தேடினேன்; தேடியும்[SE][SS] அவரை நான் கண்டேன் அல்லேன்! [* 1 அர 4:32.[QE]. ] [SE][QE]
2. [QS][SS] “எழுந்திடுவேன்; நகரத்தில்[SE][SS] சுற்றிவருவேன்;[SE][SS] தெருக்களிலும் நாற்சந்திகளிலும் சுற்றி[SE][SS] என் உயிர்க்குயிரான அன்பரைத் தேடுவேன்”[SE][SS] தேடினேன்; தேடியும் அவரைக்[SE][SS] கண்டேன் அல்லேன்![SE][QE]
3. [QS][SS] ஆனால் என்னைக் கண்டனர்[SE][SS] சாமக்காவலர்;[SE][SS] நகரைச் சுற்றி வந்தவர்கள் அவர்கள்.[SE][SS] “என் உயிர்க்குயிரான அன்பரை[SE][SS] நீங்களேனும் கண்டீர்களோ?” என்றேன்.[SE][QE]
4. [QS][SS] அவர்களைவிட்டுச்[SE][SS] சற்று அப்பால் சென்றதுமே[SE][SS] கண்டேன் என் உயிர்க்குயிரான[SE][SS] அன்பர்தமை.[SE][SS] அவரைச் சிக்கெனப் பிடித்தேன்;[SE][SS] விடவே இல்லை;[SE][SS] என் தாய்வீட்டுக்கு[SE][SS] அவரைக் கூட்டி வந்தேன்;[SE][SS] என்னைக் கருத்தாங்கியவளின்[SE][SS] அறைக்குள் அழைத்து வந்தேன்.[SE][QE]
5. [QS][SS] எருசலேம் மங்கையரே,[SE][SS] கலைமான்கள் மேல் ஆணை![SE][SS] வயல்வெளி மரைகள்மேல் ஆணை![SE][SS] உங்களுக்கு நான் கூறுகிறேன்;[SE][SS] காதலைத் தட்டி எழுப்பாதீர்;[SE][SS] தானே விரும்பும்வரை[SE][SS] அதைத் தட்டி எழுப்பாதீர்.[SE][PE][QE]
6. {பாடல் 13: கண்டோர் கூற்று} [PS] [QS][SS] என்ன அது?[SE][SS] பாலைவெளியிலிருந்து[SE][SS] புகைத்தூண்போல்,[SE][SS] எழுந்துவருகிறதே![SE][SS] வெள்ளைப்போளம் மணக்க,[SE][SS] சாம்பிராணி புகைய,[SE][SS] வணிகர் கொணர்[SE][SS] பல்வகைப் பொடிகள் யாவும்[SE][SS] மணங்கமழ வருகிறதே![SE][SS] என்ன அது?[SE][QE]
7. [QS][SS] அதுதான் சாலமோனின் பஞ்சணை![SE][SS] இஸ்ரயேலின் வளமையுள்ள[SE][SS] வீரர்களுள் அறுபதுபேர்[SE][SS] அதனைச் சூழ்ந்துள்ளனர்.[SE][QE]
8. [QS][SS] அனைவரும் வாளேந்திய வீரர்![SE][SS] அவர்கள் போர்புரிவதில் வல்லவர்கள்![SE][SS] இராக்காலத் தாக்குதல்களைத்[SE][SS] தடுக்கத் தம் இடைகளில்[SE][SS] வாள் கொண்டுள்ளவர்கள்![SE][QE]
9. [QS][SS] மன்னர் தமக்கொரு பல்லக்கு செய்தார்;[SE][SS] சாலமோன் லெபனோனின்[SE][SS] மரத்தால் செய்தார்.[SE][QE]
10. [QS][SS] அதன் தூண்களை[SE][SS] வெள்ளியால் இழைத்தார்;[SE][SS] மேற்கவிகை பொன்;[SE][SS] இருக்கை செம்பட்டு;[SE][SS] உட்புறம் மெல்லிய தோல்மெத்தை;[SE][SS] எருசலேம் மங்கையரே, வாருங்கள்![SE][QE]
11. [QS][SS] சீயோன் மங்கையரே, பாருங்கள்![SE][SS] மன்னர் சாலமோனையும்[SE][SS] அவர் அன்னை அவருக்கு அணிவித்த[SE][SS] மணிமுடியையும் காணுங்கள்![SE][SS] அவரது திருமண நாளினிலே,[SE][SS] அவருள்ளம் மகிழ்ந்த நாளினிலே,[SE][SS] அவருக்கு அணிவித்த முடியதுவே![SE][PE][QE]