தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
உன்னதப்பாட்டு
1. {பாடல் 6: தலைவன்-தலைவி உரையாடல்} [PS] [QS][SS] சாரோன் சமவெளியில் உள்ள காட்டு[SE][SS] மலர் நான்; பள்ளத்தாக்குகளில் காணும்[SE][SS] லீலிமலர். [* 1 அர 4:32.[QE]. ] [SE][QE]
2. [QS][SS] முட்புதர் நடுவில் இருக்கும்[SE][SS] லீலிமலர்போல், மங்கையருள்[SE][SS] இருக்கிறாள் என் அன்புடையாள்.[SE][QE]
3. [QS][SS] காட்டு மரங்களிடை நிற்கும்[SE][SS] கிச்சிலி போல்,[SE][SS] காளையருள் இலங்குகின்றார்[SE][SS] என் காதலர்தாம்.[SE][SS] அவரது நிழலிலே அமர்வதில்[SE][SS] இன்புறுவேன்;[SE][SS] அவர் கனி என் நாவுக்கு இனிமை தரும்.[SE][PE][QE]
4. {பாடல் 7: தலைவி கூற்று} [PS] [QS][SS] திராட்சை இரசம் வைக்கும்[SE][SS] அறைக்குள்ளே[SE][SS] என்னை அவர் அழைத்துச் சென்றார்;[SE][SS] அவர் என் மேல் செலுத்திய[SE][SS] நோக்கில் காதல் இருந்தது![SE][QE]
5. [QS][SS] திராட்சை அடைகள் கொடுத்து[SE][SS] என்னை வலிமைப்படுத்துங்கள்;[SE][SS] கிச்சிலிப்பழங்களால்[SE][SS] எனக்கு ஊக்கமூட்டுங்கள்.[SE][SS] காதல் நோயால்[SE][SS] தான் மிகவும் நலிந்து போனேன்.[SE][QE]
6. [QS][SS] இடக்கையால் அவர் என் தலையைத்[SE][SS] தாங்கிக் கொள்வார்;[SE][SS] வலக்கையால் அவர் என்னைத்[SE][SS] தழுவிக் கொள்வார்.[SE][QE]
7. [QS][SS] எருசலேம் மங்கையரே![SE][SS] கலைமான்கள்மேல் ஆணை![SE][SS] வயல்வெளி மரைகள்மேல் ஆணை![SE][SS] உங்களுக்கு நான் கூறுகிறேன்;[SE][SS] காதலைத் தட்டி எழுப்பாதீர்;[SE][SS] தானே விரும்பும்வரை[SE][SS] அதைத் தட்டி எழுப்பாதீர்.[SE][PE][QE]
8. {பாடல் 8: தலைவி கூற்று} [PS] [QS][SS] என் காதலர் குரல் கேட்கின்றது;[SE][SS] இதோ, அவர் வந்துவிட்டார்;[SE][SS] மலைகள்மேல் தாவி வருகின்றார்;[SE][SS] குன்றுகளைத் தாண்டி வருகின்றார்.[SE][QE]
9. [QS][SS] என் காதலர் கலைமானுக்கு அல்லது[SE][SS] மரைமான் குட்டிக்கு ஒப்பானவர்.[SE][SS] இதோ, எம் மதிற்சுவர்க்குப்[SE][SS] பின்னால் நிற்கின்றார்;[SE][SS] பலகணி வழியாய்ப் பார்க்கின்றார்;[SE][SS] பின்னல் தட்டி வழியாய்[SE][SS] நோக்குகின்றார்.[SE][QE]
10. [QS][SS] என் காதலர் என்னிடம் கூறுகின்றார்:[SE][SS] “விரைந்தெழு, என் அன்பே! என் அழகே! விரைந்து வா.[SE][QE]
11. [QS][SS] இதோ, கார்காலம் கடந்துவிட்டது;[SE][SS] மழையும் பெய்து ஓய்ந்துவிட்டது.[SE][QE]
12. [QS][SS] நிலத்தில் மலர்கள் தோன்றுகின்றன;[SE][SS] பாடி மகிழும் பருவம் வந்துற்றது;[SE][SS] காட்டுப் புறா கூவும் குரலதுவோ[SE][SS] நாட்டினில் நமக்குக் கேட்கின்றது;[SE][QE]
13. [QS][SS] அத்திப் பழங்கள் கனிந்துவிட்டன;[SE][SS] திராட்சை மலர்கள் மணம் தருகின்றன;[SE][SS] விரைந்தெழு, என் அன்பே![SE][SS] என் அழகே! விரைந்து வா.”[SE][PE][QE]
14. {பாடல் 9: தலைவன் கூற்று} [PS] [QS][SS] பாறைப் பிளவுகளில் இருப்பவளே,[SE][SS] குன்றின் வெடிப்புகளில் இருக்கும்[SE][SS] என் வெண்புறாவே![SE][SS] காட்டிடு எனக்கு உன் முகத்தை;[SE][SS] எழுப்பிடு நான் கேட்க உன் குரலை.[SE][SS] உன் குரல் இனிது! உன் முகம் எழிலே![SE][PE][QE]
15. {பாடல் 10: தலைவி கூற்று} [PS] [QS][SS] பிடியுங்கள் எமக்காக நரிகளை;[SE][SS] குள்ளநரிகளைப் பிடியுங்கள்;[SE][SS] அவை திராட்சைத் தோட்டங்களை[SE][SS] அழிக்கின்றன;[SE][SS] எம் திராட்சைத் தோட்டங்களோ[SE][SS] பூத்துள்ளன.[SE][PE][QE]
16. {பாடல் 11: தலைவி கூற்று} [PS] [QS][SS] என் காதலர் எனக்குரியர்;[SE][SS] நானும் அவருக்குரியள்;[SE][SS] லீலிகள் நடுவில் அவர் மேய்கின்றார்.[SE][QE]
17. [QS][SS] பொழுது புலர்வதற்குள்,[SE][SS] நிழல்கள் மறைவதற்குள், திரும்பிடுக,[SE][SS] என் காதலரே! மலைமுகட்டுக்[SE][SS] கலைமான்போன்று அல்லது[SE][SS] மரைமான் குட்டிபோன்று திரும்பிடுக![SE][PE][QE]
மொத்தம் 8 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 2 / 8
1 2 3 4 5 6 7 8
பாடல் 6: தலைவன்-தலைவி உரையாடல் 1 சாரோன் சமவெளியில் உள்ள காட்டு மலர் நான்; பள்ளத்தாக்குகளில் காணும் லீலிமலர். [* 1 அர 4:32.. ] 2 முட்புதர் நடுவில் இருக்கும் லீலிமலர்போல், மங்கையருள் இருக்கிறாள் என் அன்புடையாள். 3 காட்டு மரங்களிடை நிற்கும் கிச்சிலி போல், காளையருள் இலங்குகின்றார் என் காதலர்தாம். அவரது நிழலிலே அமர்வதில் இன்புறுவேன்; அவர் கனி என் நாவுக்கு இனிமை தரும். பாடல் 7: தலைவி கூற்று 4 திராட்சை இரசம் வைக்கும் அறைக்குள்ளே என்னை அவர் அழைத்துச் சென்றார்; அவர் என் மேல் செலுத்திய நோக்கில் காதல் இருந்தது! 5 திராட்சை அடைகள் கொடுத்து என்னை வலிமைப்படுத்துங்கள்; கிச்சிலிப்பழங்களால் எனக்கு ஊக்கமூட்டுங்கள். காதல் நோயால் தான் மிகவும் நலிந்து போனேன். 6 இடக்கையால் அவர் என் தலையைத் தாங்கிக் கொள்வார்; வலக்கையால் அவர் என்னைத் தழுவிக் கொள்வார். 7 எருசலேம் மங்கையரே! கலைமான்கள்மேல் ஆணை! வயல்வெளி மரைகள்மேல் ஆணை! உங்களுக்கு நான் கூறுகிறேன்; காதலைத் தட்டி எழுப்பாதீர்; தானே விரும்பும்வரை அதைத் தட்டி எழுப்பாதீர். பாடல் 8: தலைவி கூற்று 8 என் காதலர் குரல் கேட்கின்றது; இதோ, அவர் வந்துவிட்டார்; மலைகள்மேல் தாவி வருகின்றார்; குன்றுகளைத் தாண்டி வருகின்றார். 9 என் காதலர் கலைமானுக்கு அல்லது மரைமான் குட்டிக்கு ஒப்பானவர். இதோ, எம் மதிற்சுவர்க்குப் பின்னால் நிற்கின்றார்; பலகணி வழியாய்ப் பார்க்கின்றார்; பின்னல் தட்டி வழியாய் நோக்குகின்றார். 10 என் காதலர் என்னிடம் கூறுகின்றார்: “விரைந்தெழு, என் அன்பே! என் அழகே! விரைந்து வா. 11 இதோ, கார்காலம் கடந்துவிட்டது; மழையும் பெய்து ஓய்ந்துவிட்டது. 12 நிலத்தில் மலர்கள் தோன்றுகின்றன; பாடி மகிழும் பருவம் வந்துற்றது; காட்டுப் புறா கூவும் குரலதுவோ நாட்டினில் நமக்குக் கேட்கின்றது; 13 அத்திப் பழங்கள் கனிந்துவிட்டன; திராட்சை மலர்கள் மணம் தருகின்றன; விரைந்தெழு, என் அன்பே! என் அழகே! விரைந்து வா.” பாடல் 9: தலைவன் கூற்று 14 பாறைப் பிளவுகளில் இருப்பவளே, குன்றின் வெடிப்புகளில் இருக்கும் என் வெண்புறாவே! காட்டிடு எனக்கு உன் முகத்தை; எழுப்பிடு நான் கேட்க உன் குரலை. உன் குரல் இனிது! உன் முகம் எழிலே! பாடல் 10: தலைவி கூற்று 15 பிடியுங்கள் எமக்காக நரிகளை; குள்ளநரிகளைப் பிடியுங்கள்; அவை திராட்சைத் தோட்டங்களை அழிக்கின்றன; எம் திராட்சைத் தோட்டங்களோ பூத்துள்ளன. பாடல் 11: தலைவி கூற்று 16 என் காதலர் எனக்குரியர்; நானும் அவருக்குரியள்; லீலிகள் நடுவில் அவர் மேய்கின்றார். 17 பொழுது புலர்வதற்குள், நிழல்கள் மறைவதற்குள், திரும்பிடுக, என் காதலரே! மலைமுகட்டுக் கலைமான்போன்று அல்லது மரைமான் குட்டிபோன்று திரும்பிடுக!
மொத்தம் 8 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 2 / 8
1 2 3 4 5 6 7 8
×

Alert

×

Tamil Letters Keypad References