1. {3.ஏழு முத்திரைகளுள்ள சுருளேடு}{விண்ணக வழிபாடு} [PS] இதன்பின், நான் ஒரு காட்சி கண்டேன்; விண்ணகத்தில் ஒரு கதவு திறந்திருந்தது. நான் முதலில் கேட்ட அதே குரல் எக்காளம்போல முழங்கியது: ‟இவ்விடத்துக்கு ஏறி வா. இனி நடக்கவேண்டியதை உனக்குக் காட்டுவேன்” என்றது.
2. உடனே தூய ஆவி என்னை ஆட்கொண்டது. விண்ணகத்தில் அரியணை ஒன்று இருந்தது. அதில் ஒருவர் வீற்றிருந்தார். [* எசே 1:26-28; 10:1. ]
3. அவரது தோற்றம் படிகக்கல் போலும் மாணிக்கம்போலும் இருந்தது. மரகதம் போன்ற வானவில் அந்த அரியணையைச் சூழ்ந்திருந்தது. [* எசே 1:26-28; 10:1. ]
4. அரியணையைச் சுற்றி இருபத்து நான்கு அரியணைகள் போடப்பட்டிருந்தன. அவற்றில் இருபத்து நான்கு மூப்பர்கள் வீற்றிருந்தார்கள். அவர்கள் வெண்ணாடை அணிந்திருந்தார்கள்; தலையில் பொன்முடி சூடியிருந்தார்கள்.
5. அரியணையிலிருந்து மின்னலும் பேரிரைச்சலும் இடிமுழக்கமும் கிளம்பின. அரியணைமுன் ஏழு தீவட்டிகள் எரிந்துகொண்டிருந்தன. அவை கடவுளின் ஏழு ஆவிகளே. [* விப 19:16; திவெ 1:4; 8:5; 11:19; 16:18. ]
6. அரியணை முன் பளிங்கையொத்த தெளிந்த கடல் போன்ற ஒன்று தென்பட்டது. [PE][PS] (6b) நடுவில் அரியணையைச் சுற்றிலும் நான்கு உயிர்கள் காணப்பட்டன. முன்புறமும் பின்புறமும் அவற்றுக்குக் கண்கள் இருந்தன. [* எசே 1:22. ] [PE]
7. அவ்வுயிர்களுள் முதலாவது சிங்கம் போலும், இரண்டாவது இளங்காளை போலும் தோன்றின. மூன்றாவதற்கு மனித முகம் இருந்தது, நான்காவது பறக்கும் கழுகை ஒத்திருந்தது.
8. இந்த நான்கு உயிர்கள் ஒவ்வொன்றுக்கும் ஆறு சிறகுகள் இருந்தன; உள்ளும் புறமும் கண்கள் நிறைந்திருந்தன. [QS][SS]‟தூயவர், தூயவர், தூயவர்,[SE][SS] எல்லாம் வல்ல கடவுளாகிய ஆண்டவர்;[SE][SS] இருந்தவரும் இருக்கின்றவரும்[SE][SS] வரவிருக்கின்றவரும் இவரே”[SE] என்று அந்த உயிர்கள் அல்லும் பகலும் இடையறாது பாடிக்கொண்டிருந்தன. [* எசே 1:18; 10:12; எசா 6:3.[QE]. ] [QE]
9. அரியணையில் வீற்றிருப்பவரை, என்றென்றும் வாழ்பவரை அவை போற்றிப் புகழ்ந்து அவருக்கு நன்றி செலுத்தியபோதெல்லாம்,
10. இருபத்து நான்கு மூப்பர்கள் அரியணையில் வீற்றிருந்தவர்முன் விழுந்து, என்றென்றும் வாழ்கின்ற அவரை வணங்கினார்கள். தங்கள் பொன் முடிகளை அரியணைமுன் வைத்து,
11. [QS][SS] “எங்கள் ஆண்டவரே, எங்கள் கடவுளே,[SE][SS] மாட்சியும் மாண்பும் வல்லமையும் பெற[SE][SS] நீர் தகுதி பெற்றவர்;[SE][SS] ஏனெனில் அனைத்தையும்[SE][SS] படைத்தவர் நீரே.[SE][SS] உமது திருவுளப்படியே[SE][SS] அவை உண்டாயின,[SE][SS] படைக்கப்பட்டன” என்று பாடினார்கள்.[SE][PE]