தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சங்கீதம்
1. {அனைத்து உலகின் அரசர்[BR](1 குறி 16:23-33)} [PS] [QS][SS] ஆண்டவருக்குப் புதியதொரு[SE][SS] பாடல் பாடுங்கள்;[SE][SS] உலகெங்கும் வாழ்வோரே,[SE][SS] ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்;[SE][QE]
2. [QS][SS] ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்;[SE][SS] அவர் பெயரை வாழ்த்துங்கள்;[SE][SS] அவர் தரும் மீட்பை[SE][SS] நாள்தோறும் அறிவியுங்கள்.[SE][QE]
3. [QS][SS] பிற இனத்தார்க்கு[SE][SS] அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்;[SE][SS] அனைத்து மக்களினங்களுக்கும்[SE][SS] அவர்தம் வியத்தகு செயல்களை [BR] அறிவியுங்கள்.[SE][QE]
4. [QS][SS] ஏனெனில், ஆண்டவர் மாட்சிமிக்கவர்;[SE][SS] பெரிதும் போற்றத் தக்கவர்;[SE][SS] தெய்வங்கள் அனைத்திற்கும் மேலாக[SE][SS] அஞ்சுதற்கு உரியவர் அவரே.[SE][QE]
5. [QS][SS] மக்களினங்களின் தெய்வங்கள்[SE][SS] அனைத்தும் வெறும் சிலைகளே;[SE][SS] ஆண்டவரோ[SE][SS] விண்ணுலகைப் படைத்தவர்.[SE][QE]
6. [QS][SS] மாட்சியும் புகழ்ச்சியும்[SE][SS] அவர் திருமுன் உள்ளன;[SE][SS] ஆற்றலும் எழிலும்[SE][SS] அவரது திருத்தலத்தில் உள்ளன;[SE][QE]
7. [QS][SS] மக்களினங்களின் குடும்பங்களே,[SE][SS] ஆண்டவருக்குச் சாற்றுங்கள்;[SE][SS] மாட்சியையும் ஆற்றலையும்[SE][SS] ஆண்டவருக்குச் சாற்றுங்கள்.[SE][QE]
8. [QS][SS] ஆண்டவரின் பெயருக்குரிய மாட்சியை[SE][SS] அவருக்குச் சாற்றுங்கள்;[SE][SS] உணவுப்படையல் ஏந்தி அவர்தம்[SE][SS] கோவில் முற்றங்களுக்குள் செல்லுங்கள். [* திபா 29:1-2.[QE] ] [SE][QE]
9. [QS][SS] தூய கோலத்துடன்[SE][SS] ஆண்டவரை வழிபடுங்கள்;[SE][SS] உலகெங்கும் வாழ்வோரே,[SE][SS] அவர் திருமுன் நடுங்குங்கள். [* திபா 29:1-2.[QE] ] [SE][QE]
10. [QS][SS] வேற்றினத்தாரிடையே கூறுங்கள்;[SE][SS] ‛ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்;[SE][SS] பூவுலகு உறுதியாக[SE][SS] நிலைநிறுத்தப்பட்டுள்ளது;[SE][SS] அது அசைவுறாது;[SE][SS] அவர் மக்களினங்களை[SE][SS] நீதி வழுவாது தீர்ப்பிடுவார். [* திபா 29:1-2.[QE] ] [SE][QE]
11. [QS][SS] விண்ணுலகம் மகிழ்வதாக;[SE][SS] மண்ணுலகம் களிகூர்வதாக;[SE][SS] கடலும் அதில் நிறைந்துள்ளனவும்[SE][SS] முழங்கட்டும்.[SE][QE]
12. [QS][SS] வயல்வெளியும் அதில் உள்ள[SE][SS] அனைத்தும் களிகூரட்டும்;[SE][SS] அப்பொழுது, காட்டில் உள்ள[SE][SS] அனைத்து மரங்களும்[SE][SS] அவர் திருமுன் களிப்புடன் பாடும்.[SE][QE]
13. [QS][SS] ஏனெனில் அவர் வருகின்றார்;[SE][SS] மண்ணுலகிற்கு[SE][SS] நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்;[SE][SS] நிலவுலகை நீதியுடனும்[SE][SS] மக்களினங்களை உண்மையுடனும்[SE][SS] அவர் தீர்ப்பிடுவார்.[SE][PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 96 / 150
சங்கீதம் 96:122
அனைத்து உலகின் அரசர்
(1 குறி 16:23-33)

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; 2 ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங்கள்; அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள். 3 பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்; அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை
அறிவியுங்கள்.
4 ஏனெனில், ஆண்டவர் மாட்சிமிக்கவர்; பெரிதும் போற்றத் தக்கவர்; தெய்வங்கள் அனைத்திற்கும் மேலாக அஞ்சுதற்கு உரியவர் அவரே. 5 மக்களினங்களின் தெய்வங்கள் அனைத்தும் வெறும் சிலைகளே; ஆண்டவரோ விண்ணுலகைப் படைத்தவர். 6 மாட்சியும் புகழ்ச்சியும் அவர் திருமுன் உள்ளன; ஆற்றலும் எழிலும் அவரது திருத்தலத்தில் உள்ளன; 7 மக்களினங்களின் குடும்பங்களே, ஆண்டவருக்குச் சாற்றுங்கள்; மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவருக்குச் சாற்றுங்கள். 8 ஆண்டவரின் பெயருக்குரிய மாட்சியை அவருக்குச் சாற்றுங்கள்; உணவுப்படையல் ஏந்தி அவர்தம் கோவில் முற்றங்களுக்குள் செல்லுங்கள். [* திபா 29:1-2. ] 9 தூய கோலத்துடன் ஆண்டவரை வழிபடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, அவர் திருமுன் நடுங்குங்கள். [* திபா 29:1-2. ] 10 வேற்றினத்தாரிடையே கூறுங்கள்; ‛ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்; பூவுலகு உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது; அது அசைவுறாது; அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார். [* திபா 29:1-2. ] 11 விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக; கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும். 12 வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும்; அப்பொழுது, காட்டில் உள்ள அனைத்து மரங்களும் அவர் திருமுன் களிப்புடன் பாடும். 13 ஏனெனில் அவர் வருகின்றார்; மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்; நிலவுலகை நீதியுடனும் மக்களினங்களை உண்மையுடனும் அவர் தீர்ப்பிடுவார்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 96 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References