தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சங்கீதம்
1. {புகழ்ச்சிப் பாடல்} [PS] [QS][SS] வாருங்கள்; ஆண்டவரைப்[SE][SS] புகழ்ந்து பாடுங்கள்;[SE][SS] நமது மீட்பின் பாறையைப்[SE][SS] போற்றி ஆர்ப்பரியுங்கள்.[SE][QE]
2. [QS][SS] நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்;[SE][SS] புகழ்ப் பாக்களால் அவரைப்[SE][SS] போற்றி ஆர்ப்பரிப்போம்.[SE][QE]
3. [QS][SS] ஏனெனில், ஆண்டவர்[SE][SS] மாண்புமிகு இறைவன்;[SE][SS] தெய்வங்கள் அனைத்திற்கும்[SE][SS] மேலான பேரரசர்.[SE][QE]
4. [QS][SS] பூவுலகின் ஆழ்பகுதிகள்[SE][SS] அவர்தம் கையில் உள்ளன;[SE][SS] மலைகளின் கொடுமுடிகளும்[SE][SS] அவருக்கே உரியன.[SE][QE]
5. [QS][SS] கடலும் அவருடையதே;[SE][SS] அவரே அதைப் படைத்தார்;[SE][SS] உலர்ந்த தரையையும்[SE][SS] அவருடைய கைகளே உருவாக்கின.[SE][QE]
6. [QS][SS] வாருங்கள்; தாள்பணிந்து[SE][SS] அவரைத் தொழுவோம்;[SE][SS] நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன்[SE][SS] முழந்தாளிடுவோம்.[SE][QE]
7. [QS][SS] அவரே நம் கடவுள்;[SE][SS] நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்;[SE][SS] நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள்.[SE][SS] இன்று நீங்கள் அவரது குரலுக்குச்[SE][SS] செவிகொடுத்தால் எத்துணை நலம்! [* எபி 3:15; 4:7. ; எபி 3:7-11. ] [SE][QE]
8. [QS][SS] அன்று மெரிபாவிலும், பாலை நிலத்தில்[SE][SS] மாசாவிலும் செய்ததுபோல்,[SE][SS] உங்கள் இதயத்தைக்[SE][SS] கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். [* எபி 3:15; 4:7. ; எபி 3:7-11. ; விப 17:1-7; எண் 20:2-13. ] [SE][QE]
9. [QS][SS] அங்கே உங்கள் மூதாதையர்[SE][SS] என்னைச் சோதித்தனர்;[SE][SS] என் செயல்களைக் கண்டிருந்தும்[SE][SS] என்னைச் சோதித்துப் பார்த்தனர். [* எபி 3:7-11. ; விப 17:1-7; எண் 20:2-13. ] [SE][QE]
10. [QS][SS] நாற்பது ஆண்டளவாய்[SE][SS] அந்தத் தலைமுறை[SE][SS] எனக்கு வெறுப்பூட்டியதால்,[SE][SS] நான் உரைத்தது: ‛அவர்கள்[SE][SS] உறுதியற்ற உள்ளம் கொண்ட மக்கள்;[SE][SS] என் வழிகளை அறியாதவர்கள்’. [* எபி 3:7-11. ] [SE][QE]
11. [QS][SS] எனவே, நான் சினமுற்று,[SE][SS] ‛நான் அளிக்கும்[SE][SS] இளைப்பாற்றியின் நாட்டிற்குள்[SE][SS] நுழையவே மாட்டார்கள்’ என்று[SE][SS] ஆணையிட்டுக் கூறினேன். [* எபி 3:7-11. ; எண் 14:20-23; இச 1:34-36; 12:9-10; எபி 4:3-5.[QE]. ] [SE][PE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 95 / 150
புகழ்ச்சிப் பாடல் 1 வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள். 2 நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்; புகழ்ப் பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம். 3 ஏனெனில், ஆண்டவர் மாண்புமிகு இறைவன்; தெய்வங்கள் அனைத்திற்கும் மேலான பேரரசர். 4 பூவுலகின் ஆழ்பகுதிகள் அவர்தம் கையில் உள்ளன; மலைகளின் கொடுமுடிகளும் அவருக்கே உரியன. 5 கடலும் அவருடையதே; அவரே அதைப் படைத்தார்; உலர்ந்த தரையையும் அவருடைய கைகளே உருவாக்கின. 6 வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம். 7 அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! [* எபி 3:15; 4: 7 ; எபி 3:7- 11. ] 8 அன்று மெரிபாவிலும், பாலை நிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். * எபி 3:15; 4: 7. ; எபி 3:7- 11. ; விப 17:1-7; எண் 20:2- 13. 9 அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்; என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர். * எபி 3:7- 11. ; விப 17:1-7; எண் 20:2- 13. 10 நாற்பது ஆண்டளவாய் அந்தத் தலைமுறை எனக்கு வெறுப்பூட்டியதால், நான் உரைத்தது: ‛அவர்கள் உறுதியற்ற உள்ளம் கொண்ட மக்கள்; என் வழிகளை அறியாதவர்கள்’. * எபி 3:7- 11. 11 எனவே, நான் சினமுற்று, ‛நான் அளிக்கும் இளைப்பாற்றியின் நாட்டிற்குள் நுழையவே மாட்டார்கள்’ என்று ஆணையிட்டுக் கூறினேன். [* எபி 3:7- 11 ; எண் 14:20-23; இச 1:34-36; 12:9-10; எபி 4:3-5.. ]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 95 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References