1. {ஆண்டவரே அனைவரின் நீதிபதி} [PS] [QS][SS] அநீதிக்குப் பழிவாங்கும்[SE][SS] இறைவா! ஆண்டவரே![SE][SS] அநீதிக்குப் பழிவாங்கும் இறைவா,[SE][SS] ஒளிர்ந்திடும்![SE][QE]
2. [QS][SS] உலகின் நீதிபதியே, எழுந்தருளும்;[SE][SS] செருக்குற்றோர்க்கு உரிய[SE][SS] தண்டனையை அளியும். [* 1 கொரி 3:20.[QE] ] [SE][QE]
3. [QS][SS] எத்துணைக் காலம், ஆண்டவரே![SE][SS] எத்துணைக் காலம்[SE][SS] பொல்லார் அக்களிப்பர்?[SE][QE]
4. [QS][SS] அவர்கள் இறுமாப்புடன் பேசுகின்றனர்;[SE][SS] தீமைசெய்வோர் அனைவரும்[SE][SS] வீம்பு பேசுகின்றனர்.[SE][QE]
5. [QS][SS] ஆண்டவரே! அவர்கள்[SE][SS] உம் மக்களை நசுக்குகின்றனர்;[SE][SS] உமது உரிமைச் சொத்தான அவர்களை[SE][SS] ஒடுக்குகின்றனர்.[SE][QE]
6. [QS][SS] கைம்பெண்டிரையும் அன்னியரையும்[SE][SS] அவர்கள் வெட்டி வீழ்த்துகின்றனர்;[SE][SS] திக்கற்றவரை அவர்கள்[SE][SS] கொலை செய்கின்றனர்.[SE][QE]
7. [QS][SS] ‘ஆண்டவர் இதைக்[SE][SS] கண்டு கொள்வதில்லை;[SE][SS] யாக்கோபின் கடவுள்[SE][SS] கவனிப்பதில்லை’ என்கின்றனர்.[SE][QE]
8. [QS][SS] மக்களிடையே அறிவிலிகளாய்[SE][SS] இருப்போரே, உணருங்கள்;[SE][SS] மதிகேடரே, எப்பொழுது நீங்கள்[SE][SS] அறிவு பெறுவீர்கள்?[SE][QE]
9. [QS][SS] செவியைப் பொருத்தியவர்[SE][SS] கேளாதிருப்பாரோ?[SE][SS] கண்ணை உருவாக்கியவர்[SE][SS] காணாதிருப்பாரோ?[SE][QE]
10. [QS][SS] மக்களினங்களைக் கண்டிப்பவர்,[SE][SS] மானிடருக்கு அறிவூட்டுபவர்[SE][SS] தண்டியாமல் இருப்பாரோ?[SE][QE]
11. [QS][SS] மானிடரின் எண்ணங்கள் வீணானவை;[SE][SS] இதனை ஆண்டவர் அறிவார்.[SE][QE]
12. [QS][SS] ஆண்டவரே! நீர் கண்டித்து[SE][SS] உம் திருச்சட்டத்தைப் பயிற்றுவிக்கும்[SE][SS] மனிதர் பேறுபெற்றோர்;[SE][QE]
13. [QS][SS] அவர்களின் துன்ப நாள்களில்[SE][SS] அவர்களுக்கு அமைதி அளிப்பீர்.[SE][SS] பொல்லார்க்குக் குழி வெட்டப்படும்.[SE][QE]
14. [QS][SS] ஆண்டவர் தம் மக்களைத் தள்ளிவிடார்;[SE][SS] தம் உரிமைச் சொத்தாம்[SE][SS] அவர்களைக் கைவிடார்.[SE][QE]
15. [QS][SS] தீர்ப்பு வழங்கும் முறையில்[SE][SS] மீண்டும் நீதி நிலவும்;[SE][SS] நேரிய மனத்தினர் அதன்வழி நடப்பர்.[SE][QE]
16. [QS][SS] என் சார்பில் பொல்லார்க்கு[SE][SS] எதிராக எழுபவர் எவர்?[SE][SS] என் சார்பில் தீமை செய்வோர்க்கு[SE][SS] எதிராக நிற்பவர் எவர்?[SE][QE]
17. [QS][SS] ஆண்டவர் எனக்குத்[SE][SS] துணை நிற்காதிருந்தால்,[SE][SS] என் உயிர் விரைவில்[SE][SS] மௌன உலகிற்குச் சென்றிருக்கும்![SE][QE]
18. [QS][SS] ‘என் அடி சறுக்குகின்றது’ என்று[SE][SS] நான் சொன்னபோது,[SE][SS] ஆண்டவரே! உமது பேரன்பு[SE][SS] என்னைத் தாங்கிற்று.[SE][QE]
19. [QS][SS] என் மனத்தில் கவலைகள் பெருகும்போது,[SE][SS] என் உள்ளத்தை உமது ஆறுதல்[SE][SS] மகிழ்விக்கின்றது.[SE][QE]
20. [QS][SS] சட்டத்திற்குப் புறம்பாகத்[SE][SS] தீமை செய்யும் ஊழல்மிகு ஆட்சியாளர்[SE][SS] உம்மோடு ஒன்றாக[SE][SS] இணைந்திருக்க முடியுமோ?[SE][QE]
21. [QS][SS] நேர்மையாளரின் உயிருக்கு உலை வைக்க[SE][SS] அவர்கள் இணைகின்றனர்;[SE][SS] மாசற்றோர்க்குக்[SE][SS] கொலைத்தீர்ப்பு அளிக்கின்றனர்.[SE][QE]
22. [QS][SS] ஆண்டவரோ எனக்கு அரண் ஆனார்;[SE][SS] என் கடவுள் எனக்குப்[SE][SS] புகலிடம் தரும் பாறை ஆகிவிட்டார்.[SE][QE]
23. [QS][SS] அவர்கள் இழைத்த தீங்கை[SE][SS] அவர்கள் மீதே திரும்பிவிழச் செய்வார்;[SE][SS] அவர்கள் செய்த தீமையின் பொருட்டு[SE][SS] அவர்களை அழிப்பார்;[SE][SS] நம் கடவுளாம் ஆண்டவர்[SE][SS] அவர்களை அழித்தே தீர்வார்.[SE][PE]