தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சங்கீதம்
1. {நம்மைப் பாதுகாக்கும் இறைவன்} [PS] [QS][SS] உன்னதரின் பாதுகாப்பில்[SE][SS] வாழ்பவர், எல்லாம் வல்லவரின்[SE][SS] நிழலில் தங்கியிருப்பவர்.[SE][QE]
2. [QS][SS] ஆண்டவரை நோக்கி,[SE][SS] “நீரே என் புகலிடம்; என் அரண்;[SE][SS] நான் நம்பியிருக்கும் இறைவன்”[SE][SS] என்று உரைப்பார்.[SE][QE]
3. [QS][SS] ஏனெனில், ஆண்டவர் உம்மை[SE][SS] வேடரின் கண்ணியினின்றும்[SE][SS] கொன்றழிக்கும்[SE][SS] கொள்ளை நோயினின்றும் தப்புவிப்பார்.[SE][QE]
4. [QS][SS] அவர் தம் சிறகுகளால்[SE][SS] உம்மை அரவணைப்பார்;[SE][SS] அவர்தம் இறக்கைகளின்கீழ்[SE][SS] நீர் புகலிடம் காண்பீர்;[SE][SS] அவரது உண்மையே[SE][SS] கேடயமும் கவசமும் ஆகும்.[SE][QE]
5. [QS][SS] இரவின் திகிலுக்கும்[SE][SS] பகலில் பாய்ந்துவரும் அம்புக்கும்[SE][SS] நீர் அஞ்சமாட்டீர்.[SE][QE]
6. [QS][SS] இருளில் உலவும் கொள்ளை நோய்க்கும்[SE][SS] நண்பகலில் தாக்கும் கொடிய வாதைக்கும்[SE][SS] நீர் அஞ்சமாட்டீர்.[SE][QE]
7. [QS][SS] உம் பக்கம் ஆயிரம் பேர் வீழ்ந்தாலும்,[SE][SS] உம் வலப்புறம்[SE][SS] பதினாயிரம் பேர் தாக்கினாலும்,[SE][SS] எதுவும் உம்மை அணுகாது.[SE][QE]
8. [QS][SS] பொல்லார்க்குக் கிடைக்கும் தண்டனையை[SE][SS] நீரே பார்ப்பீர்;[SE][SS] உம் கண்ணாலேயே நீர் காண்பீர்.[SE][QE]
9. [QS][SS] ஆண்டவரை உம் புகலிடமாய்க் கொண்டீர்;[SE][SS] உன்னதரை உம் [BR] உறைவிடமாக்கிக் கொண்டீர்.[SE][QE]
10. [QS][SS] ஆகவே, தீங்கு உமக்கு நேரிடாது;[SE][SS] வாதை உம் கூடாரத்தை நெருங்காது.[SE][QE]
11. [QS][SS] நீர் செல்லும் இடமெல்லாம்[SE][SS] உம்மைக் காக்கும்படி,[SE][SS] தம் தூதர்க்கு அவர் கட்டளையிடுவார்.[SE][QE]
12. [QS][SS] உம் கால் கல்லின்மேல் மோதாதபடி,[SE][SS] அவர்கள் தங்கள் கைகளில்[SE][SS] உம்மைத் தாங்கிக்கொள்வர். [* மத் 4:6; லூக் 4:10 ] [SE][QE]
13. [QS][SS] சிங்கத்தின்மீதும் பாம்பின்மீதும்[SE][SS] நீர் நடந்து செல்வீர்;[SE][SS] இளஞ்சிங்கத்தின்மீதும்[SE][SS] விரியன்பாம்பின்மீதும்[SE][SS] நீர் மிதித்துச் செல்வீர். [* மத் 4:6; லூக் 4:11 ] [SE][QE]
14. [QS][SS] ‘அவர்கள் என்மீது அன்புகூர்ந்ததால்,[SE][SS] அவர்களை விடுவிப்பேன்;[SE][SS] அவர்கள் என் பெயரை அறிந்துள்ளதால்,[SE][SS] அவர்களைப் பாதுகாப்பேன்; [* லூக் 10:19.[QE] ] [SE][QE]
15. [QS][SS] அவர்கள் என்னை நோக்கி மன்றாடும்போது,[SE][SS] அவர்களுக்குப் பதிலளிப்பேன்;[SE][SS] அவர்களது துன்பத்தில்[SE][SS] அவர்களோடு இருப்பேன்;[SE][SS] அவர்களைத் தப்புவித்து[SE][SS] அவர்களைப் பெருமைப்படுத்துவேன்;[SE][QE]
16. [QS][SS] நீடிய ஆயுளால் அவர்களுக்கு[SE][SS] நிறைவளிப்பேன்;[SE][SS] என் மீட்பை அவர்களுக்கு[SE][SS] வெளிப்படுத்துவேன்.’[SE][PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 91 / 150
சங்கீதம் 91:136
நம்மைப் பாதுகாக்கும் இறைவன் 1 உன்னதரின் பாதுகாப்பில் வாழ்பவர், எல்லாம் வல்லவரின் நிழலில் தங்கியிருப்பவர். 2 ஆண்டவரை நோக்கி, “நீரே என் புகலிடம்; என் அரண்; நான் நம்பியிருக்கும் இறைவன்” என்று உரைப்பார். 3 ஏனெனில், ஆண்டவர் உம்மை வேடரின் கண்ணியினின்றும் கொன்றழிக்கும் கொள்ளை நோயினின்றும் தப்புவிப்பார். 4 அவர் தம் சிறகுகளால் உம்மை அரவணைப்பார்; அவர்தம் இறக்கைகளின்கீழ் நீர் புகலிடம் காண்பீர்; அவரது உண்மையே கேடயமும் கவசமும் ஆகும். 5 இரவின் திகிலுக்கும் பகலில் பாய்ந்துவரும் அம்புக்கும் நீர் அஞ்சமாட்டீர். 6 இருளில் உலவும் கொள்ளை நோய்க்கும் நண்பகலில் தாக்கும் கொடிய வாதைக்கும் நீர் அஞ்சமாட்டீர். 7 உம் பக்கம் ஆயிரம் பேர் வீழ்ந்தாலும், உம் வலப்புறம் பதினாயிரம் பேர் தாக்கினாலும், எதுவும் உம்மை அணுகாது. 8 பொல்லார்க்குக் கிடைக்கும் தண்டனையை நீரே பார்ப்பீர்; உம் கண்ணாலேயே நீர் காண்பீர். 9 ஆண்டவரை உம் புகலிடமாய்க் கொண்டீர்; உன்னதரை உம்
உறைவிடமாக்கிக் கொண்டீர்.
10 ஆகவே, தீங்கு உமக்கு நேரிடாது; வாதை உம் கூடாரத்தை நெருங்காது. 11 நீர் செல்லும் இடமெல்லாம் உம்மைக் காக்கும்படி, தம் தூதர்க்கு அவர் கட்டளையிடுவார். 12 உம் கால் கல்லின்மேல் மோதாதபடி, அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக்கொள்வர். * மத் 4:6; லூக் 4:10 13 சிங்கத்தின்மீதும் பாம்பின்மீதும் நீர் நடந்து செல்வீர்; இளஞ்சிங்கத்தின்மீதும் விரியன்பாம்பின்மீதும் நீர் மிதித்துச் செல்வீர். * மத் 4:6; லூக் 4:11 14 ‘அவர்கள் என்மீது அன்புகூர்ந்ததால், அவர்களை விடுவிப்பேன்; அவர்கள் என் பெயரை அறிந்துள்ளதால், அவர்களைப் பாதுகாப்பேன்; [* லூக் 10:19. ] 15 அவர்கள் என்னை நோக்கி மன்றாடும்போது, அவர்களுக்குப் பதிலளிப்பேன்; அவர்களது துன்பத்தில் அவர்களோடு இருப்பேன்; அவர்களைத் தப்புவித்து அவர்களைப் பெருமைப்படுத்துவேன்; 16 நீடிய ஆயுளால் அவர்களுக்கு நிறைவளிப்பேன்; என் மீட்பை அவர்களுக்கு வெளிப்படுத்துவேன்.’
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 91 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References