1. {நான்காம் பகுதி}{மனிதரின் நிலையாமை[BR](கடவுளின் அடியார் மோசேயின் மன்றாட்டு)} [PS] [QS][SS] என் தலைவரே! தலைமுறைதோறும்[SE][SS] நீரே எங்கள் புகலிடமாய் உள்ளீர்.[SE][QE]
2. [QS][SS] மலைகள் தோன்றுமுன்பே,[SE][SS] நிலத்தையும் உலகையும்[SE][SS] நீர் உருவாக்குமுன்பே,[SE][SS] ஊழி ஊழிக்காலமாய் உள்ள[SE][SS] இறைவன் நீரே![SE][QE]
3. [QS][SS] மனிதரைப் புழுதிக்குத்[SE][SS] திரும்பிடச் செய்கின்றீர்;[SE][SS] ‘மானிடரே! மீண்டும்[SE][SS] புழுதியாகுங்கள்’ என்கின்றீர்.[SE][QE]
4. [QS][SS] ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள்,[SE][SS] உம் பார்வையில்[SE][SS] கடந்துபோன நேற்றைய நாள் போலவும்[SE][SS] இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன. [* 2 சாமு 7:12-16; 1 குறி 17:11-14; திபா 132:11; திப 2:30. ] [SE][QE]
5. [QS][SS] வெள்ளமென மானிடரை[SE][SS] வாரிக்கொண்டு செல்கின்றீர்;[SE][SS] அவர்கள் வைகறையில் முளைத்தெழும்[SE][SS] புல்லுக்கு ஒப்பாவர்;[SE][QE]
6. [QS][SS] அது காலையில் தளிர்த்துப்[SE][SS] பூத்துக் குலுங்கும்;[SE][SS] மாலையில் வாடிக் காய்ந்து போகும்.[SE][QE]
7. [QS][SS] உமது சினத்தால் நாங்கள்[SE][SS] அழிந்து போகின்றோம்;[SE][SS] உமது சீற்றத்தால் நாங்கள்[SE][SS] திகைப்படைகின்றோம்.[SE][QE]
8. [QS][SS] எம் குற்றங்களை[SE][SS] உம் கண்முன் நிறுத்தினீர்;[SE][SS] மறைவான எம் பாவங்களை[SE][SS] உம் திருமுக ஒளிமுன் வைத்தீர்.[SE][QE]
9. [QS][SS] எங்கள் அனைத்து வாழ்நாள்களும்[SE][SS] உமது சினத்தால்[SE][SS] முடிவுக்கு வந்துவிட்டன;[SE][SS] எங்கள் ஆண்டுகள்[SE][SS] பெருமூச்செனக் கழிந்துவிட்டன.[SE][QE]
10. [QS][SS] எங்கள் வாழ்நாள் எழுபது ஆண்டுகளே;[SE][SS] வலிமை மிகுந்தோர்க்கு எண்பது;[SE][SS] அவற்றில் பெருமைக்கு உரியன[SE][SS] துன்பமும் துயரமுமே![SE][SS] அவை விரைவில் கடந்துவிடுகின்றன.[SE][SS] நாங்களும் பறந்துவிடுகின்றோம்.[SE][QE]
11. [QS][SS] உமது சினத்தின் வலிமையை[SE][SS] உணர்பவர் எவர்?[SE][SS] உமது கடுஞ்சீற்றத்துக்கு[SE][SS] அஞ்சுபவர் எவர்?[SE][QE]
12. [QS][SS] எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க[SE][SS] எங்களுக்குக் கற்பியும்;[SE][SS] அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப்[SE][SS] பெற்றிடுவோம்.[SE][QE]
13. [QS][SS] ஆண்டவரே, திரும்பி வாரும்;[SE][SS] எத்துணைக் காலம் இந்நிலை?[SE][SS] உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும்.[SE][QE]
14. [QS][SS] காலைதோறும் உமது பேரன்பால்[SE][SS] எங்களுக்கு நிறைவளியும்;[SE][SS] அப்பொழுது வாழ்நாளெல்லாம்[SE][SS] நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம்.[SE][QE]
15. [QS][SS] எங்களை நீர் ஒடுக்கிய நாள்களுக்கும்[SE][SS] நாங்கள் தீங்குற்ற[SE][SS] ஆண்டுகளுக்கும் ஈடாக,[SE][SS] எம்மை மகிழச் செய்யும்.[SE][QE]
16. [QS][SS] உம் அடியார்மீது உம் செயலும்[SE][SS] அவர்தம் மைந்தர்மீது[SE][SS] உமது மாட்சியும் விளங்கச் செய்யும்.[SE][QE]
17. [QS][SS] எம் கடவுளாம் தலைவரின் இன்னருள்[SE][SS] எம்மீது தங்குவதாக![SE][SS] நாங்கள் செய்பவற்றில்[SE][SS] எங்களுக்கு வெற்றி தாரும்![SE][SS] ஆம், நாங்கள் செய்பவற்றில்[SE][SS] வெற்றியருளும்![SE][PE][QE]