தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சங்கீதம்
1. {நீதியின் கடவுளுக்கு நன்றி செலுத்துதல்[BR](பாடகர் தலைவர்க்கு: ‛மகனுக்காக உயிரைக்கொடு’ என்ற மெட்டு; தாவீதின் புகழ்ப்பா)} [PS] [QS][SS] ஆண்டவரே, என் முழு இதயத்தாலும்[SE][SS] உம்மைப் புகழ்வேன்; வியத்தகு உம்[SE][SS] செயல்களையெல்லாம் எடுத்துரைப்பேன்.[SE][QE]
2. [QS][SS] உம்மை முன்னிட்டு மகிழ்ந்து களிகூர்வேன்;[SE][SS] உன்னதரே, உமது பெயரைப்[SE][SS] போற்றிப் பாடுவேன். [* மத் 21:16. ] [SE][QE]
3. [QS][SS] என் எதிரிகள் பின்னிட்டுத் திரும்புவார்கள்;[SE][SS] உமது முன்னிலையில்[SE][SS] இடறிவிழுந்து அழிவார்கள்.[SE][QE]
4. [QS][SS] நீர் நீதியுள்ள நடுவராய்[SE][SS] அரியணையில் வீற்றிருக்கின்றீர்;[SE][SS] என் வழக்கில் எனக்கு நீதி வழங்கினீர். [* யோபு 7:17-18; திபா 144:3; எபி 2:6-8. ] [SE][QE]
5. [QS][SS] வேற்றினத்தாரைக் கண்டித்தீர்;[SE][SS] பொல்லாரை அழித்தீர்;[SE][SS] அவர்களது பெயர் இனி இராதபடி[SE][SS] அடியோடு ஒழித்துவிட்டீர். [* ‘வானதூதர்க்கு’ என்றும் மொழிபெயர்க்கலாம்.[QE]. ] [SE][QE]
6. [QS][SS] எதிரிகள் ஒழிந்தார்கள்; என்றும்[SE][SS] தலையெடுக்கமுடியாமல் அழிந்தார்கள். [* 1 கொரி 15:27; எபே 1:22; எபி 2:8. ] [SE][QE]
7. [QS][SS] அவர்களின் நகர்களை[SE][SS] நீர் தரைமட்டம் ஆக்கினீர்;[SE][SS] அவர்களைப் பற்றிய நினைவு[SE][SS] அற்றுப் போயிற்று.[SE][SS] ஆண்டவர் அரியணையில்[SE][SS] என்றென்றும் வீற்றிருக்கின்றார்;[SE][SS] நீதி வழங்குவதற்கென்று[SE][SS] அவர் தம் அரியணையை[SE][SS] அமைத்திருக்கின்றார்.[SE][QE]
8. [QS][SS] உலகிற்கு அவர்[SE][SS] நீதியான தீர்ப்பு வழங்குவார்;[SE][SS] மக்களினத்தார்க்கு[SE][SS] நேர்மையான தீர்ப்புக் கூறுவார்.[SE][QE]
9. [QS][SS] ஒடுக்கப்படுவோருக்கு[SE][SS] ஆண்டவரே அடைக்கலம்;[SE][SS] நெருக்கடியான வேளைகளில்[SE][SS] புகலிடம் அவரே.[SE][QE]
10. [QS][SS] உமது பெயரை அறிந்தோர்[SE][SS] உம்மில் நம்பிக்கை கொள்வர்;[SE][SS] ஆண்டவரே, உம்மை நாடி வருவோரை[SE][SS] நீர் கைவிடுவதில்லை.[SE][QE]
11. [QS][SS] சீயோனில் தங்கியிருக்கும்[SE][SS] ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்;[SE][SS] அவருடைய செயல்களை[SE][SS] மக்களினத்தாரிடையே அறிவியுங்கள்;[SE][QE]
12. [QS][SS] ஏனெனில், இரத்தப்பழி வாங்கும் அவர்[SE][SS] எளியோரை நினைவில் கொள்கின்றார்;[SE][SS] அவர்களின் கதறலை[SE][SS] அவர் கேட்க மறவார்.[SE][QE]
13. [QS][SS] ஆண்டவரே, என்மீது இரக்கமாயிரும்;[SE][SS] என்னைப் பகைப்போரால்[SE][SS] எனக்கு வரும் துன்பத்தைப் பாரும்;[SE][SS] சாவின் வாயினின்று என்னை விடுவியும்.[SE][QE]
14. [QS][SS] அப்பொழுது, மகள் சீயோனின் வாயில்களில்[SE][SS] உம் புகழ் அனைத்தையும் பாடுவேன்;[SE][SS] நீர் அளிக்கும் விடுதலைகுறித்து[SE][SS] அகமகிழ்வேன்.[SE][QE]
15. [QS][SS] வேற்றினத்தார் வெட்டின குழியில்[SE][SS] அவர்களே விழுந்தனர்;[SE][SS] அவர்கள் மறைத்து வைத்திருந்த வலையில்[SE][SS] அவர்கள் கால்களே சிக்கிக்கொண்டன.[SE][QE]
16. [QS][SS] ஆண்டவர் நீதியை நிலைநாட்டுவதன் மூலம்[SE][SS] தம்மை வெளிப்படுத்தியுள்ளார்;[SE][SS] பொல்லார் செய்த செயலில்[SE][SS] அவர்களே சிக்கிக்கொண்டனர். (இடை இசை: சேலா)[SE][QE]
17. [QS][SS] பொல்லார் பாதாளத்திற்கே செல்வர்;[SE][SS] கடவுளை மறந்திருக்கும்[SE][SS] வேற்றினத்தார் யாவரும் அங்கே செல்வர்.[SE][QE]
18. [QS][SS] மாறாக, வறியவர் என்றுமே[SE][SS] மறக்கப்படுவதில்லை;[SE][SS] எளியோரின் நம்பிக்கை[SE][SS] ஒருபோதும் வீண்போகாது.[SE][QE]
19. [QS][SS] ஆண்டவரே, எழுந்தருளும்;[SE][SS] மனிதரின் கை ஓங்க விடாதேயும்;[SE][SS] வேற்றினத்தார் உமது முன்னிலையில்[SE][SS] தீர்ப்புப் பெறுவார்களாக![SE][QE]
20. [QS][SS] ஆண்டவரே, அவர்களைத்[SE][SS] திகிலடையச் செய்யும்;[SE][SS] தாம் வெறும் மனிதரே என்பதை[SE][SS] வேற்றினத்தார் உணர்வார்களாக! (சேலா)[SE][PE][QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 9 / 150
நீதியின் கடவுளுக்கு நன்றி செலுத்துதல்
(பாடகர் தலைவர்க்கு: ‛மகனுக்காக உயிரைக்கொடு’ என்ற மெட்டு; தாவீதின் புகழ்ப்பா)

1 ஆண்டவரே, என் முழு இதயத்தாலும் உம்மைப் புகழ்வேன்; வியத்தகு உம் செயல்களையெல்லாம் எடுத்துரைப்பேன். 2 உம்மை முன்னிட்டு மகிழ்ந்து களிகூர்வேன்; உன்னதரே, உமது பெயரைப் போற்றிப் பாடுவேன். * மத் 21: 16. 3 என் எதிரிகள் பின்னிட்டுத் திரும்புவார்கள்; உமது முன்னிலையில் இடறிவிழுந்து அழிவார்கள். 4 நீர் நீதியுள்ள நடுவராய் அரியணையில் வீற்றிருக்கின்றீர்; என் வழக்கில் எனக்கு நீதி வழங்கினீர். * யோபு 7:17-18; திபா 144:3; எபி 2:6- 8. 5 வேற்றினத்தாரைக் கண்டித்தீர்; பொல்லாரை அழித்தீர்; அவர்களது பெயர் இனி இராதபடி அடியோடு ஒழித்துவிட்டீர். [* ‘வானதூதர்க்கு’ என்றும் மொழிபெயர்க்கலாம்.. ] 6 எதிரிகள் ஒழிந்தார்கள்; என்றும் தலையெடுக்கமுடியாமல் அழிந்தார்கள். * 1 கொரி 15:27; எபே 1:22; எபி 2: 8. 7 அவர்களின் நகர்களை நீர் தரைமட்டம் ஆக்கினீர்; அவர்களைப் பற்றிய நினைவு அற்றுப் போயிற்று. ஆண்டவர் அரியணையில் என்றென்றும் வீற்றிருக்கின்றார்; நீதி வழங்குவதற்கென்று அவர் தம் அரியணையை அமைத்திருக்கின்றார். 8 உலகிற்கு அவர் நீதியான தீர்ப்பு வழங்குவார்; மக்களினத்தார்க்கு நேர்மையான தீர்ப்புக் கூறுவார். 9 ஒடுக்கப்படுவோருக்கு ஆண்டவரே அடைக்கலம்; நெருக்கடியான வேளைகளில் புகலிடம் அவரே. 10 உமது பெயரை அறிந்தோர் உம்மில் நம்பிக்கை கொள்வர்; ஆண்டவரே, உம்மை நாடி வருவோரை நீர் கைவிடுவதில்லை. 11 சீயோனில் தங்கியிருக்கும் ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; அவருடைய செயல்களை மக்களினத்தாரிடையே அறிவியுங்கள்; 12 ஏனெனில், இரத்தப்பழி வாங்கும் அவர் எளியோரை நினைவில் கொள்கின்றார்; அவர்களின் கதறலை அவர் கேட்க மறவார். 13 ஆண்டவரே, என்மீது இரக்கமாயிரும்; என்னைப் பகைப்போரால் எனக்கு வரும் துன்பத்தைப் பாரும்; சாவின் வாயினின்று என்னை விடுவியும். 14 அப்பொழுது, மகள் சீயோனின் வாயில்களில் உம் புகழ் அனைத்தையும் பாடுவேன்; நீர் அளிக்கும் விடுதலைகுறித்து அகமகிழ்வேன். 15 வேற்றினத்தார் வெட்டின குழியில் அவர்களே விழுந்தனர்; அவர்கள் மறைத்து வைத்திருந்த வலையில் அவர்கள் கால்களே சிக்கிக்கொண்டன. 16 ஆண்டவர் நீதியை நிலைநாட்டுவதன் மூலம் தம்மை வெளிப்படுத்தியுள்ளார்; பொல்லார் செய்த செயலில் அவர்களே சிக்கிக்கொண்டனர். (இடை இசை: சேலா) 17 பொல்லார் பாதாளத்திற்கே செல்வர்; கடவுளை மறந்திருக்கும் வேற்றினத்தார் யாவரும் அங்கே செல்வர். 18 மாறாக, வறியவர் என்றுமே மறக்கப்படுவதில்லை; எளியோரின் நம்பிக்கை ஒருபோதும் வீண்போகாது. 19 ஆண்டவரே, எழுந்தருளும்; மனிதரின் கை ஓங்க விடாதேயும்; வேற்றினத்தார் உமது முன்னிலையில் தீர்ப்புப் பெறுவார்களாக! 20 ஆண்டவரே, அவர்களைத் திகிலடையச் செய்யும்; தாம் வெறும் மனிதரே என்பதை வேற்றினத்தார் உணர்வார்களாக! (சேலா)
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 9 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References